PDA

View Full Version : தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி



ஸ்ரீதர்
29-12-2010, 10:50 AM
தென்னாப்ரிக்காவில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியை இந்தியா வென்று தொடரை சமன் செய்துள்ளது.

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

பிரேம்
29-12-2010, 12:00 PM
ஜெயச்சுட்டோம்ல..

ஓவியன்
01-01-2011, 04:51 AM
ஷஹீர், ஷஹீர், ஷஹீர்...!!!

இந்த வார்த்தைதான் இந்த வெற்றிக்கான மூலதனம்..! !! :)

அமரன்
01-01-2011, 07:07 AM
லக்ஸும் மணந்துச்சே அந்தப் போட்டியில்.

ஓவியன்
01-01-2011, 02:53 PM
லக்ஸும் மணந்துச்சே அந்தப் போட்டியில்.

உண்மைதான், ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விடயம் முதலாவது போட்டியில் ஷஹீர் விளையாடவில்லை, அந்த போட்டியில் இந்திய அணியினால் தென்னாபிரிக்க அணியினரின் ஓட்டக் குவிப்பினைத் தடுக்க முடியவில்லை. இரண்டாவது போட்டியில் ஷஹீர் வீழ்த்திய விரைவு விக்கெட்டுக்களுடன் ஸ்ரீசாந்தும் ஹர்பஜனும் உசாரடைந்ததன் விளைவுதான் இரண்டாவது போட்டியின் வெற்றி....

தென்னாபிரிக்க அணியினரின் முதலாவது இன்னிங்ஸின் பதினொராவது பந்து பரிமாற்றத்துள் தென்னாபிரிக்க அணியினரின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பியிருந்தார் ஷஹீர்....

இந்த போட்டியில் லக்ஸ்மன் நன்றாக விளையாடியிருந்தாலும்,பந்து வீச்சாளர்களால் கிடைத்த வெற்றி இதுவென நான் கருதுகிறேன்...

aren
01-01-2011, 03:14 PM
ஆனால் இந்தியா எப்பொழுதும் முதல் டெஸ்டில் சொதப்புகிறதே. அதை எப்படி தடுத்து நிறுத்துவது.

ஓவியன்
01-01-2011, 03:16 PM
ஆனால் இந்தியா எப்பொழுதும் முதல் டெஸ்டில் சொதப்புகிறதே. அதை எப்படி தடுத்து நிறுத்துவது.

முதல் டெஸ்டை கான்சல் பண்ணிட்டு இரண்டாவதையும் மூன்றாவதையும் மட்டும் விளையாடலாம்..!! :cool: :wuerg019:

பாலகன்
01-01-2011, 03:16 PM
ஜகீர் ஒரு நல்ல விளையாட்டாளர். ஹர்பஜனை காரரும் கொஞ்சம் நல்லாத்தான் விளையாடினாரு. சிரிசாந்துபொட்டுக்காரரும் இந்த போட்டியில் விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.