PDA

View Full Version : அவளென்ன அசடோ?



கீதம்
16-12-2010, 10:44 PM
அழகிய மலரொன்ரைக் கண்டு உள்ளத்துள் கொள்ளை ஆசை கிளம்ப, மங்கையொருத்தி அம்மலரைக் கொய்து சூடிக்கொள்ளும் நோக்குடன் செடியை நாடிச் செல்கிறாள். காற்சதங்கை ஒலிக்க அவள் அசைந்து செல்லும் அழகோ மயிலின் ஒய்யார நடமொத்திருக்கிறது. அங்ஙனம் ஆவலுடன் சென்றவள் செடியை நெருங்கும்வேளையில் எதைக் கண்டு தயங்குகிறாள்?

சதங்கை சத்தம் எழுப்பாவண்ணம் மெல்ல அடிவைத்து முன்னேறியவள், பெரிதும் விரும்பிக் கொய்யச் சென்ற அம்மலரைக் கொய்யாது, அதன் அருகில் இருந்த இளந்தளிரைக் கொய்து வருகிறாளே, அவள் என்ன அசடா?

இல்லையில்லை. நன்றாகக் கவனி, அவள் பறிக்கச் சென்ற மலரின் நடுவே இரு வண்டுகள் கூடிக்களித்து இன்புற்றிருக்கின்றனவே. அவற்றைக் குலைக்கவிரும்பா காரணத்தாலேயே அவள் இப்படி விநோதமாக நடந்துகொள்கிறாள்.

என்னே சிற்றுயிர்க்கும் இரங்கும் இளகியமனம்! (ஆதவாவாய் இருந்தால் அவற்றைப் புகைப்படமெடுத்து அவற்றின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தியிருப்பார் என்பது ‘N-I கொள்ளை கொண்ட கொல்லி’ திரி படித்தவர்களுக்கு நான் சொல்லாமலேயே புரிந்திருக்கும்)

நளன் தமயந்தியை மணமுடித்துத் தன் நாட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் தன் நாட்டு வளத்தையும் தன் மக்களின் குணாதிசயப் பெருமையையும் அவளிடம் எடுத்துக்கூறிக் காட்டும் காட்சி இது.(நளவெண்பா: 185)


புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி.

M.Jagadeesan
16-12-2010, 11:04 PM
புகழேந்தியின் அழகான கற்பனை.எடுத்துக் கொடுத்த கீதத்திற்கு நன்றி!

பாலகன்
17-12-2010, 04:08 AM
மிகமிக அருமையான ரசிக்கும் விசயம் பகிர்ந்த கீதம் அக்காவிற்கு நன்றி!

ஆதவா! உங்க மேட்டரை புட்டுபுட்டு வச்சிருக்காங்களே! :D

ஆன்டனி ஜானி
18-12-2010, 05:41 PM
கதைகள்,கவிதைகள்,பாடல்கள் ,எது எழுதினாலும் அருமையான
கவிதைகளாளே எல்லாருடய மனதிலும் ஈரத்தை வளர்க்கிறீங்க

அருமை கீதம் அவர்களே

வாழ்த்துக்கள் .......

நானும் உங்கள் ரசிகன் என்பதில் எந்த ஐயமும் இல்லை

கீதம்
18-12-2010, 11:48 PM
புகழேந்தியின் அழகான கற்பனை.எடுத்துக் கொடுத்த கீதத்திற்கு நன்றி!

நன்றி ஐயா. படித்ததும் பகிரத்தோன்றியது.

கீதம்
18-12-2010, 11:50 PM
மிகமிக அருமையான ரசிக்கும் விசயம் பகிர்ந்த கீதம் அக்காவிற்கு நன்றி!

ஆதவா! உங்க மேட்டரை புட்டுபுட்டு வச்சிருக்காங்களே! :D

நன்றி மகாபிரபு.

(இப்படியாவது வம்பிழுத்து ஆதவாவை உள்ளே வரவழைக்கப்பார்க்கிறேன், முடியவில்லையே!):icon_p:

கீதம்
18-12-2010, 11:53 PM
கதைகள்,கவிதைகள்,பாடல்கள் ,எது எழுதினாலும் அருமையான
கவிதைகளாளே எல்லாருடய மனதிலும் ஈரத்தை வளர்க்கிறீங்க

அருமை கீதம் அவர்களே

வாழ்த்துக்கள் .......

நானும் உங்கள் ரசிகன் என்பதில் எந்த ஐயமும் இல்லை

இது நான் எழுதியதில்லை. புகழேந்திப்புலவர் எழுதிய நளவெண்பாப் பாடல் இது. விளக்கம் மட்டுமே சொன்னேன். பின்னூட்டத்துக்கு நன்றி ஆன்டனி ஜானி அவர்களே.