PDA

View Full Version : யானைப்பசிக்கு சோளப்பொரிகள்....

கௌதமன்
28-12-2010, 03:04 PM
கவிதைகளுக்கு தலைப்பு புரிதலை எளிதாக்கவே...மற்றபடி தலைப்பு இல்லாமல் கவிதைகளைப் படித்துப் பாருங்கள்....புரிதல் அவசியப்பட்டால் மட்டும் தலைப்பைப் பாருங்கள்.. நன்றி

சுடச்சுட விற்பனை

எங்கள் ஊரில் புத்தகக்கண்காட்சி
வேகமாய் விற்றுத் தீர்ந்தது
மசால் வடை(?)

கௌதமன்
28-12-2010, 03:05 PM
மரம் வளர்ப்போம்

வீதிதோறும் மின்சார மரங்கள்
நீரூற்றி வளர்ப்பது
தெருநாய்கள்

றெனிநிமல்
28-12-2010, 03:06 PM
ஹைகூ அழகாக பிறசவித்துள்ளது.
வாழ்த்துக்கள் கெளதமன்.

கௌதமன்
28-12-2010, 03:06 PM
வரவேற்பு

முகப்பில் நல்வரவு எழுதிய
வீட்டில் தொங்கிய பலகையில்
’நாய்கள் ஜாக்கிரதை’

றெனிநிமல்
28-12-2010, 03:07 PM
மரம் வளர்ப்போம்

வீதிதோறும் மின்சார மரங்கள்
நீரூற்றி வளர்ப்பது
தெருநாய்கள்

ஹா ஹா ஹா.......
பிரமாதம் போங்க....

பாலகன்
28-12-2010, 03:11 PM
வரவேற்பு

முகப்பில் நல்வரவு எழுதிய
வீட்டில் தொங்கிய பலகையில்
’நாய்கள் ஜாக்கிரதை’

நீங்கள் ஜாக்கிரதை என்றால் சரியாக இருக்குமோ :D
நாய்கள் உங்களை கடித்தாலும் நீங்கள் அடித்துவிடாதீர்கள் அவை பாவம் ஜாக்கிரதை என்று சொல்கிறார்களோ? :lachen001:

அருமையான குறுங்கவிதைகள்.
தொடருங்கள்

றெனிநிமல்
28-12-2010, 03:21 PM
வரவேற்பு

முகப்பில் நல்வரவு எழுதிய
வீட்டில் தொங்கிய பலகையில்
’நாய்கள் ஜாக்கிரதை’

எந்த நாய்களை குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்களோ!:lachen001:

ஜானகி
28-12-2010, 03:24 PM
சோளப்பொறிகள், மலர்ந்து, சுவையுடன் மணமும் வீசுகிறதே ?
நன்று !

CEN Mark
28-12-2010, 05:04 PM
எந்த நாய்களை குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்களோ!:lachen001:

நல்வரவு நல்கிய வீட்டின் முகப்பில்
மற்றுமொரு பலகை
நாய்கள் ஜாக்கிரதை ..!..!..!

கௌதமனின் மற்றுமொரு பரிமாணம். பட்டையை கிளப்புங்க (பட்டை தீட்டுவதைச் சொல்கிறேன்)

வியாசன்
28-12-2010, 07:26 PM
அழகான ஹைகூ பாணி கவிதைகள் நச்சென்று உள்ளது

அமரன்
28-12-2010, 08:18 PM
புத்தகக் கண்காட்சி

எங்கள் ஊரில் புத்தகக்கண்காட்சி
வேகமாய் விற்றுத் தீர்ந்தது
மசால் வடை(?)

நிதர்சனம்!

வடையை சுற்றிக் கொடுக்க எத்தனை பழைய புத்தகங்கள் விற்கப்பட்டிருக்குமோ..:)

அமரன்
28-12-2010, 08:20 PM
மரம் வளர்ப்போம்

வீதிதோறும் மின்சார மரங்கள்
நீரூற்றி வளர்ப்பது
தெருநாய்கள்

மின்சாரமில்லாத நேரக் கொடுமையை இப்படியும் நகைச்சுவையாகச் சொல்லலாம்.. அருமை.

மின்சார மரங்கள்... நல்ல கற்பனை.

கீதம்
28-12-2010, 10:44 PM
யானைப்பசிக்கு சோளப்பொரிகள்தான்,
எங்கள் ரசனைப்பசிக்கு உங்கள் கவிப்பொரிகள்!

சிக்கினோம் உங்கள் கவிப்பொறியில்!
இன்னுமின்னும் சிதறட்டும் கவிப்பொரிகள்!

கௌதமன்
29-12-2010, 12:13 PM
சேமிப்பு

நியான் விளக்கில் ஒளிர்ந்த
விளம்பரம் சேமிக்கச் சொன்னது
எரிசக்தியை!

கௌதமன்
29-12-2010, 12:17 PM
சினேகிதம்

நம் தாயவிளையாட்டில்
நகர்ந்து போகும் நினைவாக
உடைந்த உன் வளையல் துண்டு!

கௌதமன்
29-12-2010, 12:19 PM
தேடி வந்த கண்கள்

என்னைக் காணத் தேடி
பூந்தோட்டம் வந்த கண்களா
வண்டுகள்!

பாலகன்
29-12-2010, 12:52 PM
மின் சிக்கனத்தை சொன்ன
ஸ்நேகிதனின் வண்டுக்கண்களுக்கு
பாராட்டுக்கள் தருகிறான் மகாபிரபு

கௌதமன்
29-12-2010, 03:28 PM
கனவும் நினைவும்

அதிகாலைத் தூக்கதில்
விழிப்பூட்டும் கனவு நீ
தூக்கம் வராத இரவுகளில்
தூங்க வைக்கும் நினைவும் நீ!
தூக்கம் கலைத்துவிட்டு
தூங்கச் செய்யும் நீ மட்டும்
தூங்காமல் எப்போதும்...

பாலகன்
29-12-2010, 03:33 PM
கனவும் நினைவும் ஒன்றுக்கொண்று சந்திக்க முடியாததால் இருக்கலாம்

அருமையான கவிதை

கௌதமன்
30-12-2010, 03:46 PM
நல்வரவு நல்கிய வீட்டின் முகப்பில்
மற்றுமொரு பலகை
நாய்கள் ஜாக்கிரதை ..!..!..!

கௌதமனின் மற்றுமொரு பரிமாணம். பட்டையை கிளப்புங்க (பட்டை தீட்டுவதைச் சொல்கிறேன்)

இப்போ சரியா இருக்கு!
நன்றி வரன்!

அமரன்
30-12-2010, 08:56 PM
சேமிப்பு

நியான் விளக்கில் ஒளிர்ந்த
விளம்பரம் சேமிக்கச் சொன்னது
எரிசக்தியை!

முரண் கவிதை..

செலவு செய்யாதே என்று செலவில்லாமல் சொல்ல இயலாது அல்லவா..

அதனால் பொறுத்துக் கொள்வோம்..

அமரன்
30-12-2010, 09:01 PM
சினேகிதம்

நம் தாயவிளையாட்டில்
நகர்ந்து போகும் நினைவாக
உடைந்த உன் வளையல் துண்டு!

கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி..

