PDA

View Full Version : மகாபிரபுவின் தமிழ்ச்சங்கம்

பாலகன்
17-12-2010, 08:09 AM
மகாபிரபுவின் தமிழ்ச்சங்கம்

அன்புள்ளங்கொண்ட பெரியோர்களே! மன்ற நண்பர்களே!

நமது மன்றத்தில் துவங்கப்படும் திரிகளிலும், பின்னூட்டங்களிலும் பதிவுகளிலும் எண்ணற்ற (என்னற்ற = இந்த பிழையை சரிசெய்த ஜானகிக்கு நன்றி) எழுத்துப்பிழைகளை காணமுடிகிறது. எனக்கும் நூறுசதவிகிதம் எழுத்துப்பிழையின்றி எழுத முடியவில்லை. ஒருசில ஒற்றுப்பிழைகள் ஏற்படுகின்றது. அதனால் இந்த தமிழ்ச்சங்கத்தில் இணையும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களது பதிப்புகளில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் திருத்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கவேண்டும்.

தமிழை தவறின்றி கற்க வெட்கமோ கூச்சமோ படத்தேவையில்லை என்பதே எனது கருத்தாகும். இதற்கு உடன்படும் நண்பர்கள் மட்டும் இந்த திரியிலேயே ஒரு பின்னூட்டம் வாயிலாக

"எனது பதிப்புகள் மற்றும் பின்னூட்டங்களில் பிழைகள் இருந்தால் சங்கத்தார் களையலாம்"

என்ற குறைந்தபட்சம் உத்திரவாதத்தை தரவேண்டும். ஏனெனில் பின்னாளில் நண்பர்களுக்கிடையே புரியாமை ஏற்படாமல் இருக்க இது வழிவகுக்கும். பிழைகளைக் களைவோர் மிகுந்த கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் இருத்தல் அவசியம்.

ஆங்கிலத்தில் ஒரு spelling mistake செய்தாலே நம்மை மேலேயும் கீழேயும் :D பார்க்கும் உலகமிது.

தமிழ்ப்பிழைகளை பற்றிய கவலையில்லா மாந்தர்களாக நாம் வாழாமல்
கூச்சம், அச்சம், தாழ்வு மனப்பாங்கு, இவற்றை
களைந்து அன்னைத்தமிழை பாழாக்கும் பிழைகளைக் களைவோம்
வாருங்கள் வீறுகொண்டு!!

இதோ எனது உறுதிமொழி:
"எனது பதிப்புகள் மற்றும் பின்னூட்டங்களில் பிழைகள் இருந்தால் சங்கத்தார் களையலாம்"

அன்புடன்
மகாபிரபு

கீதம்
17-12-2010, 08:12 AM
மகாபிரபுவின் தமிழ்ச்சங்கம்

இதோ எனது உறுதிமொழி:
"எனது பதிப்புகள் மற்றும் பின்னூட்டங்களில் பிழைகள் இருந்தால் சங்கத்தார் களையலாம்"

நானும் இதற்கான என் ஒப்புதலை முழுமனதுடன் தருகிறேன்.

பாலகன்
17-12-2010, 08:18 AM
நானும் இதற்கான என் ஒப்புதலை முழுமனதுடன் தருகிறேன்.

முதல் ஆளாக கீதம் அக்கா!

அற்புதம்.

நன்றி கீதம்

Mano.G.
17-12-2010, 08:25 AM
நாம் கற்றதோ கடுகளவு
கற்கவேண்டியதோ உலகளவு

நானும் உங்களோடு உங்களிடமிருந்தும் நிறைய கற்றுள்ளேன்

இதோ எனது உறுதி மொழி
தவறுகளை கண்டால் சுட்டிக்காட்டி திருத்துங்கள்
அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிரேன்

மனோ.ஜி

கௌதமன்
17-12-2010, 08:35 AM
இம்முயற்சிக்கு எப்போதும், எவருக்கும், எத்திரிக்கும் என் ஆதரவு மனப்பூர்வமாக உண்டு.

