PDA

View Full Version : காலியிடத்தில் பயிரிடுவோம்



கௌதமன்
31-12-2010, 06:01 AM
இத்திரிக் காணும் அனைவருக்கும் வணக்கம்!

நமது தமிழ்மன்றத்தின் முகப்பில், இலச்சினையின் வலது புறம் உள்ள காலியிடத்தில் விருந்தினரை உறுப்பினராக்கவும், மன்றத்தில் பங்களிப்பு செய்வதற்கு தூண்டும் வகையிலும் ஏற்ற கருத்துகளையோ அல்லது அதற்கான வழிமுறைகளை சொல்லும் விதமாகவோவுள்ள வாசகங்களை இடம்பெற செய்யலாமே!


இது குறித்து மன்றத் தோழர்கள் தங்கள் மேலான கருத்துகளைத் தர பணிவோடுக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

கீதம்
31-12-2010, 06:26 AM
இத்திரிக் காணும் அனைவருக்கும் வணக்கம்!

நமது தமிழ்மன்றத்தின் முகப்பில், இலச்சினையின் வலது புறம் உள்ள கால்யிடத்தில் விருந்தினரை உறுப்பினராக்கவும், மன்றத்தில் பங்களிப்பு செய்வதற்கு தூண்டும் வகையிலும் ஏற்ற கருத்துகளையோ அல்லது அதற்கான வழிமுறைகளை சொல்லும் விதமாகவோவுள்ள வாசகங்களை இடம்பெற செய்யலாமே!


இது குறித்து மன்றத் தோழர்கள் தங்கள் மேலான கருத்துகளைத் தர பணிவோடுக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

காலியிடத்தில் மன்றமலர்களைப் பயிரிடச்சொல்லி கலையரசி அக்கா கொடுத்த ஆலோசனை நிலுவையில் இருக்கிறதே. இங்கு சென்று பார்க்கவும். (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=477418&postcount=30)

Hega
31-12-2010, 10:21 AM
நல்ல ஆலோசனையே.

கலையரசி அவர்களின் ஆலோசனையும் இன்னும் ஆலோசனையில் தான் உள்ளதா.

M.Jagadeesan
31-12-2010, 10:28 AM
காலியிடம் புறம்போக்கு நிலமல்ல நாம் பயிரிடுவதற்கு! மன்றத்துக்கு
சொந்தமானது.தீபாவளி,பொங்கல் பண்டிகையின்போது வாழ்த்து தெரி
விப்பதற்காக வைத்திருக்கிறார்கள்!

ஆதி
31-12-2010, 10:30 AM
அந்த இடம் மன்ற நந்தவனத்துக்காக பயன்படுத்தப்பட்ட இடம், நந்தவன் பூக்காமல் இருப்பதால், அந்த இடமும் வெறுமையாகவே இருக்கிறது..

நந்தவனம் மீண்டும் பூக்கா ஆரம்பிக்கும் வரை ஒவ்வொரு மன்றத்திலும், அந்தந்த மாததின் சிறந்தப்படைப்புக்களை சேர்க்கலாமா ?

Hega
31-12-2010, 10:38 AM
அந்த இடம் மன்ற நந்தவனத்துக்காக பயன்படுத்தப்பட்ட இடம், நந்தவன் பூக்காமல் இருப்பதால், அந்த இடமும் வெறுமையாகவே இருக்கிறது..

நந்தவனம் மீண்டும் பூக்கா ஆரம்பிக்கும் வரை ஒவ்வொரு மன்றத்திலும், அந்தந்த மாததின் சிறந்தப்படைப்புக்களை சேர்க்கலாமா ?


இது எப்படியாகும்.

ஒவ்வொரு மன்றத்திலும் சிறந்த படைப்பென்பது மாறாதது அல்லவோ.
சிறந்த படைப்பு இதுவென்பதற்கு அளவுகோல் என்ன
அதையும் ஒட்டெடுப்பில் விட்டா.. தெரிவீர்கள். .

கேள்வியில் தவறெனில் மன்னிக்கவும்.

ஆதி
31-12-2010, 10:40 AM
அதே அதே.. ஒவ்வொரு மாதமும், மக்களின் மனம் கவர்ந்த படைப்புக்களை பரிந்துரைக்க சொல்லி ஓட்டெடுப்பில் விட்டு, தெரிவு செய்யலாம், இது வெறும் ஆலோசனையே...

