PDA

View Full Version : சின்னக் கவிகள்.

CEN Mark
17-12-2010, 02:59 PM
பெண்
பெண்ணே
பிரபஞ்சமாய் இருக்கிறாள்.
ஆக்கலும்,காத்தலும் அழித்தலுமாய்

கீதம்
18-12-2010, 09:12 AM
சின்னக்கவிகள் எழுப்பும்
சிந்தனைகள் அற்புதம்!
புதியகவியின் அளவிலாக்கவிகள்
பெருக அன்பான வாழ்த்துகள்!

govindh
18-12-2010, 09:28 AM
சின்னக்கவிகள் மிக அருமை...
சிறப்பாய் தொடர்ந்திடுங்கள்...
வாழ்த்துக்கள் சென் மார்க்.

CEN Mark
18-12-2010, 12:14 PM
சின்னக்கவிகள் எழுப்பும்
சிந்தனைகள் அற்புதம்!
புதியகவியின் அளவிலாக்கவிகள்
பெருக அன்பான வாழ்த்துகள்!

நன்றி...!

CEN Mark
18-12-2010, 12:15 PM
சின்னக்கவிகள் மிக அருமை...
சிறப்பாய் தொடர்ந்திடுங்கள்...
வாழ்த்துக்கள் சென் மார்க்.

நன்றி...!

Hega
18-12-2010, 12:22 PM
சின்னகவிகள் பெரியகவிதைகளோடு வந்ததோ....

பாராட்டுக்கள்.. தொடந்து விதையுங்கள் விளைச்சல் பெருகட்டும்.

CEN Mark
18-12-2010, 01:19 PM
சின்னகவிகள் பெரியகவிதைகளோடு வந்ததோ....

பாராட்டுக்கள்.. தொடந்து விதையுங்கள் விளைச்சல் பெருகட்டும்.

நன்றி ஹேகா! இன்றைய அவசர யுகத்தில் குறுகிய சொற்றொடரால் சில சமரசத்துடன் வார்த்தைகளை கோர்ப்பது சௌகரியமாகிறது.
நெடிய வாசிப்பு
இதுகாறும் நிகழவில்லை.
காரணம் வேலை பளு
தொல்லை.

கௌதமன்
18-12-2010, 01:22 PM
சின்ன எறும்பென்றாலும்
ஆனையின் காதுக்குள் போய்விட்டால்..

CEN Mark
18-12-2010, 01:40 PM
சின்ன எறும்பென்றாலும்
ஆனையின் காதுக்குள் போய்விட்டால்..

எறும்பு புகுவது குறும்புக்கல்ல. நல்ல பாட்டை ரீங்கரிக்க . களிறுக்கும் கேட்கவேண்டாமா?

கௌதமன்
18-12-2010, 01:55 PM
மன்றமென்ற வேழத்தின் காதுக்குள்
சின்னக்கவி என்ற சிற்றெறும்பு விட்ட
குறும்புக் கவிஞர் நீங்கள்
அத்ற்கு எதிர்வினைதான் வருகின்ற மடல்கள்

கீதம்
18-12-2010, 10:22 PM
மன்றமென்ற வேழத்தின் காதுக்குள்
சின்னக்கவி என்ற சிற்றெறும்பு விட்ட
குறும்புக் கவிஞர் நீங்கள்
அதற்கு எதிர்வினைதான் வருகின்ற மடல்கள்

கவனக்குறைவாகவும் இருக்கலாம். இருப்பினும் நாம் மகாபிரபுவின் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் என்பதை இப்படி அடிக்கடி மெய்ப்பிக்கவேண்டாமா? அதனால்தான்.:)

கௌதமன்
19-12-2010, 02:47 AM
கவனக்குறைவாகவும் இருக்கலாம். இருப்பினும் நாம் மகாபிரபுவின் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் என்பதை இப்படி அடிக்கடி மெய்ப்பிக்கவேண்டாமா? அதனால்தான்.:)
நன்றி கீதம் அவர்களே! பாராட்டுதல்களைவிட இது போன்றப் பிழைச் சுட்டுதல்கள் என்னை மேலும் பொறுப்புள்ளவனாக்குகிறது.

