PDA

View Full Version : சிரிப்போ,சிரிப்புஆன்டனி ஜானி
17-12-2010, 07:09 AM
1. எங்க வீட்டுக்காரர் இன்னும் உயிரோட வாழ்ந்துகிட்டு
இருக்கிறார்னா அதுக்கு நீங்கள் தான் காரணம் டாக்டர் !!!!!

அப்படியா !! நான் இவருக்கு எந்த ஆப்ரேசனும்
இன்னும் பண்ணவில்லையே ?

அதனால தான் டாக்டர் அப்படி சொன்னேன் ...........
2. திருநெல்வேலில இருந்து ஒரு வரம் உங்க பொண்ணுக்கு
வந்ததே அது என்ன ஆச்சி ?

கடைசி நேரத்துல அல்வா கொடுத்துவிட்டு போய்ட்டாங்க ....
3. நண்பா அந்த டாக்டருக்கு சொந்தம் என்று சொல்லிக்க
யாருமே கிடையாதுடா ....

ஏண்டா அப்படி சொல்ற ....

ஏன்னா எல்லாருக்கும் அவர் தான் ஆப்ரேஷன் பண்ணினார்
4. எங்க பூட்டான் பைனான்ஸ் கன்பெனில நெறய பேர்
பைசா போடுறாங்க டா ....
ஏண்டா இப்படி சொல்ற .....

ஏனா அவரால இனி ஓட முடியாதே !!!
5.மாசம் ,மாசம் வருகிற 31ம் தேதி எனக்கு நேரம் போரதே
தெரியாதுடா !!!
எதுக்குடா........
ஏனா எனக்க வாச்சி அடகு கடைல இருக்குமே ..........

ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி, ஹாஆஆஆஆஆ

ஆன்டனி ஜானி
17-12-2010, 07:20 AM
காமடிய பார்த்துவிட்டு ரெம்ப சிரித்து விடாதீர்கள் .......

ஏனா இன்னும் இருக்கு நிறய சிரிக்க .....

ஹ,ஹ,ஹ,ஹ,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா

arun
17-12-2010, 09:06 AM
ரசித்து படித்தேன் நண்பரே இன்னும் கொடுங்கள் பாராட்டுக்கள்

ஆன்டனி ஜானி
17-12-2010, 09:38 AM
1. சார்,சார் அதோ போகிறானே அவன் உங்க நெருங்கிய சொந்த காரன்
என்று சொன்னானே அது உண்மையா ?

அவனா அவன் ஒரு அயோக்கியன்

அப்படினா சரிதான் அவன் சொன்னது .....

2.யுவர் ஆனர் என்னுடய பொண்டாட்டிய புரிஞ்சிக்கவே முடியல
யுவர் ஆனர் ....
அப்படினா இரண்டாவது கல்யாணம் செய்யலாமா யுவர் ஆனர்

எதற்க்காக இரண்டாவது கல்யாணம் செய்ய போறீங்க ??

ஏனா ஒரு பொண்ணோட மனச இன்னொரு பெண்ணுக்கு தானே புரியுமாம்
அதுக்குதான் ..

3. நண்பா,நண்பா கேட்டீயா அந்த கோட்டல் காரர்
ரொம்ப கெட்டிக்காரர் ஏனா கோட்டல ஆஸ்பத்திரி பக்கத்துல
வச்சிருக்காரு ......

ஏன் ? அந்த ஆஸ்பத்திரி டாக்டரும் நல்லவர் தான் ஆஸ்பத்திரிய
சுடுகாட்டு பக்கத்துல வச்சிருக்காரே !!!

