PDA

View Full Version : மன்றத்தமிழ் நண்பர்களே! வணக்கம்.



Thaimagal
01-01-2011, 03:20 PM
அனைவரும் ஒன்றாய் இணைய
ஆங்கிலப் புத்தாண்டே வருக!

இனிவரும் காலங்கள் இனிதாக
ஈகையில் தமிழன் உயர்வாக
உவகையில் யாவரும் ஒன்றாக
ஊரெங்கும் வாழும் மனிதகுலம்
எம்மவர் என்று மனத்திருத்தி
ஏற்றி வைத்துக் கொண்டாடி
ஐயம் இன்றி அனைவருடன்
ஒன்றுபட்ட மனதுடனே
ஓங்கி சிறந்த வாழ்வுபெற
ஔவை சொன்ன மொழியாக
அழகுத்தமிழ் சொல்லாலே
வாழ்த்திட வந்தேன் வாழியவே!
மன்றத்தில் உலாவரும் நண்பர்களே.
-தைமகள்

ஓவியன்
01-01-2011, 03:23 PM
அழகான கவிதையுடனும் அழகுத் தமிழ் பெயருடனும் வந்திருக்கும் தைமகளே வருக+வாழ்க..!!

பாலகன்
01-01-2011, 03:36 PM
மூன்றாவது பதிப்பே அழகிய கவிதையாகி மன்றத்தாரை வாழ்த்தும் உங்கள் உள்ளம் எங்களுக்கு புரிகிறது.

நன்றிகள்

கௌதமன்
01-01-2011, 03:41 PM
ஔவை சொன்ன மொழியாக



அகர முதல எழுத்தெல்லாம்
அறியவைத்தாய் தேவி
என்ற சரஸ்வதி சபதம் பாடல் நினைவுக்கு வந்தது.
நன்றி தைமகள்!