PDA

View Full Version : தங்கமும் வெங்காயமும்

M.Jagadeesan
24-12-2010, 08:49 AM
வெங்காயத்தின் வரலாறு காணாத விலையேற்றம் கண்டு
தங்க நகைக் கடைகளிலும் வெங்காயம் விற்கக் கண்டு
பொறாமை கொண்ட

தங்கம் வெங்காயத்திடம் சொன்னது

இரும்படிக்கிற இடத்திலே ஈக்களுக்கு என்னவேலை?
வெறும்பயல் வெங்காயத்திற்கு நகைக்கடையில் என்னவேலை?
"தங்கமடா நான்! உலோகங்களின் சிங்கமடா!
மங்களப் பொருளடா நான்! மங்கையர்க்கு உயிரடா நான்!
அழுகும் பொருளடா நீ! அற்பனே! எப்பொழுதும்
அழியாத எனக்கு நீ ஈடாக ஆவாயோ?
எரித்தாலும் என்பெருமை என்றும் குன்றாது!
உரித்தாலே அழவைப்பாய்! உனக்கு இங்கே என்னவேலை?
காய்கறிகள் விற்கின்ற கடைகளுக்கு சென்றிடுவாய்!
போய் அங்கே கூடையிலே பொருளாக இருந்திடுவாய்.

வெங்காயம் தங்கத்திடம் சொன்னது:

என்பெருமை என்னவென்று ஏடுகளைப் படிக்காமல்
உன்பெருமை பேசுகிறாய் உளறுகிறாய் தங்கமே!
விண்முட்டும் என்னுடைய விலையேற்றம் கேட்டால் நீ
கண்பிதுங்கி நின்றிடுவாய்!கலங்கிடுவாய் தங்கமே!
நகைக்கடையில் மட்டுமல்ல நாட்டிலுள்ள வங்கியிலும்
மிகைபடவே மதித்தென்னை லாக்கரிலே வைக்கின்றார்!
அடகுப் பொருளாகக் கொண்டென்னை மார்வாடிக்
கடைகளிலும் காசுபணம் தருகின்றார் ஆதலினால்
அற்பன் அல்ல நான்! உனக்கு நிகராக
நிற்கின்ற பொருள் நான் நீ இதனை மறவாதே!

வெற்றி
24-12-2010, 10:46 AM
வெங்காயம் சொன்னது
உன்னை (தங்கத்தை) கடத்தினால் கூட ஆட்சி மாற்றம் எப்போதாவது தான் நிகழும். ஆனால் என்னை பதிக்கினால் எப்படி பட்ட ஆட்சியும் சடுதியில் கவிழுமடா ? நான் தான் நிஜமடா, நிகழ்காலமடா, உணவடா அற்பனே ! ஆனால் நீ போலி, நம்பிக்கை, எதிர்காலமடா !
நானே வலிமையானவன், நிரந்தமானவன், பெரியவரின் :) ஆசிபெற்றவன் கூட

நாஞ்சில் த.க.ஜெய்
24-12-2010, 02:04 PM
இன்று நிகழும் விலையேற்றம் கண்டு கண்ணீர் சிந்தும் நடுத்தரமக்களின் வலியை கவிதையாக கூறியுள்ளீர் நண்பரே வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

சிவா.ஜி
24-12-2010, 02:42 PM
உண்மையிலேயே வெங்காயத்தை தங்க கடைகளில் விற்றாலும் ஆச்சர்யமில்லை.

நல்ல உரையாடலை கவிதையாய் கொடுத்த ஜகதீசனுக்கு வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
24-12-2010, 11:16 PM
வெங்காயம் சொன்னது
உன்னை (தங்கத்தை) கடத்தினால் கூட ஆட்சி மாற்றம் எப்போதாவது தான் நிகழும். ஆனால் என்னை பதிக்கினால் எப்படி பட்ட ஆட்சியும் சடுதியில் கவிழுமடா ? நான் தான் நிஜமடா, நிகழ்காலமடா, உணவடா அற்பனே ! ஆனால் நீ போலி, நம்பிக்கை, எதிர்காலமடா !
நானே வலிமையானவன், நிரந்தமானவன், பெரியவரின் :) ஆசிபெற்றவன் கூட

பின்னூட்டத்திற்கு நன்றி மொக்கச்சாமி அவர்களே!

M.Jagadeesan
24-12-2010, 11:19 PM
இன்று நிகழும் விலையேற்றம் கண்டு கண்ணீர் சிந்தும் நடுத்தரமக்களின் வலியை கவிதையாக கூறியுள்ளீர் நண்பரே வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி த.க.ஜெய் அவர்களே!

M.Jagadeesan
24-12-2010, 11:20 PM
உண்மையிலேயே வெங்காயத்தை தங்க கடைகளில் விற்றாலும் ஆச்சர்யமில்லை.

நல்ல உரையாடலை கவிதையாய் கொடுத்த ஜகதீசனுக்கு வாழ்த்துக்கள்.

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி சிவா.ஜி அவர்களே!

p.suresh
25-12-2010, 04:15 AM
அன்று வெங்காயம் உரித்தால்தான் கண்ணீர் வரும்.இன்று விலையைக் கேட்டாலே வருகிறது.பெட்ரோல் விலை உயர்வு,எதிர்ப்பாராத மழை,பதுக்கல்காரர்களின் கைவரிசை,முறையான சந்தைப்படுத்துதல் இன்மை,ஏற்றுமதி இறக்குமதியை நெறிப்படுத்தாதது,தொலைநோக்கு பார்வையின்மையே விலையேற்றதின் காரணம்.

நடக்காத பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு தினப்படி ரூ 2000 பெற நினைக்கும் அரசியல்வாதிகளிடம் வேறு எதை எதிர்ப்பார்ப்பது? யாராவது வெங்காயம் இன்றி சமைப்பது எப்படி? என்று ஒரு திரி தொடங்குகளேன்.

M.Jagadeesan
25-12-2010, 04:29 AM

வெங்காயம், பெருங்காயம்
இல்லாத சமையலை
எங்கேயும் கேட்டதுண்டா?