ஆன்டனி ஜானி
19-12-2010, 03:00 AM
சிறிய மரக் கன்று
வளரும் போதே
பெரிய கனி கொடுத்தது
இன்னும் கனி கொடுக்கும்

பாராட்டுக்கள் ........

கௌதமன்
19-12-2010, 03:51 AM
வரன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்..

ஏற்கனவே பதிவேற்றிய பதிவிலேயேத் திருத்தம் (EDIT) செய்து கவிதைகளைச் சேர்க்காமல் (UPDATING) புதியப் பதிவாகத் தரும்போது மன்ற அன்பர்களுக்கு கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற விவரம் அறியப்படும். இதுப்பற்றி மற்றவர்கள் கருத்துரைக்கலாம்.நன்றி!

பாலகன்
19-12-2010, 03:59 AM

அதற்கு பதிலாக தலைப்பில் Updated on 19/12/2010 என்று வைத்தால் பார்வையாளர்கள் கண்டுணர முடியும். தனித்தனி பதிவுகள் பதிவதற்கு பதிலாக இதுவே சிறந்தது என்பது என் கருத்து. வரிகள் 5க்கு குறைவாக இருக்கும்பட்சத்தில்

கௌதமன்
19-12-2010, 04:05 AM

அது சமீபத்திய பதிவுகள் (Latest Posts) என்ற முகப்பில் வருமா?

பாலகன்
19-12-2010, 04:17 AM
அது சமீபத்திய பதிவுகள் (Latest Posts) என்ற முகப்பில் வருமா?

தினம் நல்ல பதிவுகள் அதில் தந்தால்
அது எந்த பகுதியில் இருக்கிறதோ - அங்கே
அதை தேடி மக்கள் வருவார்களே!

சமீபத்திய பதிவுகளை மட்டுமே படித்தும் பார்த்தும் இருந்தால் சிறந்த பதிவுகளை சிலவேளைகளில் பார்க்க இயலாத நிலை ஏற்படலாம் நண்பரே!

CEN Mark
19-12-2010, 01:31 PM
சிறிய மரக் கன்று
வளரும் போதே
பெரிய கனி கொடுத்தது
இன்னும் கனி கொடுக்கும்

பாராட்டுக்கள் ........

பாராட்டுக்கு நன்றி. முச்சுவைகளையும் அள்ளிக்கொடுக்க முனைந்துள்ளேன்
முடிந்தவரை... .

CEN Mark
20-12-2010, 12:40 PM
கேள்வி (revised on 20.12.2010)
o பணத்துக்கும்,
பாலியலுக்கும்,
சிறார்கள் பலி

o பண்டிகை,
கோவில் திருவிழா…!
விலங்குகள் பலி

o சிலர் மனிதநேயம் பற்றியும்
சிலர் மிருகவதை பற்றியும்
பேசிக் கொல்கிறார்கள்.

CEN Mark
20-12-2010, 12:41 PM
எறும்பு (20.12.2010)
நிறம்மாறும் நீலவானம்
மண்புழுங்கும் உச்சி நேரம்
அரவம் போல் சிற்றெறும்பு.
சீனி, அரிசி, எச்சங்கலென
அடுக்களை இத்யாதிகள் அதன் தலையில்.

தரை கிழிக்கும் நீண்ட பயணம்
சுவர் இடுக்கில் சுரங்கங்கள்
எறும்புக்குத் தெரியும் இயற்கையின்
சலனம்.

CEN Mark
20-12-2010, 12:44 PM
சுழி (20.12.2010)
முடி அறுத்து
குடி வெறுத்து
நர மறுத்து
தியானம் தரும் சுவை…
ஷன நேர காம உச்சம்
உணர்த்தி விடும்..