கர்ணனும் துரியோதனனின் மனைவியும் விளாடிட்டு இருக்கும் போது துரியோதனன் வந்து விடுவான். கர்ணன் கண்டிலன். பதிவிரதை துடித்து எழ, கர்ணன் அவள் கரம் பற்ற, இடை மாலை அறுந்து மணிகள் உருண்டோடக் மருண்டு விடுவர் கர்ணனும், துரியோதனன் மனைவியும்..

துரியோதனன் கேட்பான்.. எடுக்கவா... கோர்க்கவா..

நட்பு அங்கே நாதஸ்வரம் வாசிக்கும்.

இங்கே காலம் உருட்டிய தாயத்தில் ‘இலக்கு’ நோக்கிச் செல்லும் நகர்வானாக உடைந்த வளையல்..

அமரன்
30-12-2010, 09:02 PM
தேடி வந்த கண்கள்

என்னைக் காணத் தேடி
பூந்தோட்டம் வந்த கண்களா
வண்டுகள்!

எறும்புகள் உங்களைச் சும்மா விட்டனவா..

நல்லா இருக்குங்க கற்பனை.

அமரன்
30-12-2010, 09:04 PM
கனவும் நினைவும்

அதிகாலைத் தூக்கதில்
விழிப்பூட்டும் கனவு நீ
தூக்கம் வராத இரவுகளில்
தூங்க வைக்கும் நினைவும் நீ!
தூக்கம் கலைத்துவிட்டு
தூங்கச் செய்யும் நீ மட்டும்
தூங்காமல் எப்போதும்...

எண்ணமெல்லாம் நீ..
என்னவெல்லாம் செய்கிறாய் நீ..

அருமை கௌதம்.

கௌதமன்
31-12-2010, 07:30 AM
பசியை ஆற்றுவதற்கானப் பொரியல்ல இது

பசியைத் தூண்டுவதற்கானப் பொ(ரி)றி இது

பொறியில் சிக்கிய அனைவருக்கும் நன்றி

Hega
31-12-2010, 07:41 AM
நாய்கள் ஜாக்கிரதை போர்டைக்காணாது உங்களைகாண தோட்டத்தில் நுழையும் வண்டின் நிலை என்னாகும் என நான் கனவு காணுகிறேன் கௌதமன்.

சின்னசின்னதாய் அழகான கவிதை படைககும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

பாலகன்
31-12-2010, 07:45 AM
நாய்கள் ஜாக்கிரதை போர்டைக்காணாது உங்களைகாண தோட்டத்தில் நுழையும் வண்டின் நிலை என்னாகும் என நான் கனவு காணுகிறேன் கௌதமன்.

.

வண்டை நாய் துரத்தி துரத்தி ரொம்ப சோர்ந்து போயிருக்குமோ? :icon_rollout:

Hega
31-12-2010, 08:41 AM
வண்டை நாய் துரத்தி துரத்தி ரொம்ப சோர்ந்து போயிருக்குமோ? :icon_rollout:

அந்த வண்டு விஷ வண்டாய் இருந்து நாயை தம் கொடுக்கால் கொத்த துரத்தியதால் நாய் களைத்திருக்க கூடாதோ... தலைவரே..

இப்போதெல்லாம் பூவை நாடும் வண்டுகள் வீட்டில் இருக்கும் காவலை தகர்த்தெறியும் கவாலிகளாக இருப்பதும் நிஜம் தானே..:smilie_abcfra:.

கௌதமன்
01-01-2011, 04:49 AM
கூட்டல்(+), கழித்தல்(-), பெருக்கல்(x)
குறியீடுகளின் உருவமாய்
துடைப்பம்

கௌதமன்
02-01-2011, 04:18 PM
தேடிப்பார்க்கிறேன்

என் வீட்டு சுவற்றின் போஸ்டர்களின்
பின்னால் ஒளிந்து கிடக்கிறது
‘விளம்பரம் செய்யாதீர்’

கௌதமன்
02-01-2011, 04:23 PM
எலி மருந்து விளம்பரம்

உள்ளே சாப்பிட்டு வெளியில் போய் சாகிறது
எழுதப்பட்டிருக்கிறது விளம்பரம்
மதுக்கடை முன்பு

பாலகன்
02-01-2011, 05:30 PM
எலி மருந்து விளம்பரம்

உள்ளே சாப்பிட்டு வெளியில் போய் சாகிறது
எழுதப்பட்டிருக்கிறது விளம்பரம்
மதுக்கடை முன்பு

அற்புதம்.

ஆமா நீங்க யாரை சொன்னீங்க :mini023:

பாலகன்
02-01-2011, 05:31 PM
இப்போதெல்லாம் பூவை நாடும் வண்டுகள் வீட்டில் இருக்கும் காவலை தகர்த்தெறியும் கவாலிகளாக இருப்பதும் நிஜம் தானே..:smilie_abcfra:.

ஆமா ஆமா காவாலிப்பய வண்டுகள் :D

கீதம்
03-01-2011, 03:45 AM
கூட்டல்(+), கழித்தல்(-), பெருக்கல்(x)
குறியீடுகளின் உருவமாய்
துடைப்பம்

ரசிக்கவைத்த ஒப்புமை!

தேடிப்பார்க்கிறேன்

என் வீட்டு சுவற்றின் போஸ்டர்களின்
பின்னால் ஒளிந்து கிடக்கிறது
‘விளம்பரம் செய்யாதீர்’

மறைக்கப்பட்ட உண்மை!

எலி மருந்து விளம்பரம்

உள்ளே சாப்பிட்டு வெளியில் போய் சாகிறது
எழுதப்பட்டிருக்கிறது விளம்பரம்
மதுக்கடை முன்பு

வியக்கவைத்த ஒற்றுமை!

அனைத்தும் அற்புதம்; தொடர்ந்து பொரியட்டும்! பாராட்டுகள் கெளதமன்.

ஜானகி
03-01-2011, 03:55 AM
'காலியிடத்தில் பயிரிட'... நாற்றுக்கள் தயாராகிவருகின்றன...

சிந்தையைக் கவரும் வரிகள்

மாற்றம் வரவழைக்கும் கருக்கள்.

மனதைத் துளைக்கும் அம்புகள்.

வருங்காலம் வளமாகும்! நம்புங்கள் !

பிரேம்
03-01-2011, 04:57 AM
வரிகள் எல்லாம் அருமை... ரசித்தேன்..

கௌதமன்
03-01-2011, 12:33 PM
நீங்களும் கூப்பிடுங்கள்

எத்தனை முறை அழைத்தாலும்
வெளியே வர மறுக்கிறது
கிணற்றுக்குள்ளிருந்து நிலா!

கௌதமன்
05-01-2011, 05:02 PM
தொடர் தொல்லை

வயிற்றுக்கு உணவு கிடைக்கும்
கொஞ்சம் பொருத்திருங்கள் வரட்டும்
விளம்பர இடைவேளை

கௌதமன்
05-01-2011, 05:08 PM
சக்களத்தி சண்டை?

