PDA

View Full Version : பணத்தாசையால் ஜோதிடத்தை நம்பியவர் படுகொலை செய்யப்பட்டார் பாவம்



dhilipramki
23-12-2010, 01:23 PM
பணத்தாசையால் ஜோதிடத்தை நம்பியவர் படுகொலை செய்யப்பட்டார் பாவம்
சென்னை மேடவாக்கத்தில் வசித்து வந்த வில்வராஜ் ஒரு ஜவுளி வியாபாரி. அவருக்கு வயது 48 ஆகிறது.தொழில் நிமித்தமாக சென்னையில் குடியேறி யவர்.
பாலக்காட்டைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 34), அவரது கணவர் ராஜா இருவரும் சத்தியமங்கலத்தில் இருந்த போது வில்வராஜுடன் தொடர்பு ஏற்பட்டது. வில்வராஜ் அடிக்கடி அவர்களது வீட்டிற்குச் செல்லத் துவங்கினார். ராஜாவை வில்வராஜ் லண்டனுக்கு அனுப்பி வைத்தது மட்டுமன்றி ஜெயலட்சுமிக்கு பெரும் அளவில் பண உதவி களைச் செய்து வந்தார்.
நாளடைவில் வில்வ ராஜுக்கு தொழிலில் பாதிப்பு ஏற்பட்ட போது, ஜோதிடம் பார்த்ததில், இன்னொரு இளம் பெண்ணை அவர் திரு மணம் செய்து கொண் டால், அதிருஷ்டம் அவரைத் தேடி வரும் என்று ஜோதிடர் கூறி னார்.:fragend005: இச்செய்தியை ஜெய லட்சுமியிடம் கூறிய வில் வராஜ் தனக்கு ஒரு இளம் பெண்ணைத் தேடித் தரும்படி அவரைக் கேட்டுக் கொண்டார்.:confused:
அவர் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், தனக்குக் கிடைக்கும் வசதி கள் போய்விடும் என்று கருதிய ஜெயலட்சுமி, அவரைக் கொன்று விடத் தீர்மானித்து, தனது தம்பி சிவகுமார் (வயது 31) மற்றொரு காதலன் பஷீர் (வயது 35) ஆகிய இருவர் மூலம் ஒரு கூலிப்படையை ஏற் பாடு செய்து விட்டு, வில் வராஜுக்குப் ஃபோன் செய்து வரவழைத்துள் ளார். தனது சொந்தக் காரில் சென்ற வில்வராஜ் பாலக்காட்டில் ஜெய லட்சுமியை அழைத்துக் கொண்டு வேறு ஒரு இடத்திற்குச் செல்லப் புறப்பட்டார்.
அவர்களைப் பின் தொடர்ந்து மற்றொரு காரில் சென்ற கூலிப் படை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் வில்வராஜ் சென்ற காரைத் தாக்கி அவரைத் தூக்கித் தங் கள் காரில் போட்டுக் கொண்டு புதுக்கோடு என்னும் இடத்தில் இருந்த ரப்பர் தோட் டத்திற்குக் கொண்டு சென்றனர். மின்னணு பரிமாற்றம் முறையில் ஜெயலட்சுமி கணக்கில் பெரும் தொகை ஒன் றைப் போடச் செய்யும் படி தனது லண்டன் நண்பர்களுக்குப் ஃபோன் செய்யும்படி வில்வராஜை அவர்கள் கட்டாயப்படுத்தினர். ஆனால் அவரது நண்பர் கள் எவரும் பணம் கொடுக்கவில்லை. அத னால் வில்வராஜ் கழுத் தில் கயிற்றினால் இறுக்கி அவரைக் கொன்றுவிட் டுத் தப்பிச் சென்றனர்.
அவரது செல் ஃபோனில் உள்ள அவ ரது லண்டன் நண்பர் களிடம் காவல்துறையி னர் பேசியபோது, விவரம் தெரிய வந்தது. அடுத்த 48 மணி நேரத் தில் ஜெயலட்சுமி உள் ளிட்ட 8 கொலையாளி களைக் கைது செய்தனர்.

