PDA

View Full Version : பதிவுகள்



CEN Mark
28-12-2010, 04:47 PM
பதிவுகள்
o காலைப் புல்லில்
பனித்துளியின்
முத்தச்சுவடுகள்.

o முலை சப்பிய குழந்தையின்
இதழிடுக்கில்
உயிர்ச் சத்தின் ஆதாரம்.

o வயல் வெளி உழவன் வசம்
பூமித்தாயின்
ஸ்பரிசக்காற்று

o காமம் தீர்த்த காதலர் மேனியில்
வேட்கை துப்பிய
எச்சில் படிமங்கள்.


o ஆழிப் பெருக்கு
கரையோரம் விதைத்தன
மனித உடல்கள்.

அமரன்
28-12-2010, 04:55 PM
மிச்சங்களைக் கோர்த்து ஒரு கவிமாலை.

இன்பமும் துன்பமுமாய் சொல்கிறது வாழ்க்கை..

பாராட்டுகள் சென்.

இப்படி ஒவ்வொரு கவிதையையும் ஒவ்வொரு திரியாகப் பதிந்தீர்களேயானால் வாசகர்கள் விமர்சிக்க இலகுவானதாக இருக்கும்.

வியாசன்
28-12-2010, 07:17 PM
இளையவனே இத்தனை காலமும் உன்னுள் கர்ப்பமாயிருந்த ஆழிப்பெருக்கு கவிதை இன்று பிரசவமாயிருக்கின்றது. எச்சங்கள்தான் மிச்சமா?

ஜனகன்
28-12-2010, 08:30 PM
பதிவுகள் கவிதை எச்சங்களை வைத்து படைத்துள்ளீர்கள் நன்றாக உள்ளது. நண்பரே வாழ்த்துக்கள்.

இன்னும் பல கவிதைகள் எழுதிட வாழ்த்துக்கள்.

CEN Mark
29-12-2010, 06:20 AM
மிச்சங்களைக் கோர்த்து ஒரு கவிமாலை.

இன்பமும் துன்பமுமாய் சொல்கிறது வாழ்க்கை..

பாராட்டுகள் சென்.

இப்படி ஒவ்வொரு கவிதையையும் ஒவ்வொரு திரியாகப் பதிந்தீர்களேயானால் வாசகர்கள் விமர்சிக்க இலகுவானதாக இருக்கும்.

நன்றி. தயாராகிவிட்டேன்.

CEN Mark
29-12-2010, 06:22 AM
பதிவுகள் கவிதை எச்சங்களை வைத்து படைத்துள்ளீர்கள் நன்றாக உள்ளது. நண்பரே வாழ்த்துக்கள்.

இன்னும் பல கவிதைகள் எழுதிட வாழ்த்துக்கள்.

நன்றி. தயாராகிவிட்டேன்.

CEN Mark
29-12-2010, 06:25 AM
இளையவனே இத்தனை காலமும் உன்னுள் கர்ப்பமாயிருந்த ஆழிப்பெருக்கு கவிதை இன்று பிரசவமாயிருக்கின்றது. எச்சங்கள்தான் மிச்சமா?

மிச்சங்களே எச்சங்களாக,, நன்றி...