PDA

View Full Version : மனந்திறந்து உங்களோடு - 2010

அறிஞர்
20-12-2010, 06:53 PM
அன்பு மன்ற உறவுகளே....

அனைவருக்கு நிர்வாக குழுவின் வணக்கங்கள்.

பல நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இணையத்தில் இணைக்கு உறவுப்பாலமாக மன்றம் செயல்படுகிறது. ஒர் எண்ணம் கொண்ட நல்ல நண்பர்களை இதன் மூலம் பெறுகிறோம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

தமிழர் என்கிற ஒரு நோக்கத்தோடு இணைந்துள்ளோம். நாடு, மதம், அரசியல், சாதிக்கு அப்பாற்பட்டது மன்றம். ஒருவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படவேண்டும் என்பதே எம் விருப்பம்.

ஆண்கள், பெண்கள் என வருகிறோம். ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவேண்டும் என்பது மன்றத்தின் நோக்கம். மற்றவர்களுக்கு தேவையற்ற தனிமடல்கள் அனுப்புவதை மன்றம் விரும்பவில்லை. ஒருவரின் பதிவுகளுக்கு அநாகரிகமாகப் பதில் சொல்வதையும் , முகம் சுழிக்க வைக்கும் படைப்புகளையும் மன்றம் விரும்பவில்லை.

சில விஷமிகள் நல்லவர் போன்ற தோற்றத்துடன் தோன்றி... சிலரை சங்கடத்தில் ஆழ்த்துவது வருத்தத்தை தருகிறது. நிர்வாக குழு விஷமிகளை இனம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு தங்களின் முழு ஒத்துழைப்பு தேவை.

தவறாக பதிபவர்கள், தனிமடல் அனுப்புபவர்களை எங்களுக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.

2011ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம்.

அன்புடன்,
நிர்வாக குழு

nambi
21-12-2010, 04:45 AM
அனைவருக்கும், மன்ற நிர்வாகி! மன்ற பொருப்பாளர்கள்...அனைத்து உறவுகளுக்கும்..அனைத்து குவலயத் தமிழர்களுக்கும்.2011 இன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனோஜ்
21-12-2010, 12:56 PM
அனைத்து இனைய உறவுகள் அப்படிதான் நடக்கிறார்கள் என்று நம்புகிறோன்
அனைவரும் மன்ற கட்டுபாடுகளுக்கு கீழ்படிந்து நடக்க வாழ்த்துக்கள்

பாலகன்
21-12-2010, 01:12 PM
தக்க சமையத்தில் விஷமிகளை இனங்கண்டு களையெடுக்க நடவடிக்கைளை துரிதப்படுத்தியிருக்கும் நிர்வாகத்திற்கு எது பாராட்டுக்கள்.

மற்றவர் மனம் நோகாமல் பதிப்புகளை பதிவதிலும் கருத்துக்களை எடுத்தியம்புவதிலும் நாம் நம்முடைய மேலான மரியாதையை என்றும் காப்பாற்றி வீறுநடை போடுவோம்.

அன்புடன்
மகாபிரபு

கௌதமன்
21-12-2010, 01:42 PM
விஷமிகள் வேறு பெயர்களில் மன்றத்தில் நுழையாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். துளி விஷமானாலும் மொத்தத்தையும் பாழாக்கிவிடும் இத்தகையோர் இனங்கண்டறியப்படுதல் இத்தருணத்தில் தேவையானவொன்று.இதற்கு என்னுடைய ஆதரவு எப்போதுமுண்டு.

நல்லனவற்றையேப் பதிப்போம், அல்லனவற்றை புறக்கணிப்போம், அதனைக் கண்டறிந்துக் களைவோம், தாய்த் தமிழால் இணைந்தோம் அதில் கண்ணியம் காப்போம் என்பதை மன்றத் தோழர்கள் புத்தாண்டு சபதமாகக் கொள்வோம்.

அமரன்
21-12-2010, 06:45 PM
விஷமிகள் வேறு பெயர்களில் மன்றத்தில் நுழையாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். .

