PDA

View Full Version : மரணக்கடல்Hega
17-12-2010, 03:42 PM
மரணக்கடல் எனப்படும் டெத் சீயில் விழுந்*தால் யாரும் மூழ்கி இறக்க மாட்டார்கள்.


காரணம் என்ன தெரியுமா

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/363px-Dead_Sea_Galilee.jpgஇது கடல் நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 6.. 8 மடங்கு அதிகளவு உவர்ப்பான நீரைக்கொண்டதனால் இக்கடலில், உயிரினங்கள், தாவரங்கள் உயிர் வாழ முடியாதுள்ளது.

அதனால் தான் இக்கடல் சாக்கடல் அல்லது மரணக்கடல் என அழைக்கப்படுகின்றது.

ஆனால் மிகச்சிறிய நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இக்கடலில் இராட்சத அலைகளும் கிடையாது.


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/800px-DeadSea3667.jpgபூமியின் விரிசலால் இன்னும் 418 மீற்றர்கள் கீழே சென்று விட்ட இக்கடலில் தவறி விழுந்தால் கூட யாரும் மூழ்கி இறக்க மாட்டார்கள்...ஏனெனில் கடலில் உப்பின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் யாரும் மூழ்க முடியாது மிதப்பார்கள்...http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/nishanthi/250px-Dead_sea_newspaper.jpg


சாக்கடலில் மேல் மிதக்கும் ஒருவர்...

ஆன்டனி ஜானி
17-12-2010, 03:46 PM
இப்படியும் கடல்கள் இருக்கிறதா
நம்பவே முடியல
கடலை பார்த்தாலே எமன் போல தான் இருக்கு
படங்களை தொகுத்து வழங்கி காண்பித்ததுக்கு

பாராட்டுக்கள்.

பாலகன்
17-12-2010, 03:47 PM
எனக்கு பிடித்தமான சமுத்திரங்கள் பற்றிய தகவல்கள் தந்த ஹேகாவிற்கு என் பாராட்டுக்கள்.

தொடர்ந்தால் மகிழ்வேன்.

இந்த உப்புக்கடலில் தொடரந்து மிதந்தால் நமக்கு ஏதாவது சிக்கல் வருமா? உடல் உபாதைகள். தோல் அல்லது ரத்தம் தொடர்பாக :smilie_abcfra:

ஆன்டனி ஜானி
17-12-2010, 03:52 PM
கடலில் குளிப்பதால் நோய்கள் தான் நீங்கும்
ஆனால் நோய்கள் வராது உடம்பில் உள்ள
அனைத்து நோய்கலும் குணமாகும் ,,,,,,

தீங்கு என்று சொல்லபோனால்
உடல் கருக்கும் அது தான் வேரொன்றும் தீங்கு இல்லை என்று நினைக்கிறேன்..

பாலகன்
17-12-2010, 03:58 PM
கடலில் குளிப்பதால் நோய்கள் தான் நீங்கும்
ஆனால் நோய்கள் வராது உடம்பில் உள்ள
அனைத்து நோய்கலும் குணமாகும் ,,,,,,

தீங்கு என்று சொல்லபோனால்
உடல் கருக்கும் அது தான் வேரொன்றும் தீங்கு இல்லை என்று நினைக்கிறேன்..

இது உங்கள் கருத்தா, இல்லை ஆய்வின் முடிவா, விளக்கம் கொடுக்க முடியுமா? ஏனெனில் இது எனக்கு பிடித்த தலைப்பு ஆன்டனி. தவறாக நினைக்கவில்லையே?