ஒவ்வொரு நிமிடத்திலும் அவளுடன் சந்திப்பு
மணிநேர காத்திருப்பு எனக்கா? சண்டையிடும்
கடிகார முட்கள்

கௌதமன்
06-01-2011, 03:51 PM
தூங்காத நண்பன்

தூக்கம் வந்த பிறகும்
மார்பின் மீது விழித்திருக்கிறது
புத்தகங்கள்

பாலகன்
06-01-2011, 03:55 PM
ஏன்னா நீங்க தூங்கிட்டீங்களே :D

மிக மிக அருமை நண்பா

கௌதமன்
06-01-2011, 04:25 PM
பெயர் பொருத்தம்

கண்ணோடு உறவு
காதுடன் அரவணைப்பு பெயெரென்னவோ
மூக்குக்கண்ணாடி

கீதம்
06-01-2011, 10:24 PM
தூங்காத நண்பன்

தூக்கம் வந்த பிறகும்
மார்பின் மீது விழித்திருக்கிறது
புத்தகங்கள்

புரள்கையில்தான் பிடிபடுகிறது,
விழித்திருக்கும் புத்தகம் பற்றிய ஞானோதயம்!
அசட்டையாய் தள்ளிவைத்துத் தூக்கம் தொடர...
ஏமாற்றப்பட்ட துக்கத்துடன் மூடியபுத்தகம் அருகில்!

அசத்தல் கவிதை! பாராட்டுகள் கெளதமன்.

ஜானகி
07-01-2011, 01:25 AM
சோளப்பொரிகள் மலர, மலர...

கை தட்டல்கள் தொடரத் தொடர....

இனிப்பும், காரமும் சேர்ந்த கலவை....

அருமை தான் !

கௌதமன்
07-01-2011, 12:37 PM
அழுது வடிகிறது

வெளிச்சக் கண்ணீரை
வீதியில் வடித்து அழுகிறது
தெருவிளக்கு

கௌதமன்
07-01-2011, 12:38 PM
நியாயமா?

இருட்டை விட்டுவிட்டு
வெளிச்சத்தை ஏன் விரட்டுகின்றன
கொசுக்கள்

கௌதமன்
07-01-2011, 12:40 PM
அவளைப்போலவே நீயும்

ஒவ்வொரு முறையும் கதவைத் திறந்தால்
உடனே பிரகாசிக்கிறாய், இதமாய் குளிர்விக்கிறாய்
குளிர்சாதனப்பெட்டியே!

கௌதமன்
07-01-2011, 12:42 PM
புதிய வருணம்

கல்லூரி வாழ்க்கையில்
தாழ்த்தப்பட்டவனாகிறான்
தமிழ் வழியில் படித்தவன்

கௌதமன்
07-01-2011, 12:43 PM
அழைப்பு

ஒவ்வொருமுறையும் வீட்டைப்பூட்டி வெளியே
வருகையில்தான் உள்ளிருந்து அழைக்கிறது
தொலைபேசி

கௌதமன்
07-01-2011, 04:38 PM
வியர்வை

இதழுறுஞ்சி நீ குளிர்பானம்
அருந்தும்போது வியர்க்கிறது
கோப்பைக்கு

கௌதமன்
08-01-2011, 02:09 PM
மிச்சம்

அவள் போன பிறகும்
அவளின் மிச்சமாய் கண்ணாடியில்
ஸ்டிக்கர் பொட்டு!

கௌதமன்
10-01-2011, 01:57 PM
கிழிப்பு

பிள்ளைகள் போட்டிப்போட்டதில்
2011 ஜூலை-12க்கு நாள் நகர்ந்தது
நாட்காட்டியில்

கௌதமன்
12-01-2011, 01:16 PM
கூடவே வந்தவன்

உச்சிவெயில் மண்டையைப் பிளக்க
காலடியில் ஒளிந்துகொண்டது
என் நிழல்

கௌதமன்
15-01-2011, 05:52 AM
புத்தாண்டு இலவசம்

முதலிரண்டு பக்கங்கள் முனைப்பாய் எழுதி
மீதி பக்கங்கள் வெறும்பக்கங்களாய் நிறைந்து கிடக்கிறது
ஒவ்வோராண்டு(ம்) டைரிகள்

கௌதமன்
20-01-2011, 03:31 PM
(கருமாறா) உருமாற்றம்

வாக்கியங்களை உடைத்து
வரிசை மாற்றினால் என்
கவிதை(?)

கௌதமன்
30-06-2011, 05:37 PM
பாடம் நடத்தத் தடை!!

ஆச்சர்யமாக, பள்ளிக்குப் போக
ஆலாய் பறக்கிறது பிள்ளைகள்
தமிழக அரசுக்கு நன்றி!

innamburan
30-06-2011, 09:35 PM
'புதிய வருணம்' ஒரு தருணமாகட்டும். நமக்கு முடிந்தவரை போற்றினால், தமிழன்னை தழுவ விழைவாள். அத்தருணம் நாடுக.

கீதம்
30-06-2011, 11:02 PM
பாடம் நடத்தத் தடை!!

ஆச்சர்யமாக, பள்ளிக்குப் போக
ஆலாய் பறக்கிறது பிள்ளைகள்
தமிழக அரசுக்கு நன்றி!

சத்தியமான வார்த்தைகள். என் தம்பி பிள்ளைகள் இதுபற்றிச் சொல்லும்போது மிகவும் வியப்பு உண்டாக்குகிறார்கள். ஆசிரியர்கள் அன்போடும், மகிழ்வோடும் பாடம் தவிர்த்து பல விஷயங்களையும் பேசுவதால் பள்ளி செல்ல மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். கதைகள், விளையாட்டு, வீடுகளில் நடக்கும் குறும்புகள், சமையல், சாப்பாடு என்று பல தலைப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் மனம் விட்டும், மாணவர்கள் ஆசிரியர்களிடம் பயம் விட்டும் பேசி பொழுதைப் போக்குவது இத்தனை வருடங்களில் இவர்கள் அறிந்திராத புதிய மாறுதல்...

புத்தகங்கள் வந்தபின் எல்லாவற்றுக்குமாய்ச் சேர்த்து அவர்களை கசக்கிப் பிழியாமல் இருக்கவேண்டும்.

நுண்ணிய சிந்தனையைக் கவிதையாக்கிய கெளதமனுக்குப் பாராட்டுகள்.

கௌதமன்
01-07-2011, 02:44 PM
அட...

தீபாவளிக்கு கொளுத்திப் போட்டவை
வெடித்துச் சிதறியதில் கிடைத்தன
என் கையெழுத்தில் காகிதங்கள்

கௌதமன்
03-07-2011, 02:59 PM
முறிவு

கடற்கரையில்
கால்நனைக்கத்தானேப் போனோம்
நீ ஏன் கைகழுவினாய்!!

கௌதமன்
04-07-2011, 01:27 AM
நாய்வால் (?)

டீக்கடையில் வாங்கிய பஜ்ஜியின்
எண்ணைய் உறிஞ்சிய காகிதத்தில்
லஞ்சம் வாங்கியவன் கைது!

Nivas.T
04-07-2011, 08:59 AM
நாய்வால் (?)

டீக்கடையில் வாங்கிய பஜ்ஜியின்
எண்ணைய் உறிஞ்சிய காகிதத்தில்
லஞ்சம் வாங்கியவன் கைது!

