PDA

View Full Version : தமிழ் சினிமா ஃபார்முலாகௌதமன்
28-12-2010, 03:09 PM
தமிழ் சினிமா ஃபார்முலா
(எல்லாப் படங்களுக்குமானது அல்ல)
------------------------------------------
இந்தக் கவிதை(யா?)க்காக தமிழ்த்தாய் என்னை மன்னிக்க!
தூயத்தமிழில் முயன்றால் தலை கிறுகிறுக்குது,முடியல...
------------------------------------------
புதுமையானத் திரைக்கதையில் புதுப்பட தயாரிப்பு,
தினசரியில் விளம்பரம், நடித்தவர்கள் பேட்டி.
பண்டிகை நாளில் வெளியீடு.
கட்அவுட்டில் ஹீரோவுக்கு அபிஷேகம்,மலர்மாலை,
முதல்காட்சிக்கு இனிப்பு வினியோகம்.
-----------------------------------------
கதைக்குள் நுழைவோம்...
விதவைத்தாயாய் முன்னாள் ஹீரோயின்.
நெற்றியில் விபூதி,கண்களில் கண்ணீர்
குடிசையில் வாசம், போட்டோவில் அப்பா.
ரீபோக் ஷூவும், ரேபேன் கண்ணாடியுமாக
கூலிவேலைச் செய்யும் மகனாக ஹீரோ.
அறிமுகப்பாட்டால் அதிரும் அரங்கு, சிதறும் நாற்காலிகள்.
வயதுக்கு மீறிய பேச்சுடன் ஃபுல் மேக்கப்பில்
பூ வியாபாரம் செய்யும் தங்கையாக வளர்ந்து வரும் நடிகை.
கல்லூரியில் படிக்கும் வில்லனின் மகள்.
வட நாட்டு இறக்குமதி,தகுதி-தமிழ் தெரியாது.
கதைப்படி குறும்புக்காரி, சுற்றிலும் தோழியர், ஊர்சுற்றல்,
ஹீரோவுடன் சந்திப்பு, முதல் சந்திப்பில் மோதல்.
வம்பு செய்யும் ரவுடியிடமிருந்து காப்பாற்றியபின் காதல்.
உள்நாட்டு லொக்கேசனில் மரத்தைச் சுற்றி பாடல்.
மகளின் காதலைத் தடுக்க வில்லனின் ஏற்பாடுகள்,
சண்டைக் காட்சியில் ஹீரோவின் டூப்பின் சாகசங்கள்.
கிளைக்கதையாய் தங்கையின் காதல்,கவர்ச்சிக் காட்சிகள்,
கர்ப்பம்,காதலன் ஏமாற்று,தற்கொலை முயற்சி.
ஹீரோ காப்பாற்றி அப்பா போட்டோ முன் சபதம்.

------------இடைவேளை----------------------

தங்கையின் பிரச்சனையால் காதலர்கள் தற்காலப்பிரிவு,
சோகம், டாஸ்மாக்கில் தண்ணியடி, தத்துவப்பாட்டு.
காதலன் நிலைகண்டு காதலி வருத்தம்,தோழியர் ஆறுதல்.
தங்கையின் காதலனைத் திருத்தி, ஊர் மெச்சத் திருமணம்.
திருமணத்தில் குத்துப்பாட்டு,பாட்டின் முடிவில்
ஹீரோ-ஹீரோயின் மீண்டும் சந்திப்பு.
வில்லனுக்குத் தெரியவர காதலியின் திருமண ஏற்பாடுகள்,
மாப்பிள்ளை வில்லனின் நண்பரின் மகன், காதலி மறுப்பு,
அதனால் வீட்டுக்குள் சிறைவைப்பு,
ஹீரோ முயற்சியில் காதலி தப்பித்தல்,
ஊர்ப்பெரியவரான கௌவரவ நடிகர் அடைக்கலம் தருதல்,
ஹீரோவுடன் ரகசிய திருமண ஏற்பாடுகள்,
டைரக்டர் போகவிரும்பிய வெளிநாட்டில் பாடல்.
கிளைமாக்ஸில் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வில்லன்.
ஹீரோவின் தாய் கடத்தல்,தடுத்த தங்கை தாக்கப்படுதல்,
மகளை அனுப்பும்படி மிரட்ட பழைய பாக்டரியில் தாய் அடைப்பு,
காவலுக்கு மாமிச மலைகளாய் ஸ்டண்ட் நடிகர்கள்,
சுவரை உடைத்து ஹீரோ வருகை,சண்டை, ரத்தம்.
தாய் செண்டிமெண்ட் வசனம், வில்லன் திருந்துதல்,
ஹீரோ காதலியைக் கரம்பிடித்தல்,பின்னணியில் லல்லல்லா
குரூப் போட்டோவில்,டைரக்டர், தயாரிப்பாளருடன் சுபம்.
--------------------------------------------
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில்,
வெளிவந்த இரண்டே நாட்களில்,
புத்தாண்டு ஸ்பெஷலாக
சின்னத்திரையில் ஒளிபரப்பு,ஸ்பான்ஸர்கள்,விளம்பரங்கள்.
--------------------------------------------
மீண்டும் புதுமையானத் திரைக்கதையில் புதுப்பட தயாரிப்பு,
தினசரியில் விளம்பரம், நடித்தவர்கள் பேட்டி.
வாழ்க தமிழ் சினிமா!
நன்றி!
__________________

பாலகன்
28-12-2010, 03:14 PM
ஆகா ஆகா ! மொத்த தமிழ்ப்படங்களையும் இந்த ஃபார்முலாவுக்குள்ளார அடக்கிட்டீங்களே!

