PDA

View Full Version : தோல்வியின் ரகசியம்



கீதம்
14-12-2010, 04:14 AM
வார்த்தைச் சாட்டைகளை நீ
சொடுக்கும் ஒவ்வொருமுறையும்
புன்னகைத்து வைக்கிறேன்!

சொல்லம்பு தைத்த வேதனையை
உள்ளுக்குள் வாங்கிப் புதைக்கிறேன்!
ஆக்ரோஷம் மேலிட நீ முன்னேறும்போது
அமைதியாய் அடங்கிப்போகிறேன்!

என் எதிர்வினை வெறுமையாய்ப் போனதில்
திகைத்து நீ பின்வாங்குகிறாய்!
வெற்றிக்களிப்பில் நான்!

ஆனாலும்...
அடக்கிவைத்த என் துயரம் யாவும்
ஏதாவதொரு கண்ணீர்த்துளியில் வெளிப்பட்டு
என் தோல்வியை உன்னிடம் பறைசாற்றிவிடுமோ
என்று சிறிது அஞ்சத்தான் செய்கிறேன்!

ஜானகி
14-12-2010, 05:21 AM
அருமை. அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியும், புரியும்.
நம்மைப் போல்தான் பிறரும் என்று தெரிவதில் தான் எத்தனை நிம்மதி !

Hega
14-12-2010, 09:32 AM
அடக்கிவைத்த என் துயரம் யாவும்
ஏதாவதொரு கண்ணீர்த்துளியில் வெளிப்பட்டு
என் தோல்வியை உன்னிடம் பறைசாற்றிவிடுமோ
என்று சிறிது அஞ்சத்தான் செய்கிறேன்!

அடக்கி வைத்த உள் மனதினை அழகாக படம் பிடித்து காட்டி இருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
14-12-2010, 12:17 PM
அழகான கவிதையில் தோல்வியின் வலியை கூறிய விதம் ....
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

கீதம்
18-12-2010, 11:39 PM
அருமை. அநுபவித்தவர்களுக்குத்தான் தெரியும், புரியும்.
நம்மைப் போல்தான் பிறரும் என்று தெரிவதில் தான் எத்தனை நிம்மதி !

பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அவர்களே.

கீதம்
18-12-2010, 11:40 PM
அடக்கி வைத்த உள் மனதினை அழகாக படம் பிடித்து காட்டி இருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்.

பாராட்டுக்கு நன்றி Hega.

கீதம்
18-12-2010, 11:41 PM
அழகான கவிதையில் தோல்வியின் வலியை கூறிய விதம் ....
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

பின்னூட்டத்துக்கு நன்றி த.க.ஜெய் அவர்களே.

அக்னி
20-12-2010, 11:21 AM
உணர்வுக்குக் கடிவாளம் போட்டு
மனதுக்குட் கட்டி வைப்பது
கடினமானது...

அவ்வுணர்வு
சோகம் என்றாகையில்
கண்கள் அழாதபோதும்,
இதழ்கள் கோணாதபோதும்
மனம் கேவிக்கேவி அழும்...

அந்த அழுகை,
மனக்கட்டுடைத்துப்
பாயும் வரையில்
திமிராகவும்,
பாய்ந்தால்
ஆற்றாமையாகவும்
கூடப் பெயரிடப்படும்...

புதைக்கப்படும் சோகம்
கோபமாக வெடித்துக் கிளம்பும்வரை..,
வீரம் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கும்...

தென்றலின் வருடலைச் சுகிர்க்கலாம், புயலாகாதவரையில்...
கடலலையிற் கால் நனைக்கலாம், சுனாமியாகாதவரையில்...

வாழ்க்கையின் அவசியத்திற்காகப் பேணப்படும்
இத்தோல்வியின் ரகசியங்களுக்கும் எல்லை..,
வாழ்க்கைதான்...

பாராட்டு கீதம் அவர்களுக்கு...

ஜானகி
20-12-2010, 11:35 AM
ரசிப்பதிலும் இவ்வளவு அழகா... ? அருமை ! இங்கு... அழுகையே...... அழகானதே....?

ஆன்டனி ஜானி
20-12-2010, 01:55 PM
அக்கா ! தோல்வியின் ரகசியத்தை

அழகான கவிதை அமைத்து போட்டுவிட்டீங்களே !!!!!

அழகோ,அழகு வாழ்த்துக்கள் .......

கௌதமன்
20-12-2010, 02:20 PM
உள்ளுக்குள் அழாமல்,
உடைந்து அழுது விடு;
அந்தக் கண்ணீருக்காவது
விடுதலை கொடு;
அழுகை தோல்விக்குறியல்ல;
அதுவே ஆயுதம்,
ஒருவகை வன்முறை;

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-12-2010, 03:39 PM
கௌதம் சொன்னது சரியே. அழுகை தோல்வியல்ல. பயிரை வளர்க்கும் நீர் போல் உணர்வுகளை அழுகை முறுக்கேற்றும். கவிதைக்கு வாழ்த்துக்கள் கீதம்.

கீதம்
20-02-2011, 06:25 AM
உணர்வுக்குக் கடிவாளம் போட்டு
மனதுக்குட் கட்டி வைப்பது
கடினமானது...

அவ்வுணர்வு
சோகம் என்றாகையில்
கண்கள் அழாதபோதும்,
இதழ்கள் கோணாதபோதும்
மனம் கேவிக்கேவி அழும்...

அந்த அழுகை,
மனக்கட்டுடைத்துப்
பாயும் வரையில்
திமிராகவும்,
பாய்ந்தால்
ஆற்றாமையாகவும்
கூடப் பெயரிடப்படும்...

புதைக்கப்படும் சோகம்
கோபமாக வெடித்துக் கிளம்பும்வரை..,
வீரம் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கும்...

தென்றலின் வருடலைச் சுகிர்க்கலாம், புயலாகாதவரையில்...
கடலலையிற் கால் நனைக்கலாம், சுனாமியாகாதவரையில்...

வாழ்க்கையின் அவசியத்திற்காகப் பேணப்படும்
இத்தோல்வியின் ரகசியங்களுக்கும் எல்லை..,
வாழ்க்கைதான்...

பாராட்டு கீதம் அவர்களுக்கு...

ஆணித்தரமான கருத்து. மிகவும் நன்றி அக்னி.

கீதம்
20-02-2011, 06:27 AM
அக்கா ! தோல்வியின் ரகசியத்தை

அழகான கவிதை அமைத்து போட்டுவிட்டீங்களே !!!!!

அழகோ,அழகு வாழ்த்துக்கள் .......

பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கீதம்
20-02-2011, 06:29 AM
உள்ளுக்குள் அழாமல்,
உடைந்து அழுது விடு;
அந்தக் கண்ணீருக்காவது
விடுதலை கொடு;
அழுகை தோல்விக்குறியல்ல;
அதுவே ஆயுதம்,
ஒருவகை வன்முறை;

கேடயத்தை வாளாக்கும் வித்தை அறிகிறேன். நன்றி கெளதமன்.

கீதம்
20-02-2011, 06:31 AM
கௌதம் சொன்னது சரியே. அழுகை தோல்வியல்ல. பயிரை வளர்க்கும் நீர் போல் உணர்வுகளை அழுகை முறுக்கேற்றும். கவிதைக்கு வாழ்த்துக்கள் கீதம்.

வாழ்த்துக்கு நன்றி சுனைத் ஹஸனீ அவர்களே.

Nivas.T
20-02-2011, 06:54 AM
என் எதிர்வினை வெறுமையாய்ப் போனதில்
திகைத்து நீ பின்வாங்குகிறாய்!
வெற்றிக்களிப்பில் நான்!


எதிர்வினையை வெறுமையாக்கி கொண்டால்
எதிரிக்கு தோல்விதான் மிஞ்சும்

தோல்வியின் ரகசியம்
வெற்றியின் விளிம்பு

அழகான கவிதை ஆழ்ந்த கருத்து

ரசிகன்
24-02-2011, 08:34 AM
:)hmmm

கீதம்
24-02-2011, 08:39 AM
:)hmmm

ஏனிந்தப் பெருமூச்சு ரசிகரே?

பூமகள்
24-02-2011, 01:48 PM
தோல்வி எத்தனை துயரமானது..

அத்தனை வலியையும் விழுங்குவது சுலபமல்ல..

ஓர் துளி கண்ணீரில் கரைவது சாத்தியமா?? அவ்வப்போது நினைத்து நினைத்து வரும் அத்துளி யாருமறியாமல் துடைப்பது மட்டுமே விடையாகிறது..

வலி சொன்ன வார்த்தையையும் - உன்
விழி சொன்ன வெறுமையையும்
சுமந்து சாகிறது நெஞ்சம்..

தூர எறிய தகுந்த குப்பைத்தொட்டி தேடி
தினம் அலைகிறது கண்கள்..

எறியாத ஒவ்வொரு கணமும்
எரிக்கிறது அவை எனை..

என்னோடு எரிந்தாவது
எறிந்து போகட்டும்
உன் உரையாடல்கள்..

--

கவிதைக்கு பின்னூட்டமா என்று தடுமாற வேண்டாம் கீதம் அக்கா.. எனது கவிதை.. கருத்து ஒத்துப் போனால் சந்தோசமே..

கலாசுரன்
25-02-2011, 07:42 AM
குறைவான வார்த்தைகளில் நிறைவாக நிறையப் பேசுகிறது இக்கவிதை..!!!!
வாழ்த்துக்கள் கீதம் ..:)

கீதம்
26-02-2011, 12:30 AM
என் எதிர்வினை வெறுமையாய்ப் போனதில்
திகைத்து நீ பின்வாங்குகிறாய்!
வெற்றிக்களிப்பில் நான்!


எதிர்வினையை வெறுமையாக்கி கொண்டால்
எதிரிக்கு தோல்விதான் மிஞ்சும்

தோல்வியின் ரகசியம்
வெற்றியின் விளிம்பு

அழகான கவிதை ஆழ்ந்த கருத்து

நன்றி நிவாஸ். சொல்லோவியம் அழகு.

கீதம்
26-02-2011, 09:15 AM
தோல்வி எத்தனை துயரமானது..

அத்தனை வலியையும் விழுங்குவது சுலபமல்ல..

ஓர் துளி கண்ணீரில் கரைவது சாத்தியமா?? அவ்வப்போது நினைத்து நினைத்து வரும் அத்துளி யாருமறியாமல் துடைப்பது மட்டுமே விடையாகிறது..

வலி சொன்ன வார்த்தையையும் - உன்
விழி சொன்ன வெறுமையையும்
சுமந்து சாகிறது நெஞ்சம்..

தூர எறிய தகுந்த குப்பைத்தொட்டி தேடி
தினம் அலைகிறது கண்கள்..

எறியாத ஒவ்வொரு கணமும்
எரிக்கிறது அவை எனை..

என்னோடு எரிந்தாவது
எறிந்து போகட்டும்
உன் உரையாடல்கள்..

--

கவிதைக்கு பின்னூட்டமா என்று தடுமாற வேண்டாம் கீதம் அக்கா.. எனது கவிதை.. கருத்து ஒத்துப் போனால் சந்தோசமே..

கருத்தொத்துப் போனதால் கருவொன்றும் உருவானது. கலங்கிய நீரில் கவிதைக் கயலைப் பிடித்துவிட்டேன். நன்றி பூமகள்.

நீ உள்ளே இருக்கும்வரை
மூச்சுவிடத் திணறிக்கொண்டிருந்த அறை,
நீ வெளியேறியதும்
என்னுடன் புலம்பத்தொடங்கியது.

வீசியெறிந்துப்போன வசவுகளாலும்
கொட்டிச் சிதறிய குரோதத்தாலும்
நார் நாராய்க் கிழிக்கப்பட்டுத் தொங்கும்
என் நைந்துபோன சுயகெளரவத்தாலும்
நாற்றமெடுத்துக்கிடப்பதாய்ச் சொல்லி அழுதது.

சுமக்கமுடியா பாரத்தின்
அழுத்தம் சொல்லிப் புலம்பியது.
வார்த்தைகளின் வீச்சம் தாளாது
மூக்கு பொத்தி முகம் சுளித்துக்காட்டியது.

ஆற்றாமை பொங்கும் அறைக்கு
ஆறுதல் சொல்லியபடியே
குப்பைகளை அள்ளிக்
குப்பைத்தொட்டியில் கொட்டினேன்.
வழியும் கழிவிரக்கத்தாலே
கழுவித்துடைத்து சுத்தம் செய்தேன்.

அத்தனையும் முடித்து, ஆயாசத்துடன் நோக்க,
வெற்றிடத்தை நிறைத்தது
என் நிம்மதிப் பெருமூச்சு!

இப்போது...
சலனமற்றுக் காத்திருக்கிறோம்
அறையும் நானும்
மறுபடியும் உன் வரவுக்காக!

கீதம்
26-02-2011, 09:19 AM
குறைவான வார்த்தைகளில் நிறைவாக நிறையப் பேசுகிறது இக்கவிதை..!!!!
வாழ்த்துக்கள் கீதம் ..:)

மிகவும் நன்றி கலாசுரன் அவர்களே.

அமரன்
26-02-2011, 09:41 AM
விசும்புக்கு வேட்டையாடும் ஒருவர்..
விசும்பாமல் வீம்புக்கு விரதமிருக்கும் இன்னொருவர்..
இருவருக்கும் இடையில் சிக்கிச் சிதைவது என்னவோ உறவுதான்..

உறவுகளின் தோல்வியை அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்.

பாராட்டுகள் அக்கா

அக்னி
26-02-2011, 09:52 AM
அமரனின் மாற்றுக்கோணம் ஏற்கத்தக்கதே.
இது எனக்குத் தோன்றவில்லை.

ஆனால்,
இந்த வீம்பு ஒரு பக்கம் அதிகமாக அதிகாரம் செலுத்துவதால்,
மறுபக்கம் இயல்பாகவே இருக்கும் வீம்பும் அதிகமானதாக்கப்படுகின்றதோ...
என நினைக்கின்றேன்...

கீதம்
26-02-2011, 09:55 AM
விசும்புக்கு வேட்டையாடும் ஒருவர்..
விசும்பாமல் வீம்புக்கு விரதமிருக்கும் இன்னொருவர்..
இருவருக்கும் இடையில் சிக்கிச் சிதைவது என்னவோ உறவுதான்..

உறவுகளின் தோல்வியை அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்.

பாராட்டுகள் அக்கா

அழகாகச் சொன்னீர்கள் அமரன். பல இடங்களில் வீம்பு நிலைபெற்றுவிடுவதால் வாழ்க்கை புறந்தள்ளப்பட்டு புறமுதுகிட்டு ஓடிவிடுகிறது. பின்னூட்டத்துக்கு நன்றி அமரன்.

கீதம்
26-02-2011, 09:58 AM
அமரனின் மாற்றுக்கோணம் ஏற்கத்தக்கதே.
இது எனக்குத் தோன்றவில்லை.

ஆனால்,
இந்த வீம்பு ஒரு பக்கம் அதிகமாக அதிகாரம் செலுத்துவதால்,
மறுபக்கம் இயல்பாகவே இருக்கும் வீம்பும் அதிகமானதாக்கப்படுகின்றதோ...
என நினைக்கின்றேன்...

குரங்கு அப்பம் பங்கிட்ட கதை மாதிரி வாழ்க்கையின் இன்பமும் வீம்பால் பங்கிடப்பட்டு முடிவில் கானலாகிவிடும் அபாயமும் உண்டு.

நன்றி அக்னி.