:aktion033::icon_clap::icon_clap::icon_clap::icon_clap::icon_clap:

கௌதமன்
04-07-2011, 01:51 PM
பேருந்து பயணம்

நேற்று இரவு அடைமழை
காலியாக இருந்ததன
ஜன்னலோர இருக்கைகள்

கீதம்
04-07-2011, 11:44 PM
சொலல்வல்லனின் சோளப்பொரிகளால்
சிந்தனைப் பசி தீர்ந்ததோடு
சீரணிக்கவும் சிலமணித்துளிகளாகும் விந்தை!

தொடரட்டும் தூவல்கள்!

கௌதமன்
05-07-2011, 01:44 AM
கவிதைகளுக்கு தலைப்பு ஒரு புரிதலை எளிதாக்கவே...மற்றபடி தலைப்பு இல்லாமல் கவிதைகளைப் படித்துப் பாருங்கள்....புரிதல் அவசியப்பட்டால் மட்டும் தலைப்பைப் பாருங்கள்.. நன்றி

ஜானகி
05-07-2011, 04:14 AM
பட படவெனப் பொரிந்துகொட்டும் சோளப் பொறிகளில், உப்பும் காரமும் சற்று தூக்கலாகவே இருக்கிறது.....இனிப்பு போட்ட பொறியும் கிடைக்குமா...?

கௌதமன்
05-07-2011, 02:07 PM
பட படவெனப் பொரிந்துகொட்டும் சோளப் பொறிகளில், உப்பும் காரமும் சற்று தூக்கலாகவே இருக்கிறது.....இனிப்பு போட்ட பொறியும் கிடைக்குமா...?

ஏனில்லாமல் இதோ இருக்கின்றனவே!

அவளைப்போலவே நீயும்

ஒவ்வொரு முறையும் கதவைத் திறந்தால்
உடனே பிரகாசிக்கிறாய், இதமாய் குளிர்விக்கிறாய்
குளிர்சாதனப்பெட்டியே!

வியர்வை

இதழுறுஞ்சி நீ குளிர்பானம்
அருந்தும்போது வியர்க்கிறது
கோப்பைக்கு

கிழிப்பு

பிள்ளைகள் போட்டிப்போட்டதில்
2011 ஜூலை-12க்கு நாள் நகர்ந்தது
நாட்காட்டியில்

கௌதமன்
05-07-2011, 02:23 PM
வன்முறை

இடிந்து கிடந்த கட்டிடத்தில்
சேதாரமில்லாமல் இருந்தார்
சிரிக்கும் புத்தர்

த.ஜார்ஜ்
05-07-2011, 03:53 PM
பேருந்து பயணம்

நேற்று இரவு அடைமழை
காலியாக இருந்ததன
ஜன்னலோர இருக்கைகள்

எளிமையான... காரமான.. கச்சிதமான கவிதைகள்.

கௌதமன்
06-07-2011, 01:36 AM
உலர்த்தும் வெயில்

சுள்ளென்ற வெயில்
சுகமாய் கிடந்தன
தோய்த்த ஆடைகள்

M.Jagadeesan
06-07-2011, 03:12 AM
கெளதமனின் சோளப்பொறிகள் அனைத்தும்
மனதைக் கவ்வும் வரிகள்.

ஆதி
07-07-2011, 04:36 PM
வன்முறை

இடிந்து கிடந்த கட்டிடத்தில்
சேதாரமில்லாமல் இருந்தார்
சிரிக்கும் புத்தர்

இடிந்த கட்டிடத்தில்
இடியாமல் இருந்தவன்
இடிந்திருந்தான் இலங்கையில்....

கௌதமன்
07-07-2011, 05:23 PM
‎-----------------------------​-----
இழப்பு
------------------------------​---
மயக்க பிஸ்கட்டால்
மறைந்து போனது
இரயில் ஸ்னேகம்
------------------------------​---

கௌதமன்
07-07-2011, 05:35 PM
இடிந்த கட்டிடத்தில்
இடியாமல் இருந்தவன்
இடிந்திருந்தான் இலங்கையில்....

நான் எழுதிய வரிகளின் உட்பொருளை நீங்கள் வெளிப்படுத்தி விட்டீர்கள்.

கௌதமன்
07-07-2011, 05:37 PM
சொலல்வல்லனின் சோளப்பொரிகளால்
சிந்தனைப் பசி தீர்ந்ததோடு
சீரணிக்கவும் சிலமணித்துளிகளாகும் விந்தை!

தொடரட்டும் தூவல்கள்!

எல்லாம் உங்களிடமிருந்து கற்றுக் கொண்டதுதான்.
பாராட்டுகளுக்கு நன்றி!

கௌதமன்
08-07-2011, 01:20 AM
-----------------------------------------
சுமை
-----------------------------------------
பள்ளி செல்லும் குழந்தைக்கு
முதலில் கிழிவது
புத்தகப்பை
-----------------------------------------

கௌதமன்
08-07-2011, 01:26 AM
----------------------------------------
நடுநிசி நாய்கள்
---------------------------------------
மூடப்பட்ட தெருவோரக்கடையின்
மீதமிருக்கிற கதகதப்பில்
குளிர்காய்கிறது தெருநாய்
----------------------------------------

கௌதமன்
08-07-2011, 05:08 PM
-------------------------------------
மறைப்பு
-------------------------------------
பிள்ளைகள் பார்க்காமல்
மறைத்து வைத்தேன்
என் பள்ளிக்கூட மதிப்பெண் அட்டை
-------------------------------------

M.Jagadeesan
08-07-2011, 05:24 PM
எதற்கு மறைத்து வைக்கவேண்டும்? சிறுவயதிலேயே கிழித்து எறிந்திருக்கலாமே?

கௌதமன்
08-07-2011, 06:12 PM
------------------------------------
நிம்மதி தரும்எண்ணெய் விலை
-----------------------------------
எண்ணெய் விலை உயர்வு
நிம்மதியாய் உறங்கட்டும்
காரினடியில் பூனை
-----------------------------------

கௌதமன்
09-07-2011, 01:41 PM
--------------------------------------------
:confused:
-------------------------------------------
விற்பனை பிரதிநிதி கேட்கும்போது மட்டும்
எல்லாம் இருந்து விடுகிறது
வீட்டில்
-------------------------------------------

கௌதமன்
09-07-2011, 01:47 PM
--------------------------------
கருத்தரங்கம்
--------------------------------
குளிரூட்டப்பட்ட அறையில்
குளிர்பானங்களுடன்
சூடான விவாதம்
--------------------------------

கௌதமன்
09-07-2011, 02:03 PM
எதற்கு மறைத்து வைக்கவேண்டும்? சிறுவயதிலேயே கிழித்து எறிந்திருக்கலாமே?

இப்போது குறைவாக இருந்தாலும் இருபது வருடங்களுக்கு முன்பு 90% என்பது ஓரளவு நல்ல மதிப்பெண் தானே ஐயா! ஏன் கிழிக்க வேண்டும்?

