PDA

View Full Version : விவேகாநந்தரின் ஆத்திக பிரசங்கம்



mania
27-11-2003, 03:03 AM
விவேகானந்தர் ஒரு சமயம் வெளிநாட்டில் ஆத்திகத்தை பற்றி பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் . ஒரு நாள் அவர் பேச்சை ஆரம்பிப்பதுற்குள் ஒரு நாத்திகன் கரும்பலகையில் பெரிதாக
GOD IS NOWHERE
என்று எழுதியிருந்தான் . இவர் ரூமுக்குள் நுழையும் போதே மெல்ல கிண்டல் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது . என்னவென்று பார்க்கும்போது கரும்பலகையில் உள்ள வாக்கியம் தெரிந்தது . அவர் உடனே சிறிய புன்னகையோடு அந்த கரும் பலகைக்கு போய் ஒரு சிறு மாற்றம் செய்துவிட்டு தன் இருக்கையிலே அமர்ந்தார் . வகுப்பிலே ஒரே ஆச்சர்யமும் கைதட்டலும் தான். அவர் செய்த மாற்றம் இதோ

GOD IS NOW HERE

அன்புடன்
மணியா

முத்து
27-11-2003, 04:56 AM
அசத்தலான திருத்தம் ....
நன்றி அன்பு மணியா அவர்களே ...

poo
27-11-2003, 11:08 AM
அருமை...
ஒரு ஸ்பேஸில் ஸ்பேஸ் முழுக்க இருக்கும் பேஸை சொல்லிவிட்டார்!!
இன்னும் குடு தலை...

பாரதி
27-11-2003, 04:17 PM
அருமை மணியா.. நன்றி.
இதே போல NO SMOKING-ஐ NOW SMOKING. KNOW SMOKING என்று மாற்றிய நண்பர்களும் உண்டு. விவேகானந்தர் நல்ல விசயத்திற்கு அப்படி மாற்றினார். நம் நண்பர்கள்....?!

இளசு
27-11-2003, 07:38 PM
பாரதி..
சிற்பத்தில் யானையைக் கண்டது ஒரு பார்வை..
கல்லை மட்டும் கண்டது மறுபார்வை...
கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
எண்ணம்தான் காரணம்...
எண்ணம் உயர, பார்வை உயரும்.
பாராட்டு மழை பொழிகிறேன் எங்கள் மணியாவுக்கு..

suma
27-11-2003, 07:43 PM
தலை தலைக்கு தலப்பா கட்டாதே.....
தமிழனா இரு வீர் சிங்கை நண்பனா மட்டும் இரு...
விவேகானந்தர் உரை ஏதாவது கை வசம் இருந்தால் பதியுங்கள்..

mania
28-11-2003, 03:05 AM
அசத்தலான திருத்தம் ....
நன்றி அன்பு மணியா

இந்த ஆட்டத்துக்கு நான் வரலை முத்து.......நேற்று இரவு மிகுந்த மகிழ்ச்சியில் உறங்க போனேன்... (ஆஹா...பிஜிகே லெவலுக்கு நாமும் ஆயிட்டொம்னு). காலையில் பார்த்தால் முறுபடியும் தரை மட்டத்துக்கு ............
நான் ஒத்துக்கமுடியாது....ஒரு அசத்தலான திருத்தம் கொடுத்து பழையபடியே மாற்று முத்து மிக்க நன்றி முத்து (என்னையும் அறிஞர்கள் அணியில் சேர்த்ததற்கு!!!!
அன்புடன்
மணியா

விகடன்
11-08-2007, 08:41 AM
ஆமான் அண்ணா. இதை மையமாக வைத்து நாங்கள் பாடசாலைக் காலங்களில் மேடை நிகழ்ச்சி ஒன்றை அரங்கேற்றினோம். அது பெரியாவில் பாராட்டப்பட்டதுடன் விவேகானந்தர் நிகழ்ச்சிகளின்போது மேடை மீள மீள ஏற்றப்பட்டது. கொழும்பிலிருக்கும் இராமகிருஸ்ண மிஷனிலும் கூட.

அமரன்
11-08-2007, 07:51 PM
ஓரெழுத்தில் அர்த்தமே மாறிவிட்டதே..இரண்டு விவேகானந்தருக்கும் நன்றி.

aren
12-08-2007, 02:32 AM
அருமையான பதிவு தல. இது வரை நான் இதைப் படிக்காமல் எப்படி விட்டேன். இங்கே அளித்ததற்கு நன்றிகள்.

நன்றி வணக்கம்
ஆரென்