நிச்சயமாக..

நிர்வாகத்தினர் அதில் அதிக கூர்மையுடன் உள்ளனர். காலம் கனி்யும்போது முளைவிட முன்னரே அழிக்கக் கூடியதாக்வும் இருக்கும்.

சொ.ஞானசம்பந்தன்
22-12-2010, 04:51 AM
என் முழு ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.
சொ.ஞானசம்பந்தன்

ஆதி
22-12-2010, 06:05 AM
என்னுடைய ஒத்துழைப்பும் எந்நாளும் உண்டு.

p.suresh
22-12-2010, 11:07 PM
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவாமே என்பர். நம் மன்றத்தில் பழையனர் கழிதல் வேண்டாம்.புதியனர் புகுதல் வேண்டும்.கடலில் சங்கமிக்கும் புண்ணிய நதியும்,சாக்கடையும் சேர்ந்தப்பின் கடலின் தன்மையையே பெறும்.அதுபோல நம் மன்றத்தில் இணையும் மனிதப்பதர்களும் மன்றத்தன்மையையே பெறுவர் என நம்புவோமாக.

அக்னி
26-12-2010, 03:12 PM
மன்றத்திற் சுடர்விடும் தமிமின் பிரகாசத்தில் மகிழ்வுறும் உள்ளங்கள் நடுவில்,
விஷமிகளின் பொறாமை பற்றியெரியும் உள்ளங்கள் இருப்பது தவிர்க்கமுடியாதுதான்.
அவ்வஞ்சகரிடம் சிக்கி நம் மகிழ்வுகளைக் கருக்கிடாமலிருக்க,
நிர்வாகக் குழு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நம் முழுமையான பங்களிப்பை நல்குவோம்.

KAMAKSHE
30-12-2010, 04:07 AM
சிறிய விண்ணப்பம் அறிஞர் அவர்களுக்கு.

கதைப் போட்டி அல்லது கவிதை/நகைச்சுவை போட்டி குறித்து:

ஏன் போட்டிகளுக்காக தனியாக , புதிதாக யாரும் மன்றத்தில் படித்திராத திரிகளை அனுப்பச் சொல்கிறீர்?

அவை தினம் தினம் மன்ற உறுப்பினர்கள் படைக்கும் திரிகளாகவே இருக்கலாமே. ஏன் இருக்கக் கூடாது?

ஏனெனில் உறுப்பினர் படைக்கும் ஒவ்வொரு திரியையும் யாராவது படிக்கமாட்டாங்களா? பாக்க மாட்டாங்களா? பாத்து புடிச்சிருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லாருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லா இல்லன்னு சொல்வாங்களா? இப்படி பல மாதிரி, தாறு மாறா எங்க மனசு நெனச்சு கிடந்து தவிக்கும் அய்யா! கண்டிப்பா.

எப்படி சொல்றேன்னா.. பழைய தேதிகளுக்குச் சென்று பல படைப்புகளை படித்து பார்த்தேன். முக்கியமா மிக அருமையான கதைகள், கவிதைகள் கவனிப்பாரற்று ஏதோ 2 பேர் மட்டும் விமர்சித்து பின் யாருமே சீண்டாமல் கிடக்கின்றன. சரியா நான் சொல்வது?

பழையன கழிதல்..புதியன புகுதல் ன்னு இருக்கு நிலமை.

அதாவது விளையாட்டு, கேளிக்கைகள் செய்திகள் மட்டுமே நாள், மாத, வருட, பழசு, புதுசுன்னு கணக்கில்லாம எல்லாரும் பார்த்து,படித்து எழுதுகிறார்கள்.

உயிரைக் கொடுத்து, ரத்தம் சிந்தி, தூக்கம் இன்றி எழுதப்படும் கதை, கவிதைகள் அனைத்தும் நிறைய பேர் ( i mean majority) படிக்காமல் புழுதி பட்டு கிடக்கிறதே...

போட்டி என்று அறிவித்து.. டிசம்பர் மாத கவிதை, கதைகளையே ஏன் போட்டிக்கு விடக்கூடாது?

