PDA

View Full Version : நமக்குள்ளே இருப்பதென்ன... ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் என்ன வித்தியாசம்?Hega
17-12-2010, 02:25 PM
நமக்குள்ளே நமக்கு தெரியுமா..


இதோ தெரிந்து கொள்வோம்..


மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639

மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.

மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.

மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400

மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33

மனித மூளையின் எடை 1.4 கிலோ

உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்

மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர்

உடலின் மெல்லிய சருமம் கண் இமை

மனித உடலில் இள்ள குரோம்சோம்களின் எண்ணிக்கை 23 ஜோடி

ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.

நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.

மனித நாக்கின் நீளம் 10 செ. மீ

ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர் .

மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.

Hega
17-12-2010, 02:26 PM
நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.

நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.

நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.

நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.

நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.

நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.

Hega
17-12-2010, 02:27 PM
மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

ம*னித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்..

நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள். அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

கண் தானத்தில் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொருத்தப்படுகின்றன

பாலகன்
17-12-2010, 02:28 PM
மனித உடலில் உள்ள அணைத்து விடயங்களையும் எங்களுக்கு தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.

அன்புடன்
மகாபிரபு

கௌதமன்
17-12-2010, 02:32 PM
மனித உடலில் உள்ள அனைத்து விடயங்களையும் எங்களுக்கு தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.

அன்புடன்
மகாபிரபு

ஏற்கனவே உறுதியேற்றதற்கிணங்க.....

Hega
17-12-2010, 02:33 PM
மனித உடலில் உள்ள அணைத்து விடயங்களையும் எங்களுக்கு தொகுத்தளித்தமைக்கு நன்றிகள்.

அன்புடன்
மகாபிரபு

அணைத்து சொன்ன பிரபு சாருக்கு நன்றிகள் :icon_rollout:

மகாபிரபுவின் தமிழ் சங்கத்தின் சார்பில் .........:aetsch013:

ஆன்டனி ஜானி
17-12-2010, 02:35 PM
ஒரு மனிதனுக்குள் இத்தனை
செயல் படுகிறதா நம்பவே முடியல
ஏற்கனவே தெரிந்து இருந்தாலும்

இன்னும் தெரிந்து கொள்ள ஒரு சிறிய ஆசை தான் என்ன பண்ண

Hega
17-12-2010, 02:35 PM
ஏற்கனவே உறுதியேற்றதற்கிணங்க.....


ஹைய்யோ முடியல்லங்க.

கௌதமன் ஐயா ரெம்ப தான உசாராக இருக்கின்றீர்கள்.:icon_b::icon_b::icon_b:

குருவுக்கு பாடம் போதிக்க புறப்பட்ட சிஷ்யன்..

ஆன்டனி ஜானி
17-12-2010, 02:38 PM
அணைத்து சொன்ன பிரபு சாருக்கு நன்றிகள் :icon_rollout:

மகாபிரபுவின் தமிழ் சங்கத்தின் சார்பில் .........:aetsch013:

இந்த பாடத்துக்கு வாத்தியார் யார் என்றே தெரிய வில்லை ஒரே
குழப்பமா இருக்குதுங்க ......

முரளிராஜா
17-12-2010, 02:45 PM
அனத்தும் பயனுள்ள தகவல்கள். அருமை
தகவல்கள் தொடரட்டும் hega

பாலகன்
17-12-2010, 03:02 PM
நன்றிகள் Hega

நெடுநாளாக எனக்கிருந்த ஐயம் இன்று நீங்கியது. எப்பூடி? :D

Hega
17-12-2010, 03:31 PM
நன்றிகள் Hega

நெடுநாளாக எனக்கிருந்த ஐயம் இன்று நீங்கியது. எப்பூடி? :D

என்னது உங்களுக்கு ஐயமா..

வாத்தியாரையா உங்களுக்கே ஐயம்னால் சின்னபசங்க நாங்க எங்கே போய் கற்றுக்கொள்வதாம்.
கருத்திட்டு பாராட்டிய எல்லோருக்கும் நன்றிகள்..

நமக்குள்ளே இருப்பதை தேடும் பயணம் தொடரும்...

ஆன்டனி ஜானி
17-12-2010, 03:39 PM
நிஷா அக்கா ரெம்பவே எனக்க மேல கோபமா
இருக்கிறாங்க போல நினைக்கிறேன் .........

நண்பனே கோப பட்டால் அன்னியர்கள் விடவா செய்வார்கள் ,,,,,,,,

என்ன கோபமோ அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும் ........

happy x"mas வாழ்த்துக்கள் .....

Hega
18-12-2010, 07:42 PM
தோல்
உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு
மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை
நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது..


ஈரல

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/liver_jpgb80ef947-0894-4c2a-ac8b-93.jpg


நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது
மிகவும்சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில்
விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது

புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்

Hega
18-12-2010, 07:43 PM
நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.

நமது முகத்தில் 60 தசைகள் உள்ளன நாம் சிரிக்கும் போது 5 முதல் 55 தசைகள் வேலை செய்கின்றன

நமது வயற்றினுள் (colon) 400 வகையான பாக்டிரியாக்கள் வாழ்கின்றன..

நமது உடலில் உள்ள எலும்புகளில் பாதிக்கு மேல் நம் கால்களிலும் கைகளிலும் உள்ளது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.

Hega
18-12-2010, 07:45 PM
அலர்ஜி

நாம் எல்லோருமே அலர்ஜி பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்

அலர்ஜி அல்லது ஒவ்வாமை என்ற நோயினால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அலர்ஜி இருக்கும்.

அலர்ஜி ஓவ்வொருவருக்கும் பல வித வேறுபாடான காரணங்களால் ஏற்படும்.

சிலருக்கு மீன், மாமிசம் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
வேறு சிலருக்கு முட்டை, பால் போன்ற உணவுப் பொருட்களும்
கத்தரிக்காய், தக்காளி போன்ற காய்கறி வகைகளும், காபி, தேனீர் போன்றவைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

பெரும்பாலானோருக்கு குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதாலும், ஊசி போட்டுக் கொள்வதாலும் ஒவ்வாமை ஏற்படும்.

இது இதனால் என்பதெல்லம் அலர்ஜிக்கு கிடையாது. .. அதிலும் தோலில் ஏற்படும் அலர்ஜி மிகவும் சிரமத்தைக்கொடுக்கும்.

ஒவ்வாமை இயல்புடைய ஒருவருக்கும் குறிப்பாக,

எந்தப் பொருள் ஒவ்வாமை அறிகுறிகளை அல்லது ஒவ்வாமை நோய்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல!

