PDA

View Full Version : வழி ஏதும் உள்ளதா?



ilamaran
03-01-2011, 05:29 PM
நான் எதாவது பதிவு செய்ய தட்டச்சிடும் போது சிறிது நேரம் ஆகி விடுகிறது.அதை மன்றத்தில் பதிவு செய்ய முயற்சிக்கையில் மறுபடிம் இணைய(log on )சொல்கிறது.இதன் நேரத்தை கூட்ட ஏதாவது வழி உள்ளதா?

Hega
03-01-2011, 08:05 PM
அட எனக்கும் இப்படி ஆகிறதே...

பல நேரங்களில் பெரிய பதிவுகளை தட்டச்சிட்டு பிழைதிருத்திட ச்ற்று நேரம் ஆகி்டும். நேரடியாக எண்ணத்தில் தோன்றுவதை தட்டச்சிடு விட்டு பதிந்திடுவை அழுத்திடும் போது லாகின் ஆக சொல்லி தட்டச்சிட்டதெல்லம் அழிந்து விடுகின்றது.

அதே சிந்தை மீண்டும் வராதமையில் நான் தவற விட்ட பதிவுகள் அனேகம்.
அது ஏன்...

அமரன்
03-01-2011, 10:46 PM
பாதுகாப்புக் கருதி இப்படிச் செய்யப்பட்டுள்ளது..

இதைத் தவிர்க்க இரு சாளரங்களில் மன்றத்தைப் பார்வையிடுங்கள். ஒரு சாளரத்தில் Currently Active Users (http://www.tamilmantram.com/vb/online.php): ஐ பாருங்கள். மற்றதில் தட்டச்சுங்கள். நான் இப்படித்தான் செய்கிறேன்.

p.suresh
03-01-2011, 11:47 PM
நான் என் எண்ணங்களை முதலில் notepadல் தட்டச்சு செய்வேன்.பிழைத் திருத்தியப்பின் copy,paste செய்து மன்றத்தில் பதிவிடுவேன்.

கௌதமன்
04-01-2011, 04:30 PM
நண்பரே நீங்கள் மேல் இடது ஓரத்தில் இருக்கும் user CP யையும் பயன்படுத்தலாம்.

ilamaran
04-01-2011, 04:32 PM
நன்றி நண்பர்களே,

அக்னி
04-01-2011, 04:34 PM
Remember me பெட்டியில் ஒரு ‘டிக்’ இட்டுவிடுங்கள்...
நீங்களாக log out ஆகும்வரைக்கும் மீண்டும் உள்நுழைய வேண்டிய தேவை ஏற்படாது.
ஆனால், உங்கள் கணக்கினை மூடிச்செல்ல வேண்டிய இடங்களில் log out செய்ய மறவாதீர்கள்.

உதயா
04-01-2011, 04:40 PM
அக்னி அவர்கள் சொல்வது தான் நல்ல வழி. தளத்தை பார்வையிட்டு வெளிச்செல்லும் போது மறக்காமல் logout செய்துவிடுங்கள்.

அக்னி
04-01-2011, 04:51 PM
மறந்துபோனால்,
நீங்கள் இட்ட ‘டிக்’குக்கு, யாராச்சும் ‘டிமிக்கி’ கொடுத்துவிடலாம்...

Hega
04-01-2011, 09:25 PM
அனைவருக்கும் நன்றி..

பிரேம்
05-01-2011, 12:17 AM
என்ன எழுதனுமோ..அதை ஜிமெயில்-ன் தமிழ் தட்டச்சு வசதியை பயன்படுத்தி எழுதிடுங்க...நீங்க வெளியானாலும் அது draft ல இருக்கும்..தேவையான போது காப்பி பேஸ்ட் பண்ணிக்கலாம்..

நாஞ்சில் த.க.ஜெய்
08-01-2011, 04:59 AM
கூகிள் இன் மொழிமாற்றிபதிப்பை பயன்படுத்தி எழுதி பின்னர் சரிபார்த்து பதிவிடலாம்....இது ஒரு எளிதான வழி நண்பரே ...

என்றும் அன்புடன்
த.க.ஜெய்