PDA

View Full Version : நாங்கள்...வாலிபர்கள்....



பிரேம்
30-12-2010, 12:10 AM
நகரத்தின் மத்தியில் நடந்தேறா
நலத்திட்டங்கள் நாங்கள்..
இன்னும் முடியாமலும்
முடியும் தருவாயிலும் உள்ளோம்..

எங்களை உதவாக்கரைகலென்று
கொல்பவர் சிலபேர்..
உருப்பிட வழிபாரென்று
சொல்பவர் சிலபேர்..

எந்நாளும் ஒரே இடத்தில் நிற்க
எங்கள் வயது ஏற்கவில்லை...
ஏணிகள் பலகண்டும்
ஏறாமல் திகைத்து நிற்கிறோம்..

வற்புறுத்தி வாயில் வைக்கும்
சிகரெட் தாங்கி நிற்கும் நண்பனின் நட்பை..
உதறித்தள்ள மனமின்றி
உயிரோடு ஒட்டி கொண்ட ஓர் உறவு அது..

ஏக்கங்கள் பல இருந்தாலும்
எங்கள் மனதில் சோகமில்லை..
தாகங்கள் பல இருப்பினும்
தள்ளாடாமல் இருப்போம் நாங்கள்..

ஏறி தாண்டி எகிறி குதித்து
எரியும் சூரியனை
எட்டிபிடிப்போம்ல...
தட்டி தவறி விழுந்தாலும்
டார்கெட் மிஸ் ஆனதில்ல..

உண்மையில் ஒருகாரியம் முடிக்க
உங்களுக்கு ஒரு நாள் என்றால்..
ஒரு நிமிடம் மட்டுமே போதும்
எங்களுக்கு..

விர்ரென்று சீரும்
இள ரத்தம் கொண்டது எங்கள் தேகம்..
விறுவிறுக்கும் பைக்கின் டாப் கியர் சொல்லும்
எங்களின் வேகம்..

அறிவுரை அள்ளி வீசும் பெரியோர்..
அப்பப்போ ஆறுதல் தரும் அம்மா..
தேடிப்பார்த்து கண்ணடிக்கும் தேவதைகள்..
கோபமாய் பார்க்கும் தேவதைகளின் தந்தைகள்..

வயது மனது எனும்
இருபக்க கூர்மையாய் இருக்கும்
இளமைக் கத்தியின் மேல்
இலாவகமாக பயணிக்கும்
நாங்கள்...வாலிபர்கள்....

ஜானகி
30-12-2010, 01:05 AM
இளைய தலைமுறையின் இதயத்தைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
சபாஷ் !
கத்திமேல் நடக்கும் உங்கள் வாழ்க்கை சீராக அமைய வாழ்த்துக்கள் !

KAMAKSHE
30-12-2010, 01:54 AM
நல்லா இருக்குங்க பிரேம்.

’அறிவுறை அள்ளி வீசும் பெரியோர் ‘ - இது எனக்குப் பிடித்த வரி

பிரேம்
30-12-2010, 07:29 AM
நன்றி ஜானகி மேடம்/காமாக்ஷி..

பாலகன்
30-12-2010, 07:37 AM
வற்புறுத்தி வாயில் வைக்கும்
சிகரெட் தாங்கி நிற்கும் நண்பனின் நட்பை..
உதறித்தள்ள மனமின்றி
உயிரோடு ஒட்டி கொண்ட ஓர் உறவு அது..

வாயில் சிகரெட் வைத்து உங்களை பிடிக்கசொல்பவன் உங்கள் நண்பன் இல்லை எமன். :D

கவிதை என்று சொல்லிவிட்டு அதில் ஆங்கில வார்த்தைகள் வரலாகாது நண்பா

பாராட்டுக்கள்

பிரேம்
03-01-2011, 12:35 AM
வாயில் சிகரெட் வைத்து உங்களை பிடிக்கசொல்பவன் உங்கள் நண்பன் இல்லை எமன். :D

கவிதை என்று சொல்லிவிட்டு அதில் ஆங்கில வார்த்தைகள் வரலாகாது நண்பா

பாராட்டுக்கள்

சரி தல...அடுத்த முறை திருத்தி கொள்கிறேன்..
பி.கு:... நான் தம் அடிக்க மாட்டேன்..அது சும்மா ஒரு ஃப்லொவ்ல எழுதினது..
நன்றி..