பொதுவாக தும்மல் நோய், விஷக்கடி போன்ற பல்வேறு ஒவ்வாமை நோய்களைக் கொண்ட ஒவ்வாமை தன்மையுடையோருக்கும்,
அதிலும் குறிப்பாக ஒவ்வாமையினால் ஆஸ்துமா இழுப்பு வரக் கூடியவர்களுக்கும்,அவர்களுக்கான ஒவ்வாப் பொருட்களைக் கண்டறிய,தோலின் மேலோட்டமாகச் செய்யப்படும் பரிசோதனையே ஒவ்வாமைத் தோல் பரிசோதனை என்பதாகும்.இதுதான் அனைவராலும் அலர்ஜி டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த முக்கியமான பரிசோதனையைச் செய்வதற்காக, நாம் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளக் கூடிய பல வகையான சந்தேகிக்கப்படும் ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய பொருட்களின் கிருமி நீக்கம் செய்யப்பட்ட, சுத்தமான கரைசல்களை (Diagnostic Allergens) ஒவ்வாமை நிபுணர்கள் தயாராக வைத்திருப்பார்கள். இவற்றுள் முக்கியமானவை பல்வேறு தாவரங்களின் மகரந்தங்கள், காளான்கள், தூசிகள், மர வகைகள், பார்த்தீனியம் போன்ற தாவரங்கள், இலைகள், பூச்சிகள், செல்லப் பிராணிகளின் எச்சங்கள், ரோமங்கள், சிறகுகள் மற்றும் சைவ, அசைவ உணவுப் பொருட்கள், பழ வகைகள் போன்றவையாகும். இதிலும் மிக முக்கியமானது, வீட்டுத்தூசி உண்ணி (House Dust Mite) அல்லது பூச்சியின் கழிவுப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறப்புக் கரைசல்களை தோலின் மேல் துளிதுளியாக விட்டு சோதனை செய்து ஓவ்வாமை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அதற்குரிய சிகிச்சைகளை தொடர வேண்டும்.


தொடர்ந்த தும்மல் ,கண்களில் நீர் வடிதல் சுவாசிப்பதில் பிரச்சனை , உடலில் தடிப்பு ஏற்படுதல் போன்றவித்தியாசமான மாறுதல்கள் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனடியாக தகுந்த வைத்தியரிடம் சென்று அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் . உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள் உயிர் இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான நோய் இது. சுவாசத்துடன் சம்பந்தப்பட்டது.. உங்கள் குழந்தைகள் மைதானங்களில் விளையாடி விட்டு வரும் போது தொடர்ந்து தும்மினாலோ உடம்பில் தொடர்ந்து அரிப்பு ஏற்படுவதாய் சொன்னாலோ அல்லது உடமபில் சிறு சிறு தடிப்புக்கள் ஏற்பட்டாலோ உடனடி சிகிச்சை தேவை

கீதம்
18-12-2010, 11:12 PM
ஒவ்வாமை பற்றி பலரும் அறிய தகவல் தந்த Hega வுக்கு நன்றி. ஒவ்வாமையின் கொடுமையை உணர்ந்தவள் என்றமுறையில் இப்பதிவு எனக்கும் பயனுள்ளதே.

கௌதமன்
19-12-2010, 03:57 AM
பசிக் கொண்டவரின் காதுக்கு தாளிப்பின் சத்தம் சங்கீதமாகக் கேட்கலாம்.(நன்றி: கவிப்பேரரசு).ஆனால் எங்கள் தெருவில் எந்தவொரு வீட்டில் தாளித்தாலும் எனக்கு இருமல் வரும்.ஒவ்வாமை...

பாலகன்
19-12-2010, 04:04 AM
ஒவ்வாமை இன்று நாட்டில் பலபேருக்கு இருக்கிறது. அருமையான திரி ஆரம்பித்து அதை விளக்கியமைக்கு பாராட்டுக்கள் Hega

சிறப்பு பரிசாக 20 இ.பணம் ஊக்கப்பரிசாக தருகிறேன்

sakthim
19-12-2010, 04:40 AM
நானும் ஒவ்வாமையால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவர் கொடுத்த ஆலோசனை அலர்ஜி டெஸ்ட் எடுப்பது தான். உங்கள் திரியை பார்த்த பின் தான் தெரிகிறது, ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய பொருட்களின் கரைசல்களை தோலின் மேல் துளிதுளியாக விட்டு சோதனை செய்வார்கள் என்று , ஆனால் மருத்துவர் சிறு சிறு ஊசியை தோலில் செலுத்தி பரிசோதிப்பார்கள் என்று சொன்னார். அதனால் பின் விளைவுகள் ஏதும் உள்ளதா? நான் இந்த மாதக்கடைசியில் பரிசோதனைக்கு செல்லலாம் என்று இருக்கிறேன்.

Hega
19-12-2010, 07:19 AM
பயம் வேண்டாம் சக்தீம்

அந்தசிறப்புக்கரைசல்களை உங்கள் தோலின் மேல் துளியாக விட்டு சிறு ஊசி கொண்டு குத்திபார்ப்பார்கள். வலிக்காது எறுப்பு கடிப்பது போல் இருக்கும் .உங்களுக்கு ஒவ்வாமைஇருந்தால் அந்த எது, அல்லது எப்பொருள் ஒவ்வாமையோ அந்த கரைசல் பட்ட இடம் மட்டும் சின்னதாக வீங்கி விடும். அதற்கேற்ப மருத்துவ நடவடிக்கை இருக்கும்.

மருத்துவ ஆலோசனைய முறையாக பின் பற்றுங்கள்.
பழங்கன் ,கனிகள், காய்கள், தானியங்கள், இயற்கை,மிருகங்கள் ,பறவைகள், மகரந்தம் பருப்பு வகைகள் என எதனல ஒவ்வாமை உண்டாகுகிறதோ அதிஅ தவிர்க்கலாம

கைளிலோ முதுகிலோ தன இந்த டெஸ்ட் செய்வார்கள். சிறிது நேரத்தில் அந்த அடையாளம் கூட போய் விடும்.


கலக்கம பயமோ வேண்டாம் பின் விளைவுகளும் கிடையாது.

அலர்ஜி பற்றி மேலுமாக உங்களுக்கு தகவல் தேவையெனில் கேளுங்கள் இயன்ற வரை பதில் தருகிறேன்.


இங்கே ஜேர்மன் மொழியில் மருத்துவம் சம்பந்தமான மொழிபெயர்ப்புக்கு செல்வதால் ஓரளவு அறிந்திருக்கிறேன்.


ஒவ்வாமையின் பாதிபுக்கள் தொடரும்.

Hega
19-12-2010, 11:03 AM
அலர்ஜியினால் ஏற்படக்கூடிய நோய்கள்


அலர்ஜியின் அறிகுறி ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு சிலருக்கு தும்மல்,மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம் ,அரிப்பு, மூச்சடைப்பு,மூச்சுத்திண்றல் வாந்தி, குமட்டல். வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.