அன்போடு
மகாபிரபு

கௌதமன்
17-12-2010, 04:01 PM
மேலும் தகவல்கள்
1960 வரை சாக்கடலின் மேற்பகுதியில் உப்புத்தன்மை குறைவாயும், ஆழப் பகுதிகளுக்குச் செல்லச் செல்ல உப்புத்தன்மை அதிகமாயும் காணப்பட்டது. நீர்ப் பாசனத்துக்குக்காக ஜோர்டான் ஆறு திசைதிருப்பட்டதாலும் மழை குறைந்ததாலும் சாக்கடல் பெறும் நீரின் அளவு குறைந்தது. 1975ம் ஆண்டளவிலிருந்து சாக்கடலின் மேற்பகுதி உவர்ப்புத்தன்மை அதிகமுள்ளதாக மாறியது. ஆனால் மேற்பகுதி நீரின் வெப்பநிலை ஒப்பீட்டளவில் கீழ்ப்பகுதியை விட வெதுவெதுப்பாய் இருப்பதால் அடர்த்தி் குறைவாக இருக்கிறது. அடர்த்தி குறைந்த நீர் மேல்பகுதியில் இருக்கிறது. மேல் பகுதியின் நீர் குளிர்ந்ததும் இதுவரை இரு வேறு வெப்பநிலைகளைக் கொண்டிருந்த மேல் கீழ் பகுதிகளின் நீர் கலந்தன.

கௌதமன்
17-12-2010, 04:04 PM
பூமியிலேயே ஆழமான பகுதியான சாக்கடலில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் மேற்குக்கரை, ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சந்திக்கவிருக்கின்றன. இதுபற்றிய ஆய்வு ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர் Shahrazad Abu Ghazleh மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பெற்று வருகிறது. தற்போது நடந்துவரும் சாக்கடல்-செங்கடல், மத்தியதரைக்கடல்- சாக்கடல் இவற்றிற்கிடையேயான கால்வாய்ப்பணிகள் மூலம் சாக்கடலின் நீர்மட்டத்தை முந்தைய அளவிற்கு உயர்த்தும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. மின் உற்பத்திக்காகவும், உப்புத்தன்மையை அகற்றி நன்னீராக மாற்றவும் இந்த கால்வாய் இணைப்புகள் உதவும். சாக்கடலின் நீர்மட்டம் குறைந்துபோனதற்கு புவிவெப்பமாறுபாடு காரணமல்ல என்பதும், மனிதர்கள் தங்களுடைய தேவைகளுக்காக அதிக நீரை பயன்படுத்தியதும்தான் காரணம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

கௌதமன்
17-12-2010, 04:07 PM
ஜோர்டானிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.
(ஜோர்டான் மற்றும் யார்மோக் என்பவை தமிழ்ப் பெயர்கள் என்பதை என்னுடைய முதற்றாய்மொழி-நம் தமிழ் என்ற திரியில் பின்னர் விளக்குவேன்)

கௌதமன்
17-12-2010, 04:09 PM
மகாபிரபுவின் சந்தேகத்திற்கு பதில்:
பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படுதல், மாசுபடாத வளி, வளியழுத்தம் அதிகமாக இருத்தல், புற ஊதாக்கதிர்களின் வீச்சு குறைவாக இருத்தல் ஆகியவை உடல் நலத்தை மேம்படுத்தும் காரணிகளாக இருப்பதால் உடல் மற்றும் அழகு சிகிச்சைகளுக்கு சாக்கடல் பகுதி இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.

பாலகன்
17-12-2010, 04:11 PM
நண்பர் கெளதமனின் பதில் மிகவும் ஏற்புடையது. நன்று

எனது கேள்விக்கும் அப்படியே தெளிவு ஏற்பட்டால் மகிழ்வேன்

கௌதமன்
17-12-2010, 04:13 PM
நண்பர் கெளதமனின் பதில் மிகவும் ஏற்புடையது. நன்று

எனது கேள்விக்கும் அப்படியே தெளிவு ஏற்பட்டால் மகிழ்வேன்

கேள்வி...?

பாலகன்
17-12-2010, 04:13 PM
மகாபிரபுவின் சந்தேகத்திற்கு பதில்:
பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படுதல், மாசுபடாத வளி, வளியழுத்தம் அதிகமாக இருத்தல், புற ஊதாக்கதிர்களின் வீச்சு குறைவாக இருத்தல் ஆகியவை உடல் நலத்தை மேம்படுத்தும் காரணிகளாக இருப்பதால் உடல் மற்றும் அழகு சிகிச்சைகளுக்கு சாக்கடல் பகுதி இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.