CEN Mark
20-12-2010, 12:53 PM
காதல்.
o நிஜத்திற்கும் கற்பனைக்கும்
இடையில்வரும்
முரண்பாடு.

o சாதி, மதம், இனமெல்லாம்
இனப்பெருக்க
கோட்பாடு...

கௌதமன்
20-12-2010, 01:15 PM
கேள்வி (revised on 20.12.2010)
o பணத்துக்கும்,
பாலியலுக்கும்,
சிறார்கள் பலி

o பண்டிகை,
கோவில் திருவிழா…!
விலங்குகள் பலி

o சிலர் மனிதநேயம் பற்றியும்
சிலர் மிருகவதை பற்றியும்
பேசிக் கொல்கிறார்கள்.

கொன்னுட்டீங்க...
பாராட்டுகள்.

கௌதமன்
20-12-2010, 01:16 PM
சுழி (20.12.2010)
முடி அறுத்து
குடி வெறுத்து
நர மறுத்து
தியானம் தரும் சுவை…
ஷன நேர காம உச்சம்
உணர்த்தி விடும்..

ஆதலினால் காதல் செய்வீர்...

கௌதமன்
20-12-2010, 01:18 PM
குற்றப் பின்னணி (20.12.2010)

o யுத்தம் அடங்கி உலகைப்
பார்த்தால்
நிசப்த்தமும்...சூன்யமும்...

o சூன்ய விதியின் ஆய்வின்
முடிவில்
ஆன்மிகமும் ...அந்தகாரமும்

சிதம்பர ஆடலரசுவின் (நடராஜர்) பிரபஞ்ச ரகசியம்..

ஆன்டனி ஜானி
20-12-2010, 01:39 PM
(20.12.2010)

ஷன நேர காம உச்சம்
உணர்த்தி விடும்..

கொஞ்ச நேர கவிதைகள் ,இருவரி வார்த்தைகள்

கவிதைகளால் உச்சத்தை அடைய வைத்தது

பாராட்டுக்கள் நண்பரே

தொடருங்கள் ......

கீதம்
20-12-2010, 11:30 PM
எறும்பின் பயணமும் இங்கே
நின்று கவனிக்கப்படுகிறது கவிமனத்தால்!

ஒரு செல்லில் அடைபட்ட குற்றத்தின் பின்னணியும்
ஒரு செல்லில்தான் துவக்கம்!

சின்னக்கவிகள் என்ற பெயரில்
சீரிய கருத்தணுகுண்டுகள்!

வெடிக்க வெடிக்க இன்பந்தரும்
விநோத கவியெறிக்குண்டுகள்!

CEN Mark
21-12-2010, 12:43 PM

நன்றி தோழரே! இந்தச் சின்ன கவியென்ற பெயரில் ஏதோ எழுதிவரும் எனக்கு உங்கள் இருவரி கவிதைகள் மேலும் கட்டிப்போடுகிறது. வீட்டில் என் மகளும் :
அம்மாவின் பொட்டைப்போல்
வட்ட தோசை...
முறுகளாய்..... கொஞ்சம் கறுகளாய் !..!

என்று எழுதும் அளவிற்கு சமீபத்திய என் தாக்கம் இருக்கிறது. இது நல்லதா? கேட்டதா? என நானறியேன்...

CEN Mark
21-12-2010, 02:27 PM
பிம்பம்

நடு வீதியில்
ஒற்றைச்சிரட்டையில்
வானம்.....

வானம் கொத்தித்
தாகம் தணித்தது
அண்டங்காக்கை.!....

CEN Mark
21-12-2010, 02:40 PM
தவிர்ப்பதர்கல்ல .....
பூமியை விழுங்கும்
அடைமழை

இரவைத் தின்னும்
அழற்கதிர்

பிணி போக்கும்
மருந்து

உடல் வளர்க்கும்
உணவு

அறியாமை போக்கும்
கல்வி

உள்ளம் உருக்கும்
ஆன்மிகம்....