அல்லது போன வருடத்தில் உள்ள ஜுலை மாத படைப்புகளைக் கூட போட்டிக்கு விடலாமே?

சரி இதில் தெரிந்தவர், நண்பர்களுக்கு ஓட்டு நிறைய கிடைக்கும் என்ற அச்சம் இருக்கும். இருந்தால் என்ன? எத்தனை ஓட்டு அப்படி வந்துவிடப்போகிறது?

அப்படியே இருந்தாலும் ஊக்குவிப்பது ஒன்று தானே மன்றத்தின் நோக்கம்? நீங்கள் இதை கலந்து ஆலோசித்துப் பாருங்கள். போட்டி என சொல்லும் நேரம் பார்த்து இந்த கிரியேடிவ் மனது இருக்கிறதே அது மக்காரு பண்ணுது சாமி..

தவறா ஏதாவது பேசி இருந்தா கண்டிப்பா மனிச்சிடுங்க.

நான் பல நாளா யோசித்து தான் இந்த விஷயத்தைச் சொல்றேன். மன்றத்தின் ஒவ்வொரு எழுத்தும். படிக்கப் பட வேண்டும்.

‘நிழற்படம்’ மூலம் தெரிகிறது இதழ் தொகுப்பாளர் மட்டும் நன்கு அனைத்தையும் படிக்கிறார் என்று.. மற்றவர் எப்போ படிக்கறது?.

தவறு இருந்தால் மன்னியுங்கள்.

பாலகன்
30-12-2010, 05:08 AM
மன்றத்தில் படைக்கப்படும் கவிதைகள் மற்றும் கதைகளுக்கு அந்த அந்த மாதங்களில் இந்த மாதக்கதைப் போட்டி இந்த மாதக்கவிதை போட்டி என்று வைத்து ஓட்டெடுப்பு நடத்தி வெற்றிபெறுபவர்களுக்கு இணைய காசுகள் அன்பளிப்பாக வழங்கலாமே!

காமாட்சி அவர்கள் சொன்னது மாதிரி இதை இப்படியாக செயல்படுத்தலாம் என்பது என் கருத்து

அமரன்
30-12-2010, 05:35 AM
நல்லாலோசனை வழங்கியமைக்கு நன்றி காமாக்ஷி.

கவனிப்பாரற்றுக் கிடக்கும் சுவடிகளில் நம் பார்வையைப் படியவைக்க முயற்சி செய்கிறோம்.

ஆதி
30-12-2010, 05:56 AM
மன்றத்தில் படைக்கப்படும் கவிதைகள் மற்றும் கதைகளுக்கு அந்த அந்த மாதங்களில் இந்த மாதக்கதைப் போட்டி இந்த மாதக்கவிதை போட்டி என்று வைத்து ஓட்டெடுப்பு நடத்தி வெற்றிபெறுபவர்களுக்கு இணைய காசுகள் அன்பளிப்பாக வழங்கலாமே!

காமாட்சி அவர்கள் சொன்னது மாதிரி இதை இப்படியாக செயல்படுத்தலாம் என்பது என் கருத்து

இது குறித்து முன்பே விவாதிக்கப்பட்டிருக்கிறது, நிர்வாக மன்றத்தில் மீண்டும் ஆலோசித்து தக்க முறை செயல் படுத்தப்படும்...

நாஞ்சில் த.க.ஜெய்
19-01-2011, 11:17 AM
நானும் தோள் கொடுக்கிறேன் உங்களோடு..

ஆண்கள், பெண்கள் என வருகிறோம். ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவேண்டும் என்பது மன்றத்தின் நோக்கம். மற்றவர்களுக்கு தேவையற்ற தனிமடல்கள் அனுப்புவதை மன்றம் விரும்பவில்லை. ஒருவரின் பதிவுகளுக்கு அநாகரிகமாகப் பதில் சொல்வதையும் , முகம் சுழிக்க வைக்கும் படைப்புகளையும் மன்றம் விரும்பவில்லை.

