PDA

View Full Version : பெண்களில்...



பிரேம்
07-01-2011, 11:36 AM
அறிவுரைகளை உதறி
அசட்டைகள் செய்து
அறியா காதலில்
திளைப்பவர் சிலபேர்...

அவனும் அவளும் அப்படி..
இவளின் அவனோ இப்படி என
அடுத்தவர் பற்றி அளப்போர் சிலபேர்...

சீரான குடும்பம்
சீரழிக்கும் சீரியலை
சீரிய முறையில் பார்த்தழும்
பெண்கள் சிலபேர்..

பணமே குறியாய் போக
பாசம் குப்பையாய் ஆக
பந்தாவில் திளைப்போர் சிலபேர்...

காலத்தை உயர்வாய் நினையாமல்
கள்ள காதலை உயர்வாய் நினைத்து..
குடும்பத்தை மறந்த
குத்து விளக்குகள் சிலபேர்..

ஒரு நிமிடம் இவ்வனைவரையும்
ஞாபகப் படுத்தி விட்டு செல்கிறாள்..
பொய்யாய் சிரிப்பை இதழில் தாங்கி..
பிழைப்பின் வெறுப்பை விழியில் தாங்கி
வலம் வரும் விற்பனை பெண்..
('சேல்ஸ் கேர்ல்' தாங்க..இந்த வார்த்தை சரியா..?)

Hega
07-01-2011, 03:33 PM
பெண்களை குறித்த உங்கள் பார்வை தவறென தைரியமாய் தட்டி சொல்ல இயலாதபடி நிஜம் சுடுகிறது.

இருந்தாலும் எல்லோரும் இப்படிபட்டவர்களல்ல என்பதே என் கருத்து.

இது ஒரு கவிதை தானோவென விட்டு செல்லவியலாதபடி ஏதோ தடுக்கிறது. ஏனேனில் இது கவிதையல்ல , பலரின் புரிதல் இப்படித்தான் உள்ளது

சேல்ஸ் கேர்ள், நடிகையென யாராயிருந்தாலும் அதூவ்ம் தொழிலென .. அதாவது ஆசிரியரைபோல் மருத்துவரைபோல் தொழிலென கொள்ளும் பாங்கு வரவேண்டும்.

வீட்டைவிட்டு தொழிலினிமித்தம் வெளிச்செல்லும் பெண்ணுக்கு இம்மாதிரி பார்வைகளும், ஏளனங்களும் எப்போதும் தொடர்வது சரியல்ல..

பெண் என்பவள் குறித்த ஒருபக்க பார்வை உங்களுடையது .. அடுத்த பார்வை எது தெரியுமா.. அவள் ஆக்கும் சக்தி, தாங்கும் தூண், பொறுமையின் சிகரம், அன்பின் தெய்வம்.

பிரேம்
08-01-2011, 12:51 AM
சார்..கவிதைய நல்லா கவனிங்க..நான் எல்லாரையும் சொல்ல வரல..வரிக்கு வரி சிலபேர்-சிலபேர்-ன்னு எதுக்கு எழுதி இருக்கேன்..?
நான் நடிகைய பற்றி பேசவே இல்லையே..!
பெண் என்பவர்கள் நீங்க சொன்ன "அவள் ஆக்கும் சக்தி, தாங்கும் தூண், பொறுமையின் சிகரம், அன்பின் தெய்வம்" இத்தனையும் எனக்கும் தெரியும்..!
நான் சொல்லி இருக்கும் அந்த சிலபேரை நீங்கள் பார்த்தது இல்லை என்று உங்களால் சொல்ல முடியாது..உண்மையா, இல்லையா..???
இந்த சிலபேரை..நினைத்து கொண்டு சேல்ஸ்கேர்ளை பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாய் இருக்கும்..அதன் விளைவுதான் இந்த கவிதை...
விமர்சனத்துக்கு கோடி நன்றிகள்..:)

vasanth30
11-01-2011, 07:11 PM
ஐயா பிரேம் தங்கள் கூறியது 1௦௦% உண்மை அது Hegaக்கு புரியவில்லை.