கௌதமன்
09-07-2011, 02:20 PM
-----------------------------------
ஈர்ப்பு விசை
-----------------------------------
நியூட்டனின் விதிகளால்
விளக்க முடியாதது உன்
விழியீர்ப்பு விசை
----------------------------------

கௌதமன்
09-07-2011, 04:13 PM
-----------------------------------------
கவனித்துப் பாருங்கள்
-----------------------------------------
அழைப்பு ஏதும் வராதபோதும்
அடிக்கடி வெளியே எடுக்கச் சொல்கிறது
காஸ்ட்லி செல்ஃபோன்
-----------------------------------------

கௌதமன்
09-07-2011, 04:42 PM
-----------------------------------------
அடப்பாவமே!
-----------------------------------------
பலூன்கள் குழந்தைகளுக்கு வேண்டாம்
ஊதிக் கொடுத்து ஊதிக்கொடுத்து
வாய் வலிக்கிறது
-----------------------------------------

கௌதமன்
09-07-2011, 04:47 PM
---------------------------------------
உங்களுக்கு...?
---------------------------------------
இன்னுமா குட்டிப் போடவில்லை
என் மூன்றாம் வகுப்பு புத்தகத்தில்
வைத்த மயிலிறகு
---------------------------------------

கௌதமன்
10-07-2011, 09:41 AM
-------------------------------------------
தெளிவு
------------------------------------------
படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை
நீக்கியப்பிறகும் குளத்தில்
நிறைந்திருக்கிறது ஆகாயம்
------------------------------------------

கௌதமன்
10-07-2011, 09:44 AM
---------------------------------
இராணுவத்துக்கு அல்ல
--------------------------------
உலகின் முதல் கண்டம் விட்டு
கண்டம் பாயும் ஏவுகணைகள்
பறவைகள்
--------------------------------

த.ஜார்ஜ்
10-07-2011, 04:25 PM
------------------------------------
நிம்மதி தரும்எண்ணெய் விலை
-----------------------------------
எண்ணெய் விலை உயர்வு
நிம்மதியாய் உறங்கட்டும்
காரினடியில் பூனை
-----------------------------------

எங்கள் வீட்டில் நாய்கள்.

கௌதமன்
10-07-2011, 06:01 PM
---------------------------------------
கடன் வருமா?
---------------------------------------
கட்டிலில் இருந்து காலாட்டாதீர்கள்
அடியில் இருக்கின்றன தாத்தாவின்
கண்ணாடி புட்டிகள்
---------------------------------------

கௌதமன்
11-07-2011, 03:30 PM
---------------------------------------------------
என்ன வேண்டும்?
---------------------------------------------------
நகரின் மிகப்பெரிய பேக்கரி
என் மகன் தேடியது
பொரி உருண்டை
---------------------------------------------------

பென்ஸ்
12-07-2011, 09:55 AM
அசாதாரணமான கவிதைகள் கௌதமன்...
சின்ன சின்ன விசயத்தை கூட அழகாக ரசித்து...
அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள்...

மரம்.. நாய்...
கடற்கரை கால்நனைப்பு... கை கழுவுதல்...
மழைக்கு பின்... ஜன்னலோர சீட்...

அருமை....

நாஞ்சில் த.க.ஜெய்
12-07-2011, 01:48 PM
வாழ்த்துகள் தோழர் கவுதமன் அவர்களே ...ஒவ்வொரு குறுங்கவிதையும் நிகழும் நடப்பினை பிரகாசிக்கும் முத்துகள் ....அருமை தொடருங்கள் ....

கௌதமன்
12-07-2011, 01:54 PM
-------------------------------------
வழியில் பயமில்லை...
-------------------------------------
பேருந்தின் ஜன்னலோரத்தில்
நிம்மதியாக தூங்கலாம்
பையில் பணமில்லை
-------------------------------------

தாமரை
12-07-2011, 02:14 PM
யார் பையில்? :confused::confused::confused:
(டிக்கெட் எடுக்க்காம நிம்மதியாகத் தூங்க முடியுமா?)

கௌதமன்
12-07-2011, 02:42 PM
யார் பையில்? :confused::confused::confused:
(டிக்கெட் எடுக்க்காம நிம்மதியாகத் தூங்க முடியுமா?)

தூங்குகிறவன் பையில் தான்...;)

டிக்கெட் எடுத்துட்டு நிம்மதியா தூங்கலாமே? (அதுக்கு மேல பணமில்லை!)

தாமரை
12-07-2011, 04:38 PM
தூங்குகிறவன் பையில் தான்...;)

டிக்கெட் எடுத்துட்டு நிம்மதியா தூங்கலாமே? (அதுக்கு மேல பணமில்லை!)
திருடனுக்கு சுற்றி யார் கையிலும் பணம் இல்லையென்றால் நல்ல தூக்கம் வரும்..

டிக்கெட் எடுத்திட்டா தூங்கலாம் ஆனா எழுந்திருக்க முடியாது.. :eek::eek::eek:

கௌதமன்
12-07-2011, 04:57 PM
------------------------------------------
இது இ-மெயில் காலம்
------------------------------------------
மறந்து போய்விட்டது எனக்கு!
எப்படி இருக்கும் இப்போது
இன் - லாண்ட் லெட்டர் ?
------------------------------------------

கீதம்
12-07-2011, 10:58 PM

நல்லவேளை,
எனக்கு மறக்கவில்லை இன்-லாண்ட் லெட்டர்!
மறந்துபோனது...
அதைப் பிரிக்கும் வித்தை மட்டுமே! :frown:

மனம் நிறைந்த பாராட்டுகள் கெளதமன். :icon_b:

கௌதமன்
13-07-2011, 05:05 PM
அசாதாரணமான கவிதைகள் கௌதமன்...
சின்ன சின்ன விசயத்தை கூட அழகாக ரசித்து...
அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள்...

மரம்.. நாய்...
கடற்கரை கால்நனைப்பு... கை கழுவுதல்...
மழைக்கு பின்... ஜன்னலோர சீட்...

அருமை....

சோளப்பொரிகளிலும் கவனம் வைத்ததற்கு மிக்க நன்றி பென்ஸ்!

வாழ்த்துகள் தோழர் கவுதமன் அவர்களே ...ஒவ்வொரு குறுங்கவிதையும் நிகழும் நடப்பினை பிரகாசிக்கும் முத்துகள் ....அருமை தொடருங்கள் ....

மிக்க நன்றி த.க.ஜெய்!

நல்லவேளை,
எனக்கு மறக்கவில்லை இன்-லாண்ட் லெட்டர்!
மறந்துபோனது...
அதைப் பிரிக்கும் வித்தை மட்டுமே! :frown:

மனம் நிறைந்த பாராட்டுகள் கெளதமன். :icon_b:

சிறு வயதில் பலமுறை நானும் தவறாய் கிழித்து இருக்கிறேன். இன் - லாண்ட் லெட்டரை இப்போது பார்க்கும் போதும் S வடிவ கம்பியில் என் தாத்தா கடிதங்களை செருகி அடிக்கி வைத்திருக்கும் இளம்பிராய நினைவு வருகிறது. நன்றி கீதம்.

கௌதமன்
16-07-2011, 01:36 PM
---------------------------------------
தடுமாற்றம்
---------------------------------------
வார்த்தைத் தடுமாறும் போது
அதை மறைக்க முயல்கிறது
போலியாக ஒரு இருமல்!
---------------------------------------

கௌதமன்
16-07-2011, 01:49 PM
-----------------------------------------------------
கால விரயம்?
-----------------------------------------------------
உன்னோடு பேசிக்கொண்டிருக்கும்பொது மட்டும்
ஏன் காணாமல் போய்விடுகிறது
என் கைக்கடிகாரம்
-----------------------------------------------------

innamburan
16-07-2011, 06:03 PM
ஈற்றடி பிரமாதம்.This is Einstein's Relativity Doctrine.