உங்களுக்கு தேவையெனில் எனக்கு தனிமடல் இடுங்கள் என்று வரும் பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும் அல்லது இந்த பதிவுகளை கண்டு பதிலிடகூடாது நன்கு அறிந்தவர்களை தவிர அல்லது பொது பார்வைக்கு அவர்கள் கூற விளையும் கருத்துகள் வைக்க பட வேண்டும் .

இது முகம் சுளிக்கவைக்கும் பதிவுகள் என்று தோன்றினால் நிர்வாகத்தினால் அகற்றப்படும் என்று கூறி அந்த பதிவினை பொதுவில் வைக்காமல் அந்த பதிவருக்கு விளக்கம் கேட்டு செய்தி அனுப்பலாம் அந்த விளக்கம் ஏற்று கொள்ளபட்டால் அந்த பதிவினை பொதுவில் வைக்கலாம். தனிமடல் தொந்தரவு என்பது அந்த குறிப்பிட்ட முகவர் அதனை அனுப்பியவருக்கு நிர்வாகத்தினர் மூலமாக முதலில் மறைமுகமாக ,பின்னர் மறுமுறை அதுபோல் நிகழ்ந்தால் பொதுபடையாக எச்சரிக்கை செய்தி இடலாம் இதன் மூலம் மற்றவர்கள் அவரை பற்றி அறிந்து கொள்வர் ..இது போன்ற விசமிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்

சிறிய விண்ணப்பம் அறிஞர் அவர்களுக்கு.

கதைப் போட்டி அல்லது கவிதை/நகைச்சுவை போட்டி குறித்து:

ஏன் போட்டிகளுக்காக தனியாக , புதிதாக யாரும் மன்றத்தில் படித்திராத திரிகளை அனுப்பச் சொல்கிறீர்?

அவை தினம் தினம் மன்ற உறுப்பினர்கள் படைக்கும் திரிகளாகவே இருக்கலாமே. ஏன் இருக்கக் கூடாது?

ஏனெனில் உறுப்பினர் படைக்கும் ஒவ்வொரு திரியையும் யாராவது படிக்கமாட்டாங்களா? பாக்க மாட்டாங்களா? பாத்து புடிச்சிருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லாருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லா இல்லன்னு சொல்வாங்களா? இப்படி பல மாதிரி, தாறு மாறா எங்க மனசு நெனச்சு கிடந்து தவிக்கும் அய்யா! கண்டிப்பா.

எப்படி சொல்றேன்னா.. பழைய தேதிகளுக்குச் சென்று பல படைப்புகளை படித்து பார்த்தேன். முக்கியமா மிக அருமையான கதைகள், கவிதைகள் கவனிப்பாரற்று ஏதோ 2 பேர் மட்டும் விமர்சித்து பின் யாருமே சீண்டாமல் கிடக்கின்றன. சரியா நான் சொல்வது?

பழையன கழிதல்..புதியன புகுதல் ன்னு இருக்கு நிலமை.

அதாவது விளையாட்டு, கேளிக்கைகள் செய்திகள் மட்டுமே நாள், மாத, வருட, பழசு, புதுசுன்னு கணக்கில்லாம எல்லாரும் பார்த்து,படித்து எழுதுகிறார்கள்.

உயிரைக் கொடுத்து, ரத்தம் சிந்தி, தூக்கம் இன்றி எழுதப்படும் கதை, கவிதைகள் அனைத்தும் நிறைய பேர் ( i mean majority) படிக்காமல் புழுதி பட்டு கிடக்கிறதே...

போட்டி என்று அறிவித்து.. டிசம்பர் மாத கவிதை, கதைகளையே ஏன் போட்டிக்கு விடக்கூடாது?

அல்லது போன வருடத்தில் உள்ள ஜுலை மாத படைப்புகளைக் கூட போட்டிக்கு விடலாமே?

சரி இதில் தெரிந்தவர், நண்பர்களுக்கு ஓட்டு நிறைய கிடைக்கும் என்ற அச்சம் இருக்கும். இருந்தால் என்ன? எத்தனை ஓட்டு அப்படி வந்துவிடப்போகிறது?

