PDA

View Full Version : தமிழ் பூசை மொழி இல்லையா?



கௌதமன்
31-12-2010, 05:10 AM
கல்லாயிருப்பதன் முன்னே எந்தமிழை
சொல்லாதிருப்பதே நன்று - எம் தோழர்
கல்லாதிருக்கும்படி சொன்ன வடமொழியே கேள்!
நல்லார் பயின்மொழி எம்மொழி-அதை
தள்ளார் அதன் சுவை அறிவார் - அதை பழிக்க
உள்ளார் இவரென அறிந்தால் - எதிர்க்க தமிழர்
எல்லாருமே வருவார்! பலம் தருவார்

CEN Mark
17-01-2011, 04:03 PM
கல்லாயிருப்பதன் முன்னே எந்தமிழை
சொல்லாதிருப்பதே நன்று - எம் தோழர்
கல்லாதிருக்கும்படி சொன்ன வடமொழியே கேள்!
நல்லார் பயின்மொழி எம்மொழி-அதை
தள்ளார் அதன் சுவை அறிவார் - அதை பழிக்க
உள்ளார் இவரென அறிந்தால் - எதிர்க்க தமிழர்
எல்லாருமே வருவார்! பலம் தருவார்

தமிழ் மன்றத்தில் இந்த வரிகளுக்கு எதிர் கருத்துகளை முன் வைக்காதது ஆச்சரியம் தருகிறது. அல்லது ஆதரவு தராமல் இருப்பது அதிசயமாய் இருக்கிறது. ஒருவேளை ஏற்கனவே இது வேறு வட்டத்தில் கல்லெறிந்த பிற்பாடு தனியாக அரங்கேறிய கவியா?

கௌதமன்
17-01-2011, 04:13 PM
தமிழ் மன்றத்தில் இந்த வரிகளுக்கு எதிர் கருத்துகளை முன் வைக்காதது ஆச்சரியம் தருகிறது. அல்லது ஆதரவு தராமல் இருப்பது அதிசயமாய் இருக்கிறது. ஒருவேளை ஏற்கனவே இது வேறு வட்டத்தில் கல்லெறிந்த பிற்பாடு தனியாக அரங்கேறிய கவியா?

நம் தமிழ் மன்றத்தில் இதற்கு எதிர் கருத்தை நிச்சயம் எதிர்பார்க்க மாட்டேன். வேறுத் திரியில் பின்னூட்டமாகப் பதித்தது தான் இது. நண்பர் ஜெகதீசன் இந்தப் பின்னூட்டத்துக்குக் காரணமான நண்பர் நாகராவின் கவிதையைக் கண்டு வெகுண்டு தனித்திரியில் எழுதினார். ஆனாலும் இந்தப் பின்னூட்டக் கவிதைக்கு ஆதரவு கிட்டாததால் தனித்திரிக் கொளுத்தினேன். இங்கேயும் இக்கவிதை அனாதையாக நிற்கிறது. [நாம் மட்டும் எல்லாத் திரியையும் படித்துப் பின்னூட்டக் கருத்துகளைப் பதித்தோமா என்ன?] உங்கள் தயவால் முகப்பில் மேலெழுந்து நிற்கிறது. நன்றி!

பாலகன்
17-01-2011, 04:36 PM
இதன் பொருள் விளங்க என்னை போன்ற ஞானசூன்யத்திற்கு வெகுநேரம் எடுக்கிறது கெளதமரே! கொஞ்சம் விளக்கினால் எம் பலம் தெரியும்படி உரைப்பேன்

கௌதமன்
17-01-2011, 04:45 PM
தமிழ் பூச மொழியல்லவென்றும், கடவுள் முன் அதை உரைக்கவாகாதென்றும் கூறியதன் மறுமொழியே இக்கவி.

கல்லாயிருப்பது எது (கடவுள் என்னும் கற்சிலை). அத்தகு கற்சிலையின் முன் உயிருள்ள எங்கள் தமிழை சொல்லாதிருப்பதுதானே நன்று. வருணக் கொள்கையைப் புகுத்திய வடமொழி என் தமிழ் சகோதரர்களுக்கு கல்வியை மறுத்தது. ஆனால் நல்லவர்கள் அனைவரும் பயிலும் மொழி எங்கள் தமிழ்மொழி. அதனைக் கற்று அதன் சுவையை அறிந்தவர்கள் அதனை வெறுப்பார்களா? அந்தத்தமிழ் மொழியை பழிப்பதற்கு யாரேனும் வந்தால் , தடுப்பதற்கு வரமாட்டார்களா ? தடுப்பதற்கான பலத்தைத் தரமாட்டார்களா?

பாலகன்
17-01-2011, 04:51 PM
தமிழ் பூச மொழியல்லவென்றும், கடவுள் முன் அதை உரைக்கவாகாதென்றும் கூறியதன் மறுமொழியே இக்கவி.

கல்லாயிருப்பது எது (கடவுள் என்னும் கற்சிலை). அத்தகு கற்சிலையின் முன் உயிருள்ள எங்கள் தமிழை சொல்லாதிருப்பதுதானே நன்று.

எந்த மொழியில் பூசை செய்தாலும் கடவுளின் காதுகளில் விழப்போவது இல்லை என்பது தான் உண்மை. கடவுளை ஒருசிலர் படைத்ததுபோல பேசுவது அபத்தம். நம் தமிழ்மொழிக்கு அங்கென்ன வேலை!

இப்போ நன்கு புரிகிறது கெளதமரே! சிறந்த படைப்பிற்கு பாராட்டுக்கள்

M.Jagadeesan
17-01-2011, 05:10 PM
கடவுள் உண்டு என்று வாதிப்போரும், இல்லை என்று சாதிப்போரும்
எக்காலத்தும் உண்டு என்று ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் சொன்னார்
கள். நாத்திகவாதம் நமக்கு எதற்கு? இறைவனுடைய ஒரு காதில் வட
மொழியும்,மற்றொரு காதில் தமிழ் மொழியும் விழட்டுமே!

leomohan
18-01-2011, 12:42 PM
கல்லாயிருப்பதன் முன்னே எந்தமிழை
சொல்லாதிருப்பதே நன்று - எம் தோழர்
கல்லாதிருக்கும்படி சொன்ன வடமொழியே கேள்!
நல்லார் பயின்மொழி எம்மொழி-அதை
தள்ளார் அதன் சுவை அறிவார் - அதை பழிக்க
உள்ளார் இவரென அறிந்தால் - எதிர்க்க தமிழர்
எல்லாருமே வருவார்! பலம் தருவார்

நச்சென்று ஒரு கவிதை. நன்றி நண்பரே.

சிவா.ஜி
18-01-2011, 01:50 PM
தமிழ்மொழி ஆற்றிய, ஆற்றுகின்ற, ஆற்றவேண்டிய அரும்பணிகள் பல. ஏனிந்த வீண் பூசை வேலை. வடமொழியோ வடமேற்கு மொழியோ...எதுவோ மணியடித்துக்கொள்ளட்டும்.

வாழ்த்துக்கள் கௌதமன்.

ஆளுங்க
18-01-2011, 04:35 PM
ஆகா....