அமரன்
05-01-2011, 06:16 PM
ஆங்காங்கே
சுழலும் சொல்விசிறிகளில்
கம்பீரமாகப் பறக்கிறது
வாலிபத்தேசக்கொடி.

பாராட்டுகள் பிரேம்.

Hega
05-01-2011, 06:38 PM
வாயில் சிகரெட் வைத்து உங்களை பிடிக்கசொல்பவன் உங்கள் நண்பன் இல்லை எமன். :D

கவிதை என்று சொல்லிவிட்டு அதில் ஆங்கில வார்த்தைகள் வரலாகாது நண்பா

பாராட்டுக்கள்


மனதில் உணர்ந்ததை பட்டென சொன்ன உங்கள் தைரியத்துக்காக :icon_b:

Hega
05-01-2011, 06:49 PM
காவோலை விழ
குருத்தோலை சிரிக்குமாபோல்
பெரியோர் அறிவுரை
இன்று கசக்கலாம்..
அவர் வழியே நீவீர்
பெரியோராய் ஆகிடும்
நாளில் உணர்வீர்
வாலிபம் என்பது
வாழ்வில் எல்லோருக்கும்
உண்டென்பதை..

அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாது
அம்மாவுக்கு சொன்னால் புரியாது
என்று சொல்லிவாழுகினற வாலிபரே
மோசம் போகபோறீர்
இவ்வுலகத்தை நீர் நம்பி

மின்னுவதெல்லம் பொன்னென்று நம்பி
வீட்டினில் சொல்லும் அறிவுரை த்னை
அறியா உரையாக்கி
எனக்கெல்லம் தெரியும்
மூலையில் நீ
உட்கார்ந்துக்கோவென
கேலிபேசும் வாலிபர்களே.

ஓடும் பாம்பை பிடிக்கும் வயதில்
எரியும் நெருப்பைசுடுமேயென
யறியாமையால் பிடித்ததை
நீர் உணரும் நாளில்
நீர் இழந்தது உன்
வாலிபமாயிருக்குமென்பதை
முதலில் உணர்வீரோ...

சாரி பிரேம் அவர்களே.. தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் கவிதை கண்டு என்மனதில் தோன்றியது இது..

யாரையும் சுட்டிகாட்டியோ புண்படுத்தியோ அல்ல..

வாலிபர் வாழ்வை அப்படியே கண்முன்னல கொண்டு வந்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

பிரேம்
07-01-2011, 11:39 AM
இல்லேண்ணே..தப்பா எல்லாம் நினைக்கமாட்டேன்..விமர்சனத்துக்கு நன்றி..

ஜானகி
07-01-2011, 01:35 PM
காவோலை விழ
குருத்தோலை சிரிக்குமாபோல்
பெரியோர் அறிவுரை
இன்று கசக்கலாம்..
அவர் வழியே நீவீர்
பெரியோராய் ஆகிடும்
நாளில் உணர்வீர்
வாலிபம் என்பது
வாழ்வில் எல்லோருக்கும்
உண்டென்பதை..

அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாது
அம்மாவுக்கு சொன்னால் புரியாது
என்று சொல்லிவாழுகினற வாலிபரே
மோசம் போகபோறீர்
இவ்வுலகத்தை நீர் நம்பி

மின்னுவதெல்லம் பொன்னென்று நம்பி
வீட்டினில் சொல்லும் அறிவுரை த்னை
அறியா உரையாக்கி
எனக்கெல்லம் தெரியும்
மூலையில் நீ
உட்கார்ந்துக்கோவென
கேலிபேசும் வாலிபர்களே.

ஓடும் பாம்பை பிடிக்கும் வயதில்
எரியும் நெருப்பைசுடுமேயென
யறியாமையால் பிடித்ததை
நீர் உணரும் நாளில்
நீர் இழந்தது உன்
வாலிபமாயிருக்குமென்பதை
முதலில் உணர்வீரோ...

சாரி பிரேம் அவர்களே.. தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் கவிதை கண்டு என்மனதில் தோன்றியது இது..

யாரையும் சுட்டிகாட்டியோ புண்படுத்தியோ அல்ல..

வாலிபர் வாழ்வை அப்படியே கண்முன்னல கொண்டு வந்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.



இதைத்தான் நானும், கத்திமேல் வாழ்வு என்று குறிப்பிட்டேன்.

Hega
07-01-2011, 02:53 PM
நன்றி பிரேம்,

நன்றி ஜானகி அக்கா