இப்படிப்பட்ட அலர்ஜியினால் சுவாசப்பாதை , உணவுப்பாதை பாதிக்கப்பட்டால் மிகவும் சிரமப்பட வேண்டும்

உடல் அங்கங்கு சிவந்து தடித்தல், ஒத்துக்கொள்ளாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல்அழற்சி நோய், எக்சிமா என்னும் தோல் நோய்,தொடர் வலிகளால் ஏர்படும் மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காதடைப்பு போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும்பல் வேறு நோய்களாகும்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தாலும் வைத்தியரிடம் சென்று அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

மேற்கொள்ளப்பட்ட தோல் அலர்ஜி டெஸ்டுகளின் மூலம் கண்டறியப்பட்டஉடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்கள முறையாகப் பட்டியலிட்டுத் தவிர்க்க முடிந்தவற்றத்தவிர்த்து முடியாத பலவகை மகரந்தத்துகள்கள், காளான், முடடைகள், வீட்டுத் தூசி, சாலைத் தூசி, கரப்பான், பாச்சான், வீட்டுத்தூசி பூச்சி போன்றவற்றிற்கு முறையாக அலர்ஜித் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவேண்டும்.

இவ்வகையான தடுப்பூசி சிகிச்சை முறை, அலர்ஜியினால் வரும் அனைத்துவகைத் தும்மல் நோய்களைமுழுமையாகக் குணப்படுத்வடன் மற்ற அலர்ஜிகளால் வரும் ஒவ்வாமை ஆஸ்துமா, ஆண்டு முழுவதும் ஆட்டிப்படைக்கும் அர்டிகேரியாநோய்களும் வராமல் தடுக்கப் பெரிதும் உதவுகின்றது.

உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கு அலர்ஜி இருப்பது கண்டறியப்பட்டால் எந்தப்பொருட்கள் மற்றும் காரணிகள் அவர்களுக்கு அலர்ஜியைத் தோற்றுவிக்கிறது எனக்கண்டு அவைகளைத் தவிர்க்க முயலுங்கள்

Hega
19-12-2010, 11:19 AM
நிறைய படித்திருப்பார்கள் . ஆனால் வியாதிகளைக்குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நம் உடலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களின் அறிகுறிகளை கண்டும் காணாது இருந்து விட்டு நோய்களின் பின் விளைவுகள் அதிகரிக்கும் போது அவஸ்தைப்படுவதுடன் பணத்தையும் செலவழித்து கஷ்டப்படுவார்கள்.

எந்த நோயையுமே நாம் முன்னாலேயே இனம் கண்டு அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் ஓரளவுக்கு நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

அலர்ஜி தானே என நாம் அலட்சியமாக இருக்கும் வியாதி எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் அறிய வேண்டும் எனும்
நோக்கிலேயே இதை வெளியிட்டேன். இதற்கு மேல் பகுதியில் அலர்ஜியின் அறிகுறிகளையும் தொகுத்துள்ளேன் படித்துப்பாருங்கள் . கவனமாய் இருங்கள். எதையும் வர முன் காப்போம்இந்த அலர்ஜியை ஆரம்பத்திலேயே கவனிக்காது போனால் அது தரும் எதிர் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்.


பாதிக்க்பட்ட ஒரு சகோதரியின் கண்ணீர் கதையை இங்கே பகிர்ந்து கொள்வேன். பொறுத்திருங்கள்.

Hega
19-12-2010, 03:44 PM
அலர்ஜியினால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரியின் கதை இது

அவரின் முந்தைய தோற்றம் இது


http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/priyacopy.jpgஅல்ர்ஜியினால் பாதிக்கப்பட்டபின்..

http://i705.photobucket.com/albums/ww55/nishanthi_04/priyanowcopy.jpg

பாலகன்
19-12-2010, 03:48 PM
பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது ஹேகா!

Hega
19-12-2010, 03:49 PM
அலர்ஜி வந்தால் ஆளே அசிங்கமாகி, கால்கள் செயலிழந்து, மூச்சுவிட முடியாமல் மரணத்தை நோக்கிக் காத்திருப்பீர்களா?

நிச்சயமாக! அது உங்கள் மருத்துவரைப் பொறுத்தது. சாதாரண 'டஸ்ட் அலர்ஜி' அழகான இளம்பெண் ஒருவரை அநியாயத்திற்கு அலங்கோலமாக்கி வாழ்வையே நாசமாகிவிட்ட கதை இது.

பிரியா ஒரு பி.ஏ. பட்டதாரி, வயது இப்போது முப்பதைத் தாண்டுகிறது. எல்லாப் பெண்களைப் போலவே இளமையாய், கனவுகளோடு நெய்வேலி அனல்மின் நிலையக் குடியிருப்பில் தன் அப்பா செல்வராஜ், தாய் எப்சி மற்றும் தம்பி தங்கையுடன் வசித்து வந்தார்.

அப்படியொரு கோலத்தில் பிரியாவைப் பார்த்தபோது மனசுக்கு ரொம்பவே சங்கடமாய் இருந்தது. முதல் நாள் பெய்த மழையால், தெருக்களில் தேங்கி நின்ற தண்ணீர் சாக்கடையாய் மாறியிருந்தது. தவழ்ந்து வந்ததால் பிரியாவின் உடைகளும் சேறும் சகதியுமாய் காட்சியளித்தது. ஊணமுற்றவர்களிலேயே இப்படிப்பட்டவர்கள் ரொம்பவே பாவப்பட்டவர்கள்.

''தம்பி, தங்கச்சி பேரைப் போட்றாதீங்க. நான் இன்னைக்கோ, நாளைக்கோ... சாவப்போற கட்டை! என்னால அதுங்களுக்கு அசிங்கம் வரக்கூடாதில்ல... அதான்'' என்றபடி புன்னகை தவழ ஒரு போட்டோவை எடுத்து நீட்டினார்.

''யாருங்க இது?'' என்றேன். ''நான்தான் சார்! நல்லா இருக்கேனா? பி.ஏ. படிக்கும் போது எடுத்தது'' சிரித்தபடியே ஆரம்பித்தவரின் முகம் அடுத்த கணமே சுறுங்கிவிட்டது. அனிச்சையாய் கண்களில் கண்ணீர். ''என் கோலத்தை பாத்தீங்களா? கருப்பா, அசிங்கமா, உடம்பும் பெருத்து, நடக்கவும் முடியாம! எதுக்கு நான் உயிரோடு இருக்கணும்? என்னைப் போல நிலமை வேறெந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது சார்'' என்படி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தன் கதையச் சொல்ல ஆரம்பித்தார்.

''அப்போ எனக்கு இருபது வயசு. எப்பப் பாத்தாலும் தும்மல் வந்துக்கிட்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா மூச்சுவிடவே கஷ்டமாயிருச்சி. நெய்வேலி, நிலக்கரி நகரம் இல்லையா? ஒரே... தூசு மண்டலமா இருக்கும். அதான் ஒத்துக்கலைன்னு சொல்லி என்.எல்.சி ஆஸ்பிட்டல்ல போய்ப் பார்த்தேன். ஊசி, மாத்திரைலாம் போட்டு அனுப்பினாங்க. கொஞ்ச நாள் நல்லா இருக்கும், அப்புறம் வீசிங் வர ஆரம்பிச்சிடும். திருப்பி ஆஸ்பிட்டல், திருப்பியும் ஊசி. இப்படியே போட்டதுல உடம்பு கொஞ்சம் கொஞ்சமா ஊதி பெருசாயிட்டுது. என்.எல்.சி.யில் கேட்டப்போ, மெட்ராஸ்ல பிரைவேட் ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்கிறோம். எல்லாம் சரியா போய்டும்னு சொன்னாங்க.

அதே மாதிரி ராமச்சந்திரா ஆஸ்பிட்டல்ல ஒரு மாசம் ஐ.சி யூனிட்ல வச்சிருந்துட்டு, 'பொண்ணுக்கு ஸ்டீராய்டு அதிகமாயிருச்சி. குணப்படுத்தறது கஷ்டம்'னு சொல்லிட்டாங்க. அங்கிருந்து என்.எல்.சி. மூலமா அப்பல்லோவுல சேர்த்தாங்க. அங்க ஒரு டாக்டர் போட்ட ஊசியால காலெல்லாம் வீங்கி உடம்பெல்லாம் எரிய ஆரம்பிச்சிட்டது.

2000-ல அப்பா ரிட்டைராயிட்டார். அதனால, பிரைவேட் ஆஸ்பிட்டல்ல இருந்து என்.எல்.சி.க்கு வரவேண்டியதாப் போச்சு. அவங்க, 'கிட்னி ஃபெயிலியர் ஆகியிருக்கும் போல தெரியுது. இனிமே நீங்க சொந்தக் காசுலதான் பாத்துக்கணும்'னு அனுப்பி வச்சுட்டாங்க. அதுக்கப்புறம் அண்ணாமலை யூனிவர்சிட்டி ஆஸ்பிட்டலுக்கு நடையா நடந்ததுல முகமெல்லாம் கறுத்து, உடம்பு ஓவரா குண்டாயிருச்சி. திடீர்னு ரெண்டு காலும் செயலிழந்து நடக்கவே முடியாமப் போயிடுச்சு. இப்போ வெளியே போகனும்னா, ரெண்டு பலகைங்களை வச்சுக்கிட்டு தவழ்ந்து, தவழ்ந்து ஆமை மாதிரி போற நிலமைக்கு வந்துட்டேன். அப்போதான் ஒரு யோசனை வந்தது. இனி உயிரோட இருந்து பிரயோஜனம் இல்ல. செத்த பிறகாவது நாலுபேருக்கு உதவட்டுமேன்னு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு என் உடம்பை தானமா எழுதி வச்சிட்டேன்.

டாக்டருங்க கடவுளுக்குச் சமம்னு சொல்வாங்க. ஆனா பாருங்க! என்னை ஸ்டூடண்ட்ஸ் முன்னாடி உக்கார வச்சிட்டு, 'இவங்க தான் ஸ்டீராய்ட் பேஷண்ட். ஸ்டீராய்ட் அதிகமானா இப்படித்தான் ஸ்கின் கருப்பாயிடும். இது அபூர்வமான கேஸ்'னு சொல்லி போட்டோ எடுத்தாங்க. என்னோட விரல், கை, கால், முதுகெல்லாம் அக்குவேறு ஆணிவேறா பாத்துப் பாத்து குறிப்பெடுத்தாங்க. எனக்கு அழுகை தாங்க முடியலை. வீட்டுக்கு வந்துட்டேன்.

நாலு வருஷத்துக்கு முன்னாடி தம்பியும், தங்கச்சியும் கல்யாணமாகி அவங்கவங்க மாமியார் வீட்டோட (மந்தாரக்குப்பம்) செட்டிலாகிட்டாங்க. சுமாமி வந்தப்போ பாண்டிச்சேரிக்கு போன எங்கப்பா இதுவரைக்கும் திரும்பி வரலை. அப்போ கடலூர் கலெக்டராக இருந்தாரே! ககன்தீப்சிங் பேடி. லயன்ஸ் கிளப் மூலமா அவர் கொடுத்த அஞ்சாயிரத்தை வச்சு நானும் எங்கம்மாவும் வடலூர்ல குடியேறினோம். ஆறுமாசம் எங்கூட இருந்த அம்மா, நடக்க முடியாதவளாச்சேன்னுகூட பாக்காம என்னைத் தனியா விட்டுட்டு, அவங்க மட்டும் தம்பி வீட்லயே போய் தங்கிட்டாங்க.

தனியா இருந்த எனக்கு எங்கப்பாவோட ஃபிரண்ட் ஒருத்தர்தான் வீட்டு வாடகை முதற்கொண்டு எல்லா உதவியும் செஞ்சார். பாவம்! அவரும் எவ்வளவுதான் செலவு பண்ணுவார்? மீண்டும் கலெக்டர்கிட்ட போய் உதவி கேட்கலாம்னு போனேன். இது நடந்து மூணு மாசம் இருக்கும். புது கலெக்டர் வந்திருக்கிறதா சொன்னாங்க. வாசல்ல பெறுக்கி கூட்டிக்கிட்டிருந்த ஒரு அம்மா, 'இந்தா! கலெக்டருக்கு இன்னா சம்பாரிச்சா போட்டுக்கிற. இப்டியே அநாதைன்னு சொல்லிக்கினு வந்துடுவாளுங்க'ன்னு அசிங்கமா பேசினாங்க. அங்க இருந்த பியூன் ஒருத்தர், 'மூச்சுவிட சிரமமா இருக்குதுன்றியே! கொஞ்சூண்டு விஷத்தை குடிச்சினா, ஒரேயடியா பிரச்சினை முடிஞ்சிடும்'ன்னார். கலெக்டர் பி.ஏ. என்னைப் பாத்துட்டு 'உன்னைப் பாத்தா எய்ட்ஸ் நோயாளி மாதிரி தெரியுது. முதல்ல வெளியே போ!'ன்னு விரட்டியடிச்சிட்டார்.

