PDA

View Full Version : பெண் செல்லமே! இந்த மண்ணின் செல்வமே



vasanth30
30-12-2010, 08:17 PM
என் செல்லமே! எங்கள் செல்வமே!

பட்டு செல்லமே- என்
சிட்டு செல்லமே!
என்னை மெட்டெடுத்து பட வைத்த
குட்டி செல்லமே!

குட்டி செல்லமே- என்
குழந்தை செல்வமே!
என் குறைகள் யாவும் தீர்த்து வைக்க
குதித்த செல்லமே! மேலிருந்து
உதித்த செல்லமே!

அழகு செல்லமே- என்
அன்பு செல்வமே!
எங்கள் இருவருக்கும் கடவுள் தந்த
கருணை செல்வமே!

அம்மு செல்லமே-என்
அறிவு செல்வமே!
அழகே உருவான எங்கள்
ஆசி செல்லமே!

பெண் செல்லமே! இந்த மண்ணின் செல்வமே

றெனிநிமல்
30-12-2010, 08:26 PM
எந்தப் பிள்ளை பிறந்தாலும் அது எங்கள் பிள்ளை என்று எண்ணி
வளர்க்கும் மனப்பான்மை எலோரிடமும் வேண்டும்.

கள்ளிச்செடிகள் அழிக்கப் பட்டு
வெண்பஞ்சு கூட்டங்களாக
பிள்ளைகள் படிக்கும்
பள்ளிக்கூடங்கள் துளிர்க வேண்டும்.

அமரன்
30-12-2010, 08:40 PM
வருக வசந்த்!

முல்லை மன்றத்தில் உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

சிறு பருவத்தில் பால் வேறுபாடு சட்டெனத் தெரிவதில்லை..

இரு பாலும் ஒரு பெறுமதியே.. வாழ்வின் வெகுமதியே எனச் சொல்லாமல் சொல்லும் இயற்கையின் வரம் அது.

பெண்சிசுக் கொலையின் வீச்சு பெண்பிள்ளைகளை உயர்த்திப் பாட வைக்கிறது என்றாலும் பெண்பிள்ளைகள் இருக்கும் வீட்டின் அழகு தனிதான்.. அந்த அழகு உங்கள் கவிதையில் மின்னுகிறது.

பாராட்டுகள்.