PDA

View Full Version : கடவுள்.



CEN Mark
28-12-2010, 12:06 PM
கடவுள் - 1
பொருள்களே அதிர்வுகளாய்..
அதிர்வுகளே பொருள்களாய்..
மொழியின் அதிர்வுகளும்
மந்திர வார்த்தைகளாய்....
அதிரும் ஷக்தி
உடலின் சலனங்களாய் ....
உடலின் சலனம்
உயிரின் அதிர்வுகளாய்....
அதிரும் அலைகளே
கல்லினுள் ஷக்தியாய் ...
ஷக்தியின் சலனமே
பூமியில் கடவுளாய்....
கடவுளின் தன்மைக்கு
மந்திரமே கவசங்களாய்...

மனிதனே .....
அதிர்வுகளாய் .....
சலனங்களாய்....
ஷக்தியாய் .....
கடவுளாய்.....

CEN Mark
28-12-2010, 12:07 PM
கடவுள் - 2
சிலையிலென்பார் - சித்திர
வடிவிலென்பார்
மலையிலென்பார் - மாதவ
முனியிலென்பார் ...
கண்டவரும் விண்டிலர்
விண்டவரும் கண்டிலர்

சின்னக் குழந்தையிலென்பார்
சுற்றித்திரியும் பித்தனிடமென்பார்
அம்மா என்பார்
அப்பா என்பார்
ஆசான் என்பார்............

செத்தவனே கடவுள்
ஏழையின் வீட்டில்
கொடுப்பவனே கடவுள்
செல்வந்தனின் நாட்டில்
கற்பனையே கடவுள்
சித்தர்களின் பாட்டில்...




__________________

கௌதமன்
28-12-2010, 02:59 PM
ZEN கவிதையோன்னு பார்த்தேன்!
அட நம்ம CEN கவிதைகள்!
(வெட்டி ஒட்டும் பிரச்சனை முடிந்தது இல்லையா?)

றெனிநிமல்
28-12-2010, 03:13 PM
அருமையாக இருக்கின்றது கவிதைகள்.

அனைத்தையும் ஒரேயடியாக பதிக்காமல்
தனித்தனியே பொருமையாக பதித்தால்,
விமர்சித்து பின்ணூட்டம் இட வசதியாக
இருக்குமே நண்பரே!

CEN Mark
28-12-2010, 04:57 PM
அருமையாக இருக்கின்றது கவிதைகள்.

அனைத்தையும் ஒரேயடியாக பதிக்காமல்
தனித்தனியே பொருமையாக பதித்தால்,
விமர்சித்து பின்ணூட்டம் இட வசதியாக
இருக்குமே நண்பரே!

அப்படியே ஆகட்டும். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. நீங்கள் விரும்பியதுபோல் பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்

வியாசன்
28-12-2010, 07:14 PM
அது என்ன சென் மார்க்?

கொடுப்பவனே கடவுள் என்று தர்மத்துக்கு இடம் கொடுத்து சிந்தனையில் உயர்ந்தவனே நீயும் கடவுள்தான் படைப்பதனால்
கருவில்லா கவிதைகளிடையே ஆழமான கவிதைகள் .நீ நீடுழி வாழ்க.

CEN Mark
29-12-2010, 06:51 AM
அது என்ன சென் மார்க்?

கொடுப்பவனே கடவுள் என்று தர்மத்துக்கு இடம் கொடுத்து சிந்தனையில் உயர்ந்தவனே நீயும் கடவுள்தான் படைப்பதனால்
கருவில்லா கவிதைகளிடையே ஆழமான கவிதைகள் .நீ நீடுழி வாழ்க.


CEN எனது குடும்ப அடையாளம் .(C - சித்ரா, E - இலக்கியா, N - நாகேஸ்வரன்). பாராட்டுதலுக்கு நன்றி.