அப்படியே இருந்தாலும் ஊக்குவிப்பது ஒன்று தானே மன்றத்தின் நோக்கம்? நீங்கள் இதை கலந்து ஆலோசித்துப் பாருங்கள். போட்டி என சொல்லும் நேரம் பார்த்து இந்த கிரியேடிவ் மனது இருக்கிறதே அது மக்காரு பண்ணுது சாமி..

தவறா ஏதாவது பேசி இருந்தா கண்டிப்பா மனிச்சிடுங்க.

நான் பல நாளா யோசித்து தான் இந்த விஷயத்தைச் சொல்றேன். மன்றத்தின் ஒவ்வொரு எழுத்தும். படிக்கப் பட வேண்டும்.

‘நிழற்படம்’ மூலம் தெரிகிறது இதழ் தொகுப்பாளர் மட்டும் நன்கு அனைத்தையும் படிக்கிறார் என்று.. மற்றவர் எப்போ படிக்கறது?.

தவறு இருந்தால் மன்னியுங்கள்.

நண்பர் கூறியதும் சரியான கருத்தாக படுகிறது பழங்க்கதைகள் படிக்கையில் அதனை படித்தவர்கள் இட்ட பின்னோட்டங்கள் குறைவாகவே உள்ளன .ஒரு பின்னூட்டம்தான் ஒரு படைப்பாளியின் திறமையை வெளிக்கொணரும் என்பதில் ஐயமேதும் இல்லை .இவ்வாறு நிகழாமல் இருக்க போட்டியின் போது மட்டும் புதிய படைப்புகள் அளிக்க பட வேண்டும் இதற்கு ஒவ்வொரு விழா காலங்களிலும் ஏதேனும் ஒரு தலைப்பில் போட்டியினை நடத்தலாம் .இவ்வாறு செய்வதன் மூலம் புதிய படைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் .மேலும் மன்றத்தின் பொறுப்பு கூடும் . .இன்றைய தினம் மன்ற நண்பர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் தாண்டினாலும் பின்னோட்டம் இடுபவர்கள், படைப்புகள் கொடுப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது .இதற்க்கேனும் இவ்வாறு செய்வதன் மூலம் ஏதேனும் ஒரு மாற்றத்தை எதிபார்க்கலாம் ..தற்போது மன்ற உறுபினர்களின் எண்ணிக்கை என்ன நிர்வாகி அவர்களே?

என்றும் மன்றத்தின் நாலாவது தூணாக என்றென்றும் ....

கௌதமன்
19-01-2011, 01:10 PM
ஏனெனில் உறுப்பினர் படைக்கும் ஒவ்வொரு திரியையும் யாராவது படிக்கமாட்டாங்களா? பாக்க மாட்டாங்களா? பாத்து புடிச்சிருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லாருக்குண்ணு சொல்வாங்களா? இல்ல நல்லா இல்லன்னு சொல்வாங்களா? இப்படி பல மாதிரி, தாறு மாறா எங்க மனசு நெனச்சு கிடந்து தவிக்கும் அய்யா! கண்டிப்பா.

தரமான படைப்புகளை வழங்குபவர்களின் எண்ணிக்கையையும், பின்னூட்டமிடுபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க..

1) படைப்புகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறை [ ஏற்கனவே மன்றத்தில் உள்ள வழிமுறைதான். இதில் பதிவின் தரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். வெறுமனே எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாது, பதிவின் கருத்து, எழுத்து நடை, பிழை தவிர்ப்பு ,... ஆகியனவற்றிற்கேற்ப புள்ளிகள் வழங்கலாம். அந்தப் புள்ளிகளின் அடிப்படையில் இணைய காசுகளும், பட்டங்களும் வழங்கலாம். இந்த பொறுப்பை பொறுப்பாளர்கள் / தொகுப்பாளர்கள் ஏற்க வேண்டும். இதன் மூலம் பதிவுகளின் தரம் உயரக்கூடும்(?)].