அம்மாவும் என்னை வந்து எட்டிப்பாக்குறது இல்ல. வீட்டு வாடகை கட்டாததுனால, ஹவுஸ் ஓனர் காலி பண்ணச் சொல்லிட்டார். இதோ... இன்னைக்கோ, நாளைக்கோ! எப்ப வேணாலும் செத்துப் போய்டுவேன். அதுக்கு முன்னாடி எனக்கு நடந்த கொடுமைகள இந்த உலகத்துக்குச் சொல்லணும். அதான், உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு உங்ககிட்ட சொல்றேன். ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா அவனை அங்க போய் பாத்துக்கிறேன். என்னை மாதிரி நிலமை, உலகத்துல வேற எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது சார். ம்... முக்கியமா ஒண்ணு! யாராவது டாக்டருங்களைப் பாத்தா, நான் செத்த பிறகு என் உடம்பை என்ன வேணா பண்ணிக்கச் சொல்லுங்க''

-ஒட்டுமொத்த துயரங்களையும் என் மீது சுமத்திவிட்டு அமைதியானார் பிரியா. இப்பொழுதெல்லாம் ஒரு சின்ன தும்மல் வந்தால்கூட... போட்டோவில் லட்சணமாய்ப் பார்த்த பிரியாவும், நேரில் பார்த்த பிரியாவும் மாறி, மாறி என் மனதை வாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

Hega
19-12-2010, 03:52 PM
தெரிந்து கொள்ளுங்கள்:


பிரியா தான் எடுத்துக் கொண்ட மருந்துகளாக Ranitin, Deriphyllin, Solumedrol 125, Dexamethasone phospate (Decdan) ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தார். இது சம்பந்தமாக கல்பாக்கம் மக்கள் மருத்துவரான புகழேந்தியிடம் கேட்டபோது, ''ஸ்டீராய்ட் என்பது எந்த ஒரு வியாதிக்குமான மருந்து. இயல்பு நிலைக்கு மாறாக உடல் கடின சூழலுக்கு ஆளாகும்போது தன்னிச்சையாக உடம்பில் ஸ்டீராய்ட் உற்பத்தியாகும். இந்த நிலையில், ஊசி மூலமாகவும் ஸ்டீராய்ட் செலுத்தப்பட்டால் உடலில் உப்புச்சத்து அதிகமாகி தேவையில்லாத சதைவிழ ஆரம்பிக்கும். பிக்மெண்டேஷன் எனப்படும் கருப்பு நிறமிகள் உருவாகி உடல் கறுத்துப் போகும். மேலும் கால்சியம் வெளியேறி எலும்புகள் உருக ஆரம்பிப்பதால் Proximal Myopathy ஏற்பட்டு தொடையில் உள்ள தசைகள் செயலிழந்து நடக்க இயலாமல் போயிருக்கும். கண்பார்வை, மூளை ஆகியவற்றை மங்கச்செய்து தொடர்ந்து ஸ்டீராய்ட் எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கும். பிரியா எடுத்துக் கொண்ட மருந்தில் ஸ்டீராய்டான Decdan மட்டுமே தீவிரமான பின்விளைவுகளை உண்டாக்கக்கூடியது'' என்கிறார்.


''எமர்ஜென்சியின் போது மட்டுமே ஸ்டீராய்ட் உபயோகப்படுத்தப்பட வேண்டும். அலர்ஜியினால் பாதிக்கப்படுபவர்கள் பொது மருத்துவர்களை நாடாமல் அதற்கென்று உள்ள ஸ்பெஷலிஸ்டுகளை அணுகி சிகிச்சை பெறுவதுதான் நல்லது'' என்கிறார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் அலர்ஜி ஸ்பெஷலிஸ்டான பஷீர் அகமது.Labels: annamalai university hospital, appollo, decdan, doctors, dr.pugazhendi, dust, indian medical, neyveli, nlc, priya, proximal myopathy, ramachandra hospitalPosted by நான் கடவுள்

பாலகன்
19-12-2010, 03:59 PM
நடந்த சம்பவத்தை படித்தேன். மிகமிக உருக்கமாக இருந்தது. இதற்கெல்லாம் விடிவு இல்லையா?

நாவடக்கம் இல்லாமல் நினைத்ததைச் சொல்லித்திரியும் பண்றிகளுக்கு அந்த பெண்ணின் வேதனைப்பற்றி தெரியுமா? கடவுள் இவர்களை சும்மாவிடமாட்டார். எயிட்ஸ் நோயாளியாக இருந்தாலும் மனிதநேயத்துடன் தான் நடந்துக் கொள்ளவேண்டும்

தப்பியோடிய தாயை பிடித்துக்கொண்டுவர வேண்டும்.

Hega
19-12-2010, 04:01 PM
அடுத்து அல்ர்ஜியோடு கூடி வரும் ஆஸ்துமா பற்றி அலசுவோமா..

மன்ற உறவுகள் யாருக்காவது அலர்ஜி பற்றிய கேள்விகள் இருந்தால் பதியலாம். என்னால் இயன்றவரை தெளிவு படுததுவேன்.

Hega
19-12-2010, 04:03 PM
நடந்த சம்பவத்தை படித்தேன். மிகமிக உருக்கமாக இருந்தது. இதற்கெல்லாம் விடிவு இல்லையா?

நாவடக்கம் இல்லாமல் நினைத்ததைச் சொல்லித்திரியும் பண்றிகளுக்கு அந்த பெண்ணின் வேதனைப்பற்றி தெரியுமா? கடவுள் இவர்களை சும்மாவிடமாட்டார். எயிட்ஸ் நோயாளியாக இருந்தாலும் மனிதநேயத்துடன் தான் நடந்துக் கொள்ளவேண்டும்

தப்பியோடிய தாயை பிடித்துக்கொண்டுவர வேண்டும்.


இது பழைய கதை பிரபு..

அலர்ஜிபற்றிய விழிப்புணர்வுக்காக தேடிப்பதிந்தேன்.

பாலகன்
19-12-2010, 04:04 PM
இது பழைய கதை பிரபு..

அலர்ஜிபற்றிய விழிப்புணர்வுக்காக தேடிப்பதிந்தேன்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் பதிப்புகள் அணைத்தும் போற்றுதற்குரியது நிஷா

கௌதமன்
19-12-2010, 04:08 PM
ஒவ்வாமைக்கு எந்த விதமான மருத்துவ சிகிட்சை என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் சிகிட்சையே மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறதே!

Hega
19-12-2010, 04:09 PM
விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் பதிப்புகள் அணைத்தும் போற்றுதற்குரியது நிஷா


இந்த அணைத்துமை அன்னிக்கே அணைத்து விட்டேன் என நினைத்தேனே..

இன்னுமா..:aetsch013:

Hega
19-12-2010, 04:13 PM
ஒவ்வாமைக்கு எந்த விதமான மருத்துவ சிகிட்சை என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் சிகிட்சையே மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறதே!

