PDA

View Full Version : தொலைந்துபோன நான்



CEN Mark
31-12-2010, 09:19 AM
என்னில்
என்னைத் தேடுகிறேன்.
நான்
தொலைந்து போனேனோ?
என்னை
மறந்து போவேனோ?
அடையாளந்தேடி அலைகின்றேன்.
அடையாளம்
பெயர் சார்ந்த இந்த உடலிலா?
உடல் பொதிந்த என் பெயரிலா?
உறுப்பிழந்த உடலுக்கும்
பெயரில் காணாகுறை!
அடையாளம் உயிரிலா?
உயிரின் ஊற்று உடலுக்குள்
நாடி நரம்புகளிலா? உயிரின்
முடிச்சுகளிலா? (ஏழு சக்கரம்)
கால அவஸ்த்தையினில் இந்த
ஏழுச்சக்கரத்தை
வானவில்லில் காணும்
வர்ண ஜாலம்தானோ? இழந்தது
என்னை மட்டுமல்ல - என்
நினைவுகளும்!!!

ஜானகி
31-12-2010, 09:28 AM
தொலையவில்லை !...

வலையிலிருந்து விடுபட்டு

அடியெடுத்து நுழைகிறீர் !

அண்டம் எனும் பூரண

மண்டப வாசலிலே !

தேடல் தான் ஆரம்பமாம் !

நாகரா
31-12-2010, 10:39 AM
என்னில்
என்னைத் தேடுகிறேன்.

என்னில்
என் "ஐ" தேடுகிறேன்.

அந்த "ஐ" (I)
தலைமை, தலை மெய்
அந்த "நான்" தான்
நீவிர்
தொலையாமல்
முழுமையாய்
முழும் "ஐ"யாய்

அருமையானதோர் மெய்ஞ்ஞானக்கவிக்கு வாழ்த்துக்கள் உமக்கு, சென் மார்க்.

Hega
31-12-2010, 10:59 AM
என்னில்
எதைத்தேடி
என்னைதொலைத்தேனோ..
எண்ணும் எண்ணத்திலும்
என்னைகாண்பேனோ
எண்ண முடியா
எண்ணங்களாம்
என் நினைவுகளால்
எனை மீட்டசெய்த
என்னில்
எனைதேடுபவர்க்கு
என் இனிய வந்தனங்கள்.




இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள் நண்பரே...

நாகரா
31-12-2010, 11:11 AM
என்னில்
என்னைத் தேடுகிறேன்.
நான்
தொலைந்து போனேனோ?
என்னை
மறந்து போவேனோ?
அடையாளந்தேடி அலைகின்றேன்.
அடையாளம்
பெயர் சார்ந்த இந்த உடலிலா?
உடல் பொதிந்த என் பெயரிலா?
உறுப்பிழந்த உடலுக்கும்
பெயரில் காணாகுறை!
அடையாளம் உயிரிலா?
உயிரின் ஊற்று உடலுக்குள்
நாடி நரம்புகளிலா? உயிரின்
முடிச்சுகளிலா? (ஏழு சக்கரம்)
கால அவஸ்த்தையினில் இந்த
ஏழுச்சக்கரத்தை
வானவில்லில் காணும்
வர்ண ஜாலம்தானோ? இழந்தது
என்னை மட்டுமல்ல - என்
நினைவுகளும்!!!
என்னில்
என் "ஐ" கண்டேன்.
மாயை
தொலைந்து போனது.
என் "ஐ" மறந்த உறக்கம் நீங்கி
நெஞ்சுள் விழிக்கிறேன்.
இறுக்கும் அடையாளங்கள் அவிழ
இளக்கும் அன்பில் குழைகிறேன்
பேர் கொண்ட ஆள் நான்
ஊர் மெய்க்குள்
மார்புக்குள் புகுந்தே
வீடு பேறு அடைகிறேன்
பேரது நாதமாக
ஆளது ஜோதியாக
நானது ஓர்மையாக
நானே ஒளிர்கிறேன்
ஞால வீட்டில்
கூட்டுக் குடும்ப
உயிர்த் திரளிடையே
தயவின் செறிவாய்ப்
பூரணமாய்க் கரைகிறேன்
இழந்தது அனந்த இறுக்கங்கள்
மீட்டது ஆனந்த இருப்பன்றோ!

சிந்திக்க வைத்த சிறந்த கவிக்கு வாழ்த்துக்கள் சென் மார்க், தொய்வின்றித் தொடரட்டும் உம் ஞானப் பயணம்

CEN Mark
18-01-2011, 04:47 PM
தொலையவில்லை !...

வலையிலிருந்து விடுபட்டு

அடியெடுத்து நுழைகிறீர் !

அண்டம் எனும் பூரண

மண்டப வாசலிலே !

தேடல் தான் ஆரம்பமாம் !

அஹா! நெருங்கிவிட்டீர்.

CEN Mark
18-01-2011, 04:50 PM
என்னில்
என் "ஐ" தேடுகிறேன்.

அந்த "ஐ" (I)
தலைமை, தலை மெய்
அந்த "நான்" தான்
நீவிர்
தொலையாமல்
முழுமையாய்
முழும் "ஐ"யாய்

அருமையானதோர் மெய்ஞ்ஞானக்கவிக்கு வாழ்த்துக்கள் உமக்கு, சென் மார்க்.

உங்களோடு சில நேரங்களில் நெருங்குகின்றேன். .

CEN Mark
18-01-2011, 04:51 PM
என்னில்
என் "ஐ" கண்டேன்.
மாயை
தொலைந்து போனது.
என் "ஐ" மறந்த உறக்கம் நீங்கி
நெஞ்சுள் விழிக்கிறேன்.
இறுக்கும் அடையாளங்கள் அவிழ
இளக்கும் அன்பில் குழைகிறேன்
பேர் கொண்ட ஆள் நான்
ஊர் மெய்க்குள்
மார்புக்குள் புகுந்தே
வீடு பேறு அடைகிறேன்
பேரது நாதமாக
ஆளது ஜோதியாக
நானது ஓர்மையாக
நானே ஒளிர்கிறேன்
ஞால வீட்டில்
கூட்டுக் குடும்ப
உயிர்த் திரளிடையே
தயவின் செறிவாய்ப்
பூரணமாய்க் கரைகிறேன்
இழந்தது அனந்த இறுக்கங்கள்
மீட்டது ஆனந்த இருப்பன்றோ!

சிந்திக்க வைத்த சிறந்த கவிக்கு வாழ்த்துக்கள் சென் மார்க், தொய்வின்றித் தொடரட்டும் உம் ஞானப் பயணம்


தேடல்கள் பல சமயம் என்னைத தொலைத்து விடுகிறது. உங்கள் கவிதையும்.