PDA

View Full Version : தொலைந்த நண்பனைத் தேடி................



Nanban
25-11-2003, 04:57 PM
தொலைந்த நண்பனைத் தேடி................

திரும்புவதில்லையென
உடலோடு
உயிர் பிணங்கிப் போனது.
அரூபியாக
உலகம் விட்டுப் போனது.

உடல் சுமக்கும்
களைப்புத் தீர்ந்தது;
வேதனை மடிந்தது,
விடுதலையில் சிறகடித்தது -
நிபந்தனை மறந்து.

பிரபஞ்சம் சுற்ற
உரிமை பெற்ற
ஆன்மாவிற்கு
உடலில்லாமல்
உலகினுள் நுழைய தடை.

பேரண்டத்தில் ஆடி ஒய்ந்த
ஆன்மாவிற்கு
உலகம் நுழைந்து
உயங்கும் நண்பர்களைக்
கண்டு வர ஆசை.

ஒப்பந்தமிட்டது -
ஒரு புதிய உடலுடன்.
புதிய மொந்தை, பழைய கள்ளு.

உலகில் உயிர்த்ததும் -
மனிதர்களிடம் அறிமுகம் -
தன்னை மறந்த
புத்தம் புதியவனாய்.

விரும்பி வந்த ஆன்மாவை
புதிய உடல்
சாப்பிட்டு விட்டிருந்தது.........

இளசு
25-11-2003, 05:05 PM
முதல் ஆட்டம் போலே
மறு ஆட்டம் இருப்பதில்லை..

மேனி தொலைத்து போன ஆவி
வேறு வடிவில் வந்தபோது
பாணி மாறிப்போய்
பலியானதில் வியப்பில்லை..

பாராட்டுகள் நண்பனே..

முத்து
25-11-2003, 05:43 PM
அண்ணா ..
நண்பனும் நீங்களும்
ஏதேதோ தத்துவம் பேசுகிறீர்கள் ..
எதுவும் புரியவில்லை ..

சரி .....
எப்படி இருந்தால் என்ன
உடலா நிலையானது ..
நமக்குத் தேவையான ஆன்மாதானே
அதுதானே என்றைக்கும் நிலையானது ...

Nanban
26-11-2003, 07:15 AM
அண்ணா ..
நண்பனும் நீங்களும்
ஏதேதோ தத்துவம் பேசுகிறீர்கள் ..
எதுவும் புரியவில்லை ..



இதில் தத்துவங்கள் ஏதும் இல்லை........

சின்னச் சின்ன குறியீடுகள்........

இளசு மிக அருமையாகப் புரிந்து கொண்டார்.........

இந்த பதிவிற்கு விளக்கங்கள் கிடையாது............

முத்து
26-11-2003, 01:43 PM
இளசு மிக அருமையாகப் புரிந்து கொண்டார்.........
இந்த பதிவிற்கு விளக்கங்கள் கிடையாது............


சரி .. நான் இளசு அண்ணாவிடம் கேட்டுக்கொள்கிறேன் ...

பாரதி
26-11-2003, 04:31 PM
அன்பு நண்பா... கவிதை தலைப்பே போதும்... விளங்க.!

முத்து
26-11-2003, 04:54 PM
அன்பு நண்பா... கவிதை தலைப்பே போதும்... விளங்க.!

அன்பு பாரதி .. சும்மா .. சும்மா ... :wink:

rika
26-11-2003, 05:23 PM
என்ன செய்ய
பழைய உடலோடு
உலா வருகையில்
தேனீக்கள் கொட்டுகின்றன..

அதனால்தான்
புதிய உடலோடு வந்து
புதிதாய் அறிமுகம் ஆகி
பழைய உடல் மறந்து
சுற்றித் திரிகின்றது
ஆன்மா..

இருந்த போதிலும்
ஆன்மாவைக் கண்டுகொள்ளும்
நண்பர் மட்டும்
உண்டு..

விளக்கம் தரப்போவதில்லை.. உங்களுக்கு புரியும் என்று எண்ணுகிறேன்..

முத்து
26-11-2003, 05:27 PM
பழம் கொடுக்கும் மரமாய்ப்
பிறந்துவிட்டுக் கல்லடிக்குப்
பயந்தால் ஆகுமா ... ?

rika
26-11-2003, 05:28 PM
விதியின் விளையாட்டு
அப்படியிருந்தால்
என்ன செய்வது?

Nanban
27-11-2003, 08:18 AM
இருந்த போதிலும்
ஆன்மாவைக் கண்டுகொள்ளும்
நண்பர் மட்டும்
உண்டு..



நண்பர்கள் உண்டு - புன்னகையுடன்........

விளக்கம் தேவையில்லை...........

poo
27-11-2003, 10:49 AM
சூழ்நிலைக் கவிதைகளில் சூரன்...

நண்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!!

தமிழ் தாட்சாயிணி
27-11-2003, 11:58 AM
அழகான கவிதை நண்பன்.

பாராட்டுக்கள்

பாரதி
27-11-2003, 02:52 PM
படிக்கும் போதே கொஞ்சம் சந்தோசம் வருகிறது. விளக்கம் தேவையில்லை என்றாலும் விளங்கி விட்டதைப் போன்ற உணர்வு.

Nanban
28-11-2003, 03:15 AM
சூழ்நிலைக் கவிதைகளில் சூரன்...

நண்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!!

கவிதை உண்டாக்கப்படுவதே சூழ்நிலைகளால் தானே!!!

poo
28-11-2003, 03:11 PM
கவிஞனால் ஒரு சூழலை உண்டாக்க முடியுமல்லவோ?!!

Nanban
29-11-2003, 08:36 AM
கவிஞனால் ஒரு சூழலை உண்டாக்க முடியுமல்லவோ?!!

கவிஞன் சுயமாக சூழ்நிலை உண்டாக்கிப் பாடுவது, கற்பனை. (imagination)
சூழ்நிலைகளால் உண்டாகும் கவிதை அனுபவம். (experience..)

கவிதை செய்வதில் இரண்டுமே அனுமதிக்கப்பட்டவை தான்.......

முன்பு கற்பனையாக எழுதிக் கொண்டிருந்தேன்.
இப்பொழுது அனுபவங்களை எழுத முயலுகிறேன்.

Nanban
02-12-2003, 06:18 PM
தொலைந்த
நண்பனுக்குத்
தோள் கொடுக்க
ஆசை......

எழுந்து நின்றால்
தாங்கும் தோள்கள்
தாய்மையுடன் நிற்கின்றன

படுத்துக் கிடந்தால்
தோள்களால்
என்ன பயன்......
புதிய உடலில்
பொருந்திப் போகாமல்

பழைய உடல்
தரித்து வந்தால்
காயங்களுக்கு
மருந்திடலாம்...

மறைந்து நின்று
பார்க்கும்
நிழல் அழகு
வேண்டாம்....

நேராக நிற்கும்
அழகு தான்
நிஜம்.....

தோள்களால் ஆன பயன்
நிழல்களுக்குத் தெரியாது......