PDA

View Full Version : மூன்றாம் எண் மதுக்கடையிலிருந்து!



ரசிகன்
21-12-2010, 07:08 PM
ஒரு பெண்ணின்

மிக குறுகிய சிரிப்பழகில்

விரிந்திருக்கும் ரகசியங்கள்...


ஈர்த்தல்

அல்லது பொய்த்தல்

அவரவர் சௌகரியத்திற்கு!


ஒரு கிளாஸ் பழரசத்தில்

ஈருயிர் உறிஞ்சுதல்

அடுத்தவன் பார்வையின் பொழுதுபோக்கு...


இதை காதலென

குழம்பி விடுதலும்

குழப்பி விடுதலும்

அடுத்தவன் காதலியையோ

அடுத்தவள் காதலனையோ

தரம் மாற்றும் கூடுதல் சிறப்பு...


பெண்மையின்

இயற்கை சீற்றங்களில்

பாகுபாடு இருப்பதில்லை எவருக்கும்...

குறிப்பிடும்படியாக எனக்கும்!

மேற்கூறியபடி


மேஜையில் சிந்திய

சில உண்மைகளும்

கிளாசில் கசிந்த

பல உளறல்களும்...

ஏனோ அடுத்த வோட்கா பாட்டிலில்

அதிக விருப்பத்தை

ஏற்படுத்தி விடுகின்றன..."

அக்னி
22-12-2010, 12:19 PM
பழச்சாறை உறுஞ்சிய ஈருயிர்களில்,
ஓருயிர்தானே மதுச்சாலையில்...

அப்போ மற்றைய உயிர்...?

மதுவிற் கால் வைத்தால் மாது..,
ஏற்றுக்கொள்ளுமா உலகம்...

மாதுவைத் தேடி மதுவைத் தேடுவதும்,
மதுவைத் தேடி மாதுவைத் தேடுவதும்,
சுழற்சியல்ல... அழற்சி...

அமரன்
27-12-2010, 08:58 PM
தனக்குத்தானே நீதிபதியாக இருக்க எத்தனை பேரால் முடிகிறது..

கவிதை நாயகனால் முடிகிறது..

பெண்மை கொண்ட ஆழம் போலவே கவிதையும்..

பெண்மை தாக்கிய காயம் போலவே கவிதையின் தாக்கமும்..

ரசிகன்!!!!

பிரேம்
27-12-2010, 11:43 PM
கவிதை நன்று..
நைட் கொஞ்சம் ஓவர் போதையோ..? கவிதை எழுதிற அளவுக்கு..

CEN Mark
31-12-2010, 04:03 PM
[QUOTE=ரசிகன்;506101][I]

கவி தை அருமை.
ஒரு லார்ஜி போதும்.
ஈர்த்தலும் பொய்த்தலும்
குறுகிய சிரிப்பில் மட்டுமல்ல
அடுத்த வோட்கா பாட்டிலிலும்தான்.
பொங்கட்டும் கவிதை. மங்கட்டும் பாட்டிலின் ஈர்ப்பு.

கௌதமன்
31-12-2010, 04:34 PM
பார்வை தரும் ஆயிரம் போதை!
பாவை பேசும்மொழி அதுவும் போதை!
பாவையவள் பாதை மாறிவிட்டாலும்
பழகிய போதை மாறாதே...

-நான்காம் எண் கடையிலிருந்து நான்

ரசிகன்
03-01-2011, 06:49 PM
நன்றி நண்பர்களே! :-)

கலாசுரன்
01-02-2011, 12:06 PM
சில விஷயங்களை எவ்வளவு எளிதாக சொல்கிறீர்கள்..
அருமை ,,!!

ரசிகன்
04-02-2011, 10:34 AM
:):):)

உமாமீனா
13-02-2011, 07:04 AM
:aktion033::icon_wacko::080402cool_prv::icon_good:

ரசிகன்
13-02-2011, 12:23 PM
:aktion033::icon_wacko::080402cool_prv::icon_good:
:mini023: