PDA

View Full Version : இரண்டும் நான்கும்



M.Jagadeesan
30-12-2010, 09:08 AM
காலையில் படுக்கையை விட்டு எழுந்தேன். கண்களைத் திறந்து பார்த்தேன். என்ன
ஆயிற்று எனக்கு? அறையிலுள்ள பொருட்களெல்லாம் திடீரென்று சுழல ஆரம்பித்
தது. அறையின் சுவர், கூரையெல்லாம் சுழல ஆரம்பித்தன. கண்களைக் கசக்கிக்
கொண்டு மீண்டும் பார்த்தேன். மறுபடியும் எல்லாமே சுழன்றன. தலை லேசாக
வலித்தது. மீண்டும் படுக்கையில் படுத்தேன். அப்படியே தூங்கிப் போய்விட்டேன்.

ஒருமணி நேரம் சென்றிருக்கும். மீண்டும் கண்களை திறந்து பார்த்தேன். என்ன அதி
சயம்! அறையிலுள்ள பொருட்கள் எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிந்தன. மனைவி கொண்டு வந்து வைத்த காபி டம்ளர் இரண்டாகத் தெரிந்தது. என்னுடைய
கையில் ஐந்து விரல்களுக்குப் பதிலாகப் பத்து விரல்கள் தெரிந்தன. பயந்துபோய்
கண்ணாடியைப் பார்த்தேன்.அங்கே இரண்டு உருவங்கள் தெரிந்தன. ஆகா! நமக்கு
ஏதோ ஆகிவிட்டது! முதலில் கண் டாக்டரைப் பார்க்கவேண்டும் என்று வெளியில்
ஓடினேன். வெளியில் பார்த்த காட்சிகள், மனிதர்கள் எல்லாமே இரண்டு இரண்டாகத்
தெரிந்தன.டாக்டரிடம் செல்ல பேருந்துக்காகக் காத்து நின்றேன். பேருந்து வந்தது.
ஆனால் அது இரண்டு பேருந்துகளாக என் கண்ணுக்குத் தெரிந்தது.எப்படியோ தட்டுத்
தடுமாறி பேருந்தில் ஏறி டாக்டரிடம் சென்றேன்.

டாக்டரைப் பார்த்தேன்.

"உங்களுக்கு என்ன பிரச்சினை?

"டாக்டர்! என் கண்களுக்கு எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாகத் தெரிகின்றன.
ஓரே குழப்பமாக இருக்கிறது!"

"எத்தனை நாட்களாக இப்படி இருக்கிறது?"

"இன்று காலையில் இருந்துதான் இப்படி இருக்கிறது. என் அறையிலுள்ள பொருட்கள்
எல்லாம் இரண்டு இரண்டாகத் தெரிகின்றன. என் மகனைப் பார்த்தால் இரண்டு
உருவங்களாகத் தெரிகின்றான். என் மகளைப் பார்த்தால் இரண்டு உருவங்களாகத்
தெரிகின்றாள்.என் மனைவியைப் பார்த்தாலும் இரண்டு உருவங்களாகத் தெரிகின்றாள்
அதுதான் பயமாக உள்ளது!அவ்வளவு ஏன்? இப்போது உங்களைப் பார்த்தால் கூட
இரண்டு டாக்டர்களாக என் கண்களுக்குத் தெரிகிறீர்கள்! எப்படியாவது நீங்கள்தான்
என் கண்களைக் காப்பாற்றவேண்டும்"

உடனே டாக்டர்,அஹ்,அஹ் அஹா! எனப் பலமாகச் சிரித்துவிட்டு ,"இதுதான் உங்கள்
பிரச்சினையா? கவலைப்படாதீர்கள், இதை எளிதில் சரி செய்துவிடலாம். ஆனால்
எனக்கு ஒரு சந்தேகம்!"

"என்ன சந்தேகம் டாக்டர்?"
"இதைச்சொல்ல நீங்கள் ஒருவர் மட்டும் வந்தால் போதுமே! ஏன் நான்கு பேர் வந்து
இருக்கிறீர்கள்?"

" நான்கு பேரா?" என்று சொல்லி மூர்ச்சையானேன்.

கீதம்
30-12-2010, 09:32 AM
இந்த நகைச்சுவையை முன்பே கேட்டிருந்தாலும் மீண்டும் படிக்க சுவை குறையாமல் இருந்தது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

இதேபோல் இன்னுமொரு நகைச்சுவை.
கண்மருத்துவரிடம் சென்ற ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர், அவரைப் படுக்கவைத்து கண்ணில் மருந்து ஊற்றிவிட்டுக் கேட்டாராம்

"இப்ப எப்படி இருக்கு? எரியுதா? சில்லுனு இருக்கா?"

நோயாளியின் பதில்: "புளிப்பா இருக்கு டாக்டர்!"

கண்மருத்துவர் என்றாலே உடனடியாக என் நினைவுக்கு வரும் நகைச்சுவை இது.

M.Jagadeesan
30-12-2010, 09:48 AM
இந்த நகைச்சுவையை முன்பே கேட்டிருந்தாலும் மீண்டும் படிக்க சுவை குறையாமல் இருந்தது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

இதேபோல் இன்னுமொரு நகைச்சுவை.
கண்மருத்துவரிடம் சென்ற ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர், அவரைப் படுக்கவைத்து கண்ணில் மருந்து ஊற்றிவிட்டுக் கேட்டாராம்

"இப்ப எப்படி இருக்கு? எரியுதா? சில்லுனு இருக்கா?"

நோயாளியின் பதில்: "புளிப்பா இருக்கு டாக்டர்!"

கண்மருத்துவர் என்றாலே உடனடியாக என் நினைவுக்கு வரும் நகைச்சுவை இது.

நான் கொடுத்த நகைச்சுவையைவிட தாங்கள் கொடுத்த நகைச்சுவை வெகுஜோர்!

பாலகன்
30-12-2010, 10:52 AM
எல்லாம் இரண்டாக தெரிகிறதா? படுகாமெடி. இரண்டு மனைவிகளை வச்சிக்கிட்டு எப்படி சமாளிக்கபோறீங்களோ :lachen001:

பகிர்வுக்கு நன்றி

M.Jagadeesan
30-12-2010, 11:06 AM
எல்லாம் இரண்டாக தெரிகிறதா? படுகாமெடி. இரண்டு மனைவிகளை வச்சிக்கிட்டு எப்படி சமாளிக்கபோறீங்களோ :lachen001:

பகிர்வுக்கு நன்றி

டாக்டருக்கு என்பாடு எவ்வளவோ தேவலை. டாக்டர் நான்கு மனைவிகளை
சமாளிக்க வேண்டுமே!

ஜனகன்
30-12-2010, 11:09 AM
உங்கள் கற்பனை அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

பாராட்டக் கூடிய நகைச்சுவை வாழ்த்துக்கள்.

பாலகன்
30-12-2010, 11:46 AM
டாக்டருக்கு என்பாடு எவ்வளவோ தேவலை. டாக்டர் நான்கு மனைவிகளை
சமாளிக்க வேண்டுமே!

இது டபுள் காமெடி :mini023: