PDA

View Full Version : பூக்கள்



jaffy
14-12-2010, 09:31 AM
ஆம்!
பூக்களுக்கு பற்கள் இல்லை
அவை கடிப்பதில்லை

பல் முளைத்திடாத குழந்தை போல
பல் போன கிழவி போலவே பூக்கள்
அவை குமரி போல சிரிப்பதில்லை

பூக்களிடம் சொற்கள் இல்லை
அவை கொல்வதில்லை

பூக்களும் நாயும் ஒன்று
இரண்டும் மோப்பம் பிடிக்கும்

பூக்களும் நிலவும் ஒன்று
இரண்டும் காயும்

பூக்களும் நிழலும் ஒன்று
இரண்டும் உதிர்ந்து போகும்

பூக்களும் இலையும் ஒன்று
இரண்டும் குப்பை ஆகும்

பூக்களும் காதலும் ஒன்று
இரண்டும் கல்லறை போகும்

பூக்களும் சாமியும் ஒன்று
இரண்டும் கருவறை ஆடும்

பூக்களும் நீரும் ஒன்று
இரண்டும் காற்றில் நெளியும்

பூக்களும் பழம்பெண்டிரும் ஒன்று
இரண்டும் உன்கட்டை ஏறும்

பூத்த மரம் பூப்பெய்யும்
பூக்கள் பூப்பெய்வதில்லை

பூத்த மரம் காய்காய்க்கும்
பூக்கள் காய்ப்பதில்லை
பூக்கள் காயும் மாயும்

பூத்த மரம் கனித்தரும்
பூக்கள் கனித்தருவதில்லை

பூக்கள் பிறக்கின்றன பூக்களாக
பூக்கள் உய்கின்றன பூக்களாக
பூக்கள் மடிகின்றன பூக்களாக

பூக்கள் பூக்களாகவே இருக்கின்றன






என்னுடைய சிறு கவிதை முயற்சி, பிழைகள் இருக்கின்றன என்றால் மன்னிக்கவும், பிழைகளையும் சுட்டிக்காட்டுங்கள்

ஜெஃபி

Hega
14-12-2010, 09:35 AM
பூக்கள் பூக்களாகவே இருக்கின்றன என
பூக்களை ஒப்பிட்ட வித்ம அருமை

அழகான முயற்சி இது.. தொடந்து எழுதுங்கள்..

jaffy
14-12-2010, 10:36 AM
பூக்கள் பூக்களாகவே இருக்கின்றன என
பூக்களை ஒப்பிட்ட வித்ம அருமை

அழகான முயற்சி இது.. தொடந்து எழுதுங்கள்..

என் பிதற்றலுக்கும் ஊக்கம் தந்தமைக்கு நன்றிகள் ஹேகா அவர்கள்...

கௌதமன்
14-12-2010, 12:56 PM
பூவேதான் காயாகும் பின் கனிந்தக் கனியாகும்
தென்னையின் உதிராதப் பூதான் தேங்காய்

தொடர்ந்து எழுதுங்கள்! பாராட்டுகள்!
முயற்சிதான் வெற்றிக்கு அடித்தளம்

நாகரா
14-12-2010, 03:45 PM
நீவிர் பருகக் கொடுத்த
பூக் கள் அருமையோ அருமை

பூக்கள் பூக்களாய் இருப்பதைப் போல்
நானும் நானாய் இருந்தால்
பேத பாவம் நாச மாகுமே!

வாழ்த்துக்கள் ஜெஃபி

பாலகன்
14-12-2010, 03:53 PM
பூக்களும் நாயும் ஒன்று
இரண்டும் மோப்பம் பிடிக்கும்

பூக்களும் நாயும் ஒன்றா?

பூக்கள் மோப்பம் பிடிக்குமா?

மற்றபடி மிகவும் ரசித்தேன் உங்கள் பூக்கவியில் உள்ள சுவையை

நாஞ்சில் த.க.ஜெய்
14-12-2010, 05:48 PM
ஒரு பூவை பற்றி பூங்காவியம் எழுதிய ஜெ பி க்கு என்வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

கீதம்
14-12-2010, 09:07 PM
பூக்கள் பற்றிய ஆராய்ச்சியை ரசித்தேன், சில இடங்களில் நெருடியபோதும். :) முயற்சிக்குப் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

முதலிரண்டு பத்திகளை இடம் மாற்றினால் இன்னும் அழகுபடும் என்று தோன்றுகிறது. பரிசீலிக்கவும். நன்றி.

ஜனகன்
14-12-2010, 09:59 PM
பூவைப் பற்றி ஒரு நல்ல கற்பனை,
அதை கவிதையில் வடித்த விதம் அருமை.இன்னும் எழுதுங்கள்.

அக்னி
20-12-2010, 12:01 PM
இதழ்கள் இருக்கின்ற போதும்,
பேசமுடியாத பூக்கள்,
இதழ் விரிப்பதுதானே
அவற்றுக்குச் சிரிப்பு... சிறப்பு...