கௌதமன்
16-07-2011, 06:29 PM
ஈற்றடி பிரமாதம்.This is Einstein's Relativity Doctrine.

நன்றி ஐயா! வெளியின் நான்காவது பரிமாணம் காலம் என்பதைக் காட்ட ஒருவேளை ஒளியின் வேகத்தில் எண்ணங்கள் பறந்தனவோ.

கௌதமன்
10-08-2011, 04:51 PM
-----------------------------------------------
சரியான நேரம்
----------------------------------------------
நாலைந்து இருந்தாலும்
எப்போதும் சரியாக காட்டுவது
ஓடாத ஒரு கடிகாரம், நாளைக்கு இருமுறை
-----------------------------------------------

கீதம்
10-08-2011, 09:49 PM
நச்சுனு இருக்கு. எதுக்கும் லாயக்கில்லன்னு யாரையும் சொல்லக்கூடாது இல்லையா? பாராட்டுகள் கெளதம்.

கௌதமன்
12-08-2011, 03:06 PM
---------------------------------------------------
கூட்டணி அவசியம்
---------------------------------------------------
விருப்பமில்லாத கூட்டம்
துணையை எதிர்பார்க்கிறது கண்கள்
எழுந்து வெளியேற!
----------------------------------------------------

கௌதமன்
12-08-2011, 03:26 PM
-----------------------------------------------
சமச்சீர் புத்தகங்கள்
-----------------------------------------------
படித்து முடித்து பிள்ளைகள் செய்வதும்
படிக்கும் முன்பே ஆசிரியர்கள் செய்வதும்
புத்தகக்கிழிப்பு..
-----------------------------------------------

M.Jagadeesan
12-08-2011, 04:06 PM
காலத்திற்கேற்ற சிந்தனை!

நாஞ்சில் த.க.ஜெய்
13-08-2011, 06:51 PM
விருப்பமில்லாத கூட்டம்
துணையை எதிர்பார்க்கிறது கண்கள்
எழுந்து வெளியேற!

மாறுபடும் விருப்பம் நிச்சயம் உண்டு
யாரேனும் ஒருவருடன் கூட்டணி...

கருணை
14-08-2011, 06:23 AM
பேருந்து பயணம்

நேற்று இரவு அடைமழை
காலியாக இருந்ததன
ஜன்னலோர இருக்கைகள்

உலர்த்தும் வெயில்

சுள்ளென்ற வெயில்
சுகமாய் கிடந்தன
தோய்த்த ஆடைகள்

‎-----------------------------​-----
இழப்பு
------------------------------​---
மயக்க பிஸ்கட்டால்
மறைந்து போனது
இரயில் ஸ்னேகம்
------------------------------​---

-----------------------------------------
சுமை
-----------------------------------------
பள்ளி செல்லும் குழந்தைக்கு
முதலில் கிழிவது
புத்தகப்பை
-----------------------------------------

-------------------------------------
மறைப்பு
-------------------------------------
பிள்ளைகள் பார்க்காமல்
மறைத்து வைத்தேன்
என் பள்ளிக்கூட மதிப்பெண் அட்டை
-------------------------------------

-----------------------------------
ஈர்ப்பு விசை
-----------------------------------
நியூட்டனின் விதிகளால்
விளக்க முடியாதது உன்
விழியீர்ப்பு விசை
----------------------------------

-----------------------------------------
கவனித்துப் பாருங்கள்
-----------------------------------------
அழைப்பு ஏதும் வராதபோதும்
அடிக்கடி வெளியே எடுக்கச் சொல்கிறது
காஸ்ட்லி செல்ஃபோன்
-----------------------------------------

-----------------------------------------
அடப்பாவமே!
-----------------------------------------
பலூன்கள் குழந்தைகளுக்கு வேண்டாம்
ஊதிக் கொடுத்து ஊதிக்கொடுத்து
வாய் வலிக்கிறது
-----------------------------------------

---------------------------------------
உங்களுக்கு...?
---------------------------------------
இன்னுமா குட்டிப் போடவில்லை
என் மூன்றாம் வகுப்பு புத்தகத்தில்
வைத்த மயிலிறகு
---------------------------------------

-------------------------------------------
தெளிவு
------------------------------------------
படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை
நீக்கியப்பிறகும் குளத்தில்
நிறைந்திருக்கிறது ஆகாயம்
------------------------------------------

---------------------------------------------------
என்ன வேண்டும்?
---------------------------------------------------
நகரின் மிகப்பெரிய பேக்கரி
என் மகன் தேடியது
பொரி உருண்டை
---------------------------------------------------

-------------------------------------
வழியில் பயமில்லை...
-------------------------------------
பேருந்தின் ஜன்னலோரத்தில்
நிம்மதியாக தூங்கலாம்
பையில் பணமில்லை
-------------------------------------

------------------------------------------
இது இ-மெயில் காலம்
------------------------------------------
மறந்து போய்விட்டது எனக்கு!
எப்படி இருக்கும் இப்போது
இன் - லாண்ட் லெட்டர் ?
------------------------------------------

---------------------------------------
தடுமாற்றம்
---------------------------------------
வார்த்தைத் தடுமாறும் போது
அதை மறைக்க முயல்கிறது
போலியாக ஒரு இருமல்!
---------------------------------------

என்னை கூட எழுத தூண்டும் எழுத்து ... கவனத்தில் கண்டதை எல்லாம் கவிதைகளில் தருகிறீர்கள் . அருமையாக இருக்கிறது :icon_b:

கௌதமன்
14-08-2011, 01:36 PM
நச்சுனு இருக்கு. எதுக்கும் லாயக்கில்லன்னு யாரையும் சொல்லக்கூடாது இல்லையா? பாராட்டுகள் கெளதம்.

நன்றி கீதம். ஓடாத எந்தொவொரு கடிகாரமும் காட்டும் நேரம், ஒரு நாளில் இருமுறை சரியானதாக இருக்கும். என்னவொன்று நாம் சரியாக அந்த நேரத்தில் அந்தக்கடிகாரத்தை பார்த்துக்கொள்ள வேண்டும்.

காலத்திற்கேற்ற சிந்தனை!

நன்றி ஐயா!

மாறுபடும் விருப்பம் நிச்சயம் உண்டு
யாரேனும் ஒருவருடன் கூட்டணி...

ஏதேனும் கூட்டத்தில் அல்லது கருத்தரங்கில் நிகழ்வுகள் பிடிக்காமல் எழுந்து போகும் கூட்டம் தனியாக போவது இல்லை. நாலைந்து பேர் சேர்ந்துதான் போவார்கள். அல்லது யாராவது எழுகிறார்களாவென்று காத்திருப்பார்கள். அதுதான் இந்தப்பதிவு.

நன்றி ஜெய்.

என்னை கூட எழுத தூண்டும் எழுத்து ... கவனத்தில் கண்டதை எல்லாம் கவிதைகளில் தருகிறீர்கள் . அருமையாக இருக்கிறது :icon_b:

இந்த சாதாரணக் கவிதைகள் கூட மன்றத்தில் மற்றவர்களைப் பார்த்து எழுதப்பழகியதால் விளைந்ததுதான். முயன்றால் நீங்களும் இதைவிட சிறப்பாக எழுதலாம். நன்றி கருணை.

