PDA

View Full Version : நாலு பலூன்



ஆதி
06-01-2011, 12:45 PM
பலூன்கள் வரைந்து கொண்டிருந்தான் அப்பூ

அருகே பாப்பா பலூன் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்

வரைந்த பலூன்களுக்கு வண்ணம் தீட்டி முடித்தவன்
"எங்கிட்ட பார்த்தியா நாலு பலூன் இருக்கு"

கையில் இருந்த பலூனை எறிந்துவிட்டு
அந்த நாலு பலூன் வேண்டுமென
தரையில் கிடந்து அழ ஆரம்பித்தாள் பாப்பா

பாலகன்
06-01-2011, 01:18 PM
ஆக பாப்பா கிட்ட இருக்குற பலூனை லவட்டியாச்சி :D