PDA

View Full Version : எனக்குள்ளே ஏகன்!



நாகரா
29-12-2010, 10:44 AM
எனக்குள்ளே ஏகன் என்றும் இருக்கின்றான்
அகத்துள்ளே நோக்கிட என்னை அழைக்கின்றான்
மூச்சில் இழைந்தே மந்திரம் மழைக்கின்றான்
மார்பில் குழைந்தே அமிழ்தாய்த் தழைக்கின்றான்

நெஞ்சின்கண் எஞ்ஞான்றும் அன்பினை அழுகின்றான்
அங்கைக்கண் செம்பொருளாய் வற்றா தொழுகுகிறான்
உச்சிக்கண் ஊமென்றே ஓங்கி எழுகின்றான்
மண்டைக்குள் சோவென்றே ஔடதம் பொழிகின்றான்

தொண்டைக்குள் ஆமென்றே கங்கையாய் விழுகின்றான்
தொண்டைக்கீழ்க் கலசத்தில் நிரம்பியே வழிகின்றான்
நெஞ்சுள்ளே இருதயத்தில் மூலவனாய் எழுகின்றான்
நெஞ்சின்கீழ் இருள்வாயில் சூரியனாய் விழிக்கின்றான்

நாபிக்குள் சகுணப்பிரம் மமாய்அவ தரிக்கின்றான்
நாபிக்கீழ் ரசவாத விஞ்ஞைகள் புரிகின்றான்
மூலையில் ஒளியுருப் பொன்மையை அருள்கின்றான்
ஓமயமாய் ஒளிந்திடத் தன்னையே தருகின்றான்

இளசு
17-04-2011, 10:18 PM
கற்பூரம் எரிவதற்கு
sublimation என்ற அறிவியல் பெயருண்டு..

திடம் ஆவியாகும்... நேரடியாய்..
திரவநிலை இடையில் இல்லாது..


உடலும் ஆன்மாவும் அப்படி ஒரு நெக்குருகும் நிலையில் நீங்கள்..

உயர்ந்த இடத்தில் இருக்கும் உங்களை அண்ணாந்து பார்க்கும் நான்..



கவிதைக்கு வாழ்த்து நாகரா அவர்களே... நலமா?

நாகரா
27-10-2012, 07:19 AM
நெஞ்ச நடுவில் இருந்தால் போதும், உயர்வும் தாழ்வும் இல்லா சமரசம் உங்கே, உம் ஊக்க வரிகளுக்கு நன்றி இளசு

சுகந்தப்ரீதன்
29-10-2012, 08:31 AM
ஏகத்துக்கும் நிறைந்திருக்கும் ஏகனை உருகி மருகி உணரும் உணர்த்தும் கவியாய் எனக்குள்ளே ஏகன்..!!:)

வாழ்த்துக்கள் நாகரா அண்ணா..!!:icon_b:

ஜானகி
29-10-2012, 09:36 AM
எனக்குள் இருக்கும் ஏகனைக் காண வழி தெரியாமல், பிரமிப்புடன் மலைப்பதால், பின்னூட்டம் இடும் தகுதி இழக்கிறேன்.
தங்கள் அநுபவ பகிர்வுகளுக்கு நன்றி.
என்றாகிலும் என் விழியும் திறக்கும் என்ற நம்பிக்கையுடன்.....

நாகரா
29-10-2012, 12:42 PM
ஏகத்துக்கும் நிறைந்திருக்கும் ஏகனை உருகி மருகி உணரும் உணர்த்தும் கவியாய் எனக்குள்ளே ஏகன்..!!:)

வாழ்த்துக்கள் நாகரா அண்ணா..!!:icon_b:
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி சுகந்தத் து(த)ம்பி!

நாகரா
29-10-2012, 01:00 PM
எனக்குள் இருக்கும் ஏகனைக் காண வழி தெரியாமல், பிரமிப்புடன் மலைப்பதால், பின்னூட்டம் இடும் தகுதி இழக்கிறேன்.
தங்கள் அநுபவ பகிர்வுகளுக்கு நன்றி.
என்றாகிலும் என் விழியும் திறக்கும் என்ற நம்பிக்கையுடன்.....
என்றென்றுஞ் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(உள் மூச்சில் மனதில் ஜெபிக்கவும்)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் பூரணமாய் வெளிப்பட்டிருக்கிறது(வெளி மூச்சில் மனதில் ஜெபிக்கவும்)

இது சகச(சஹஜ) நிலைத் தியானம், நேரங் கிடைக்கும் போதெல்லாம் தியானிக்கவும், இது வள்ளல் பிரான் எனக்கு அருளிய மூல மந்திரம்.

ஏக தேவன் நேச வள்ளல் உம் வழியாக ஒவ்வொன்றுக்கும் தன் பூரணத்துவத்தை ஞாபகமூட்டும் அக மந்திர குரு தீக்கை இது.

திருநிறை ஜானகி உம்மில் பூரணமாய் ஏகன், இதுவே உம் உண்மை, உள் மெய், இவ்வுண்மையை உமக்கு அருள்வது ஏகனின் வாய்மை, ஒவ்வொன்றுக்கும் இந்த அக மந்திர குரு தீ,க்கையை ஏகன் உம் மூலம் வழங்கப் பூரணமாய் அனுமதிப்பீர், உம் மெய்ம்மையை ஞாபகங் கொள்வீர், எப்போதும் திறந்திருக்கும் ஓர் இருதய விழியில் உம் பூரணத்துவம் மற்றும் ஒவ்வொன்றின் பூரணத்துவம் நிதர்சனம், நாம் அதை மந்திரமாய் தியானிப்பது மனத்தைச் செம்மைப் படுத்தவே.

எவ்வகையிலும் எந்த ஞானியரை விட எவ்விதத்திலும் நீவிர் எள்ளளவுந் தகுதி குறைந்தவர் அல்லர், உம்மைப் போன்றே ஒவ்வொன்றும்.

நா நுனியை வளைத்து அண்ணத்தில் பூட்டி, நா நுனியை ஜானகியாகவும், அண்ணத்தை ஏகனாகவும் பாவித்து, ஜானகி ஏகனில் பூரணமாகச் சரணாகதி அடைவதாய் பாவித்து, இம்மூல மந்திரத்தை சகச நிலையில் தியானிப்பீர், வள்ளல் பிரான் உம்மை வழி நடத்துவார்.

உம் பதிவுக்கு நன்றி