PDA

View Full Version : உன் வீடு



ஆதி
04-01-2011, 08:41 AM
உன் வீட்டின் கதவை தட்டுகையில் எல்லாம்
யாரோ புதுப்புது மனிதர்கள் கதவை திறக்கிறார்கள்

உன் பெயரை சொல்லி
வினவுகையில் எல்லாம்
சலிப்போடும், எரிச்சலோடும், முகப்சுழிப்போடும் உதட்டை பிதுக்குகிறார்கள்..

உன்னைப்பற்றிய விசாரிப்புக்கள்
இந்த வாழ்வில் படர்ந்திருக்கும் இருட்டை போலிருக்கிறது
அவர்களுக்கு எல்லாம்..

எத்தனையோ பேர் குடிப்பெயர்ந்துவிட்டாலும்
உன் வீடு சூன்யமாகவே இருக்கிறது
நீ பெயர்ந்த பிறகு..

கௌதமன்
04-01-2011, 01:16 PM
அவள் ஐஸ்வர்யம் ஒரு வீட்டுக்கு மட்டுமல்ல
பல வீடுகளுக்கும் பரவட்டும் என்றே மாறிப்போனாளோ!

பாராட்டுகள் ஆதன்!

எத்தனையோ பேர் குடியப்பெயர்ந்துவிட்டாலும்
உன் வீடு சூன்யமாகவே இருக்கிறது

என்பதில் குடிவந்து விட்டாலும் என்றிருக்கலாமோ?

ஆதி
04-01-2011, 02:14 PM
அவள் ஐஸ்வர்யம் ஒரு வீட்டுக்கு மட்டுமல்ல
பல வீடுகளுக்கும் பரவட்டும் என்றே மாறிப்போனாளோ!

பாராட்டுகள் ஆதன்!

எத்தனையோ பேர் குடியப்பெயர்ந்துவிட்டாலும்
உன் வீடு சூன்யமாகவே இருக்கிறது

என்பதில் குடிவந்து விட்டாலும் என்றிருக்கலாமோ?

இருக்கலாம் கௌதம்..

குடியமர்ந்து என்று முதலில் எழுதி பின் குடிப்பெயர்ந்து என்று மாற்றும் போது 'ய'வை விட்டுவிட்டேன்..

குடிப்பெயர்ந்துவிட்டாலும் எனும் போது, பலர் வந்து வீடு மாறி சென்றுவிட்டதாய் பொருளாகிறதல்லவா அதனால் தான் அவ்வாறு எழுதினேன்..

இது வெறும் காதல் கவிதை மட்டுமல்ல கௌதம்

பின்னூட்டப்பாராட்டுக்கு நன்றிகள்..

சிவா.ஜி
04-01-2011, 03:38 PM
காதலி எனவும் கொள்ளலாம்...பரத்தை எனவும் கொள்ளலாம். அவளைப் பற்றின விசாரிப்புக்குக் கிடைக்கும் ஆயாச பதில்களிலிருந்து அப்படி எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அப்படி சொன்னவர்களும் புதிது புதிதாய் வந்து செல்லும் அவளினத்தவர்களே என நினைக்கத் தோன்றுகிறது.


மாறுபட்டக் கவிதை. பல பரிமானங்களைப் புரிந்துகொள்ள சிரமமேற்படுத்தும் கவிதை. வாழ்த்துக்கள் ஆதன்.