அப்படியா? தெளிந்த விளக்கம் இதை நான் காணத்தவறிவிட்டேன். நன்றி கெளதமா

ஜனகன்
17-12-2010, 05:58 PM
சமுத்திரங்கள், கடல்கள் பற்றிய சில அரிய தகவல்கள் தந்த ஹேகாவிற்கும்,கௌதமன் அவர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுக்களும்.

ஆன்டனி ஜானி
17-12-2010, 06:11 PM
இனி மகாபிரபுக்கு பதில் தேவை படாது என்று நினைக்கிறேன்

அதற்க்கு தான் நமது ஆருயிர் நண்பன் கௌதம் அவர்கள்

அழகான விளக்கம் கொடுத்து இருக்கிறார் .......

இதுவே போதுமானதாகும் .....

சூறாவளி
18-12-2010, 01:20 AM
படங்கள் பதிந்து விளக்கம் அளித்து மரணக்கடல் பற்றி அதிக தகவல்கள் அறியத்தந்த ஹேகாவுக்கு ஒரு சபாஷ்:icon_b:

மேலும் தகவல்கள் அறிய தந்த கெளதமன் நண்பருக்கும் நன்றிகள்..

கீதம்
18-12-2010, 09:00 AM
சாக்கடல் பற்றி அறிய அரிய விவரங்கள் தொகுத்து வழங்கிய Hega வுக்கும் கெளதமன் அவர்களுக்கும், ஐயம் எழுப்பி மேலதிக விவரங்கள் பதிக்கவைத்த மகாபிரபுவுக்கும் நன்றிகள் பல.

பாலகன்
18-12-2010, 09:08 AM
ஐயம் எழுப்பி மேலதிக விவரங்கள் பதிக்கவைத்த மகாபிரபுவுக்கும் நன்றிகள் பல.

அப்பாடா நம்மள கரீக்கிட்டா புரிஞ்சின்னு கீரக்கா :D

Hega
18-12-2010, 09:41 PM
முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட இக்கடல் ஓர் உவர் நீரேரி ஆகும். 330 மீட்டர் ஆழமுடைய சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 6 - 8 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து தற்போது 418 மீட்டர்கள் கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது

Hega
18-12-2010, 09:42 PM
பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படல், மாசுபடாத வளி, வளியமுக்கம் அதிகமாயிருத்தல், அதிஊதாக் கதிர்களின் வீச்சுக் குறைவாயிருத்தல் என்பன உடல்நலத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைவதால் உடல் மற்றும் அழகுச் சிகிச்சைக்குப் புகழ் பெற்ற இடமாகவும் விளங்குகிறது.

கௌதமன்
19-12-2010, 05:04 AM
பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படல், மாசுபடாத வளி, வளியமுக்கம் அதிகமாயிருத்தல், அதிஊதாக் கதிர்களின் வீச்சுக் குறைவாயிருத்தல் என்பன உடல்நலத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைவதால் உடல் மற்றும் அழகுச் சிகிச்சைக்குப் புகழ் பெற்ற இடமாகவும் விளங்குகிறது.

ஒரேக்கடையில் வாங்கிய (எடுத்த) மிட்டாய்

Hega
19-12-2010, 07:23 AM
அடஆமாம் இல்லை்யா

உங்கள் மற்ற தகவலகளை கண்டேன் இதுபற்றி கவனிக்கவில்லை

நாஞ்சில் த.க.ஜெய்
28-12-2010, 10:27 AM
அருமையான தகவல்கள் உண்மை தகவல்களை அறிய தந்த நண்பர் ஹேஹா மற்றும் கௌதமன்,மகாபிரபு வுக்கு என் நன்றிகள்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

பிரேம்
03-01-2011, 05:19 AM
அருமையான தகவல்...
என்னதான் இருந்தாலும் தண்ணியில மெதக்கிறதுல..நம்மள அடிக்க ஆள் இல்ல....