2) பின்னூட்டம் என்பது வெறுமனே ‘நன்றி , பாராட்டுகள் போன்ற சம்பிரதாய வார்த்தைகளாக இல்லாமல் படைப்புகளை நன்கு அலசும் விதத்தில் இருந்தால் சிலசமயம் படைப்பைக் காட்டிலும் பின்னூட்டம் சிறப்பாக அமையும். எடுத்துக்காட்டாக ஒரு படைப்பு கவிதையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான பாராட்டையோ, விமர்சனத்தையோ எதிர்கவிதையாகவே பின்னூட்டமிடலாம். அத்தகைய பின்னூட்டங்களை திரியைப் பதித்தவர்கள் சிபாரிசு செய்யலாம், பொறுப்பாளர்களும், தொகுப்பாளர்களும் அதனை இனங்கண்டு பின்னூட்டமிட்டவர்களுக்கு புள்ளிகள் வழங்கலாம்.

3) பின்னூட்டங்களில் எதிர்கருத்துகள் அதிகம் வரவேற்கப்படவேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ளும் திறமையும் அத்ற்கு பதில் அளிக்கும் திறமையும் அதிகரிக்கும். ஆனால் எதிர்ப்பு கண்மூடித்தனமானதாக இருக்கக் கூடாது. நியாயமானக் கருத்தாகவிருந்தால் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் எதிர்கருத்துகள் பதிக்கப்படவேண்டும். அதே சமயத்தில் மனம் புண்படும்படியானக் கருத்துகளோ, தனிமனித விமர்சனமோ, பொத்தாம்பொதுவான கருத்துகளோ பதித்தால் புள்ளிகளை குறைக்கலாம். பண்பட்டவர் பட்டத்தை திரும்பப் பெறலாம். பின்னூட்டங்களில் எதிர்கருத்துகளில் நயத்தகு நாகரிகம் இருந்தால் அதிகப் புள்ளிகள் வழங்கலாம்.

4) தனி மடல் அனுப்புவது முற்றிலும் தவறானதல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து. பதிவைப் பற்றிய ஒரு கருத்தை வெளிப்படையாக கேட்காமல் தனிப்பட்ட முறையில் கேட்பது நாகரிகமான பழக்கமே. ஆனால் அதை விரும்பாதவர்களுக்கு அனுப்புதல் தவறு.

இதனால் படைப்புகளின் எண்ணிக்கையும், பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமா?

நமக்கு தேவை எண்ணிக்கையல்ல. தரம்! தரம் நன்றாக அமைந்தால் சிறந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்!

இது குறுகிய காலத் திட்டம் அல்ல. ஒரு நீண்டகால திட்டம்.

இந்தக் கருத்துப் பற்றி தோழர்கள் விமர்சிக்கலாம்!

CEN Mark
19-01-2011, 03:28 PM
தரமான படைப்புகளை வழங்குபவர்களின் எண்ணிக்கையையும், பின்னூட்டமிடுபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க..

இது குறுகிய காலத் திட்டம் அல்ல. ஒரு நீண்டகால திட்டம்.

இந்தக் கருத்துப் பற்றி தோழர்கள் விமர்சிக்கலாம்!

கௌதமன் வழிகாட்டுதல்கள் ஆரோக்கியமானதாக இருக்கிறது. பண்பாளர்கள், தூன்கள் , நிர்வாகிகள் இதனைப்பற்றி யோசிக்கலாம். .

thentamil
24-01-2011, 08:03 AM
மன்றத்தின் விதிமுறைகளை நான் ஏற்கிறேன்....:):cool::icon_ush:

கலைவேந்தன்
06-02-2011, 05:17 AM
புதிய பொலிவுக்கும் புதிய அறிவுரைகளுக்கும் பாராட்டுக்கள்...!

kay
03-04-2011, 06:39 PM
புதிய பொலிவுடன் தமிழ் மன்றம் இயங்குவது பற்றி மகிழ்ச்சி! மன்ற விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்!
:):):)