கௌதமன்
14-08-2011, 02:06 PM
-------------------------------------------
புதுசு...பத்திரம்..
------------------------------------------
அடைமழையுடன் பெருங்காற்று
நல்லவேளை பத்திரமாக இருக்கிறது
விரிக்கப்படாமல் புதுக்குடை
------------------------------------------

கௌதமன்
16-08-2011, 05:25 PM
----------------------------------------
மனசாட்சி
----------------------------------------
அடித்துப்பிடித்து ஏறி இடம்கிடைத்தும்
இருக்க முடியாமல் எழவைக்கிறாள்
நிற்கும் வயதான பாட்டி!
----------------------------------------

நாஞ்சில் த.க.ஜெய்
16-08-2011, 05:44 PM
மனசாட்சி

அடித்துப்பிடித்து ஏறி இடம்கிடைத்தும்
இருக்க முடியாமல் எழவைக்கிறாள்
நிற்கும் வயதான பாட்டி!நமது இரக்கமுள்ள மனதில் பெரியவர்களுக்கு உதவினோம் எனும் மனதிருப்தி...இந்த கவிதை நன்றாக உள்ளது தோழரே ...

சான்வி
17-08-2011, 04:10 AM
இந்த நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் உங்கள் கவி மலர்கள் நூறாவது இருக்கும். நிறம் பிடித்தது ஒன்றில், மணம் பிடித்தது ஒன்றில், மனம் நிறைந்தது ஒன்றில். குறை இன்றி அனைத்தும் சுவை நிறைந்தவை.

வாசிக்கும்போது நேசிக்க வைத்தன சில வரிகள். வாசிக்கும்போதே யோசிக்க வைத்தன சில வரிகள்.

அருமையான பகிர்வு.

கௌதமன்
17-08-2011, 03:48 PM

நன்றி சான்வி. எழுதும் விஷயத்தில் எனக்கும் உங்களைப் போலவே ஆரம்ப சுணக்கம் இருந்தது(ஆனால் கர்ணன் கதையைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை). அதனாலேயே சின்னச்சின்னதாய் எழுதி பின்னர் மன்றத்தில் உங்களைப்போன்றோரின் கவனத்தாலும் பாராட்டுகளாலும் அதுவே தொடர்கிறது.

நமது இரக்கமுள்ள மனதில் பெரியவர்களுக்கு உதவினோம் எனும் மனதிருப்தி...இந்த கவிதை நன்றாக உள்ளது தோழரே ...

நன்றி ஜெய். இந்த அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் தானே.

கௌதமன்
11-11-2011, 02:19 PM
--------------------------------------------------------
என் மகிழுந்து வண்டி
--------------------------------------------------------
அப்பாடா! இனி அடிக்கடி கழுவித் துடைத்து
பளபளப்பாய் வைத்திருக்க வேண்டாம்
விழுந்துவிட்டது முதல் கீறல்!
--------------------------------------------------------

கௌதமன்
11-11-2011, 02:27 PM
--------------------------------------------------------
புத்தக அலமாரி
--------------------------------------------------------
ஒழுங்காக அடுக்கி வைத்ததை
எடுப்பதைவிட எளிதாக இருக்கிறது
இறைந்து கிடப்பதிலிருந்து தேடி எடுப்பது
--------------------------------------------------------

ஆதி
15-11-2011, 06:53 AM
--------------------------------------------------------
என் மகிழுந்து வண்டி
--------------------------------------------------------
அப்பாடா! இனி அடிக்கடி கழுவித் துடைத்து
பளபளப்பாய் வைத்திருக்க வேண்டாம்
விழுந்துவிட்டது முதல் கீறல்!
--------------------------------------------------------

இந்த கவிதையில் உள்ள நோக்குகளை எப்படி வேண்டுமனானாலும் சொல்லலாம்..

புது வண்டியில் பட்ட கீறலுக்கு பதறாமல், இனி துடைக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆயாசம் கொள்வது கூட ஒரு புத்த பார்வைதான் கௌதமன்..

வாழ்த்துக்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2011, 07:14 AM
சந்தோசம் கொண்ட நிகழ்வுகளை தொலைத்து வருத்தம் கொண்ட நிகழ்வை கண்டு மனம் கொள்வது தான் நிம்மதியோ ?

M.Jagadeesan
15-11-2011, 01:29 PM
"கந்தையானாலும் கசக்கிக்கட்டு" என்பது பழமொழி. அதுபோல ஓட்டை கார் ஆனாலும் தினமும் துடைக்கவேண்டும்.

கௌதமன்
15-11-2011, 02:23 PM
------------------------------------------
தாயின் கவலை...
------------------------------------------
அமாவாசை ஏன் தான் வருகிறதோ?
எதைக்காட்டி சோறூட்டுவேன்
அடம்பிடிக்கும் குழந்தைக்கு
-------------------------------------------

------------------------------------------
தாயின் கவலை...2
------------------------------------------
ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை
எதைக்காட்டி சோறூட்டுவேன்
அடம்பிடிக்கும் குழந்தைக்கு

-------------------------------------------

------------------------------------------
தாயின் கவலை...3
------------------------------------------
எதைக்காட்டி சோறூட்டுவேன்
இன்றெந்தன் குழந்தைக்கு
ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை?
-------------------------------------------

வேறொன்றுமில்லை எது ஓரளவு கவிதைக்குரிய வடிவத்தில் இருக்கிறது எனபதில் சிறு குழப்பம்...யாராவது உதவுங்களேன்

குணமதி
16-11-2011, 10:54 AM
இப்போதுதான் இந்தப்பக்கம் வந்தேன் கவுதமன்.
நறுக்குகள் அருமை!
நூலாக்குங்கள்.

கௌதமன்
16-11-2011, 03:09 PM
இந்த கவிதையில் உள்ள நோக்குகளை எப்படி வேண்டுமனானாலும் சொல்லலாம்..

புது வண்டியில் பட்ட கீறலுக்கு பதறாமல், இனி துடைக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆயாசம் கொள்வது கூட ஒரு புத்த பார்வைதான் கௌதமன்..

வாழ்த்துக்கள்

நன்றி ஆதன்! எல்லாம் சொந்த அனுபவம் தான்.

சந்தோசம் கொண்ட நிகழ்வுகளை தொலைத்து வருத்தம் கொண்ட நிகழ்வை கண்டு மனம் கொள்வது தான் நிம்மதியோ ?

நன்றி ஜெய். சந்தோஷமும், வருத்தமும் கலந்தது தானே வாழ்க்கை.

"கந்தையானாலும் கசக்கிக்கட்டு" என்பது பழமொழி. அதுபோல ஓட்டை கார் ஆனாலும் தினமும் துடைக்கவேண்டும்.

நன்றி ஐயா! புதுசா இருக்கும் போது ’தினமும் கழுவியேத் தீர வேண்டும்’ என்று உள்மனம் சொல்லும். அதே மனம் முதல் கீறலுக்குப் பிறகு அடங்கிக் கிடக்கும். [மனசை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தி வெச்சிருக்கிறொம்....:traurig001:]

இப்போதுதான் இந்தப்பக்கம் வந்தேன் கவுதமன்.
நறுக்குகள் அருமை!
நூலாக்குங்கள்.