Hega
31-12-2010, 10:47 AM
அதே அதே.. ஒவ்வொரு மாதமும், மக்களின் மனம் கவர்ந்த படைப்புக்களை பரிந்துரைக்க சொல்லி ஓட்டெடுப்பில் விட்டு, தெரிவு செய்யலாம், இது வெறும் ஆலோசனையே...

இதூவும் நல்ல ஆலோசனைதான்.

படைப்புக்களை தருபவர் தம படைப்புக்கள் தரமானதாகவும், பயன் தருவதாகவும் இருக்க வேண்டுமெனும் உணர்வோடு படைத்திடும் உந்துதலுக்கு இந்த ஆலோசனை வழி அமைக்கும்.

றெனிநிமல்
31-12-2010, 01:20 PM
தலைப்பைப் பார்த்து நானும் ஓடி வந்தேன்.
காரணம் தேர்தல் காலம் என்பதால் என்பதால்
அரசியல் கட்சி எதாவது இலவசமாக காணிதுண்டு எதாவது
கொடுக்கின்றார்களோ என்று..........:lachen001::aetsch013:

அட! ஆமா முகப்பில் நிறைய பகுதி வெறுமையாகவே உள்ளதே!

அமரன்
31-12-2010, 09:13 PM
மன்றம் மீதான உங்கள் அன்பும் மன்றத்தை நீங்கள் கவனிக்கும் விதமும் மகிழ்ச்சி தருகிறது கௌதம்.

ஜெகதீசன் சொன்னது போல பண்டிகைகளுக்கான வாழ்த்துகள் அலங்கரித்த இடம்..
ஆதன் சொன்னது போல மன்ற நந்தவனம் பூத்துக் குலுங்கிய இடம்..
கலைக்காவின் ஆலோசனையினை ஏற்று வண்ண வண்ணப் பூக்கள் அணிவகுத்த இடம் (ஆலோசனை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது)..
இப்போது வெறுமையாக உள்ளது.

அந்த இடத்தை நிரப்ப ஆதன் முன் வைத்த ஆலோசனை நன்றே..

அந்த இடத்தில் கடையாக வந்த நிழல்படத்தைத் தொங்க விடுவதும் நன்றாக இருக்குமோ..

எதுவானாலும் ஒவ்வொரு மன்ற சொந்தமும் மனசு வைக்க வேண்டும்.

அந்த இடத்தில் தொங்க விடத் தோதான படத்தைத் தாருங்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
08-01-2011, 04:14 AM
மன்ற நந்தவனத்துக்காக பயன்படுத்தப்பட்ட இடம், நந்தவனம் பூக்காமல் இருப்பதால், வெறுமையாகவே இருக்கிறது..அந்த காலியிடத்தில் தினம் ஒரு குறள் அல்லது சிறந்த ஒரு பொன்மொழிகள் பதிவிடலாம் மேலும் வாழ்த்துகள் நம் மன்ற நண்பர்களுக்கு கூறலாம்.. நந்தவனத்தில் பயிர் செய்யும் போது அதனை மாற்றி கொள்ளலாம் ....

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

Hega
14-01-2011, 11:22 AM
காலியிடம் கலக்கலாய் ஜொலிக்கிறதே..

பொங்கல் வாழ்த்தோடு அழகு தருகிறது.

முயற்சித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்

கௌதமன்
14-01-2011, 01:30 PM
நாற்று நடமாலேயே பூங்காவனம் பூத்துக் குலுங்குகிறது!
நந்தவனத்தில் பதியமிட்ட நண்பருக்கு பாராட்டுகள்!

ஜானகி
14-01-2011, 01:54 PM
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நிரூபணமாகிவிட்டது ! அருமை ! கன்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது.

அமரன்
23-01-2011, 09:01 PM
அந்த இடம் நெஞ்சங்களை நிறைக்கும் இடமாக என்றும் இருக்க உழைப்போம் நண்பர்களே!

ஜானகி
29-01-2011, 01:19 AM
கவிதைப் போட்டியில் வென்ற கவிதை வரிகளை காலியிடத்தில் பதிக்கலாமே...

நாஞ்சில் த.க.ஜெய்
30-01-2011, 01:17 PM
கவிதை வரிகளின் நீளத்தை பார்க்கும் போது இது சாத்தியமாகும் என்று தெரியவில்லை ஒரு வேளை இது சாத்தியமானால் இடைவெளிவிட்டு பரிசுபெற்ற ஒவ்வொரு கவிதைகளினை பதிவிடலாம்