PDA

View Full Version : யாம் பெற்ற இன்பம்



ஜானகி
15-12-2010, 03:06 PM
சென்னையில் நடக்கும் இசைவிழாவில் இன்று அருண் அவர்கள் பாரதியின் பாடல் ஒன்றை உணர்ச்சிபூர்வமாகப் பாடினார் - மழை பற்றிய பாடல் அது. இன்னிசை மழையுடன், நிஜமான மழையும் சேர்ந்து, ரசிகர்களை வேறு ஓர் உலகுக்கே கொண்டு சென்றுவிட்டார். உடனே வீட்டிற்கு வந்து, பாரதியின் அந்தப் பாடலைத் தேடிப் படித்தேன். நீங்களும் மழையில் நனைய வாருங்கள்:

திக்குக்கள் எட்டும் சிதறி - தக்கத் தீம் தரிகிட, தீம் தரிகிட தீம் தரிகிட - தீம் தரிகிட

பக்க மலைகள் உடைந்து - வெள்ளம் பாயுது, பாயுது, பாயுது -தாம் தரிகிட

தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம் சாயுது, சாயுது, சாயுது - பேய்கொண்டு,

தக்கையடிக்குது காற்று - தக்கத் தாம்தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட

வெட்டியடிக்குது மின்னல் - கடல், வீரத் திரைகொண்டு, விண்ணை இடிக்குது,

கொட்டி யிடிக்குது மேகம், கூ--கூ--வென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட, சட்டச்சட, டட்ட - என்று தாளங்கொட்டிக் கனைக்குது வானம்,

எட்டுத் திசையும் இடிய - மழை எங்ஙனம் வந்ததடா, தம்பி !

அண்டம் குலுங்குது தம்பி ! - தலை ஆயிரம் தூக்கியே சேடனும் பேய் போல்

மிண்டிக் குதித்திடுகின்றான், -திசை வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்

செண்டு புடைத்திடுகின்றார், - என்ன தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம் !

கண்டோம் ! கண்டோம் ! கண்டோம் ! இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம் !


என்ன...என்னைப் போலவே மிரண்டு விட்டீர்களா ? என்னே பாரதியின் சொல்வளம் ?

ஆன்டனி ஜானி
15-12-2010, 04:07 PM
கண்டோம் ! கண்டோம் ! கண்டோம் ! இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம் !


இந்த காலத்து கூத்து எல்லாம் காதுல கேட்டாளே வெருப்பா இருக்கு
இதுல வேற பார்க்க எப்படிங்க இருக்கும்

பாலகன்
15-12-2010, 04:17 PM
பாட்டை கேட்டாலே மழை நின்னுடும் போல இருக்கே! :D

அமரன்
15-12-2010, 04:51 PM
அம்மா..

இந்தப் பகுதி, வேறு இடங்களில் படித்தவற்றை, தட்டச்ச அவகாசமில்லாத காரணத்தால், அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பண்ணுவதுக்காக உருவாக்கப்பட்டது.

சொந்தமாகத் தட்டச்சுப் பதியும் இதுப் போன்ற பதிவுகள் இலக்கியங்கள் பகுதியை அலங்கரித்தால் சிறப்பு.

நன்றிம்மா.