PDA

View Full Version : விலைவாசியும் - தீவிரவாதமும் (ஜெகதீசனின் வெங்காயமும் தங்கமும் தந்த பாதிப்புகள்)CEN Mark
31-12-2010, 07:00 AM
அன்று
உழைப்பிற்கு உப்பே வெகுமதியாய்
அடிமைக்கு மிளகே (நல்லமிளகு) கூலியாய்
அன்புக்கு பூண்டே பகிர்தலாய்

இன்று
பணமே பிரதானமாய்
பதுக்கலே மூலதனமாய்
அரசியலே சதுரங்கமாய்
வாழ்வின் அடையாளமாய் ....

தண்ணீரில் தள்ளாடும் பூமியில்
தண்ணீருக்கே விலை வைக்கும்
கொடுமைகள்.
உழைக்கும் வர்க்கத்தின் மதிப்புகள்
சுரண்டல் கூட்டத்தின் கைகளில்
விலைகள் மட்டுமா ஏறும் - நாட்டின்
வறுமையும் சேர்ந்தல்லவா கூடும்

மழையின் காரணம் ஒன்றாம்
பெட்ரோல் விலையின் காரணம்
மற்றொன்டாம்
கணினி சதுரங்கம் என்றுண்டாம்
நம் கையாலாத்தனம் பிரிதொன்றாம்

அடுத்த வரியின் வார்த்தைகள்
அரசை சாடும் சாட்டைகள்
பாமரன் சாட்டை எடுத்து விட்டால்
தீவிரவாதம் என்றாகாதோ?

பாலகன்
31-12-2010, 07:08 AM
அப்படித்தானே பா.சி சொல்றாரு. ஆனா பாருங்க பொது சொத்தை நாசம் பண்ணாமல் அறவழியில் போராடலாம்.

கவிதை நன்று

கௌதமன்
31-12-2010, 07:12 AM
விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் பதுக்கல்
பதுக்குவது அரசாங்கமல்ல
உங்களையும் என்னையும் போல
பொது ஜனக்கூட்டத்தில் கலந்துவிட்டக் கூட்டம் தான்.
சர்க்கரை பதுக்கல், வெங்காயம் பதுக்கல்
என்ற அழுகாத பொருள் அனைத்தையுமே
பதுக்கி பதுக்கி சகமக்களின்
பொருளாதாரத்தை அழுக வைக்கிறார்கள்!

CEN Mark
31-12-2010, 07:25 AM

அரசாங்கம் என்பது யார்? இதைதான் எப்போதும் கேட்கிறேன். அரசின் தயவு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ஆமாம் அலுவலகம் போகவில்லையா?

கௌதமன்
31-12-2010, 07:32 AM
ஆமாம் அலுவலகம் போகவில்லையா?

ஹி..ஹி.. உங்களைப் போலத்தான்!:rolleyes:

103 டிகிரி காய்ச்சலோடு ..கணனி முன்பு நான்!

Hega
31-12-2010, 07:35 AM
உழைக்கும் வர்க்கத்தின் மதிப்புகள்
சுரண்டல் கூட்டத்தின் கைகளில்
விலைகள் மட்டுமா ஏறும் - நாட்டின்
வறுமையும் சேர்ந்தல்லவா கூடும்
?

ஒரு நாட்டின் உயர்வும் தாழ்வும் ஏழைபணக்காரன் எனும் உயர்வு தாழ்வினாலும் இருப்பவன் தன்னிடம் இருக்க்கிறது எனும் மமதையில் சேர்த்து வைத்து பூச்சியரிக்க விடுவதும் ..இது அரசுக்கும் பொருந்தும் குடோன்களில் சேமிக்கபட்ட பல உணவுபொருட்கள் யாருக்கும் பயன் இன்றி கடலில் கொட்டப்பட்டகதை எல்லா நாட்டுக்கும் உண்டல்லவா....

ஏழையாய் இருப்பவன் அவன் உழைப்புகேற்ப ஊதியமின்றி அன்றாட வாழ்வுக்கு அல்லாடுவதும் உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பை சுரண்டும்
வரிஅ விலைவாசியென்ன ,வறுமையென்ன , நோய்னொடியென்ன எல்லாமே ஏறத்தானே செய்யும்.

அருமையான கவிதை

CEN Mark
31-12-2010, 07:53 AM

ஆஹா! எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு நாளும்.
நன்றி உங்கள் பாராட்டிற்கு. அடிக்கடி வாருங்கள். விமர்சனத்தை வையுங்கள்.

பாலகன்
31-12-2010, 07:55 AM
அடிக்கடி வாருங்கள். விமர்சனத்தை வையுங்கள்.

ஆஹா இந்த திரியில முதல்ல குத்த வச்சி உக்கார்ந்த என்னை இவரு கண்டுக்கலையே? :fragend005:

CEN Mark
31-12-2010, 08:05 AM
ஆஹா இந்த திரியில முதல்ல குத்த வச்சி உக்கார்ந்த என்னை இவரு கண்டுக்கலையே? :fragend005:

திரி சூடா இருந்தது அதான். ஆருனப்புரம் வரலாம்னு........வாழ்த்துக்களுக்கு நன்றி மட்டுமல்ல. வருகின்ற எல்லாமும்...?.

Hega
31-12-2010, 08:44 AM
ஆஹா! எங்கே போயிருந்தீர்கள் இவ்வளவு நாளும்.
நன்றி உங்கள் பாராட்டிற்கு. அடிக்கடி வாருங்கள். விமர்சனத்தை வையுங்கள்.

எங்கேயும் செல்லவில்லை

பண்டிகை நாட்கள், தொடர்ந்த விருந்தினர் வருகை, சமையல்னு களைத்தே போனேன்.தொடர்ந்த பனிபொழிவால் ஏற்பட்ட குளிரும் கூடவே சேர்ந்து இருமல் தடிமல் எனும் உபாதைகளை கொடுத்தது.

புதுவருடத்தில் என்னால் இயன்ற வரை வருவேன். நன்றி

CEN Mark
31-12-2010, 09:14 AM
எங்கேயும் செல்லவில்லைபுதுவருடத்தில் என்னால் இயன்ற வரை வருவேன். நன்றி

நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும். நன்றி