PDA

View Full Version : மெய்ஞ்ஞானக் கணக்கு?!



நாகரா
28-12-2010, 06:03 AM
பதி(ன்)மூன்றே(13)
"நான்"முகமெடுத்த(4)
"நீ"
(நீயோ
பொய்ம்முகங்கள் பல பூசி
"நான்"முகத்தை மறைப்பாய், மறுப்பாய், வெறுப்பாய்)

பி.கு:
13 பன்முகப் பரிமாண அருவக் கடவுளின் படிமம். (1+3 = )4 முப்பரிமாண உருவ திடத்தின் படிமம் முப்பரிணாம திடம் உருவாகக் குறைந்த பட்சம் "நான்"கு புள்ளிகள் அவசியம். "நான்"கில் "நான்" இருப்பது மெய்ஞ்ஞான அதிசயம்!

பதி(ன்)மூன்று = சச்சிதானந்தம்(சத்து, சித்து, ஆனந்தம்) = பிதா குமாரன் பரிசுத்த ஆவி = அல்லா புனித ரு(Ruh), ரசூல்(நபிகள்) = பரப்பிரம்மண் ஆதிசக்தி சற்குரு

பிரேம்
28-12-2010, 08:46 AM
அருமை..அருமை..(ஆனா எனக்குத்தான் எதுமே புரியல..)

நாகரா
28-12-2010, 09:00 AM
பிரேமமே பதி(ன்)மூன்று பிரேம்நீர் நான்கு
பிரதானமாம் பிரேமத்தின் பிரகாசமே பிரேம் நீர்
பிரவாகமாய்ப் பெருகிடும் பிரேமநீர் பிரேம் நீர்
பிரசாதமாய்ப் பருகுவீர் பகிர்வீர்

பிரேமம் = நேசம் = அன்பு

உம் வருகைக்கும், புரியாமலும் அருமை உணர்ந்தமைக்கும் நன்றிகள் பிரேம்

ஜானகி
28-12-2010, 10:47 AM
பிரமிப்பாக இருக்கிறது ! சித்தர் மொழி போல புரிந்தும், புரியாமலும் இருக்கிறது. இப்படி விமர்சனம் செய்யும் தகுதி கூட எனக்கு உண்டா.... தெரியவில்லை !

நாகரா
28-12-2010, 12:32 PM
உம் அன்பின் மிகுதிக்கு நன்றி ஜானகி, என் வரிகளை விமர்சனம் செய்யுந் தகுதி நிச்சயம் உமக்கு உண்டு.

பாலகன்
28-12-2010, 01:51 PM
13 நாயன்மார்களா?
மூவொரு கடவுள் என்பது புரிகிறது நாகரா அண்ணா?
இன்னும் விளக்கம் தரமுடியுமா?

நாகரா
28-12-2010, 02:48 PM
13 நாயன்மார்களோ ஆழ்வார்களோ இல்லை.

13 அல்லாஹ்வின் படிமம் குறியீடு

13 லேயே ஓர்மையே மும்மையான உண்மையும் உள்ளது

பதி(ன்)மூன்று திரித்துவ ஒருமையைக் குறிக்கிறது

13 = மகாபிரபுவான ஓர்மை

4 = அம்மகாபிரபு ஓர்மையின் திரு வடிவம், நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும்

Wherever you turn, there is the Face(Countenance) of Allaah - இது புனிதக் குர் - ஆனின் அருண்மொழி, "எங்கே திரும்பினும் அல்லாஹ்வின் முகமது"

அல்லாஹ் = 13
அல்லாஹ்வின் திரு முகமது = 4 = இந்த "நான்"முகம் தான் உமது!

"நான்" என்ற அரும்பளிங்கின் மேல் படியும் அனந்த இறுக்கங்களாகிய ஆணவ தூசு அகற்ற, அல்லாஹ்வை அது (நான்) பிரதிபலிக்கும்!

ஆளாகிய மகாபிரபு நான்காக நான்முகமாகத் தன்னை உணர, ஆண்டவ மகாபிரபு பதி(ன்)மூன்றின் உண்மை விளங்கும்!

12 சீடர்கள்
இயேசு கிறிஸ்துவே மையமாகிய 13

12 சீடர்கள் இறைமையின் பன்னிரு விழுமங்கள்
13ம் மையம் கிறிஸ்து இறைமையின் கரு

உம் கேள்விக்கு நன்றி மகாபிரபு.

நாகரா
28-12-2010, 02:53 PM
மேற்சொன்ன உண்மைகள் கிறிஸ்துவம், இந்து மதத்துக்கும் பொருந்தும், அல்லாஹ் என்ற பேர் பரமபிதா, பரப்பிரம்மண் என்ற பேர்களாகும், எனவே மதங்களின் அடிப்படையில் பேதங்கள் அறவே இல்லை, புற அமைப்புகள் அடிப்படையை மறந்து எழுப்பப் படும் போது, பேதங்கள் பெருகுகின்றன, அத்தகையதோர் அடிப்படையின் படிமமே 13.