PDA

View Full Version : நந்தலாலாவா ? கிகுஜிரோவா ? : எது பெஸ்ட் ?



Kalai_21
05-01-2011, 05:02 PM
நந்தலாலாவா ? கிகுஜிரோவா ? : எது பெஸ்ட் ?

http://deepwarriors.com/wp-content/uploads/2010/11/Nandalala-Movie.jpg[/url] [url]http://www.film.org.pl/soundtrack/images2/kikujiro.jpg


நந்தலாலாவைப் பற்றி எழுதாவிட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்தி விடும் என்று கனவில் எச்சரிக்கப்பட்டேன். இருந்தாலும் கிகுஜிரோவைப் பார்க்கும் முன் நந்தலாலா குறித்து ஏதும் எழுதக் கூடாது என்று பிடிவாதமாய் இருந்தேன். காரணம் ஜப்பானிய கிகுஜிரோ சூப்பர் என்றும், தமிழ் நந்தலாலா அதன் ஈயடிச்சான் காப்பி என்றும் வடிவேலு பாணியில் ஷடடடடாஆ… என சலிக்குமளவுக்கு விமர்சனங்களும், மோதல்களும், சண்டைகளும், இத்யாதிகளும்.

இன்று தான் கிகுஜிரோவை அமைதியாக அமர்ந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அற்புதமான படம். தாயின் அன்புக்காக ஏங்கும் சிறுவனின் உணர்வுகளை மிக அற்புதமாகப் படம்பிடித்திருந்த படம். மனதை வசீகரிக்கும் பின்னணி இசையில், கண்களை இதமாக்கும் ஒளிப்பதிவில், மென்மையாய் நம்மை அறியாமலேயே மூழ்கடித்து விடும் இயக்கத்தில் கிகுஜிரோ சபாஷ் போட வைக்கிறது.

முதலில் மிஷ்கினுக்கு ஒரு மிகப்பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும். கிகுஜிரா என்றொரு படம் இருப்பதே நந்தலாலா வராமல் இருந்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது. ஒரு நல்ல ஜப்பானியப் படத்தை தமிழ் கூறும் நல்லுலகுக்கு காட்டிக் கொடுத்தாரே, அதுக்கு முதல் நன்றி.

கிகுஜிரோவின் தாக்கத்தில் உருவான தமிழ்ப்படம் நந்தலாலா அவ்வளவு தான். இரண்டு படங்களுக்குமிடையே ஒப்பிடக்கூடிய காட்சியமைப்புகளும், சிந்தனையும் இருந்தாலும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இரண்டு படத்திலும் உண்டு.

ஒரு படத்தின் கருவை எப்படி மொழிக்கும், கலாச்சாரத்துக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப உருவாக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நந்தலாலாவைச் சொல்லலாம். நந்தலாலாவின் படம் முழுக்க வரும் காட்சியமைப்புகளும், மாந்தர்களும், அவர்களுடைய நுட்பமான உணர்வுகளும் கிகுஜிரோவில் இல்லை. ஜப்பானிய திரைப்படத்தில் விரியும் கலாச்சார மனிதர்கள் நந்தலாலாவில் இல்லை. நாலு ஐட்டம் ஒரே மாதிரி இருக்குங்கறதுக்காக “அதே” சாப்பாடு என்பது கொஞ்சம் ஓவர் தான்.

இசைஞானியைப் பற்றிப் பேசாமல் நந்தலாலாவைப் பேசமுடியாது. சேதுவின் சாயல் ஆங்காங்கே இசையில் தெரிந்தாலும் உணர்வுகளின் அடிப்படையில் இசைஞானி இசையை விளையாட விட்டிருப்பது பிரமிக்க வைக்கிறது. பல காட்சிகளை அதன் உணர்வுகளின் அடிப்படையில் ஒரே இசைச் சங்கிலி பிணைத்து வைப்பது விவரிக்க முடியாத இன்பம்.

ஹாலிவுட் திரைப்படங்களின் பின்னணி இசை தனியே சிடிகளாக வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சிறந்த பின்னணி இசை சிடிகளின் மேல் எனக்கொரு அதீத காதல் உண்டு. இன்னும் கிளாடியேட்டர் பின்னணி என் பேவரிட் லிஸ்டில் கம்பீரமாய் இருக்கிறது. அவ்வப்போது இசையைத் தவழ விட்டு கண்மூடிக் கிடப்பது ஒரு சோம்பேறிச் சுகம். அப்படி ஒரு பின்னணி இசை சிடி நந்தலாலாவுக்கு வரவேண்டும். அப்படி வந்தால் நாலு காப்பி வாங்க வேண்டும்.

இசைஞானியைப் பேசவிட்டு வசனங்கள் மௌனித்திருப்பது நந்தலாலாவின் இன்னொரு வசீகரம். கிகுஜிரோவில் பாதிப் படத்திலேயே சிறுவனுக்கு தாயைக் குறித்த உண்மை தெரிந்து விடுகிறது. அதன் பின் தவழும் காட்சிகள் சிறுவனின் சோகத்தையும் சுமந்தே பயணிக்கிறது. நந்தலாலாவோ மாறுபட்ட காட்சியமைப்பினால் ஆழமாகி விடுகிறது.

கிகுஜிரோவில் இறுதியில் தன் பாட்டியிடம் வந்து விடுகிறான் சிறுவன். தமிழில் அனியாயமாகப் பாட்டியை தனியே விட்டு விட்டு பாவம் சம்பாதித்து விட்டார் இயக்குனர். இருந்தாலும் வலிந்து திணிக்கப்படும் சுப்ரமணியபுரக் குப்பை வன்முறைகள், அங்காடித் தெருச் செயற்கைச் சோகங்கள் ஏதும் இல்லாமல் நிறைவாய் படத்தை முடித்திருப்பதில் மனம் நெகிழ்ந்து விடுகிறது.

இதொன்றும் புதுசில்லை. இருவர் சேர்ந்து பயணிக்கும் திரைப்படங்கள் ஹாலிவுட்டிலும் பிற மொழிகளிலும் நிறையவே உண்டு. அதில் கிகுஜிரோவும் ஒன்று.

கிகுஜிரோவின் அதே தொனியில், அதே காட்சி மொழியில் நந்தலாலாவை மிஷ்கின் எடுத்திருந்தாலும் நந்தலாலா, ஒரிஜினல் படத்தை விட பல மடங்கு உயரமாய் இருக்கிறது என்பது எனது கருத்து.

தவமாய் தவமிருந்து படத்துக்குப் பின் என் மனதில் உயரமாய் வந்து அமர்ந்து கொண்ட இரண்டாவது தமிழ்ப்படம் நந்தலாலா !

நன்றி மிஷ்கின்.

Courtesy: http://sirippu.wordpress.com/2011/01/04/nandalaalaa_kikujiro/