PDA

View Full Version : இன்று பிறக்கும் 2011 வித்தியாசமான ஆண்டு



mgandhi
01-01-2011, 02:53 AM
இன்று பிறக்கும் 2011 வித்தியாசமான ஆண்டு




இன்று பிறக்கும் 2011-ம் ஆண்டில், ஒரு தேதியை மாதம் மற்றும் வருடத்துடன் இணைத்து எழுதினால், அதில் ஒன்று என்ற இலக்கம் மட்டும் 6 முறை இடம் பெறுகிறது.

அதாவது, இந்த ஆண்டில் நவம்பர் மாதம் 11-ந் தேதியை, 11-11-11 என்று எழுதும்போது 6 முறை ஒன்று என்ற இலக்கம் இடம் பெறுவதை காணலாம்.

அதேபோல், இந்த ஆண்டில் 4 தேதிகளில் ஒன்று என்ற இலக்கம் மட்டுமே இடம் பெறுவது மற்றொரு சிறப்பு அம்சமாகும். ஆண்டின் முதல் நாளே அந்த சிறப்பைப் பெற்று உள்ளது. அதாவது, 1-ம் தேதியான இன்று 1-1-11 ஆகும்.

அதேபோல் ஜனவரி 11-ந் தேதி, 11-1-11 என்றும், நவம்பர் 1-ந் தேதியன்று, 1-11-11 என்றும், நவம்பர் 11-ந் தேதி அன்று 11-11-11 என்றும், முற்றிலும் ஒன்று என்ற இலக்கமே இடம் பெறுவதைக் காணலாம்.

ஏற்கனவே கடந்த 1911-ல் வந்ததுபோல், 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2011-ல்தான் இது போன்று அமைவதால், இந்த நூற்றாண்டின் வித்தியாசமான ஆண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா.ஜி
01-01-2011, 05:57 AM
வித்தியாசமான தகவலுக்கு நன்றி ஐயா.

அமரன்
01-01-2011, 07:14 AM
தகவலுக்கு நன்றி அய்யா.

arun
01-01-2011, 09:19 AM
வித்தியாசமான தகவலுக்கு நன்றி

சூறாவளி
01-01-2011, 11:25 AM
தகவலுக்கு ரொம்ப நன்றிகள் நண்பரே

KAMAKSHE
01-01-2011, 02:18 PM
தகவலுக்கு ரொம்ப நன்றிகள் நண்பரே
தகவலுக்கு நன்றி

கௌதமன்
01-01-2011, 02:43 PM
மேலுமொரு தகவல்:

2005 நாட்காட்டியையே 2011 நாட்காட்டியாகவும் பயன்படுத்தலாம்.

நன்றி மோகன்காந்தி!

பாலகன்
01-01-2011, 03:13 PM
மேலுமொரு தகவல்:

2005 நாட்காட்டியையே 2011 நாட்காட்டியாகவும் பயன்படுத்தலாம்.

நன்றி மோகன்காந்தி!

இது இன்னும் அருமையான தகவல். பழைய நாட்காட்டியை தேடி எடுக்க வேண்டியது தான்.

தகவல் தந்த காந்தியாருக்கும் மேற்கொண்டு தகவல் தந்த கெளதமனுக்கும் நன்றிகள்