அதையும் பறித்துவிடாதீர்கள்
பூக்கள் சிரிப்பதில்லை என்று சொல்லி...

பூப்பெய்யும் வரை பூக்குமா மரங்கள்
என்பது தெரியவில்லை...
ஆனால்,
பூத்த பின் பூப்பெய்யும் மரங்கள்
அழகுதான்...

சொரியும் பூக்களின் அழகை
ரசிக்கின்றேன்..,
அவற்றின் மரண உதிரலை உணராமலே...

பூக்கவிதைக்குப் பாராட்டு...
கவிப்பூக்களைக் கவிமாலையிற் தொடுத்துக்கொண்டேயிருங்கள்...

ஆன்டனி ஜானி
20-12-2010, 01:52 PM
ஓவ் பூக்களுக்குள் இத்தணை சுவாரசியமான
தொடர்கள் இருக்கிறதா
வாழ்த்துக்கள் ......

கீதம்
20-12-2010, 11:20 PM
இதழ்கள் இருக்கின்ற போதும்,
பேசமுடியாத பூக்கள்,
இதழ் விரிப்பதுதானே
அவற்றுக்குச் சிரிப்பு... சிறப்பு...

அதையும் பறித்துவிடாதீர்கள்
பூக்கள் சிரிப்பதில்லை என்று சொல்லி...

பூப்பெய்யும் வரை பூக்குமா மரங்கள்
என்பது தெரியவில்லை...
ஆனால்,
பூத்த பின் பூப்பெய்யும் மரங்கள்
அழகுதான்...

சொரியும் பூக்களின் அழகை
ரசிக்கின்றேன்..,
அவற்றின் மரண உதிரலை உணராமலே...

பூக்கவிதைக்குப் பாராட்டு...
கவிப்பூக்களைக் கவிமாலையிற் தொடுத்துக்கொண்டேயிருங்கள்...

பூத்தபின் பூப்பெய்யும் மரங்கள்!

ரசிக்கவைத்த காட்சியழகு.

கவிப்பூச்சொறிவுக்கும் கருத்துச்செறிவுக்கும் பாராட்டுகள் அக்னி அவர்களே.

CEN Mark
29-12-2010, 05:10 PM
ஆம்!
பூக்களுக்கு பற்கள் இல்லை
அவை கடிப்பதில்லை

பல் முளைத்திடாத குழந்தை போல
பல் போன கிழவி போலவே பூக்கள்
அவை குமரி போல சிரிப்பதில்லை

பூக்களிடம் சொற்கள் இல்லை
அவை கொல்வதில்லை

பூக்களும் நாயும் ஒன்று
இரண்டும் மோப்பம் பிடிக்கும்

பூக்களும் நிலவும் ஒன்று
இரண்டும் காயும்

பூக்களும் நிழலும் ஒன்று
இரண்டும் உதிர்ந்து போகும்

பூக்களும் இலையும் ஒன்று
இரண்டும் குப்பை ஆகும்

பூக்களும் காதலும் ஒன்று
இரண்டும் கல்லறை போகும்

பூக்களும் சாமியும் ஒன்று
இரண்டும் கருவறை ஆடும்

பூக்களும் நீரும் ஒன்று
இரண்டும் காற்றில் நெளியும்

பூக்களும் பழம்பெண்டிரும் ஒன்று
இரண்டும் உன்கட்டை ஏறும்

பூத்த மரம் பூப்பெய்யும்
பூக்கள் பூப்பெய்வதில்லை

பூத்த மரம் காய்காய்க்கும்
பூக்கள் காய்ப்பதில்லை
பூக்கள் காயும் மாயும்

பூத்த மரம் கனித்தரும்
பூக்கள் கனித்தருவதில்லை

பூக்கள் பிறக்கின்றன பூக்களாக
பூக்கள் உய்கின்றன பூக்களாக
பூக்கள் மடிகின்றன பூக்களாக

பூக்கள் பூக்களாகவே இருக்கின்றன






என்னுடைய சிறு கவிதை முயற்சி, பிழைகள் இருக்கின்றன என்றால் மன்னிக்கவும், பிழைகளையும் சுட்டிக்காட்டுங்கள்

ஜெஃபி


சொற்குற்றமில்லை. பொருள் குற்றமே உள்ளது. முதர்முயற்சியாதலால் வாழ்த்துகிறோம். ஒப்பீடு எங்கோ இடர்கிறது...

jaffy
05-01-2011, 06:41 AM
அனைவருக்கும் நன்றி

பொருட்குற்றத்தை எடுத்துச் சொன்னால், அடுத்த கவிதையில் தடுக்க முயல்வேன் சென் மார்க் அவர்களே.

பாரதி
07-01-2011, 11:06 AM
முதல் கவிதைக்கு வாழ்த்து.
முயற்சி நன்று.
முந்தைய பின்னூட்டங்களை நானும் வழிமொழிகிறேன்.
இனி வரும் கவிதைகள் இன்னும் அழகுற, பிழையற விளங்கும் என நம்புகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.