சிகிச்சை வேண்டும்.
ஆனால் அது தவறான சிகிச்சையாக கூடாது.

அப்பல்லோ அல்ர்ஜி ஸ்பெஷ்லிஸ்ட் சொன்னமாதிரி எந்த வித அலர்ஜியானாலும் அதை அலர்ஜி ஸ்பெசலிஸ்டிடம் சென்று அதற்காக மருந்துகள் கட்டுபாடுகளை பின்பற்றுதல் சிறப்பு.

உதாரணமாக உங்களுக்கு தக்காளியில் அலர்ஜி என கண்டுபிடிக்கப்ட்டால் முதலில் தக்காளி சாப்பிடுவதையும் அதனோடான உணவு பதார்த்தங்களையும் தவிர்க்க வேண்டும்.


சரியான படி, சரியான இடத்தில் கிடைக்கும் போது.. மருத்துவம் என்பது வேண்டியதே..

srivinoth
19-12-2010, 04:29 PM
அருமையான தகவல்கள்!! :)

Hega
19-12-2010, 04:31 PM
நன்றி srivinoth

பாலகன்
19-12-2010, 04:54 PM
இந்த அணைத்துமை அன்னிக்கே அணைத்து விட்டேன் என நினைத்தேனே..

இன்னுமா..:aetsch013:

இன்றுமுதல் அனைத்துவிடுகிறேன்
நன்றி

சூறாவளி
19-12-2010, 05:09 PM
இப்படியொரு விழிபுணர்வு திரியை நாள்களாக காணாமல் விட்டு விட்டேனே...:frown:

முதலில் தந்த மனித உடலின் உண்மை செயல்பாடுகள் பற்றி கொஞ்சமாவது அறிய முடிந்தது... நம்மை சார்ந்த செயல்பாடுகளை கூட முழுமையாய் நாம் அறியாமல் இருக்கத்தான் செய்கிறேன்.. அறியதந்தமைக்கு நன்றிகள்..

அடுத்து...

அலர்ஜி பற்றி அடிப்படையான விஷயங்கள் இப்போதுதான் அறிகிறேன்.. இதுபோல் விழிப்புணர்வு எல்லொருக்கும் இருக்குமாயின் அந்த தோழிக்கு நிகழ்ந்த கசப்பான எல்லாம் முடிந்து போன வாழ்க்கை அவருக்கு இழந்திருக்க மாட்டார்...

நன்றிகள்... ஹேகா...

இன்னும் தொடருங்கள்.. என்ன சந்தேகம் கேட்க என்னிடம் அதற்க்குள்ள விஷயங்கள் இன்னும் இல்லையே.. ஆதலால் உங்களுக்கு அறிந்த விஷயங்கள் இங்கே தெளிவுபடுத்துங்கள்..., அவற்றை படித்து நான் அறிந்து கொள்கிறேன்..

மீண்டும் மகத்தான விழிப்புணர்வு தந்து கொண்டிருக்கும் ஹேகாவிற்க்கு பாராட்டுக்கள்.. :icon_b::icon_b:

sakthim
20-12-2010, 02:34 AM
என் சகோதரிக்கு ஆஸ்த்துமா இருக்கு. தொடர்ந்து inhaler உபயோகித்து வருகிறார், தொந்தரவு அதிகமாகும் நாட்களில் 4 அல்லது 5 முறை கூட. தொடர்ந்து உபயோகிப்பதில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை வேறு வழி இல்லை, பனி காலங்களில் மூச்சிறைப்பு அதிகமாகும். சில தொலைக்காட்சிகளில் சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு இருப்பதாக சொல்கிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை, முடிந்தால் விளக்கம் தரவும் சகோதரி.

Hega
20-12-2010, 06:24 AM
ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முயல்வது சிரமமானதே..
இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் ஒருவித கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே அன்றி குணப்படுத்துதல் இயலாது.

எதனால் ஆஸ்துமா வருகிறது என கண்டறிந்தால் அதின் வலியிலிருந்து ஓரளவு தப்பிக்கொளளலாம்.

எம்மைசூழ இருப்பவையினால் -------------

சிகரெட் புகை தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்ரில் இருக்கூம் பக்ரீரியாக்கள் தூசிகள்கூட இந்னோய்க்கு எமனாகும்.பாவிக்கும் துணிகல் படுக்கை விரிபுக்களை அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும். துணி துவைக்க பயன் படுத்தும் சலவைத்துளினாலும் அலர்ஜி வரலாம்.


அதைவிட காற்றில் உள்ள தூசி நிறுவனங்கள் வெளியேற்றும் அசுத்தமான புகை,பு கார் போன்ற வாகனங்களில் வெளியிடும் புகை போன்றவை ஆஸ்த்மா உள்ளவருக்கு ஆபத்தை வரவழைக்க கூடும்.

பூச்சிகள் .ஒட்டடைகள், அடைசல் இல்லாமல் எபோதும் வீட்டை சுத்டமாக வைத்திருந்தாலே ஆஸ்துமாவின் வீரியம் கட்டுக்குள் வரும். அதைவிட கரம்பான் பூச்சி, எலிமருந்து, வாசனைஸ்பிரே என நாம் பயன் படுத்தும் மருந்தின் வீரியம் கூட ஆஸ்த்மாவை வரவழைக்கூடியது.

அதீத குளுமை வீட்டில் நீர் தேங்காது சுறறி இருக்கும் இடங்களை சுத்தம் செய்து துப்புரவாக வைத்திருத்தல் அவசியம்.

செல்ல பிராணிகள் பூனை, நாய் போன்ற இவற்றின் முடி பலருக்கு ஒவ்வாமை தரக்கூடியது. பிறகு அது ஆஸ்த்மாவில் கொண்டு விடும்.

எனவே எவ்வளவுதான் நண்பனாக இருந்தாலும் அதிக முடி உள்ள செல்ல பிராணிகலை படுக்கை அறையில் அனுமதிக்காதீர்கள். அடிக்கடி வீட்டை சுத்தம் செய்து முடியை அகற்றுவது முக்கியம்.அதை விட செல்லபிராணிகளால் அலர்ஜி என தெரிந்தால் அதை வீட்டில் சேர்க்காதிருப்பது..

வீட்டில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். எங்கேயாவது தண்ணீர் கசியுமானால் அதை உடனே சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பது அவசியமாகின்றது.

Hega
20-12-2010, 06:26 AM
ஆஸ்துமா

ஒவ்வாமை நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. இந்நோயால், உலக அளவில் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோய் குறித்த விழிப்புணர்வு உலக மக்களிடையே இருப்பது அவசியம் என்ற நோக்கில்தான், ஆண்டு தோறும் மே 6 -ம் தேதி உலக ஆஸ்துமா நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது .


பொதுவாக கோடை காலத்தில் மகரந்தப் பொடி காற்றில் பரவுதல், புல்லின் தூசி போன்றவற்றால் வரும் ஒவ்வாமை நோயினால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் நாளாவட்டத்தில் ஆஸ்த்துமா நோயாக மாற்றமடைவதாகவும் கூறப்படுகிறது. வழங்கப்படும் ஒவ்வாமை மருந்து தும்மலையோ, மூக்கடைப்பையோ நிறுத்தாமல் மருந்து செயலிழந்தால் ஆஸ்துமா ஆரம்பிக்கப் போகிறது என்றும் கூறப்படுகிறது.

Hega
20-12-2010, 06:28 AM
ஆஸ்துமா என்றால் என்ன ?


ஆஸ்துமா என்பது சுவாசப்பைகளை அல்லது சுவாசக்குழாய்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய். சுவாசப்பைகள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள்ஆகும்.ஆஸ்துமாஉள்ள நபர்களில், சுவாசப்பைகளின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசப் ப்பைகளின் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ (உம். புகை, தூசி) செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.


இப்படி சுவாசப்பைகளின் எதிரிடையாக செயல்படும் போது சுவாசப்பைகளின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. இதனால், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை (விசில் சத்தத்துடன்), இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும்


ஒருவருக்கு தொடர்ந்து சளிப்பிடித்தால் அவர்களுக்கு 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி அதனை தொடர்ந்து தும்மலும் இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி இருமல் தாக்கி நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயை கிருமிகள் தாக்குகிறது.

இதனால் மூச்சுக்குழாயின் உட்சுவர்களில் சேதம் உண்டாகி சிற குழாய்கள் பாதிப்பு அடைகிறது. அந்த இடத்தில் வீக்கமும் உண்டாகிறது.

இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் சிறு குழாய்களை தாக்குவதால் மூச்சுக்குழாய்கள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது. இதன் காரணமாக சுத்த காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளிவரவும் முடியாமல் தடங்கலாக இருக்கிறது.

காற்று, மூச்சுகுழாயின் உட்புறத்தில் நீரை கிழித்துக் கொண்டு போவதும், கிழித்துக் கொண்டு வெளியே வரும்போதுதான் வீசிங் என்ற சத்தம் கேட்கிறது.

உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயில் இருந்து தப்பலாம். ஒத்துக் கொள்ளாத பொருட்களை தவிர்ப்பது நல்லது.

Hega
20-12-2010, 06:41 AM
ஆஸ்துமாவை கண்டறியும் வழிகள்:


ஆஸ்துமாவை கண்டறிவது மிக கடினம். அது எதனால் என்பதை கண்டறிய பல கட்டங்களில் சோதனை செய்யவேண்டும்.

அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவதும் இன்னும் கடினம்.

மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போது மருத்துவர் உங்கள் உடல் நிலையை பரிசோதிப்பதுடன் உங்கலுடனான கலந்துரையாடல்மூலமாக நீங்கள் அளிக்கும் பதிலை வத்தே கண்டறிய முயல்வர்..

பரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுதிணறல் இருக்கிறதா, வீட்டில் யாருக்கேனும் ஆஸ்துமா இருக்கிறதா, மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்பதையெல்லாம் கேட்டு தெரிந்த பின் உங்கள் சுவாசப்பைகளை பரிசோதனை செய்ய ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக உங்களால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதை கண்டறிய முயல்வார்..

இந்த காற்று அளவு ஆஸ்த்மா மருந்து எடுத்து கொள்வதற்கு முன், மருந்து எடுத்து கொண்டதன் பின் கணக்கிட்டு பார்க்க படும்.


அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்மாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் சிறிய குழாய்கள் மூலம் செல்லுகிறது. ஆஸ்த்மா விளைவு ஏற்படும் போது அந்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முட்யாமல் தடைபடுகிறது. அதிக முயுக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இழுப்பில் முடியும்.

அப்போது சுவாசத்தி்னை சீர்படுத்திட இன்கால்ர் எனும் மருந்தை உபயோகிக்க மருத்துவரால் அறிவுறுத்தப்படுவர்.

இந்த இன்காலர் அளவும் காலமும் கூட ஆஸ்துமாவின் விரியத்தினை பொறுத்து மாறுபடும்.அதனால் தக்க மருத்டுவரின் ஆலோசனையோடு தகுந்த மருந்துகளை தவறாது பயன் படுத்துவதுடன் ஒவ்வாமை எதனால் என தேடி அதனை அழிப்பதுவே சிறப்பு.

ஒவ்வாமை, ஆஸ்துமாவை உருவாக்கி சுவாசக்குழாழ்களை தாக்கிடும் போது தக்க மருந்து கொடுத்து மூச்சு குழாய்களை விரிவாக்க முடியாவிட்டால், இறக்கவும் நேரிடும்

Hega
20-12-2010, 06:43 AM
.


நல்ல வைத்தியரின்ஆலோசனை.சிறப்பு வைத்தியரின் அவதானிப்பு தேவை

புகையில்லா சூழல், புகை பிடிப்பவர்கள் அந்தப்புகை ஆஸ்துமா நோயாளிகள் அருகில் போகாமல் தவிருங்கள். புகைத்தலால் குழந்தைகள பாதிக்கப்படுவதும் அதை பெரியவர்கள் உணராதிருப்பதும்

அவர்கள் முன்னால் புகை பிடிக்காதீர்கள்
அதை விட எப்போதுமே புகை பிடிக்காதீர்கள்.

ஒரு அறை அல்லது காருக்குள் குழந்தை இருந்தால்... தயவுசெய்துபுகைக்காதீர்கள்/ புகைக்க அனுமதிக்காதீர்கள்.[/B]


[B]சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல்.


ஆரோக்கியம் தரும், உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி , வைத்தியரின் ஆலோசனைப்படி, மருந்துகளை சரியாகப் பயன்படுத்துங்கள் -


ஆஸ்துமாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையென்றால் இது வீரிய தன்மை பெற்றுவிடும். ஆஸ்துமா முதிர்ந்த நிலைக்கு சென்றுவிட்டால், பிராணவாயு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே ஆஸ்துமாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்

sakthim
23-12-2010, 04:52 AM
மிக்க நன்றி ஹேகா, மிகவும் பயனுள்ள தகவல்கள்.

இன்னும் பல தகவல்களை பகிந்து கொள்ளுங்கள்

dhilipramki
23-12-2010, 05:16 AM
நமது உடலை பற்றி அறியும்படி செய்யும் நண்பர் hega அவர்களுக்கு நன்றி. மேலும் இவ்வாறு பல தகவல்கள் தந்தால் நன்று.

பிரேம்
23-12-2010, 11:55 AM
அருமையான தகவல்கள்..பதிவிற்கு நன்றி..