கௌதமன்
21-12-2010, 02:42 PM
பிம்பம்

நடு வீதியில்
ஒற்றைச்சிரட்டையில்
வானம்.....

வானம் கொத்தித்
தாகம் தணித்தது
அண்டங்காக்கை.!....

என்னைத் தொட உன்னால் முடியுமா?
வானமகள் கேட்டது காக்கையை
கேலியாய் சிரித்தது மழைத்தாரகை
....
வானத்தையும் மழை நீரையும்
சேர்த்தேக் கொத்திய காக்கை
அண்ணாந்து பார்த்தது
மேகத்தால் முகம் மறைத்தது வானம்
வெட்கி அழுதது மழை!

உங்கள் காட்சிப்பதிவு என் கற்பனைச் சிறகை விரிக்கிறது.
பாராட்டுகள் நாகேஸ்வரன்

CEN Mark
21-12-2010, 02:46 PM
மூலம்
ஆணும் பெண்ணும்
சமமென்பது சமரசம்...

ஆண்தான் உலகின் உயர்வானவன்
என்பது ஏமாற்று..

பெண்ணே படைப்பின்
மூலமென்பது பிரம்ம சூத்திரம்....

கௌதமன்
21-12-2010, 02:48 PM
மூலம்

பெண்ணே படைப்பின்
மூலமென்பது பிரம்ம சூத்திரம்....

முதலிலும் முடிவிலும் எல்லாம் பிரம்மம் என்பதே பிரம்ம ரகசியம்

பாலகன்
21-12-2010, 02:52 PM
மூலம் அருமையாக இருந்தது
பாராட்டுக்கள் நண்பரே

CEN Mark
21-12-2010, 02:53 PM
என்னைத் தொட உன்னால் முடியுமா?
வானமகள் கேட்டது காக்கையை
கேலியாய் சிரித்தது மழைத்தாரகை
....
வானத்தையும் மழை நீரையும்
சேர்த்தேக் கொத்திய காக்கை
அண்ணாந்து பார்த்தது
மேகத்தால் முகம் மறைத்தது வானம்
வெட்கி அழுத்தது மழை!

உங்கள் காட்சிப்பதிவு என் கற்பனைச் சிறகை விரிக்கிறது.
பாராட்டுகள் நாகேஸ்வரன்

ரெக்கை கட்டி உயரப்பறந்து கொண்டிருக்கும்
உம் பாதையில் தான் என் பயணமும்..
திசை மாறாமல் தலைமையேற்கும் பொறுப்பு
உம்மோடது.. நன்றி..பாராட்டுக்கு.

CEN Mark
21-12-2010, 02:57 PM
மூலம் அருமையாக இருந்தது
பாராட்டுக்கள் நண்பரே

சாணக்கியரின் பாராட்டுதல்கள் மெய்சிலிர்க்கவைத்தது. நன்றி மகாபிரபு அவர்களே..!

CEN Mark
21-12-2010, 02:59 PM
முதலிலும் முடிவிலும் எல்லாம் பிரம்மம் என்பதே பிரம்ம ரகசியம்

சின்னக் கவியின் முதல் கவியையே இதன் பதிலாய் தருகிறேன், நன்றி..

CEN Mark
21-12-2010, 03:08 PM
என் மகளின் கவி.உங்களுக்காக..
அம்மாவின் பொட்டைப் போல்
அப்பாவின் தட்டில் வட்ட தோசை...
முறுகலாய்,,,.. கொஞ்சம் கறுகலாய்..

(தோசை சிறியது என்பதையும், கரிந்துவிட்டது என்பதையும் கவியில் அம்மாவிற்கு உணர்த்தினாள்)

கௌதமன்
21-12-2010, 03:19 PM
கவிதாயினியே !
இன்கவி தா இனி
தந்தைக்கு வாழ்த்து
மகளுக்கு பாராட்டு

கீதம்
21-12-2010, 10:49 PM
நன்றி தோழரே! இந்தச் சின்ன கவியென்ற பெயரில் ஏதோ எழுதிவரும் எனக்கு உங்கள் இருவரி கவிதைகள் மேலும் கட்டிப்போடுகிறது. வீட்டில் என் மகளும் :
அம்மாவின் பொட்டைப்போல்
வட்ட தோசை...
முறுகளாய்..... கொஞ்சம் கறுகளாய் !..!

