PDA

View Full Version : கோடை கானல்



CEN Mark
28-12-2010, 12:10 PM
கோடை கானல்
கோடை என்றொரு காலமுண்டு
செங்கதிரவன் பார்வை தாக்கமுண்டு
ஆடை அணியா திருக்கத் தோன்றும்
அவனியில் அங்ஙனம் செய்வாருண்டோ ?

கோடைக் கானலென்ற பேரைவைத்து
சஹாராவின் சாயலை நோக்கிச்சென்றேன்
வான் மலைகளின் கூட்டம்கண்டு
வாயடைத்து நான் சொக்கிப் போனேன்.!

மலைமீதேறி முகடுகளைத் தொட்டு
பள்ளம் பார்த்து பயந்து நடுங்கி
குளிரினை உணர்ந்து தூய்மை முகர்ந்து
என்னை நானே இழந்து விட்டேன்.

இயற்கை சிதறிய வனத்தின் வனப்பை
மஞ்சம் விரித்த மஞ்சின் மிதப்பை
அள்ளி அனைத்து உள்ளம் உருகி
காட்டுத் தீயாய் முழுதும் படர்ந்தேன்.

சிந்தை கலங்கிய மனிதர்கள் எல்லாம்
சித்தாந்தம் பிசகிய கூட்டத்தோடு
கட்டாயம் வந்து சேர வேணும்
மாசற்ற மலையின் உள்ளம் அறிய..!

கீதம்
29-12-2010, 10:43 PM
கோடையைக் கானலாக்கிய
விந்தை கண்டு சிந்தை குளிர்ந்து
மலைமுட்டும் முகிலோடு போட்டியிட்டு
கவிச்சாரல் பொழியும்
கவிக்குப் பாராட்டுகள்.

ஜானகி
30-12-2010, 01:20 AM
மார்கழி மாதத்தில் கோடைக்குக் கூப்பிடுகிறீர்களே ?
கூடவே சூடான மற்றொரு கவியும் தொடருமோ ?

KAMAKSHE
30-12-2010, 03:15 AM
மார்கழி மாதத்தில் கோடைக்குக் கூப்பிடுகிறீர்களே ?
கூடவே சூடான மற்றொரு கவியும் தொடருமோ ?
மிக அருமையான கவிதை.

மஞ்சின் என்றால் என்ன பொருள்?

பாலகன்
30-12-2010, 03:51 AM
அருமையான கவிதை.
பாராட்டுக்கள்

ஜானகி
30-12-2010, 05:05 AM
மஞ்சு என்றால் பனி என்று நினைக்கிறேன்

வியாசன்
30-12-2010, 06:52 AM
கோடை கானல்

சிந்தை கலங்கிய மனிதர்கள் எல்லாம்
சித்தாந்தம் பிசகிய கூட்டத்தோடு
கட்டாயம் வந்து சேர வேணும்
மாசற்ற மலையின் உள்ளம் அறிய..!


கலங்கியவர்கள் மலைக்கு வந்து தெளிந்தால் நலமே.
தெளிந்தவனாய் நீ தரும் கவிதைகள்
காயத்தின் வடுக்களா அல்லை
சமுதாயத்தின் வரிகளா?

CEN Mark
30-12-2010, 03:20 PM
மஞ்சு என்றால் பனி என்று நினைக்கிறேன்


ஆமாம் மஞ்சு என்றால் பனிமேகம்தான் (வானரங்கள் கனிகொடுத்து மஞ்சுயோடு கொஞ்சும்- குற்றாலக்குறவஞ்சி பாடல்களில் காணலாம்)

CEN Mark
30-12-2010, 03:22 PM
கலங்கியவர்கள் மலைக்கு வந்து தெளிந்தால் நலமே.
தெளிந்தவனாய் நீ தரும் கவிதைகள்
காயத்தின் வடுக்களா அல்லை
சமுதாயத்தின் வரிகளா?

ஹா!ஹா!ஹா! இரண்டும்தான்

CEN Mark
31-12-2010, 06:57 AM
sssssssssss

CEN Mark
31-12-2010, 07:13 AM
மிக அருமையான கவிதை.

மஞ்சின் என்றால் என்ன பொருள்?

(வானரங்கள் கனிகொடுத்து மஞ்சுயோடு கொஞ்சும்- குற்றாலக்குறவஞ்சி பாடல்களில் காணலாம்)

கீதம்
31-12-2010, 09:48 PM
(வானரங்கள் கனிகொடுத்து மஞ்சுயோடு கொஞ்சும்- குற்றாலக்குறவஞ்சி பாடல்களில் காணலாம்)

வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

அந்தப்பாடலை இப்படித்தான் படித்ததாய் நினைவு.

