PDA

View Full Version : இறைவன்.........



Nanban
27-11-2003, 07:20 AM
இறைவன்............


'நான் கொடுப்பதை
யாராலும்
தடுக்க முடியாது -
நான் தடுத்ததை
யாராலும்
கொடுக்க முடியாது'

இறைவன் அமைதியாகப்
புன்னகை பூக்கிறான்

இடைத் தரகன்
வைத்துக் கொள்ளாத
ஒரு எளிய அன்பர்
தன்னை நேருக்கு நேராய்
வணங்கி நிற்கும் வேளையிலே......

தமிழ் தாட்சாயிணி
27-11-2003, 08:04 AM
அழகானதொரு விளக்கம் தந்து உள்ளீர்கள் நண்பரே.

அருமையான கவிதை

அன்பே சிவம் என்பதைப்போல் , தூய அன்பை விட வேறொன்றையும் இறைவன் எம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது இல்லை.

Nanban
27-11-2003, 08:10 AM
நன்றி - தமிழ் தாட்சாயிணி அவர்களே........

இறைவன் இடைத்தரகர்களை ஏற்றுக் கொள்வதில்லை.......

கருத்தும், வாக்கியமும் - குரானிலிருந்து. உலகம் முழுவதும் " quote" செய்யப்படும் பிரபலமான வாக்கியமும் கூட.

இளசு
27-11-2003, 07:55 PM
அருமை நண்பனே,
உங்களால் என் ஆன்மீகத் தேடலின் ஆழம் அதிகமானபடியே....

இருபதில் பொதுவுடைமைக் கருத்துகள், ஆவேசம்..
இப்போது ஆன்மீகம், தேடல்கள், சுயவிமர்சனம்...
எப்போதும் தமிழ், கவிதைகள், மென்ரசனைகள்....

Nanban
30-11-2003, 02:36 AM
இருபதில் இல்லாததினால் கம்யூனிஸம்.. .. .. ..

இன்று இருப்பதை பங்கு வைக்க தேவையானதால் பக்தி போர்வையிட்டு மறைத்தல். ..

பலரும் இந்த வாழ்க்கையைத் தான் வாழ்கின்றனர். .. .. ..

அதுவும் உண்மையில்லை. இதுவும் உண்மையில்லை. .. .. ..

இந்த இரண்டு நிலைகளையும் கடந்து வெளிவர வேண்டும். .. .. ..

இறைவனைத் தேட. .. .. ..

இந்தப் போலி வாழ்வை கடந்து எப்படி வெளியே வருவது. .. ?

இது தான் உண்மையான தேடல் உள்ளவர்களின் போராட்டம். .. ..

கொடுப்பதை தடுக்க.. ..
தடுத்ததை கொடுக்க.. ..
இயலாத மனிதன்,
பேசித் தீர்க்கிறான்
கம்யூனிசத்தையும்
பக்தி போர்த்து
மணம் கமழும்
முதலாளித்துவத்தையும்.

எதுவும் கிடைக்காத
ஏழையோ
எப்போதும் போல
வாழ்ந்து கொண்டிருக்கிறான்
தன் வாழ்க்கையை. .. .. ..

இளசு
30-11-2003, 10:41 PM
உங்கள் தேடல்கள் தொடரட்டும் நண்பனே..
தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறேன்..

Nanban
02-12-2003, 06:10 PM
தொடர்ந்து கொண்டிருக்கிறது - நானாகிய நான் நாமில் என்று........