என்று எழுதும் அளவிற்கு சமீபத்திய என் தாக்கம் இருக்கிறது. இது நல்லதா? கேட்டதா? என நானறியேன்...

நல்லதே கேட்டது.:)

சின்னக்கவிகள் பல இங்கே படைக்குமுன்
இல்லத்தில் படைத்துவிட்டீரோ சின்னக்கவியொன்று!

கவி அருமை. மேலும் வளரட்டும் அவள் கவித்திறமை!:icon_b:

CEN Mark
22-12-2010, 04:31 PM
நல்லதே கேட்டது.:)

சின்னக்கவிகள் பல இங்கே படைக்குமுன்
இல்லத்தில் படைத்துவிட்டீரோ சின்னக்கவியொன்று!

கவி அருமை. மேலும் வளரட்டும் அவள் கவித்திறமை!:icon_b:

நன்றி..!.!.!

govindh
22-12-2010, 04:41 PM
நன்றி தோழரே! இந்தச் சின்ன கவியென்ற பெயரில் ஏதோ எழுதிவரும் எனக்கு உங்கள் இருவரி கவிதைகள் மேலும் கட்டிப்போடுகிறது. வீட்டில் என் மகளும் :
அம்மாவின் பொட்டைப்போல்
வட்ட தோசை...
முறுகளாய்..... கொஞ்சம் கறுகளாய் !..!

என்று எழுதும் அளவிற்கு சமீபத்திய என் தாக்கம் இருக்கிறது. இது நல்லதா? கேட்டதா? என நானறியேன்...

சின்னக் கவி படைக்கும்
சின்னக் 'கவி'க்கும் பாராட்டுக்கள்...
வாழ்த்துக்கள்...

CEN Mark
23-12-2010, 04:32 PM
ஞான ஒளி
மூலவர் நடை சாத்தி
சாமி சிலைக்கு அலங்காரம்...
காது கொள்ளா மணியோசை..
கண்கள்மூடி காத்திருந்தேன்.
ஓங்கார ஓசை மூளைக்குள்
வெற்றிடத்தை விரவி நிற்க
கதவு திறந்து தீபம் கண்டதும்
ஞான சூத்திரம் விளங்கிவிட்டது.. ...

CEN Mark
23-12-2010, 04:39 PM
கற்பு
ஆண்மைக்கும் பெண்மைக்கும்
இடையிலெழும் காதலுக்குள்
அன்னிச்சையாய் மலருகின்ற
கண்ணியமான கலவி

கௌதமன்
23-12-2010, 04:43 PM
கற்பு
அன்னிச்சையாய் மலருகின்ற
கண்ணியமான கலவி

கற்பொழுக்கத்திற்கு புது இலக்கணமா?
குஷ்பூ மீது போட்ட வழக்கு இன்னும் முடியவில்லை

CEN Mark
23-12-2010, 04:48 PM
விதி
வாழ்வின் நிதர்சனத்தை
கோள்களில் தேடினேன் - கோள்களே
நிலையற்றதாய்....

இயக்கத்தின் பயணத்தை
விதியின் வசம் வைத்தேன் - விதி
விலக்காய்....

தேடலின் தொடக்கத்தை
புலன்களிடம் ஒப்படைத்தேன்.. புலன்
விதிவசத்தால்...?..

மதியற்றவன் விதியை
தீர்மானிக்க முடியாது.
பயன்படாத விதிகள்
மதியேராது

CEN Mark
23-12-2010, 04:55 PM
கற்பொழுக்கத்திற்கு புது இலக்கணமா?
குஷ்பூ மீது போட்ட வழக்கு இன்னும் முடியவில்லை

இலக்கணமல்ல இயல்பு..எதார்த்தம் ...