Hega
17-12-2010, 08:41 AM
இதோ எனது உறுதிமொழி:

"எனது பதிப்புகள் மற்றும் பின்னூட்டங்களில் பிழைகள் இருந்தால் சங்கத்தார் களையலாம்"

:icon_b::icon_b:

ஸ்ரீதர்
17-12-2010, 08:50 AM
இதோ எனது உறுதி மொழி . எனது பதிவுகளில் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் ... திருத்திக்கொள்கிறேன் .

பாலகன்
17-12-2010, 08:52 AM
இந்த முயற்சிக்கான வரவேற்பு(வரவேற்ப்பு = இதை சரிசெய்த சிரிதருக்கு நன்றி) அமோகமாக உள்ளது. தொடரட்டும்

அன்புரசிகன்
17-12-2010, 09:00 AM
என்னோட பெயரையும் இணைச்சுக்குங்கோ.... சங்கத்தில இல்லாதவர்களும் களையலாம். இருப்பவர்களும் களையலாம்.

ஜானகி
17-12-2010, 09:07 AM
தங்களது திட்டத்தை செயல்படுத்தும் முதல் ஆளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
தங்களது முதல் பதிப்பில் உள்ள எழுத்துப் பிழையை திருத்தலாமா ?

என்னற்ற... அல்ல... எண்ணற்ற

வரவேற்ப்பு...அல்ல...வரவேற்பு

நாஞ்சில் த.க.ஜெய்
17-12-2010, 09:12 AM
நானும் இணைகிறேன் தமிழோடு பிழைகள் இருந்தால் சுட்டுங்கள் காட்டுங்கள் ஒரு தமிழனாக

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

diamond
17-12-2010, 09:14 AM
எனக்கும் முழு சம்மதம் மகா பிரபு ......:)

பாலகன்
17-12-2010, 09:20 AM
தங்களது திட்டத்தை செயல்படுத்தும் முதல் ஆளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
தங்களது முதல் பதிப்பில் உள்ள எழுத்துப் பிழையை திருத்தலாமா ?

என்னற்ற... அல்ல... எண்ணற்ற

வரவேற்ப்பு...அல்ல...வரவேற்பு

வரவேற்பு இதை மாற்றிவிட்டேன்.

என்னற்ற இதை கவனிக்கிறேன்

பாலகன்
17-12-2010, 03:11 PM
எனக்கும் முழு சம்மதம் மகா பிரபு ......:)

சங்கத்தில் இணைந்தமைக்கு நன்றி வைரமே!

முரளிராஜா
17-12-2010, 04:01 PM
பிழைகள் திருத்த படவேண்டும் என்பதில் எனக்கும் சம்மதமே மகா பிரபு.

பாலகன்
17-12-2010, 04:16 PM
பிழைகள் திருத்த படவேண்டும் என்பதில் எனக்கும் சம்மதமே மகா பிரபு.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி முரளிராஜா

nambi
17-12-2010, 06:04 PM
பிழைகள் திருத்த படவேண்டும்....பலமுறை பலத்தோழர்கள் மன்றத்தில் தனித்திரி துவங்கியே வலியுறுதித்தியிருக்கிறார்கள்! அதை வழிமொழிகிறேன்!.

ஜானகி
18-12-2010, 05:17 AM
பிழைகள் திருத்தப்படவேண்டும்.....திருத்திவிட்டேன்.

[ ஏதேது, என் டீச்சர் வேலை நிரந்தரமாகிவிடும் போலிருக்கிறதே ? யாருக்கும் வருத்தமில்லையே ? ]

கௌதமன்
18-12-2010, 06:01 AM
பிழைகள் திருத்தப்படவேண்டும்.....திருத்திவிட்டேன்.

[ ஏதேது, என் டீச்சர் வேலை நிரந்தரமாகிவிடும் போலிருக்கிறதே ? யாருக்கும் வருத்தமில்லையே ? ]

இதில் வருத்தப்பட என்னயிருக்கிறது? திரியின் நோக்கமே அதுதானே!
திருத்துவதற்கும், திருந்துவதற்குமானத் திரியிது.