PDA

View Full Version : தமிழ் மொழியை அவமதிப்பதா?



M.Jagadeesan
25-12-2010, 03:59 AM
தமிழ் மன்றத்தில் ஒருவர் வடமொழியைத் தேவபாஷை என்றும், தமிழ் மொழியை
நீசபாஷை என்றும் நிந்தனை செய்கிறார். வடமொழியைத் தேவபாஷை என்று
சொல்லிக் கொள்ளட்டும்.அது அவருடைய உரிமை. ஆனால் தமிழ் மொழியை நீச
பாஷை என்று சொல்வதற்கு இவர் யார்? இதைத் தமிழ் மன்றம் எவ்வாறு அனுமதிக்
கிறது?தமிழ்மொழியை உயிருக்கு நிகராக மதித்து வரும் உள்ளங்களைப் புண்படுத்து
வதாக உள்ளது இவருடைய செயல்.

ஆழ்வார்களும், நாயன்மார்களும் வளர்த்த தமிழ் மொழியில், இறைவனுக்கு பூஜை
செய்யக்கூடாது என்று இவர் சொல்கிறார்.இறைவனே,"சொற்றமிழால் எம்மைப்
பாடுக!" என்று கேட்டுக் கொண்டதாக சேக்கிழார் எழுதுகிறார்.

செம்மொழியாம் தமிழ் மொழியை நிந்தனை செய்வதை இவர் இத்துடன் நிறுத்திக்
கொள்ள மன்றத்தார் அவரைக் கேட்டுக் கொள்ளவேண்டும்.

கௌதமன்
25-12-2010, 04:24 AM
நண்பர் M.Jagadeesan

நீங்கள் எந்தப் பதிவைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. அருமை நண்பர் நாகராவின் பதிவையோ அல்லது அதற்கு என்னுடைய பின்னூட்டத்தையோக் கண்டே நீங்கள் எதிர்வினையாக இக்கருத்தைப் பதிந்துள்ளீர்கள் எனவுணர முடிகிறது.

சிறு திருத்தம்:

நண்பர் நாகரா போலியான ஆன்மீகவாதியாகத் தன்னை பாவித்து எழுதிய சிறந்தக் கவிதையே அது. அதில் தமிழுக்குப் பெருமையையேச் சேர்த்துள்ளார் (வஞ்சப் புகழ்ச்சிப் போல்). தமிழ் நீச பாஷை என்று தானேக் கூறித் தன்னையேச் சாடுகிறார். தமிழுக்கும் மன்றத்திற்கும் அளப்பரியத் தொண்டாற்றும் உங்களைப் போல் நாகராவும் சிறந்த தமிழுணர்வாளர். நீங்கள் குறிப்பிடும் தமிழ் நிந்தனையை நண்பரால் கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாதுவென்பதை அவர்தம் படைப்புகள் மூலம் நன்குணர்ந்துக் கூறுகிறேன்.


உங்களைப் போன்றப் போர்க்குணம் கொண்டக் கொள்கை மறவர் கூட்டம் இருக்கின்றவரை தமிழை பழிக்க யார் முன்வருவார் அதுவும் நமது தமிழ் மன்றத்தில்.

நன்றி!

பாலகன்
25-12-2010, 04:56 AM
அருமையான விளக்கம் தந்த கெளதமனை பாராட்டகிறேன். போர்ப்படை தளபதி ஜெகதீசனையும் உளமார வாழ்த்துகிறேன். நாகராவின் பதிப்பின் உண்மையான சராம்சத்தை நமக்கு எடுத்துரைத்த கெளதமனுக்கு நன்றிகள்

rajesh2008
25-12-2010, 08:14 AM
அருமையான கோப உணர்வு, அதற்கு ஏகடியம் பேசாமல் அற்புதமான ஒரு தன்னிலை விளக்கம். மன்ற உறவுகளின் உணர்வும், வெளிப்பாடும் காண மனம் மகிழ்கிறது.

அமரன்
25-12-2010, 06:13 PM
ராஜேஸ் சொன்னதே என்னதும்..

தமிழிருக்கும் இடமெல்லாம் இது போன்ற ஆரோக்கியப் போர்கள் இருக்கும். அப்படி அல்லாவிட்டால் நாம் தமிழரே அல்லர்..

இதே நல்லுறவு என்றும் நிலைக்க எல்லாரும் உழைப்போம்.