Hega
23-12-2010, 07:31 PM
என் மகளின் கவி.உங்களுக்காக..
அம்மாவின் பொட்டைப் போல்
அப்பாவின் தட்டில் வட்ட தோசை...
முறுகலாய்,,,.. கொஞ்சம் கறுகலாய்..

(தோசை சிறியது என்பதையும், கரிந்துவிட்டது என்பதையும் கவியில் அம்மாவிற்கு உணர்த்தினாள்)

சின்னக்கவியதிலே
சின்னக்கவியாமிவள்
சின்னக்கவி யருமை

சின்னகவியிவள்க்கு நீவீர்
சிற்பியாகிடும்கால்
சிந்தைசிறகைவிரித்து
சின்னகவி படைத்தே
சிகரமதைதொடுவாள்
சீருடனேவாழ்வாள்

நல்லாசியோடு......

CEN Mark
26-12-2010, 06:24 AM
ஓவியம்
ஒரு சந்தியா வேளையிலே
அம்மாவுக்கு வயிற்றுவலி
ஆமணக்கு எண்ணை எடுத்து
அடிவயிற்றில் தடவிட்டார்
பாசமுள்ள அப்பா..

வயிற்றினிலே வரிவரியாய்
எண்ணற்ற அடையாளம்
கஜுராகு ஓவியம் என்றார் அப்பா!
நீலவான உறைமேகமென்றேன் நான்
கர்பகாலத்து கருத்தொவியமென்றாள் அம்மா

ஜானகி
26-12-2010, 08:35 AM
சின்னக் கவியென நீங்கள் சொன்ன வரிகள்,
எண்ணத்தின் வரிவடிவ சொல்லோவியங்கள்,
வண்ணஜாலம் காட்டும் நிதர்சனங்கள்.

CEN Mark
26-12-2010, 03:27 PM
சின்னக் கவியென நீங்கள் சொன்ன வரிகள்,
எண்ணத்தின் வரிவடிவ சொல்லோவியங்கள்,
வண்ணஜாலம் காட்டும் நிதர்சனங்கள்.

தேவாரம், திருவாசகத்திற்கிடையில் இந்தச் சின்னக் கவியையும் கவனித்தமைக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை தாருங்கள். என்னை முன்னோக்கி எடுத்துச்செல்ல அது உதவும்.

king44
27-12-2010, 11:31 AM
என் மகளின் கவி.உங்களுக்காக..
அம்மாவின் பொட்டைப் போல்
அப்பாவின் தட்டில் வட்ட தோசை...
முறுகலாய்,,,.. கொஞ்சம் கறுகலாய்..

(தோசை சிறியது என்பதையும், கரிந்துவிட்டது என்பதையும் கவியில் அம்மாவிற்கு உணர்த்தினாள்)

superb.யதார்த்தம் தெரிந்தவர் உங்கள் மகள்

அமரன்
27-12-2010, 08:26 PM
ஒவ்வொன்றும் யுரேனியச் செறிவு!!!

சின்னக்கவிக்கு அன்பு வாழ்த்துகள்.

சின்ன விண்ணப்பம் நண்பரே..

இருவரி, மூவரிக் கவிதைகளை இங்கேயும் அதற்கு மேல்வரிக் கவிதைகளைத் தனித்தனியாகவும் பதிந்தால் சுவைப்போருக்கு எளிதாக இருக்கும். கவிதைகளும் அதிகம் கவனிக்கப்படும். மன்றமும் மகிழும்.

CEN Mark
28-12-2010, 11:56 AM

நன்றி.. இனி அவ்வாறே இயற்றப்படும் இயன்றவரை..அதென்ன சின்னக்கவியிடம் சின்ன விண்ணப்பம்? கொஞ்சம் பெரிசாகத்தான் இருக்கட்டுமே ..