நாஞ்சில் த.க.ஜெய்
17-12-2010, 09:59 AM
சிரிப்பின் சிறப்பை உணர்ந்து தொடரும் சிரிப்பு மீண்டும் தொடரட்டும்
காமடியோ காமடி எனும் ஆங்கில சொல்லை மாற்றி சிரிப்போ சிரிப்பு என வைக்கலாமே நண்பரே
என்றும் நட்புடன்
த.க.ஜெய்

ஆன்டனி ஜானி
17-12-2010, 10:11 AM
சிரிப்பின் சிறப்பை உணர்ந்து தொடரும் சிரிப்பு மீண்டும் தொடரட்டும்
காமடியோ காமடி எனும் ஆங்கில சொல்லை மாற்றி சிரிப்போ சிரிப்பு என வைக்கலாமே நண்பரே
என்றும் நட்புடன்
த.க.ஜெய்

எனது ஊர் நண்பனுக்காக தலைப்பை இப்போதே மாற்றுகிறேன்

உங்களுக்காக இன்னும் தொடருகிறேன் .......

அன்புடன்
&
ஜானி

harimurugan
17-12-2010, 10:15 AM
thanks

ஆன்டனி ஜானி
17-12-2010, 10:29 AM
thanks

நண்பரே உங்களுக்கு தமிழில் பதிக்க ஒரு கருவி
என்னிடம் உள்ளது அதை உங்களுக்கு தேவை பட்டால்
நான் உதவுகிறேன் ...... அதில் install மட்டும் உங்கள் கணிணினியில் பண்ணி வைத்தால் போதும் எப்போது வேண்டுமானாலும் தமிழில் பதிக்க அது உதவும் ....

வாழ்த்துக்கள் ...

நாஞ்சில் த.க.ஜெய்
17-12-2010, 10:47 AM
நான் கூறிய கருத்துக்கு மதிப்பளித்து பதிவின் பெயரை தமிழில் மாற்றியதற்கு நன்றி ....தொடருங்கள் ஜானி உங்களுடன் தோளோடு தோளாக நான் ....


ஹரி முருகன் தங்கள் பதிவுகளை தமிழில் தொடரலாமே மேலும் தங்கள் விபரங்களை தமிழில் அறிமுக பகுதியில் தந்தால் தங்களை பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்

என்றும் நட்புடன்
த.க.ஜெய்

ஆன்டனி ஜானி
17-12-2010, 11:06 AM
ஆசிரியர் ; பத்து ரூபாய்ல
மூணு ரூபா போய்ட்டா மீதி எவ்வளவு ?

மாணவன் ; பத்து ரூபா நோட்டுல பெரிய ஓட்ட இருக்குதுனி தானே
அர்த்தம் டீச்சர் .......

ஒருவன் டாக்டர் கிட்ட போறான் .....
டாக்டர் ,டாக்டர் நான் பைசாவ விழுங்கி விட்டேன் டாக்டர்

டாக்டர் : ஒருவா காய்னா இல்ல இரண்டு ரூபா காய்னா

அவன் : அதான் தெரியாம உளுங்கிட்டேன் என்று சொல்றேன்ல ........

சார், சினிமா தியேட்டருக்கு எப்படிங்க போகனும்
கைல காசோடு போகணும் ........

எனக்கு ஒரு பத்து பெட்ரூம் வைத்த வீடு வாடகைக்கு கிடைக்குமா?

எதுக்குங்க இத்தனை பெட்ரூம்

எனக்க ஆபீஸ்ச அங்க வைக்கத்தான்

முரளிராஜா
17-12-2010, 11:08 AM
அனைத்தும் அருமை
இன்னும் பல நகைச்சுவையை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் ஜானி

ஆன்டனி ஜானி
17-12-2010, 11:14 AM
அனைத்தும் அருமை
இன்னும் பல நகைச்சுவையை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் ஜானி

ஒரே நாளில் நிறய பதிப்புக்கள் இடம் தரக்கூடாது
ஆதலால் நாளை உங்களுக்காக தொடருகிறேன் .....

வாழ்த்துக்கள் .......

ஆன்டனி ஜானி
17-12-2010, 12:53 PM
என்னடி உனக்க கணவர் தூக்கத்துல
ஹலோ,ஹலோனி போன்ல பேசுரமாதிரி சத்தம் போடாரு

நான் தான் சொன்னேல அவருக்கு
துக்கத்துல கால்போடுர வியாதி இருக்குனி .........

மண்டையில அடிப்பட்டதால உனக்க மாமியாருக்கு
பழசு எல்லாம் மறந்து போய்ட்டு

அப்படினா பழைய சண்டை எல்லாம் இப்பம்
போடலாமா டாக்டர் ....

தலைவரே எல்லாரும் உங்க கிட்ட செல் நம்பர்
என்னனி கேட்டா நம்பர் 312 என்று சொல்லுகிறீங்களே
எதற்க்கு ?
ஓஹோ செல் நம்பரயா கேட்டாங்க
நான் ஜெயில் நம்பர் என்று நினைச்சேன் .......

சூறாவளி
17-12-2010, 01:36 PM
ஹா ஹா... எல்லாம் வெடி சிரிப்பா இருக்குப்பா...

எல்லாமே வயிறு வலிக்க சிரிக்க வைக்குது...:lachen001::D

பாராட்டுக்கள் ஜானி..:)

ஆன்டனி ஜானி
17-12-2010, 03:02 PM
சிரித்து மகிழ்ந்த அனைத்து நண்பர்களுக்கும் என்னை உங்களுடன்

நண்பனாக அறிமுக படுத்தி எனக்கு நண்பர்கள் தந்த தமிழ் மன்றத்திற்க்கும் பாராட்டுக்களும்

வாழ்த்துக்களும் ........

இன்னும் உங்களுக்காக சிரிப்பு காத்து கொண்டு இருக்கிறது

இன்னும் தொடருவேன் .....

ஆன்டனி ஜானி
17-12-2010, 04:21 PM
நான் ஜோஷியம் பார்த்தேன் ஒரு வருடத்துக்கு பணம் கஷ்டம்
இருக்கும் என்று ஜோஷியர் சொன்னார் ...

ஜோஷியம் பார்த்ததுக்கு ஒரு வருஷம் கழித்து பணம் தருவேன்.......

எனக்க மாமியாருக்கு உடம்பு சரி இல்லைனா பெரிய
ஆஸ்பத்திரில போய் தான் மருந்து வாங்குவேன்

ஏனா அங்கதான் தப்பு,தப்பா மருந்து கொடுப்பாவ


என்னுடய கதை என்று ஒருவர் படம் பார்த்து விட்டு
எனக்க மேல கேசு போட்டு இருக்காரு

அவருக்கு கேசூ ஜெயிக்காது

ஏண்டா ?

ஏனா நம்ம படத்துல கதயே இல்லயே !!

ஜனகன்
17-12-2010, 06:12 PM
ஹாய் ஜானி, உங்க கற்ப்பனை ரொம்ப சூப்பர். படிக்க படிக்க ஒரே சிரிப்பு.

ஆன்டனி ஜானி
18-12-2010, 02:56 AM
இன்னும் உங்களுக்காக காத்திருக்கிறது ........

தொடருவேன் ....

தென்னாட்டு சிங்கம்
19-12-2010, 03:36 AM
thanks good joks

அமரன்
20-12-2010, 04:47 PM
நண்பர்களே..

பலதடவை சொல்லியும் கேட்காமல் மன்றத்தைக் குப்பையாக்கும் அசைவப் பதிவுகளைத் தொடர்ந்து கொடுத்தால் நண்பர் ஆண்டனி தடை செய்யப்படுகிறார்.

நன்றி.

இந்தத் திரியில் இருந்த அகம் சுழிக்க வைக்கும் அருவருப்பான பதிவுகள் நீக்கப்பட்டன.

றெனிநிமல்
21-12-2010, 04:50 PM
சிரிப்பதால் மனிதனின் ஆயுள் அதிகரிப்பதாக
கேள்விப்பட்டிருக்கின்றேன்.

மன்றத்தின் நண்பர்களை சிரிக்க வைப்பதால் ஆண்டனி கூட வைத்தியரே!

உங்கள் சிரிப்பு வைத்தியம் தொடரட்டும் நண்பரே.