PDA

View Full Version : தலைப்பற்ற குறுங்கவிதை



ஆதி
28-12-2010, 12:14 PM
ஒன்றொன்றின் முடிவிலும்
தேவைப்படுகிறது ஒரு மூன்றாம் நாள்
அதிலிருந்து உயிர்த்தெழ.

ஒவ்வொரு உயிர்த்தெழுதலிலும்
தேவைப்படுகிறான் ஒரு புத்தன்
அதில் விழித்தெழ*

நாகரா
28-12-2010, 12:51 PM
நெஞ்சென்னும் மடியில்
அன்பொன்றின் பிடியில்
தலை பற்றத்
தலை பற்றும்
ஞானத் தீயில்
மெய்ம்மையின் விழித்தெழுதலால்
மெய்யுள்ளே உயிர்த்தெழுதல்

தலை பற்றி தலை பற்ற வைத்த தலைப்பற்றக் குறுங் கவிதைக்கு வாழ்த்துக்களும் நன்றியும் ஆதன்.

Hega
01-01-2011, 09:17 PM
நறுக்கென விதைகபட்ட கவிதை .

உயிர்த்தெழுதலுடன் விழித்தெழ மூன்றுநாள் போதுமானதாய் இருந்தது இயேசுவுக்கு.
விழித்தெழுதலுடன் உயிர்த்தெழ புத்தனுக்கு போதிமரம் போதுமானதாய் இருந்தது.

ஆனால் மனிதனுக்கோ ஒவ்வொன்றின் முடிவிலும் புத்தனும் இயேசும் போதாதிருக்க்கிறார்கள் ஆதி.
எத்தனை இயேசுக்கள்,புத்தன்கள் வந்தாலும் முடிவென்பது முடிவிலியாய்.............

அருமை தொடர்ந்து எழுதுங்கள் ஆதி

ஜானகி
02-01-2011, 12:58 AM
கொடுத்துவைத்தவர்தான் நீங்கள் !

மீண்டுஎழ மூன்று நாள் போதுமானதாகிறதே !

வேண்டியபடி புத்தனும் கிடைக்கிறானே !

சந்தோஷப் படுங்கள்!

தலையும் தேவையில்லை !

வாலும் தேவையில்லை !

சத்தைப் பிடித்துவிட்டீர்களே ?

வானவர்கோன்
02-01-2011, 06:04 AM
பல அர்த்தங்களைப் புகுத்திக் கவி படைத்த ஆதனுக்குப் பாராட்டுக்கள்.

கௌதமன்
02-01-2011, 06:44 AM
சில முடிவுகள் முடிவல்ல
பல தொடக்கத்துக்கான விதைகள்;
ஞானத்தின் விழி திறக்கும்வரை
சில ஆரம்பங்கள் ஆரம்பங்களுமல்ல;
பிரபஞ்ச சுழற்சியும் அதுதான்
முடிவிலிருந்து ஆரம்பம்
ஆரம்பித்த இடத்திலேயே முடிவு
இடையில் ஞான விழிப்பு!

நன்றி ஆதன்!
உங்கள் கவிதை விதைகளில்
முளைத்த பயிர்களில் நானும் ஒருவன்!