கௌதமன்
28-12-2010, 12:02 PM
இருவரி, மூவரிக் கவிதைகளை இங்கேயும் அதற்கு மேல்வரிக் கவிதைகளைத் தனித்தனியாகவும் பதிந்தால் சுவைப்போருக்கு எளிதாக இருக்கும். கவிதைகளும் அதிகம் கவனிக்கப்படும். மன்றமும் மகிழும்.

ஓ! அதுதான் விடயமா? குறித்து வைத்தாகிவிட்டது.

CEN Mark
28-12-2010, 12:20 PM
ஓ! அதுதான் விடயமா? குறித்து வைத்தாகிவிட்டது.

கௌதமன் அவர்களே! ஏற்கனவே சின்னக்கவியில் இடம்பெற்ற நெடுங்கவிதைகளை எப்படி இடப்பெயர்ச்சி செய்வது? (வெட்டி ஒட்டுவது.) வழிமுறைகள் ஏதேனுமிருந்தால் தெரிவிக்கவும்...

கௌதமன்
28-12-2010, 02:56 PM
கௌதமன் அவர்களே! ஏற்கனவே சின்னக்கவியில் இடம்பெற்ற நெடுங்கவிதைகளை எப்படி இடப்பெயர்ச்சி செய்வது? (வெட்டி ஒட்டுவது.) வழிமுறைகள் ஏதேனுமிருந்தால் தெரிவிக்கவும்...

அதுதான் நீங்களே சொல்லீட்டிங்களே! வெட்டி ஒட்டுவதுதான்..

இல்லைனா இதழ் தொகுப்பாளரிடம் கேட்போமா?

CEN Mark
28-12-2010, 04:39 PM
பிரபஞ்சம்
இந்த பிரபஞ்சம்
சலனங்களால் ஆனது. ஒவ்வொரு
சலனத்திற்கு பின்னாலும்
ஒரு பெண் இருக்கிறாள்

CEN Mark
28-12-2010, 04:40 PM
கடவுள்
கடவுள்
நேற்று என் கனவில் வந்தார்.
கடவுளே நானாக,
நானே கடவுளாக....

CEN Mark
28-12-2010, 04:41 PM
போதை
போதை திரவம்
மூத்திரத்தைவிட கொடிய நெடி.
மூக்கை பிடித்து உள்ளே தள்ளினால்,
அந்தரத்தில் என் சடலம்

CEN Mark
28-12-2010, 04:42 PM
அணுவும் - யுத்தமும்
அணுக்கள் மோதுவதில்லை.
மோதவைக்கப்படுகிறது.
எண்ணங்கள் எண்ணிப்பார்பதில்லை, நாம்
யுத்தம் செய்யப்படுகிறோமென்று

CEN Mark
28-12-2010, 04:43 PM
ஏமாற்றம்
மஞ்சள் வெயிலில் பரந்த மணற்பரப்பில்
ஒற்றை பனைமரம்.
முதற் கள்ளை முதன் முதலாய்
பருகிட விளைந்தேன்.
எனக்கு முன்னே
பல்லிகளும், வண்டுகளும், ஈக்களும்..!

அமரன்
28-12-2010, 04:43 PM
பெரிய கவிதைகளைத் தனித் தனியாக்க்குகிறேன்..

CEN Mark
28-12-2010, 04:45 PM
கேள்வி
o பணத்துக்கும், பாலியலுக்கும்,
சிறார்களே முதல்பலி.
தலையங்கத்தில் மனிதர்களின்
முதல் கேள்வி
மனிதநேயம் எங்கே போனது?

o பண்டிகையின்போதும்
கோவில் திருவிழாவின்போதும்
ஆடு, கோழிகளை வெட்டும்போது
அவைகளும் மனிதநேயம் பற்றி
ஓலமிட்டிருக்குமோ?

CEN Mark
28-12-2010, 04:53 PM
பெரிய கவிதைகளைத் தனித் தனியாக்க்குகிறேன்..

