PDA

View Full Version : பனிப்பிரதேச பேரழகி!



ரசிகன்
21-12-2010, 07:04 PM
ஒரு
வெளிர்நீல மைதானத்தின் கீழ்
பனிக்குவியல்களை உரிமை கோர
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!

கொஞ்சம் எடுப்பாகவும்
கொஞ்சம் மிடுப்பாகவும்
அலட்டிக்கொள்கின்றன
அவள் அழகுகள்!

மிதமாய்
தூறல் விட்டுக்கொண்டே
சலனப்படும்
சில புன்னகை மழைகள்...

ஆர்குட்டையோ
முக நூலையோ
இன்ன பிற சமூக வலைத்தளங்களையோ
கவர்ந்து விட எத்தனிக்க

முற்றிலுமாக
முடங்கிக்கொள்கிறாள்
ஒரு
குளிர் தாங்கும் மேலாடையில்!

உமாமீனா
12-02-2011, 11:09 AM
புரியரா மாதிரி இருக்கு ஆனா புரியலை

பிரேம்
12-02-2011, 11:12 AM
கவிதை அருமை..ண்ணே..
facebook -ஐ மூடப்போறதா சொன்னாங்களே..!

ரசிகன்
13-02-2011, 12:32 PM
புரியரா மாதிரி இருக்கு ஆனா புரியலை
உங்களின் யூகங்களுக்கு தீனி போடுகிறதா? :icon_tongue::icon_tongue:

ரசிகன்
13-02-2011, 12:32 PM
கவிதை அருமை..ண்ணே..
facebook -ஐ மூடப்போறதா சொன்னாங்களே..!
அதற்கும் இதற்கும் என்ன சம்அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்! :)பந்தம்! :)