PDA

View Full Version : தலைப்பற்ற கவிதை



ஆதி
30-12-2010, 10:23 AM
மறைந்து மறைந்து மறைந்து போனாய்
மிக மிக மிக அருகிலும்
மிக மிக மிக தொலைவிலும்

மிகைகளால் மீதங்களால் நிரம்பிக் கிடந்தாய்
மிகைகளால் மீதங்களால் நிரம்ப நிறைந்தாய்
நிறைந்தாய் நிறைந்தாய் நிறைந்தாய்
இரைந்தாய் இரைந்தாய் இரைந்தாய்
இரைந்து இரைந்து இரைந்து போன வழியில்
இரந்து இறந்து இரைந்திருந்தாய்

சுரந்தாய் கரந்தாய் கரைந்தாய்
கரைந்து கரைந்து உறைந்தாய்
உறைந்து உறைந்து கரைந்தாய்
உயர்வாய் மிதந்தாய்
மிதந்து மிதந்து மிகைந்தாய்
மிகைந்து மிகைந்து குறைந்தாய்
மறைந்தாய்
மறைந்து மறைந்து மறைந்து போனாய்
மிக மிக மிக அருகிலும்
மிக மிக மிக தொலைவிலும்

பாலகன்
30-12-2010, 10:35 AM
எப்படியோ கைக்கு சிக்கல :D
ஒரு கண்ணாம்பூச்சி ஆட்டம் போல இருந்தது.
தலைப்பு இல்லாத கவிதை மிகவும் அருமை

பாராட்டுக்கள்.

நாகரா
30-12-2010, 11:47 AM
மறைந்து மறைந்து மறைந்து போனாய்
மிக மிக மிக அருகிலும்
மிக மிக மிக தொலைவிலும்

மிகைகளால் மீதங்களால் நிரம்பிக் கிடந்தாய்
மிகைகளால் மீதங்களால் நிரம்ப நிறைந்தாய்
நிறைந்தாய் நிறைந்தாய் நிறைந்தாய்
இறைந்தாய் இறைந்தாய் இறைந்தாய்
இறைந்து இறைந்து இறைந்து போன வழியில்
இரந்து இறந்து இறைந்திருந்தாய்

சுரந்தாய் கரந்தாய் கரைந்தாய்
கரைந்து கரைந்து உறைந்தாய்
உறைந்து உறைந்து கரைந்தாய்
உயர்வாய் மிதந்தாய்
மிதந்து மிதந்து மிகைந்தாய்
மிகைந்து மிகைந்து குறைந்தாய்
மறைந்தாய்
மறைந்து மறைந்து மறைந்து போனாய்
மிக மிக மிக அருகிலும்
மிக மிக மிக தொலைவிலும்
பூரணமாய்க் காலியாகி
மிக மிக அருகில் நெஞ்சகம் மறைந்தாய்
மிக மிகத் தொலைவில் விண்ணகம் மறைந்தாய்

பூரணமாய்க் காலியாய் இருந்தாய்
காலி பூரணமாய்க் காலியாக நிறைந்தாய்
நிறைந்த பூரணங் காலியாக இறைந்தாய்
பூரணமாய்க் காலியாகி நிறையவே இரந்தாய்
நிறைந்து நிறைந்து காலி பாகம் இறந்து(கடந்து) இறைந்திருந்தாய்

என்மெய் கரந்தாய் என்னில் கரைந்தாய்
என்னில் கரைந்து கரைந்து கற்பூரமாய் உறைந்தாய்
உறைந்து உறைந்து கற்பூரம் மணக்கக் கரைந்தாய்
வாசம் மிக உயர்வாய் மிதந்தாய்
மிதந்து மிதந்து காலியாய் மிகைத்தாய்
காலியாய் மிகைத்து மிகைத்து
பூரணமாய்க் காலியானாய்

பூரணமாய்க் காலியாகி
மிக மிக அருகில் நெஞ்சகம் மறைந்தாய்
மிக மிகத் தொலைவில் விண்ணகம் மறைந்தாய்

தலை சுற்ற வைத்துத் தலை பற்ற வைத்தத் தலைப்பற்றக் கவிதைக்கு வாழ்த்துக்கள் ஆதி

கீதம்
31-12-2010, 06:51 AM
ஐயாவின் பார்வையில் பற்றியெரிவது ஆன்மீகப்பற்று. அட, எனக்கும் ஆதனின் தலைப்பற்றக் கவிதை எதையோ பற்றவைக்கிறதே தலைக்குள்! அதிசயம்தான்!

கவிதை எதைப்பற்றியது? எதையும் பற்றக்கூடாது என்பதே கவியின் ஏகபோகவிருப்பமெனில் எனக்குள் பற்றியதை எடுத்தியம்பலாமா? கூடாதா?

கவிதையா? காதலா? காமமா? கடவுளா? பிரபஞ்சமா? பிள்ளைமனமா? பிரிவுத் துயரா?

எதையோப் பற்றியிருக்கவேண்டும். எதைப்பற்றி நினைத்தாலும் அதைப்பற்றியே அகம் பற்றுகிறது.

உடனைடித் தேவை ஒரு நுண்ணோக்கியும் ஒரு தொலைநோக்கியும்!

அருகிலும் இருந்தும் அறியமுடியாமலும், தொலைவில் இருந்தும் தெளிவான பார்வைக்கு அகப்படாமலும் ஆட்டம் காட்டும் அரும்பொருட்கவிதைக்கு என் அகம் நிறைந்த பாராட்டுகள்.

