PDA

View Full Version : புத்தாண்டே வருக!



M.Jagadeesan
31-12-2010, 06:39 AM
வருக! புத்தாண்டே வருக!
வறுமை நீங்கிடவே வருக!

நன்மை சேர்த்திடவே வருக!
புன்மை நீங்கிடவே வருக!

உண்மை ஓங்கிடவே வருக!
உழைப்பு மேம்படவே வருக!

பருவமழை தப்பாது வருக!
பயிர்கள் செழித்திடவே வருக!

பிணிபகை அகன்றிடவே வருக!
மணியான நன்மக்கள் தருக!

மணநாளை எதிர்நோக்கும் பெண்களுக்கு
நல்ல
மணவாளன் வாய்த்திடவே வருக!

வேதங்கள் ஒலித்திடவே வருக!
உயர்
கீதங்கள் பாடிடவே வருக!

புத்தாண்டில்
மலைமலையாய் நெற்குவியல் குவியட்டும்
குலைகுலையாய் தென்னைகள் காய்க்கட்டும்
அலைஅலையாய் நதிகளுமே பொங்கட்டும்
கலைகலையாய் செந்தமிழும் சிறக்கட்டும்.

மன்றத்தில் தமிழோசை முழங்கட்டும்
மாந்தரெல்லாம் அதைக்கேட்டு மகிழட்டும்
குன்றத்தில் குடியிருக்கும் முருகனருள்
குவலயத்தில் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்.

பாலகன்
31-12-2010, 07:17 AM
புத்தான்டுக் கவிதை மிக அருமை

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வழி உண்டாகட்டும்.

M.Jagadeesan
31-12-2010, 09:51 AM
புத்தான்டுக் கவிதை மிக அருமை

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வழி உண்டாகட்டும்.

பின்னூட்டமிட்ட பிரபுவுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Hega
31-12-2010, 10:15 AM
புத்தாண்டு வரவேற்பாய் பா்விசைத்தவிதம் அருமை

பாடிய பாவில் இருப்பதெல்லாம் நமக்கிசைவாகிட இறைவனை வேண்டுவோம்.

M.Jagadeesan
31-12-2010, 10:19 AM
புத்தாண்டு வரவேற்பாய் பா்விசைத்தவிதம் அருமை

பாடிய பாவில் இருப்பதெல்லாம் நமக்கிசைவாகிட இறைவனை வேண்டுவோம்.

நன்றி ஹேகா அவர்களே! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Hega
31-12-2010, 10:25 AM
என் நல் வாழ்த்துக்களும் சகோ

புதிய ஆண்டு புத்தாண்டாய்
புதியதாகி புதியதாக்கி
புதியவை நினைத்து
நல்தேகாரோக்கியத்தோடும்.
நற்குடும்பமெனும்
பூஞ்சோலையில்
பூத்துகுலுங்கி
புதுமணம் வீசி
புகழ் பெற என்
நல்வாழ்த்துக்கள்.

கௌதமன்
31-12-2010, 02:33 PM
வாழ்த்துகள் நண்பரே!

புத்தாண்டு பூக்கட்டும், புது மணம் பரப்பட்டும்
அற்புதங்கள் வேண்டாம்
அமைதி வந்தால் அதுவே போதும்

துப்பாக்கிகள் துரு பிடிக்கட்டும்
தோட்டாக்களை பத்திரப்படுத்துவோம்
பல்லாங்குழியாட உதவக்கூடும்

புத்தாண்டு 2011 தமிழருக்கு
சத்தான ஆண்டாகவிருக்கட்டும்!

M.Jagadeesan
31-12-2010, 02:42 PM
வாழ்த்துகள் நண்பரே!

புத்தாண்டு பூக்கட்டும், புது மணம் பரப்பட்டும்
அற்புதங்கள் வேண்டாம்
அமைதி வந்தால் அதுவே போதும்

துப்பாக்கிகள் துரு பிடிக்கட்டும்
தோட்டாக்களை பத்திரப்படுத்துவோம்
பல்லாங்குழியாட உதவக்கூடும்

புத்தாண்டு 2011 தமிழருக்கு
சத்தான ஆண்டாகவிருக்கட்டும்!

நன்றி கெளதமரே!

அமரன்
31-12-2010, 09:54 PM
2011..

கூட்டெண் நான்கு..

நாற்றிசையும் கீற்றசையும்
காற்றணைந்து வருவாய்
புத்துவாசம் தருவாய்
என வரவேற்ற ஜெகதீஸுக்கு
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கட்டும்.

கீதம்
31-12-2010, 10:01 PM
நம்பிக்கை தீபமேற்றி நலம்நாடும் பாவேற்றி புத்தாண்டை இனிதே வரவேற்ற நற்கவிக்குப் பாராட்டுகள்.

M.Jagadeesan
01-01-2011, 12:34 AM
2011..

கூட்டெண் நான்கு..

நாற்றிசையும் கீற்றசையும்
காற்றணைந்து வருவாய்
புத்துவாசம் தருவாய்
என வரவேற்ற ஜெகதீஸுக்கு
புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கட்டும்.


நன்றி அமரன் அவர்களே! தங்களுக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

M.Jagadeesan
01-01-2011, 12:36 AM
நம்பிக்கை தீபமேற்றி நலம்நாடும் பாவேற்றி புத்தாண்டை இனிதே வரவேற்ற நற்கவிக்குப் பாராட்டுகள்.

நன்றி கீதம்! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஜானகி
01-01-2011, 01:00 AM
பாரதியின் குரலை எதிரொலிப்பது போல உள்ள வாக்கு பலிக்கட்டும் !

பாரெல்லாம் நலம் பெறட்டும் !