வாழ்த்துக்கள்.

றெனிநிமல்
28-12-2010, 03:27 PM
அடடா! 80 துகளில் வந்த அனைத்துப் படமும் இப்படித்தானே இருந்தது.
இதைப் பாத்துப் பழகிய எனக்கு, படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதி ஏதும் இருக்கின்றதோ என்றே நினைத்து விட்டேன்.

கௌதமன்
28-12-2010, 05:12 PM
அடடா! 80 துகளில் வந்த அனைத்துப் படமும் இப்படித்தானே இருந்தது.
இதைப் பாத்துப் பழகிய எனக்கு, படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதி ஏதும் இருக்கின்றதோ என்றே நினைத்து விட்டேன்.

80 களில் மட்டுமல்ல நண்பரே! இன்றைக்கும் சிலபேர் பணப்பெட்டியோடு அலைகிறார்கள்.கதை நம்ம ஃபார்முலாதான்!

வியாசன்
28-12-2010, 07:07 PM
தமிழ் சினிமா ஃபார்முலா
(எல்லாப் படங்களுக்குமானது அல்ல)
------------------------------------------
ஹீரோவுடன் ரகசிய திருமண ஏற்பாடுகள்,
டைரக்டர் போகவிரும்பிய வெளிநாட்டில் பாடல்.
கிளைமாக்ஸில் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வில்லன்.
__________________

ஹெலிகாப்டரில் வில்லன் வந்தாலும் கதாநாயகன் மாட்டுவண்டியிலோ அல்லது காரிலோ விரட்டி பிடிப்பதை மறந்துவிட்டீர்கள். ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசம் தமிழ்ப்பட பார்முலாவை அப்படியே சொல்லிவிட்டீர்கள் . இனிமேல் இங்குள்ளவர்கள் பலர் திரைக்கதையுடன் தயாரிப்பாளரை தேடியலையப்போகின்றனர்.

அமரன்
28-12-2010, 08:24 PM
பாட்டி வைச்சா என்ன..
அம்மா வைச்சா என்ன..
மனைவி வைச்சா என்ன..
மகள் வைச்சா என்ன..

மசாலா மட்டும் மாறுவதே இல்லை..

கீதம்
28-12-2010, 10:48 PM
தமிழ்த் திரைச்சித்திரத்தின் சூத்திரத்தை வெளியிட்டுவிட்ட உம்மேல் திரைத்துறையினர் வழக்கு போடவிருக்கிறார்களாம். எதற்கும் எச்சரிக்கையாகவே இருங்கள், கெளதமன்.

KAMAKSHE
29-12-2010, 01:26 AM
தாங்கள் இதையே கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லியிருந்தால்....
( அதாவது எடிட் செய்து) ......அடடா! அள்ளியிருக்குமுங்க உங்க கதை.

அதை ஏதோ புதுக் கதைன்னு நெனச்சுகிட்டு நீ நான்னு தயாரிப்பாள்ர்கள், ஹீரோக்கள் போட்டி போட்டு வாங்கி இருப்பாங்க புதுப் படம் பண்ண. நீங்க எங்கியோ போயிருப்பீங்க...

கௌதமன்
29-12-2010, 12:11 PM
தாங்கள் இதையே கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லியிருந்தால்....
( அதாவது எடிட் செய்து) ......அடடா! அள்ளியிருக்குமுங்க உங்க கதை.


அட நீங்க வேற! பட்ஜெட் பிரச்சனையால் கிராபிக்ஸ் காட்சியை நீக்கிட்டோம்! விட்டா ஹாலிவுட் ரேஞ்சுக்கு கலக்குவமுல்ல!

KAMAKSHE
29-12-2010, 02:47 PM
அட நீங்க வேற! பட்ஜெட் பிரச்சனையால் கிராபிக்ஸ் காட்சியை நீக்கிட்டோம்! விட்டா ஹாலிவுட் ரேஞ்சுக்கு கலக்குவமுல்ல!

எம் பையன் அடிக்கடி சொல்லுவான். “ இது உனக்கே கொஞ்சம் ஓவெரா தெரிலே?....” அது ஞாபகத்துக்கு வந்தது.

பாலகன்
29-12-2010, 03:03 PM
எம் பையன் அடிக்கடி சொல்லுவான். “ இது உனக்கே கொஞ்சம் ஓவெரா தெரிலே?....” அது ஞாபகத்துக்கு வந்தது.

ஒருவேளை நாமதான் தமிழ் சினிமாவை பற்றி சரியா தெரிஞ்சிக்காம கொஞ்சம் ஓவரா போயிட்டோமோ :D

உங்க பையன் சொன்னது சரிதான் :lachen001:

கௌதமன்
31-12-2010, 07:48 AM
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

விரைவில் உங்கள் நல்லாசியுடன் ஒரு ஹாலிவுட் படம் ...30 ஆம் நூற்றாண்டு கழுதை தயாரிப்பில்...