PDA

View Full Version : கலங்கரை விளக்கு



மனோஜ்
15-12-2010, 06:49 AM
மழைவந்தாலும் காற்றடித்தாலும் கலங்காது காத்திட
கரையில் நிற்கும் உற்றத் துணைவனாய்
மிதப்பவற்கு விடியலாய் வீசிடும் ஒளியில் உதயமாய்
உருகிடும் உள்ளங்களுக்கு ஓங்கிய உறுதியாய்
கலங்கிய உள்ளங்களுக்கு கலங்கரை விளக்காய்
பட்டொளி வீசி பறந்திடும் உன் ஒளியை
பல மைல்கள் கண்டதும்
பயந்த உள்ளங்களுக்கு பரவச கதிராய்
பறந்து விரிந்த கடலில்
தத்தளிக்கும் கப்பல்களுக்கு
விடிவெள்ளியாய் நீ இருப்பது போன்று
நானும் மாற
உன் ஒளி என்னுள் ஒளிர
வழி செய்வாய்!http://i185.photobucket.com/albums/x57/manojoalex/lighthouse_kavithai.jpg

நாஞ்சில் த.க.ஜெய்
15-12-2010, 12:57 PM
ஒளிரும் கலங்கரை விளக்கில் மனவொளி பெற்று
(வாழ்வெனும் )இருட்டிலிருந்து வழிகாட்டும்
இந்த கலங்கரை விளக்கு

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

கீதம்
16-12-2010, 12:21 AM
கலங்களைக் கரையேற்றுவதுபோல்
உளங்களைக் கரையேற்ற விழையும்
உன்னத எண்ணத்துக்குப் பாராட்டுகள்.

மனோஜ்
16-12-2010, 11:56 AM
நன்றி ஜெய் அவர்களே தங்கள் வரிகளுக்கு

நன்றி கீதம் அவர்களே தங்கள் பாரட்டுக்கு:icon_b: