PDA

View Full Version : மதம் பிடித்தால்



mathan sundar
13-12-2010, 03:34 PM
:violent-smiley-010:
விளக்கை தேடி வந்து வீழும்
வெட்டு கிளிகள் போலே
மதத்தை தேடி வந்து வீழும்
மானிட பூச்சிகளே....
பிறந்தால் குழந்தை
இறந்தால் சடலம்
இடையில் ஏனிந்த
எல்லை கோடு?
யானைக்கு
மதம் பிடித்தால்
அதை சுட்டு கொல்கிறோம்..
மனிதனுக்கு
மதம் பிடித்தால்
நாமே வெட்டி கொல்கிறோம்...
அன்புகள் உறவாட தொடங்கினால்
வம்புகளுக்கு என்ன வேலை?
மதங்களின் பேரால்
மனிதங்கள் மரணிக்க கூடாது...
என் மதமானால் என்ன?
உன் மதமானால் என்ன?
எம்மதமனாலும்
சம்மதமே
என உன் மனம்
உணர போவது எப்போது...
:icon_rollout:

பாலகன்
13-12-2010, 03:39 PM
நல்ல சிந்தனை! உண்மையிலேயே நீங்கள் சொல்வதுபோல நாடு மாறினால் ரொம்பவே நல்லாயிருக்கும். வாழ்த்துக்கள்


யானைக்கு
மதம் பிடித்தால்
அதை சுட்டு கொள்கிறோம்.. (கொல்கிறோம்)

மனிதனுக்கு
மதம் பிடித்தால்
நாமே வெட்டி கொள்கிறோம்...


யானையை சுட்டுக்கொள்கிறோம் என்றால் அதை திருடிக்கொள்கிறோம் என்று வருகிறது. :D
இரண்டாவது வாக்கியம் சரி! மனிதன் அவளையே வெட்டிக்கொள்கிறான்.

Hega
13-12-2010, 03:58 PM
என் மதமானால் என்ன?
உன் மதமானால் என்ன?
எம்மதமனாலும்
சம்மதமே
என உன் மனம்
உணர போவது எப்போது


சரியான கேள்வி. இன்றைக்கு மதத்தின் பெயரால் நடத்தபெறும் வன்முறைகளை கவிதையாக்கி இருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்...

கௌதமன்
13-12-2010, 04:28 PM
:violent-smiley-010:
விளக்கைத் தேடி வந்து வீழும்
வெட்டுக் கிளிகள் போலே
மதத்தை த்தேடி வந்து வீழும்
மானிட ப்பூச்சிகளே....
பிறந்தால் குழந்தை
இறந்தால் சடலம்
இடையில் ஏனிந்த
எல்லை க்கோடு?
யானைக்கு
மதம் பிடித்தால்
அதை ச்சுட்டு க்கொல்கிறோம்..
மனிதனுக்கு
மதம் பிடித்தால்
நாமே வெட்டி க்கொள்கிறோம்...
அன்புகள் உறவாடத் த்தொடங்கினால்
வம்புகளுக்கு என்ன வேலை?
மதங்களின் பேரால்
மனிதங்கள் மரணிக்கக் கூடாது...
என் மதமானால் என்ன?
உன் மதமானால் என்ன?
எம்மதமனாலும்
சம்மதமே
என உன் மனம்
உணரப் போவது எப்போது...
:icon_rollout:

கவிதைக்கு பாராட்டுகள்.:icon_b:
தவறுகளுக்குக் குட்டுகள்.சரிதானே மகாபிரபு..

நாஞ்சில் த.க.ஜெய்
13-12-2010, 06:58 PM
(மனிதனின் )மதம் பிடித்தால் என்னும் கவிதை அழகு தொடரட்டும் ஆனால் இந்த பிழை களினின்றி
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

கீதம்
14-12-2010, 03:59 AM
அன்பை போதிக்கும் கவிதைக்குப் பாராட்டுகள், மதன் சுந்தர் அவர்களே.


விளக்கில் விழுபவை விட்டில் பூச்சிகள்தானே? வெட்டுக்கிளிகள் அல்லவே!

CEN Mark
31-12-2010, 07:33 AM
[QUOTE=mathan sundar;504399]:violent-smiley-010:
விளக்கை தேடி வந்து வீழும்
வெட்டு கிளிகள் போலே




கவிதை நன்று. வெட்டுக்கிளிகளுக்கு பகரம் விட்டில் பூச்சிகள் (ஈசல்) என்றிருந்தால் நலம். வெட்டுக்கிளிகள் விளக்கைத்தேடாது.