PDA

View Full Version : அடையாளம்



CEN Mark
20-12-2010, 12:36 PM
அடையாளம்
வானும் நிலமும்
நீரும் நெருப்பும்
மலையும் கடலும்
இருளும் ஒளியும்
ஆணும் பெண்ணும்
நீயும் நானும்
எதிரெதிர் திசையில்..!
இவ்வெதிரும் புதிருமே
இப்பிரபஞ்ச அடையாளம்.

அமரன்
28-12-2010, 05:01 PM
எதிரும் புதிரும் இணைந்ததுதான் உலகம் என்ற உண்மையை எடுத்தியம்புவதன் மூலம் ஒற்றுமையை வலியுறுத்தும் கவிதை. நன்று நண்பரே!

வியாசன்
28-12-2010, 07:09 PM
கடுகுதானய்யா..............
வாழ்த்துக்கள். இன்னமும் எதிர்பார்ப்புக்கள் உங்கள்மீது

CEN Mark
29-12-2010, 06:29 AM
எதிரும் புதிரும் இணைந்ததுதான் உலகம் என்ற உண்மையை எடுத்தியம்புவதன் மூலம் ஒற்றுமையை வலியுறுத்தும் கவிதை. நன்று நண்பரே!

கடல் மணல்போல் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்

CEN Mark
29-12-2010, 06:34 AM
கடுகுதானய்யா..............
வாழ்த்துக்கள். இன்னமும் எதிர்பார்ப்புக்கள் உங்கள்மீது

உங்கள் எதிபார்ப்புகளை என் அடுத்தடுத்த அரங்கேறும் கவிகள் பூர்த்தி செய்யும். .