Hega
23-12-2010, 01:51 PM
கருத்திட்டோருக்கு நன்றி..

இயன்றவரை முயல்வேன்.

கௌதமன்
23-12-2010, 01:59 PM
ஒவ்வாமைக்கான மருத்துவம் மன்றத்துக்கு கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன்.

Hega
23-12-2010, 03:11 PM
ஒவ்வாமைக்கான மருத்துவம் மன்றத்துக்கு கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன்.

அப்படித்தான் நினைக்கிறேன்..

நன்றி

சிவா.ஜி
23-12-2010, 03:21 PM
தொடர்ந்து நல்ல பல மருத்துவக் குறிப்புகளைத் தந்து...மன்ற மக்களை...ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவும் ஹேகாவுக்கு மிக்க நன்றி.

Hega
01-01-2011, 08:49 PM
நன்றி சிவா அண்ணா

Hega
01-01-2011, 08:51 PM
ஒருவரின் சிதைந்து போன உடலுறுப்பை நீக்கி, வேறொரு கொடையாளியிடமிருந்துபெறப்பட்ட நல்ல உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்துவதற்கு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை (transplantation surgery) எனப் பெயர். தற்போது இதயம், ஈரல்,சிறுநீரகங்கள், நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக மாற்றிப்பொருத்த முடியும்.

இனப்பெருக்க (reproductive) மண்டலம்உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒருமனித உடலில் சுமார் ( 200/cm2) மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலைநீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது.

மிகவும்சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில்விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

குடல்களின் சுவர்ப் பகுதியில் உள்ள உயிரணுக்கள் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்பவை; ஆனால் மூளைப் பகுதியின் நரம்பிலுள்ள உயிரணுக்கள் நம் வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்பவை.

இரு வாரங்களுக்கு ஒருமுறை குடற்சுவர் தானகவே புதுப்பிக்கப்படுகின்றது. இல்லாவிட்டால் குடல் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும்!

வாலிப வயதை அடைந்ததும் சுமார் 35 வயது முதல் நாளொன்றுக்கு ஏழாயிரம் உயிரணுக்கள் மூளையில் சாகின்றன. அவற்றிக்குப் பதிலாக வேறு உயிரணுக்கள் தோன்றுவதில்லை.

மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் ஐந்தில் ஒருபங்கு மூளைக்குச் செல்கிறது!

venkat8
30-01-2012, 08:37 PM
நம் உடலில் இவ்வளவு ஆச்சரியங்களா?

Hega
14-02-2012, 08:33 PM
ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் என்ன வித்தியாசம்?


ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன.

1956ம் வருடம் அமெரிக்க பேராசிரியர் கிப்பன் என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, இதய துடிப்பை (இயக்கத்தை) நிறுத்தி 5 மணி நேரம்கூட இதயத் துடிப்பில்லாமல் ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை முறையை முதலில் செய்து காண்பித்தார். இந்தியாவில், 1970ல் சென்னை பொது மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்யப்பட்டது.ஓபன் ஹார்ட் ஆபரேஷன்:


இதயத் துடிப்பை நிறுத்தி இதய ஆபரேஷன் செய்வதால் மட்டும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்று கூறிவிட முடியாது. சாதாரணமாக 5 நிமிடங்களுக்கு மேல் இதயத்துடிப்பு நின்றாலே நாம் இறந்து விடுவோம். ஆனால், ஓபன் ஹார்ட் ஆபரேஷனில் 5 மணி நேரத்திற்கும் மேல் இதயத்துடிப்பை நிறுத்தி, மறுபடியும் இதய இயக்கத்தை உண்டாக்கி நோயாளியைப் பிழைக்க வைக்க முடியும்.

இந்த, 'ஓபன் ஹார்ட்' (திறந்த முறை) இதய அறுவைச் சிகிச்சை முறையில் செயற்கை இதய, நுரையீரல் இயக்கி வைக்க முடிகிறது. இந்த சிறந்த முறை அறுவைச் சிகிச்சை முறையில் உடம்பிலுள்ள பிராண வாயு குறைந்த (அசுத்த) ரத்தம் முழுவதும் இரண்டு பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு உடம்பிலிருந்து உறியப்பட்டு, அந்த அசுத்த ரத்தம் செயற்கை நுரையீரல் மிஷினில் செலுத்தப்படுகிறது.

செயற்கை நுரையீரல் மிஷின் உடம்பின் வெளியே கொண்டு வரப்பட்ட அசுத்த ரத்தத்தை முழுவதும் சுத்தம் செய்து 100 சதவீதம் பிராணவாயு கலந்து சுத்த ரத்தமாக மாற்றுகிறது.

இதயத்தை திறந்து ஆபரேஷன் முழுவதும் முடிந்தவுடன் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான ரத்த வெப்பத்தை, ஹைபோதெர்மியா மிஷின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, 37 டிகிரி செல்சியஸ் அளவு வந்தவுடன், இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம், மகாதமனியை கிளாம்ப் செய்த உபகரணத்தை எடுத்து விட வேண்டும். அந்த சமயத்தில் ஆபரேஷன் பண்ணப்பட்ட நோயாளியின் ரத்தத்தின் அமிலம், காரத்தன்மை மற்றும் ரத்த பொட்டாசியம், சோடியம் போன்ற உப்புச்சத்துக்களைச் சரி செய்து, உடம்பின் ரத்தம் கசியும் தன்மையையும் சரி செய்தவுடன், இதயத்துடன் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒவ்வொன்றாக எடுத்து, கசியும் ரத்தத்தை உடம்பிலிருந்து வெளியேற்ற இதயத்தின் மேலும், வலது மார்புகூட்டிலும், பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, உடம்பில் வீணாகும் ரத்தத்தை உடம்பின் வெளியே ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் இணைத்துவிடலாம்.

ஆபரேஷன் செய்த பிறகு இதயம் சரிவர துடிப்பதற்கும், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்வதற்கும் ஆபரேஷன் செய்த புண் ஆறுவதற்கும் சரியான மருந்துகளைக் கொடுத்து இதய ஆபரேஷன் செய்த நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.
பைபாஸ் சர்ஜரி:


பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன்.

இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம்.

இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது.

பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை. பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.


பைபாஸ் என்றால் என்னவெனும் தேடலின் போது தமிழ்கூடலில் கண்டேன். அவர்களுக்கு நன்றி கூறி படித்ததை உங்களுக்காகவும் இங்கே பகிர்ந்தேன்

சிவா.ஜி
14-02-2012, 08:36 PM
உண்மையாகவே இதுவரை இரண்டும் ஒன்றே என நினைத்துக்கொண்டிருந்தேன்.....விளக்கத்துக்கு நன்றி தங்கையே....!