உயிர் போனதை எவர் தீர்ப்பிக்கொடுப்பார்:frown:, ஜோதிடம் சொல்வதை கேட்டு செயல்படுவது தவறில்லை ஆனால் தன் தொழிலில் ஒரு இன்னலால் வந்த நஸ்ட்டத்தை எப்படி ஒரு இழம்பெண்ணை திருமணம் செய்வது மூலம் நிவர்த்தி செய்ய முடியும். சிந்தனை செய்யுங்கள். விவாதம் உங்களுடையது. நன்றி. செய்தி கொச்சி செய்தியகத்தில் இருந்து பெறப்பட்டது.

பாலகன்
23-12-2010, 01:32 PM
விவாதத்திற்கு நிறைய திரிகளை கொளுத்திப்போடும் நண்பரே! இங்கு யாருக்குமே இதுபோன்ற தலைப்புகளில் விவாதம் செய்ய விருப்பம் இல்லை.

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மைதரும்

ஆக்கப்பூர்வ பதிப்புகளை தாருங்கள்.

நன்றி வணக்கம்
அன்புடன்
மகாபிரபு

ஆதி
23-12-2010, 01:37 PM
கொலை ஜோதிடத்தால் அல்ல, பணத்தால்.. செய்தியை உள்வாங்கி பங்களியுங்கள்... நன்றி...

dhilipramki
23-12-2010, 01:46 PM
பணத்தை தொழிலால் பெருக்க வேண்டும் என்பதனால்!!-ஜோதிடாம்
பணம் பிறரால் கிடைக்காமல் போய்விடுமே என்பதனால்!!-பேராசை
எங்கும் பணம் எதிலும் பணம்

போதும் என்ற மனமே தேவை அல்லவா.

ஆதி
23-12-2010, 01:50 PM
இப்ப சொல்லுங்க, பிரச்சனை பணத்தாலா ? ஜோதிடத்தாலா ?

dhilipramki
23-12-2010, 01:54 PM
பிரச்சனை இரண்டினாலும் உண்டு
சில பணத்தால் ஆரம்பிக்கும்..
இந்த செய்தி எதனால் என்று நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள். நன்றி.

ஆதி
23-12-2010, 01:58 PM
என் கேள்விக்கு சரியான பதில் சொல்லுங்கள், கொலை பணத்தாலா ? ஜோதிடத்தாலா ?

dhilipramki
23-12-2010, 02:14 PM
இங்கு ஒன்றினால் பாவச்செயல் நடந்தால் மட்டுமே என்னால் கூற இயலும். அல்லது இருண்டுமே என்றுதான் கூறமுடியும். ஜோதிடம் பார்க்க போனதும், அங்கு இழம்பெண்ணை திருமணம் செய்தால் நன்று என்று கூறியதும், அவ்வாறு செதுவைத்தால் பணம் கிடைக்காமல் போயுடும் ...இவ்வளவு இருந்ததால் என்ன என்று என்னால் சொல்ல முடியவில்லை நண்பரே.:lachen001:

ஆதி
23-12-2010, 02:16 PM
இவ்வளவு இருக்கு இல்லையா ?

சொல்லவும் முடியவில்லை இல்லையா ? சொல்ல முடியாததை தீர்ப்பிட கூடாது..

முதலில் திரியின் தலைப்பை மாற்றுங்க :D

ஆதி
23-12-2010, 02:28 PM
இங்கு ஒன்றினால் பாவச்செயல் நடந்தால் மட்டுமே என்னால் கூற இயலும். அல்லது இருண்டுமே என்றுதான் கூறமுடியும். ஜோதிடம் பார்க்க போனதும், அங்கு இழம்பெண்ணை திருமணம் செய்தால் நன்று என்று கூறியதும், //அவ்வாறு செதுவைத்தால் பணம் கிடைக்காமல் போயுடும்// ...இவ்வளவு இருந்ததால் என்ன என்று என்னால் சொல்ல முடியவில்லை நண்பரே.:lachen001:

ஆக அவர் பணத்தாசையால் ஜோதிடம் பார்க்க போகலை இல்லையா ?

ஜோதிடம் எனும் வார்த்தையை நீங்க இப்ப நீக்கித்தான் ஆகனும், ஏன்ன தலைப்புக்கும் உங்க கருத்துக்கும் சம்பந்தமில்லை...

செய்திகளை திரிக்காதீர்கள், புரிந்து படியும், புரியாவிட்டால், புரியும் வரை படியுங்கள்..

உங்களை அறிவாளியாய் காண்பிக்க, மற்றவர்கள் முட்டாள்கள் என்று வாதாடாதீர்கள்...