CEN Mark
31-12-2010, 07:58 AM
[QUOTE=ஆதன்;507280]


தலைப்பு இல்லாவிட்டால் என்ன? தலைக்குள் உள்ளேயுள்ள விதையை உணரமுடிகிறது.
வருவாய் வருவாய் வருவாய்,
நிறைய புதினக் கவி
தருவாய் தருவாய் தருவாய்

Hega
31-12-2010, 08:36 AM
தலைப்பில்லா கவிதை
தத்துவமழையால் எம்
தலையுள் புகுந்து
தவிப்பை கொடுக்கிறது ஆதன்..

ஆழ்ந்து படித்தால் ஒவ்வொரு சொல்லுக்கும் பல அர்த்தம் தொனிப்பதை உணரமுடிகிறது. நன்றி.

கௌதமன்
31-12-2010, 08:44 AM
உண்மையைச் சொல்வதில் வெட்கமில்லை!

உள்ளர்த்தம் புரியவில்லை!!

பாம்பின் வாலைப் பாம்பேத் தின்னத் தொடங்கினால்

இறுதியில் கிடைக்கும் சூனியமா?

இப்பிரபஞ்ச விரிவின் உள்ளே ஒளிந்திருக்கும் பெருங்குழியா?

பெருங்குழிக்குள் காத்திருக்கும் இன்னொரு வெடிப்பா?

நவீன ஓவியம் போல்

பார்வையாளனின் மனவோட்டத்திற்கேற்ப

வேறு வேறு பொருள் தருமா? தெரியவில்லை

இது கவிதையின் குற்றமல்ல!

நான் இன்னமும் பக்குவப்படவில்லை என்றே நினைக்கிறேன்!

கவிதை பழகியபின் மீண்டும் படித்துப் பார்க்கிறேன்

அதுவரைக்கும்......

நன்றி!

ஜானகி
31-12-2010, 08:46 AM
புரிகிறது.....ஆனால் புரியலை....?

தெரிகிறது....ஆனால் தெரியலை....?

இதுதான் மாயையோ...?

ஆதி
03-01-2011, 02:52 PM
பின்னூட்டிய ஒவ்வொருத்தருக்கும் உளமார்ந்த நன்றிகள்..

கௌதம் அவர்கள் கேட்டது போல், இது நவீன ஓவியம் போல ஒன்றுதான்..

வார்த்தைகளை இருன்மையாக்கி அதனுள் அர்த்தங்களை புதைத்து வைத்து வாசிப்பவரை அர்த்தம் தெரியாமல் முழிக்க வைக்கிற ஒரு பாசிச மனப்பான்மை கொண்ட கவிதையல்ல இது..


இந்த கவிதைக்குள் ஒரு வெளி இருக்கிறது, கவிதையை வாசிப்பவர் எந்த திசையில்/எதுவரை நடக்கிறாரோ அந்த திசையில் அதுவரை அந்த வெளி விரிவடைகிறது, இது அதிமேதாவித்தனமான பதிலாக எண்ண வேண்டாம்..

கவிதை புரிவதும், புரிய மெனக்கெடுவதும், புரியாமல் போவதும் ஒரு அனுபவமே, அதுப்போல் அவரவரின் எண்ணத்திற்கு ஏற்ப இந்த கவிதை தனக்கான வெளியை விரித்துக் கொள்கிறது, தீர்க்கமாய் சொல்ல வேண்டுமென்றால் இந்த கவிதைக்குள் இருப்பதாக நான் சொல்லும் வெளி ஒரு மாயை, உண்மையில் அந்த வெளி கவிதைக்குள் இல்லை, அது வாசப்பவரின் உள்ளத்தில் இருக்கிறது, வாசிப்பார்கள் இந்த கவிதைக்கு எண்ண அர்த்தம் சொல்கிறார்களோ அந்த அர்த்தமே இந்த கவிதைக்கு..

பரிணாம வளர்ச்சி, பெரு வெடிப்புக் கொள்கை, பிறப்பு முதல் இறப்பு, ஆன்மிகம், அப்பறம் கீதமக்கா சொன்ன பொருள், படைப்பிலக்கியம், வானம், மேகம், காற்று, கடல், நதி, மனம், கடவுள், சூன்யம் என்று எல்லா தளத்தையும் எட்டிப்பார்த்து வரும்...

இந்த கவிதை தனக்குள் எல்லாவற்றையும் இருத்தி வைத்திருறது, இந்த கவிதை தனக்குள் எதையும் இருத்தி வைக்கவில்லை..

கௌதமன்
03-01-2011, 02:58 PM
கௌதம் அவர்கள் கேட்டது போல், இது நவீன ஓவியம் போல ஒன்றுதான்..
இந்த கவிதைக்குள் இருப்பதாக நான் சொல்லும் வெளி ஒரு மாயை, உண்மையில் அந்த வெளி கவிதைக்குள் இல்லை, அது வாசப்பவரின் உள்ளத்தில் இருக்கிறது, வாசிப்பார்கள் இந்த கவிதைக்கு எண்ண அர்த்தம் சொல்கிறார்களோ அந்த அர்த்தமே இந்த கவிதைக்கு..

ஒருவேளை எனக்கு கவிதை பழக்கமாக ஆரம்பித்து விட்டதோ?

நன்றி ஆதன்!