Hega
25-12-2010, 09:54 PM
தமிழ்மேல் கொண்ட பற்றால் கரும்பா மேல்கொண்ட கோபத்தை அடக்குமங்குசமாய் அமைதலாயிராது உடன் வந்து விளக்கம் கூறிய கௌதமனவர்களுக்கு நன்றி.

நாகராவை நானும் அறிவேன்.
அவர் தமிழ் பற்றையும் நாமறிவோம்..

matheen
17-11-2011, 12:23 PM
கொய்யால எவன்டா தமிழுக்கு எதிரா பேசினவன்............சங்க பிச்சி எறிஞ்சிடுவன்:sprachlos020:

Nivas.T
17-11-2011, 03:19 PM
அந்த பதிவை நானும் முதலில் பார்த்திருந்தால் இப்படித்தான் நினைத்திருப்பேன் ஆனாலும் நாகராவை நம்மவர் நன்கு அறிவர், அவரது பனி நம் மன்றத்தில் மிகச் சிறப்பானது, கவலை வேண்டாம் இங்கு அனைவரும் கூறிய கருத்துக்கள்தான் என்னுடைய கருத்தும்.

உங்கள் உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன்

தமிழன் என்பதிலும், தமிழ்மன்ற உறுப்பினர் என்பதிலும், இதுபோன்ற உணர்வாளர்கள் சக நண்பர்கள் என்று எண்ணும்போதிலும் பெருமிதம் கொள்கிறேன்

Nivas.T
17-11-2011, 03:20 PM
கொய்யால எவன்டா தமிழுக்கு எதிரா பேசினவன்............சங்க பிச்சி எறிஞ்சிடுவன்:sprachlos020:

மைதீன் அவசரப் படவேண்டாம்
பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்துபாருங்கள்
கோபம் தணியலாம்

கீதம்
18-11-2011, 05:16 AM
கொய்யால எவன்டா தமிழுக்கு எதிரா பேசினவன்............சங்க பிச்சி எறிஞ்சிடுவன்:sprachlos020:

தமிழுக்கு எதிரி இதுபோன்ற வார்த்தைகளும்தாம். தயவுசெய்து நாகரிகம் காக்கவும்.

நாஞ்சில் த.க.ஜெய்
18-11-2011, 10:06 AM
நமது மன்றத்து போர்வாள்களின் சொற்வீச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது தமிழுக்காக துடிக்கும் துடிப்பு என் நாடி நரம்புகளை எடு என் வாளை என போர்களத்திற்கு படை திரட்ட தூண்டுகிறது ..என்ன பண்ணுறது எனக்கு நாளைக்கு அலுவலகம் போகணுமே...அதுவும் வெளிநாட்டு அலுவலகம் மாசம் கைநிறைய சம்பளம் இதெல்லாம் விட்டுட்டு போறது ரொம்ப கடினம் ஆச்சே ...

தோழர் மைதீன் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிவந்த தூய தமிழ் நம்மை(தமிழர்களை ) இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும் என்பதில் ஐயமேதும் இல்லை...

ஆதி
18-11-2011, 10:34 AM
ஜெய் உங்க பகடிக்கு அளவே இல்லையா ?

Nivas.T
18-11-2011, 11:15 AM
நமது மன்றத்து போர்வாள்களின் சொற்வீச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது தமிழுக்காக துடிக்கும் துடிப்பு என் நாடி நரம்புகளை எடு என் வாளை என போர்களத்திற்கு படை திரட்ட தூண்டுகிறது ..என்ன பண்ணுறது எனக்கு நாளைக்கு அலுவலகம் போகணுமே...அதுவும் வெளிநாட்டு அலுவலகம் மாசம் கைநிறைய சம்பளம் இதெல்லாம் விட்டுட்டு போறது ரொம்ப கடினம் ஆச்சே ...

தோழர் மைதீன் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிவந்த தூய தமிழ் நம்மை(தமிழர்களை ) இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும் என்பதில் ஐயமேதும் இல்லை...

என்ன ஒரு வில்லத்தனம் :icon_rollout:

sarcharan
18-11-2011, 12:53 PM
தமிழுக்கு எதிராக பல வடைந்தியக்கரன் (மதராசி அப்படின்னு கேவலப்படுத்துறான் ) பேசுறான். அவனே எல்லாம் மைதீன் என்ன செய்வாராம்?

அவங்களோட சங்க எல்லாம் பிச்சு எரிஞ்சுடுவாராமா?