PDA

View Full Version : தீபாவளி



CEN Mark
28-12-2010, 12:05 PM
நரகாசுரன்
பண்டிகை க் காலம்,
உற்றார்கள் அழைப்பு.
முறுக்கு, சீடை, அதிரசம்,
அச்சுமுறுக்கு, முந்திரிக்கொத்து.
அத்தனைக்கும் பலசரக்கு
ஒரு வருட குடும்பச்செலவு!
ஊர்சுற்ற
மகிழ்வுந்து, உணவகங்கள்,
தங்கும்விடுதி இத்யாதி
இவைகளுக்காக தனிக்கணக்கு.
புத்தாடை, புது நகைகள், புதுப்படங்கள்
இவற்றுக்கும் சேர்த்தே நிதிநிலைகள்.
போனவருட கடன்பாக்கியோடு
இந்த கணக்கும்.
நரகாசுரனுக்கு
காடாத்தோ? அடியந்திரமோ?
இங்கே
கணவனே நரகாசுரனாய்….!