PDA

View Full Version : தொலைத்த இரவு



ilamaran
05-01-2011, 08:06 PM
இரு விழிகளின் ஏக்கத்தில்
இறந்து கொண்டிருக்கிறது..,
உறக்கம்!
இன்னுமா விடியவில்லை!?
எட்டி பார்க்கிறது..,
மனசு!
காலைதான் வருவாய்!!!
ஏனோ..! அதை மறக்கின்றது
காதல்..,

ஜனகன்
05-01-2011, 08:15 PM
கவிதை வரிகள் அனைத்தும் கோர்க்கப்பட்ட மணிகள்.வார்த்தைகள் மிக அழகாக அமைந்துள்ளது.வாழ்த்துக்கள்.

அமரன்
06-01-2011, 05:30 AM
பசியாது.. உறக்கமிராது.. குளிக்க மனம் வராது, ஆனால் மேக்கப் போட முண்டி அடிக்கும் மணிக்கணக்காய்..

காதலில் விழுந்தவன் புலம்பலும் கவிதைதான்

பாராட்டுகள் இளமாறா.

கௌதமன்
06-01-2011, 04:03 PM
போனது போல போனாய் ஏன்
திரும்பி வந்து பார்க்கிறாய்?
ஏதாவது மறந்து விட்டாயா என்றால்
எதை மறந்தேனெனத் தெரியவில்லை என்கிறாய்
நீ எதையும் மறக்கவில்லை என்பது
எனக்கும் உனக்கும் தெரியும்!

பாராட்டுகள் இளமாறன்!
உங்கள் பரிணாம வளர்ச்சிக்கு!!

பாலகன்
06-01-2011, 04:06 PM
மிகவும் சிறப்பான கவிதை

நண்பர் கெளதமனின் கவிதை அதைவிட அருமை

இருவருக்கும் பாராட்டுக்கள்

ilamaran
06-01-2011, 05:25 PM
போனது போல போனாய் ஏன்
திரும்பி வந்து பார்க்கிறாய்?
ஏதாவது மறந்து விட்டாயா என்றால்
எதை மறந்தேனெனத் தெரியவில்லை என்கிறாய்
நீ எதையும் மறக்கவில்லை என்பது
எனக்கும் உனக்கும் தெரியும்!

பாராட்டுகள் இளமாறன்!
உங்கள் பரிணாம வளர்ச்சிக்கு!!
நன்றி கௌதமன்
நன்றி நண்பர்களே

Hega
06-01-2011, 08:43 PM
காதல் கொண்ட மனதில்
தூக்கம் கூட தூரப்போகுமாம்

உணர்வின் வெளிப்பாடு அருமை..

தொடருங்கள்...

சுகந்தப்ரீதன்
07-01-2011, 10:46 AM
மறப்பதோ மறைப்பதோ நிகழ்வதை உணர்வதே வாழ்க்கை அப்படித்தானே இளமாறன்..!!

கவிவரிகளுக்கு பாராட்டுக்கள்..!!:D