PDA

View Full Version : குற்றப்பின்னணி



CEN Mark
20-12-2010, 12:51 PM
குற்றப் பின்னணி (20.12.2010)
o ஒரு செல்லின்
மரபியல் பிழையால்
மனிதனும்.. மானுடமும்..

o மானுட இனத்தின் சிந்தனைப்
பிறழ்வால்
அணுவும்... மதமும்...

o அணுவினியக்க விதியின்
முறையால்
ஆக்கமும்...தாக்கமும்...

o மதத்தின் வழியில்
விதியின் முரணால்
போட்டியும்...போராட்டமும்..

o போட்டி வாழ்வு
போராட்டமானதால்
பெருக்கமும்...நெருக்கமும்..

o இவைகள் தொடர்ந்து
நிலைத்து விட்டால்…?
யுத்தமும்...சத்தமும்...

o யுத்தம் அடங்கி உலகைப்
பார்த்தால்
நிசப்த்தமும்...சூன்யமும்...

o சூன்ய விதியின் ஆய்வின்
முடிவில்
ஆன்மிகமும் ...அந்தகாரமும்