என் முயற்சியில் ஒரு சிறு தோல்வி. உங்களின் தனி முயற்சிக்காக காத்திருக்கிறேன்

அமரன்
28-12-2010, 05:06 PM
கொஞ்சக் கவிதைகளை சொன்னபடி செய்திருக்கிறேன் சென்.

மிச்சக் கவிதைகளையும் விரைவில் செய்கிறேன்..

வியாசன்
28-12-2010, 07:22 PM
சென் உங்கள் கவிதைகள் காரமானவை. உங்கள் கருக்கள் சமுதாயத்தை சுற்றிச் சுற்றி வருகின்றது. கசாப்புக்கடைகாரர்களிடம் மனிதநேயத்தை காணமுடியுமா? அவலங்களை தாருங்கள் ஒரேயடியாக அல்ல ஒரேநாளில் அல்ல

அமரன்
28-12-2010, 08:16 PM
என் முயற்சியில் ஒரு சிறு தோல்வி. உங்களின் தனி முயற்சிக்காக காத்திருக்கிறேன்

ஆச்சு நாகேஸ்.

இனி வருங்காலத்தில் பெரிய கவிதைகளை தனித்தனிப் பக்கங்களாகவும் முகவும் சிறிய கவிதிகளை சின்னக்கவிகள் எனும் தொகுப்பிலும் பதிந்தால் வாசகர்களுக்கு வசதியாக இருக்கும்.

நன்றி

கீதம்
28-12-2010, 11:39 PM
ஏமாற்றம்
மஞ்சள் வெயிலில் பரந்த மணற்பரப்பில்
ஒற்றை பனைமரம்.
முதற் கள்ளை முதன் முதலாய்
பருகிட விளைந்தேன்.
எனக்கு முன்னே
பல்லிகளும், வண்டுகளும், ஈக்களும்..!

எனக்கு முன்னே பருகிய
பல்லிகளுக்கும், வண்டுகளுக்கும் ஈக்களுக்கும்
ஆன கதியைப் பார்த்தபின்னும்
கள் பருகத் துடிக்கும் மனதுக்குக்
கடிவாளமிட முனையாமல்
கையாலாகாதவனாய் நான்!

கவி நன்று. பாராட்டுகள்.

CEN Mark
30-12-2010, 03:38 PM
எனக்கு முன்னே பருகிய
பல்லிகளுக்கும், வண்டுகளுக்கும் ஈக்களுக்கும்
ஆன கதியைப் பார்த்தபின்னும்
கள் பருகத் துடிக்கும் மனதுக்குக்
கடிவாளமிட முனையாமல்
கையாலாகாதவனாய் நான்!

கவி நன்று. பாராட்டுகள்.

ம்ஹும்!....கள் கவிதைக்கும் கற்பனைக்கும் மட்டுமே. வாழ்க்கைக்கு அல்ல.

CEN Mark
30-12-2010, 03:47 PM
சென் உங்கள் கவிதைகள் காரமானவை. உங்கள் கருக்கள் சமுதாயத்தை சுற்றிச் சுற்றி வருகின்றது. கசாப்புக்கடைகாரர்களிடம் மனிதநேயத்தை காணமுடியுமா? அவலங்களை தாருங்கள் ஒரேயடியாக அல்ல ஒரேநாளில் அல்ல

நான் வேறு சமுதாயம் வேறு என்று எப்படி பிரித்துப்பார்ப்பது? சமுதாயத்தின் குறைகள் என்னிடத்திலும்.. என்னைச்சாடவே எனக்கு அருகதையுள்ளது. அவலங்களை வெளிக்கொனருவதுமூலம் என்னை நான் சுத்தப்படுத்துகிறேன். நன்றி ஏன் கவிக்கு செவி சாய்த்தமைக்கு.

ஆர்.ஈஸ்வரன்
01-02-2012, 09:06 AM
வாழ்த்துக்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-03-2012, 04:42 PM
மிகவும் அருமையான கவிதைகள் சென் மார்க் அவர்களே.நன்றி.:)