அப்படியா...! நன்றி குணமதி!
இன்னும் நறுக்குகள் சேரட்டும்...ஆக்கிடலாம்.
[என்ன செய்ய? தமிழ் கூறும் நல்லுலகுக்கு எப்படியெல்லாம் சோதனை வருது..]

கௌதமன்
17-11-2011, 04:21 PM
-----------------------------------------
வானிலை அறிக்கை
-----------------------------------------
வானொலி செய்திகளை

குழந்தைகளும் கேட்கத் தூண்டுகிறது

பள்ளி விடுமுறை அறிவிப்பு!

-----------------------------------------

கீதம்
18-11-2011, 05:12 AM
------------------------------------------
தாயின் கவலை...
------------------------------------------
அமாவாசை ஏன் தான் வருகிறதோ?
எதைக்காட்டி சோறூட்டுவேன்
அடம்பிடிக்கும் குழந்தைக்கு
-------------------------------------------

------------------------------------------
தாயின் கவலை...2
------------------------------------------
ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை
எதைக்காட்டி சோறூட்டுவேன்
அடம்பிடிக்கும் குழந்தைக்கு

-------------------------------------------

------------------------------------------
தாயின் கவலை...3
------------------------------------------
எதைக்காட்டி சோறூட்டுவேன்
இன்றெந்தன் குழந்தைக்கு
ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை?
-------------------------------------------

வேறொன்றுமில்லை எது ஓரளவு கவிதைக்குரிய வடிவத்தில் இருக்கிறது எனபதில் சிறு குழப்பம்...யாராவது உதவுங்களேன்

மூன்று வடிவங்களுமே நன்றாக உள்ளன, என்றாலும் இரண்டாவது வடிவம் எனக்குப் பிடித்துள்ளது.

இவற்றையும் கொஞ்சம் பாருங்களேன்.

எதைக் காட்டி சோறூட்டுவேன்,
அடம்பிடிக்கும் என் குழந்தைக்கு,
இந்த அமாவாசை நாளில்!

நிலா கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைக்கு
எப்படிப் புரியவைப்பேன்,
இன்று அமாவாசையென்பதை!

நாஞ்சில் த.க.ஜெய்
18-11-2011, 10:08 AM
தாயின் கவலை...2
------------------------------------------
ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை
எதைக்காட்டி சோறூட்டுவேன்
அடம்பிடிக்கும் குழந்தைக்கு

மிகவும் அருமை இந்த வரிகளினூடே வந்த மாறுபட்ட சிந்தனை ..

sureshteen
11-12-2011, 03:59 AM
ரசிகர்கள் இன்றி
இன்னிசைக் கச்சேரி
பாடும் குயில்கள்.

கௌதமன்
27-03-2012, 02:58 PM
----------------------------------------------------------
இருக்கு...ஆனா இல்லை
----------------------------------------------------------

எலக்ட்ரிக் குக்கர், மைக்ரோ வேவ் அவன்
இன்டக்சன் அடுப்பு...
படுசுத்தமாக சமையலறை
கடையில் சாப்பாடு
----------------------------------------------------------

கௌதமன்
27-03-2012, 03:01 PM
----------------------------------------------
இருளானந்தம் (?)
---------------------------------------------
எத்தனை ஆனந்தம்
இந்த நிலாச்சோறு
நன்றி மின்சார வெட்டு...
---------------------------------------------

M.Jagadeesan
27-03-2012, 04:00 PM
சோளப் பொரிகள் அனைத்தும் அருமை.

கீதம்
28-03-2012, 04:43 AM
சொற்பொரிகள் வெடித்து கவிதை மலரும் அழகே அழகு. பாராட்டுகள்.

கலைவேந்தன்
20-04-2012, 03:58 PM
அனைத்து வரிகளும் வாசித்தேன். அருமை கௌதமன்.. பாராட்டுகள்..!

கலைவேந்தன்
20-04-2012, 04:02 PM
------------------------------------------
தாயின் கவலை...
------------------------------------------
அமாவாசை ஏன் தான் வருகிறதோ?
எதைக்காட்டி சோறூட்டுவேன்
அடம்பிடிக்கும் குழந்தைக்கு
-------------------------------------------

------------------------------------------
தாயின் கவலை...2
------------------------------------------
ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை
எதைக்காட்டி சோறூட்டுவேன்
அடம்பிடிக்கும் குழந்தைக்கு

-------------------------------------------

------------------------------------------
தாயின் கவலை...3
------------------------------------------
எதைக்காட்டி சோறூட்டுவேன்
இன்றெந்தன் குழந்தைக்கு
ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை?
-------------------------------------------

வேறொன்றுமில்லை எது ஓரளவு கவிதைக்குரிய வடிவத்தில் இருக்கிறது எனபதில் சிறு குழப்பம்...யாராவது உதவுங்களேன்

நிலாகாட்டி சோறூட்ட
அடம்பிடிக்கும் குழந்தை
அமாவாசை

கௌதமன்
21-04-2012, 03:44 AM
---------------------------------------------------
தமிழ் வருடப் பிறப்பு
---------------------------------------------------
மற்ற பத்தும்
மனதுக்குள் பொருமின
நமக்கும் இல்லையா வாய்ப்பு...
---------------------------------------------------

M.Jagadeesan
21-04-2012, 06:52 AM
முயலும் ஆமையும்போல் தையும், சித்திரையும்
முட்டிக் கொண்டன முதலில்யார் வருவதென்று
சித்திரையே வென்றதென சிலபேர் ஆர்ப்பரிப்பார்
இத்தரையில் தைமகள் வெல்லும் காலம்வரும்.

கௌதமன்
22-04-2012, 05:22 AM
நன்றி நாஞ்சில் த.க.ஜெய், sureshteen, கீதம், கலைவேந்தன், ஜெகதீசன் ஐயா....

நாகரா
14-05-2012, 11:25 AM
----------------------------------------------
இருளானந்தம் (?)
---------------------------------------------
எத்தனை ஆனந்தம்
இந்த நிலாச்சோறு
நன்றி மின்சார வெட்டு...
---------------------------------------------
நிலா பரிமாறுஞ்
சூரியச் சோறு
அரிசிச் சோறொடு
கௌதமனின் கவி ரசத்தோடு
உண்ண ஞாபகம்
மின்சாரந் தாண்டிய நம் சாரம்

கவி ரசச் சோறுக்கு வாழ்த்துக்கள் கௌதமன்

கௌதமன்
14-05-2012, 05:03 PM
நன்றி நண்பர் நாகரா...

கௌதமன்
05-12-2012, 01:57 PM
இரசாயனம் போடாத கத்தரிக்காய்

அறுக்கும் போது அழகாக இருந்தது

சுருண்டிருக்கும் புழு

கௌதமன்
13-12-2012, 05:29 PM
விலை ஏறிய பிறகும்

ஏற்றம் பெறவில்லை

புது சரக்கின் போதை

jayanth
14-12-2012, 05:36 AM
விலை ஏறிய பிறகும்

ஏற்றம் பெறவில்லை

புது சரக்கின் போதை

http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif.....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif.....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif