PDA

View Full Version : ஊறுக்காய் குறிப்பு!



ரசிகன்
27-12-2010, 11:24 AM
ஒரு குறிப்பிட்ட
சில தோழிகளை மட்டும்
எண்ணம் பட செய்கிறது
ஒரு 555 சிகரெட்டும்
ஒரு கிளாஸ் ஜானி வாக்கரும்!

பேசப்படாத நாட்களில்
மௌனங்களுக்கு
ஊற்றி விடவோ
பற்ற வைக்கவோ
தவறியதில்லை நினைவுகள்!

அதிகப்படியான அன்பென்பதும்
தூக்கலான நட்பென்பதும்
ஒரு சிட்டிகை காதலில்
சமன் செய்யப்படுதல்
குறித்த விவரம்
கேட்டே தீர வேண்டும்
அத்தோழிகளிடம்!

எவள் எவள்
எந்தெந்த ஊரில்
எந்தெந்த நாட்டில்

பழைய தோழிகளாக,
புதிய காதலிகளாக,
மனைவிகளாக என்ற தகவலில்...

கையை சுட்டுவிட்டது
சிகரெட் துண்டு!

.

அமரன்
27-12-2010, 08:51 PM
இணைய வெளியில் சிறகை விரிக்கையில் பறவைப் பார்வை நீளும்..
பழைய முகங்கள் ஏதாவது அறிமுகமாகிறதா என்று அலைந்து அதுமீளும்...
சில நேரம் இரையுடன்.. பல நேரம் வெறுமையுடன்..

ஏன்....?????

எண்ணிப் பார்க்கிறேன்
எந்தப்பெண்ணாவது ஏதாவது ஒன்றை என்னில் விட்டு விடாமல் சென்றிருக்கிறாளா..

மௌனமாக...
கோபமாக..
சோகமாக..
தாகமாக..
ஏமாற்றமாக..
இன்னும் பலவாக ஒவ்வொருத்தியும்..

இந்த நொடியில் எந்த உணர்வு மேலிடுகிறதோ
அந்த உணர்வை ஒட்டிச் சென்றவளை தேடிப் போகும் மனசு..

ஏன்????

விடைதேடிப் போகும் போதெல்லாம் சூடு வாங்கித்தான் திரும்புகிறேன்..

சில சமயம் கண்ணீரால்.. சில சமயம் தண்ணீராய்.... சில சமயம் பட்டையுடன் போட்ட ஊறுகாய் சுட்டு வெடித்த நாவாய்..

ரசிகன்
03-01-2011, 06:46 PM
கவிதைக்கு பக்கபலமாய் இருக்கிறது உங்கள் பின்னூட்டம்! :)

பாரதி
07-01-2011, 11:19 AM
அன்பின் இரசிகரே,
இன்றுதான் உங்களின் இரு கவிதைகளையும் படித்தேன்.
உங்களின் கையொப்பமும், கவிதைகளின் வெப்பமும் உணர முடிகிறது.

நிரந்தரம் எதுவுமில்லை என்ற உங்களின் வரிகளைக்கொண்டு....
நுரை பொங்கும் போத்தலும்
புகை கக்கும் குழலும் அவசியமா..?

ஊறுக்காய் குறிப்பு... !

ஊருக்காய் நீங்கள் படைக்கும் கவிதைகள் ஊறு விளைவிக்கா உணவாக இருக்கட்டுமே.

படியுங்கள்... படையுங்கள்.

வாழ்த்துகிறேன்.

உமாமீனா
18-01-2011, 04:59 AM
ஒரு குறிப்பிட்ட
சில தோழிகளை மட்டும்
எண்ணம் பட செய்கிறது

எவள் எவள்
எந்தெந்த ஊரில்
எந்தெந்த நாட்டில்

பழைய தோழிகளாக,
புதிய காதலிகளாக,
மனைவிகளாக என்ற தகவலில்...

.

என் மன ஓட்டத்தை உங்கள் வரிகளில் கண்டேன் - மனம் பூரித்தது