அமரன்
31-12-2010, 10:15 PM
மஞ்சு என்றால் குளிர்மேகம் என்று பொருள் படும் என்று நினைக்கிறேன்.

குற்றாலக் குறவஞ்சி குளுமையான பழங்கஞ்சி.

கோடை கானல் கருத்துப் பிறகு.

CEN Mark
01-01-2011, 10:33 AM
வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

அந்தப்பாடலை இப்படித்தான் படித்ததாய் நினைவு.

ஆமாம். படித்ததென்னவோ மந்தி -தான். வாய் மொழி வழியில் மஞ்சி என்றாகிவிட்டது. குமரியில் மஞ்சி (பேச்சு வழக்கு) இறங்கி விட்டது என்றால் பனி (மேகம்) இறங்கி விட்டது என்று அர்த்தம். என்றாலும் தமிழில் மஞ்சி என்பதற்கு என்னன்ன அர்த்தங்கள் என்பதை யாரேனும் பட்டியலிடலாம்.

CEN Mark
01-01-2011, 10:37 AM
மஞ்சு என்றால் குளிர்மேகம் என்று பொருள் படும் என்று நினைக்கிறேன்.

குற்றாலக் குறவஞ்சி குளுமையான பழங்கஞ்சி.

கோடை கானல் கருத்துப் பிழகு .

மஞ்சு என்றால் குளிர்மேகம் என்பது எங்கள் ஊரின் சொல் வழக்கு. இலக்கிய மரபு பார்க்க வேண்டும்.

கோடை இங்கு கானல் நீராகப் படுவதால் கோடை கானல் எனலாம்.

கௌதமன்
01-01-2011, 10:42 AM
ஆமாம். படித்தேன்னவோ மந்தி -தான். வாய் மொழி வழியில் மஞ்சி என்றாகிவிட்டது. குமரியில் மஞ்சி (பேச்சு வழக்கு) இறங்கி விட்டது என்றால் பனி (மேகம்) இறங்கி விட்டது என்று அர்த்தம். என்றாலும் தமிழில் மஞ்சி என்பதற்கு என்னன்ன அர்த்தங்கள் என்பதை யாரேனும் பட்டியலிடலாம்.

தமிழில் அரிதாகவே புழங்கினாலும் தமிழின் குழந்தை மலையாளத்தில் இதுவும் இது போன்ற பல நல்லத் தமிழ் சொற்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

மஞ்சி - படகு, பேழை, குறுமாடி, பனி, சணல்
மஞ்சு - வெண்மேகம், பனி, அழகு, இளமை, வலிமை, ஆபரணம், களஞ்சியம், யானை முதுகு

KAMAKSHE
01-01-2011, 01:15 PM
தமிழில் அரிதாகவே புழங்கினாலும் தமிழின் குழந்தை மலையாளத்தில் இதுவும் இது போன்ற பல நல்லத் தமிழ் சொற்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

மஞ்சி - படகு, பேழை, குறுமாடி, பனி, சணல்
மஞ்சு - வெண்மேகம், பனி, அழகு, இளமை, வலிமை, ஆபரணம், களஞ்சியம், யானை முதுகு
அப்பாடி எத்தனை அர்த்தங்கள்

நன்று நன்று

CEN Mark
02-01-2011, 04:00 PM
தமிழில் அரிதாகவே புழங்கினாலும் தமிழின் குழந்தை மலையாளத்தில் இதுவும் இது போன்ற பல நல்லத் தமிழ் சொற்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

மஞ்சி - படகு, பேழை, குறுமாடி, பனி, சணல்
மஞ்சு - வெண்மேகம், பனி, அழகு, இளமை, வலிமை, ஆபரணம், களஞ்சியம், யானை முதுகு

நன்றி கௌதமன்.

Hega
02-01-2011, 09:11 PM
அழகான கவியைதொடர்ந்து மஞ்சி யின் ஆராய்வின் மூலம் மஞ்சு மற்றியுமறிந்தோம்.

நன்றி.

CEN Mark
18-01-2011, 04:45 PM
அழகான கவியைதொடர்ந்து மஞ்சி யின் ஆராய்வின் மூலம் மஞ்சு மற்றியுமறிந்தோம்.

நன்றி.

thanks